Thursday, 26 November 2015

தமிழீழத் தேசிய மாவீரர் தினம் 2015

செழுமை 28-11-2015
தமிழீழத் தேசிய மாவீரர் தினம் 2015



ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப் பற்றுவோம்!
இமைப்பொழுதும் சோராது காப்போம்!


அன்பார்ந்த தமிழீழ மக்களே,ஈழம் பிரிந்த தமிழர்களே, புத்திர சோகத்தில் புலம்பி அழும் தாய்மாரே, தந்தையரே,மாணவர்களே,இளைஞர்களே, சிறுவர்களே, குழந்தைகளே;

இன்று கார்த்திகை 27 2015 மாவீரர் நாள் . 

``இந்த மண் எங்களின் சொந்த மண் இங்கிதை வெல்ல யார் வந்தவன்`` என்று எழுதிய புலவர்கள் இன்று எம்மோடு இல்லை, அதற்காக போராடிய தலைவர்களும், தோழர்களும் கூட நம் கூட இல்லை.புனர்வாழ்வு பெற்றவர்களும் தூக்குக்கயிற்றில் தொங்குகிறார்கள் அல்லது புற்று நோயால் சாகின்றார்கள் , துவம்சம் செய்யப்பட்டிருக்கின்றோம்! 
ஆனால் மாவீரர் வம்சம் இருக்கின்றது, எம் தேசத்துக்கு விடுதலையின் 
வாஞ்சை இருக்கின்றது.

மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே, மற்றும் மரணித்த ஈழப்போராளிகளே செவ்வணக்கம்.

தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக தாங்கள் விதைத்த உடலை, எம் விவசாய பூமியெங்கும் குளம் குளமாய் நிறைந்து உறைந்த குருதி வெள்ளத்தை, உறவாலும்- பொருளாலும் தாங்கள் இழந்த உடமையை, 
அலைந்து திரிந்து,அழிந்து ஒழிந்த, அகதி வாழ்க்கையை, நம் சொந்தத் தவறுகளுக்கு தாங்கள் கொடுத்த விலையை, நீண்ட போரை எதிர் கொள்வதில் தாங்கள் காட்டிய வீரத்தை, தீரத்தை, அவற்றை வகுத்தெடுத்து படைத்தளித்த கலையை, பண்பாட்டை, பக்குவத்தை, மனோ தைரியத்தை, மானுட வலிமையை,ஒரே வார்த்தையில் தங்கள் புரட்சிகர ஆற்றலை மதித்து, மனதில் பதித்து, துதித்து ஆன்மீக ஆராதனை நடத்தும் இப் புனிதப் பெருநாள்,

ஈழ விடுதலைக்கான கடமையையும், பாதையையும், பணிகளையும் பிரகடனம் செய்யும் புரட்சித் திருநாளுமாகும்.

அவ்வாறுதான் அது இதுகாலமும் இருந்து வந்திருக்கின்றது, அவ்வாறுதான் அது இனிமேலும் இருக்கவேண்டும், இருக்கும்.அத்திருநாளின் இவ்வருடப் பிரகடனம், 
ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம் என்பதாகும். இதுவே தான், இக்கட்டத்தில் நாம் மீண்டெழுவதற்கான ஒரே உந்துகோல் ஆகும்.

இவ்வாண்டு மாவீரர் நாள் ஒரு தனிக்குறிப்பான, முற்றிலும் பிரத்தியேகமான, இதற்கு முன் என்றும் இருந்திராத ஒரு புதிய சூழலில் பிறக்கின்றது. இப்புதிய சூழல் குறித்த தனிக்குறிப்பான ஆய்வும் மதிப்பீடும்,அதன் அடிப்படையில் அமைந்த செயல் தந்திர திட்டமும் இல்லாமல் ஈழவிடுதலைப் புரட்சிகர இயக்கத்தை தலைமையேற்று நடத்த முடியாது.ஆதலால் புதிய ஈழப் புரட்சியாளர்களாகிய நாம் எமது ஆய்வையும், செயல்தந்திர திட்டத்தையும், பணிகளையும், முழக்கங்களையும் மக்கள் முன் வைக்கின்றோம்.

ரணிலும் மைத்திரியும் போர்க்குற்றவாளிகளே!

ஈழ தேசிய இன ஒடுக்குமுறை அநீதி யுத்தத்தை எதிர்த்த விடுதலைப் புலிகளின் நீதி யுத்தம், பிரிகேடியர் பால் ராஜ் தலைமையில் முன்னூறு ஆண்டுகால இராணுவ ஆக்கிரமிப்பின் அடிமைச் சின்னமாக விளங்கிய 
ஆனையிறவுப் பெரும் படைத்தளம் நிர்மூலமாக்கப்பட்டு, இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப் புலிகள் மேலோங்கியது யுத்த நிலைமையில் ஏற்பட்ட திருப்பு முனை ஆகும். 

இதன் அரசியல் விளைவாகவே நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்தார்.எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தார்.அதாவது சர்வ வல்லமை உள்ளவராக இருந்தார்!

இப் ``பேச்சுவார்த்தைக் காலம்`` முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு , அரசியல் தயாரிப்பு செய்யப்பட்ட காலமாகும். அதாவது போராடி அழிக்கமுடியாத விடுதலைப் புலிகளை, சூதாடி அழிக்க திட்டமிடப்பட்ட காலமாகும். அடிப்படையில் இது இந்திய விரிவாதிக்க அரசின் திட்டம், அமெரிக்கா இதை ஏற்றுக்கொண்டு தனது அமைதி முகம் நோர்வேயை முன் நிறுத்தி நிறைவேற்றியது, இதன் உள்ளூர் தரகன் தான் ரணில் விக்கிரமசிங்கே!
1) Regaining Sri Lanka திட்டம் 2) எரிக் சொல்கெய்யுமும், மெலிந்த மொற கொடவும், பீரீஸ்சும், வகுத்தளித்துக் கொடுத்து முன் மொழிந்த தீர்மானத்தை ``பாலா அண்ணை``  வழி மொழிந்த தேசத் துரோக -ஈழத்துரோக `அக சுயநிர்ணய  கோட்பாடு 3) கருணா  கருங்காலியை ஏவி நடத்திய புலிகள் இயக்க பிளவு, இவை அந்த அரசியல் தயாரிப்புக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சதிகளாகும்.

உண்மையில் இனப்பிரச்சனைக்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது இவர்களது நோக்கமாக இருந்திருக்கு மேயானால் , `உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்`- ஈழப்பிரிவினைக்கு மாற்றாக புலிகள் தலைமை முன் வைத்த அதிகாரப் பரவலாக்க ISGA  திட்டத்தில் பேரம் நடத்தி, ஒரு சமரச தீர்வுக்கு வந்திருக்க முடியும்.

ஆனால் அவ்வாறு நிகழ்வுகள் நடந்தேறவில்ல, ஏனென்றால் நோர்வே பேச்சு வார்த்தையை எதிரிகள் - குறிப்பாக இந்திய விரிவாதிக்க அரசு விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கான ஒரு பொறியாக பாவித்தார்களே ஒழிய,குறைந்த பட்சம் அவர்களே சறுக்க வைக்கப்பட்டபோது,  அரசியல் தீர்வுக்கான நெறியாகப் பாவிக்கவில்லை.

இக்காலத்தின் மாவீரர் தின உரையில் தான்  தளபதி பிரபாகரன் பேச்சுவார்தையின் பேரால் ரணில் சர்வதேசப் வலைப் பொறியில் தம்மைச் சிக்க வைக்க முயலுகின்றார் எனக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்திய விரிவாதிக்க அரசியல் உளவுத்துறையின் (RAW)- தத்துவார்த்த அறிவு ஜீவிகள், ஈழப்பிரச்சனை குறித்த நிலைப்பாட்டில், ''அரபாத் இல்லாத பாலஸ்தீனமே, ஈழப் பிரச்சனைக்கு தீர்வு`` என்று  கோட்பாடு வகுத்த போது,அவர்கள் ``பிரபாகரன் இல்லாத ஈழமே ஈழப் பிரச்சனைக்கு தீர்வு`` என திட்டம் தீட்டியுள்ளார்கள் என சுட்டிக்காட்டி- RAW ராமனுக்கு கொடும்பாவி எரிக்க அறை கூவினோம்,  அது செவிடன் காதில் ஊதிய சங்காகியது. முள்ளிவாய்க்காலில் ஆனந்தபுரத்தில் விசவாயுத்தாக்குதலில் ஈழத்து அரபாத்துக்களை இந்திய விரிவாதிக்க அரசு சர்வதேச போர் விதிச் சட்டங்களையும் மீறி படுகொலை செய்த போது இது உண்மையாகியது..

ரணில் இந்தப் போர்ப் பாதையில் தான் பயணித்தான். 

ஆக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சூதாட்ட போர்க்களம் வகுத்த ரணில் விக்கிரமசிங்கே போர்க்குற்றவாளியே!

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி கொலை பாதக கோர நாட்களில் மைத்திரி பால சிறிசேனா தான் இராணுவ அமைச்சன்!.

இதனால்  ரணிலும் மைத்திரியும் போர்க்குற்றவாளிகளே!

பொதுத்தேர்தலும் ஜனாதிபதித் தேர்தலும் ஆட்சிக்கவிழ்ப்பே!

அமெரிக்க இந்திய அரசியல், ரசிய சீன இராணுவ, உதவியில் ஈழ இனப்படுகொலையை நடத்தி முடித்து யுத்தத்தில் வெற்றி கொண்ட பக்சபாசிஸ்டுக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  வீழ்ச்சி நிலையைக் 
கவனத்தில் எடுத்து சீன- ரசிய  சார்பு  வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முயன்றனர்.இதனை முறியடிக்க அமெரிக்காவும் இந்தியாவும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு திட்டமிட்டன.

மூன்றாவது உலக மறுபங்கீட்டு போர்க்காலத்தில் அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய போர்த்திட்டத்தின் காவல் நாயாக` இந்திய விரிவாதிக்க அரசு கொம்பு சீவி நிறுத்தப்பட்டிருப்பதால், ஏற்கெனவே 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் இந்திய விரிவாதிக்கத்தின் காலனியாகிவிட்ட இலங்கையின் பக்ச பாசிச ஆட்சியாளர்கள் இந்த தேர்வுச் சுதந்திரத்தையும் இறுதியாக இழந்தனர்.

இது மட்டுமல்ல, உலகப் பொருளாதார முறைமையின் ஒரே ஒழுங்கு ஏகபோக நிதியாதிக்க கும்பல்களின் நிதி மூலதன சேவகம் என்று ஆகிவிட்டதால் முன்னர் போல் சிறுவீத உள்ளூர் தொழில் துறை, அந்நிய சார்பு வர்த்தகத் துறை என்கிற இரு உற்பத்தித்துறை சார்ந்த, இரு வர்க்க முகாம்கள் கூட இன்று இல்லை!

இதன் விளைவாகத்தான் இருகட்சி  போலிப்பாராளமன்றவாத ஜனநாயகம் அம்பலமாகி ``ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்`` ஐக்கியப்பட முடிந்தது. `மைத்திரியும் 40`திருடர்களும்` ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாவி 
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சவைத் தோற்கடித்து மைத்திரி ஜனாதிபதியானார்.இந்தக்கூட்டு பொதுத்தேர்தலிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்கு பெற்று ஆட்சி அமைத்தது.

வெட்கம் கெட்ட முறையில் இதை அவர்கள் தேசிய அரசாங்கம் என்று வேறு அழைக்கின்றனர்.சிங்களம் அரசியல் யாப்பின் படி எப்படி `சோசலிச ஜனநாயக குடியரசோ` அவ்வாறே இது தேசிய அரசாங்கமும் அதன் ஆட்சி நல்லாட்சியுமாகும்!

இதனால் உலக மறுபங்கீட்டில் ரசிய சீன ஏகாதிபத்திபத்திய சார்புப் போக்கை வீழ்த்தி. அமெரிக்க இந்திய சார்பு ஆட்சியாளார்களை அரியணையில் அமர்த்தியது ஆட்சிக்கவிழ்ப்பே!

ஆட்சிக்கவிழ்ப்பும் ஐ.நா.துரோகமும்:

இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் குற்றத்தில் இருந்து தன்னைத் தப்புவித்துக்கொள்ள, சிங்களம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் தனது `அரைக்காகாலனிய சுதந்திரத்தையும்` பலிகொடுத்த செயலாகும்.அமெரிக்க இந்திய நலன்களுக்கு அமைய, பணிந்து சேவகம் புரியும் புதிய காலனியாக ரணிலும் மைத்திரியும் இலங்கையை விலை கூறி விற்றதன் விளைவாக, ஏகாதிபத்திய தொண்டு நிறுவனம் ஐ.நா வும் ஈழ தேசிய இனப்படுகொலைப் போர்க்குற்றத்துக்கு சர்வதேச நீதி விசாரணை கோரிய மக்களுக்கு துரோகம் இழைத்து, கொலையாளிகளையே நீதிபதிகளாக்கி சிங்களத்தின் உள்ளக விசாரணை என்கிற மோசடியை ஏற்று மீண்டும் ஒரு தடவை துரோகமிழைத்தது.ஆரம்பம் முதல் நாம் தொடர்ந்து கூறிவந்த வாறு ஐ.நா.பாதையில் தமிழர்களுக்கு நீதி பெற்றுத்தருவோம் என மக்களை வழி நடத்திய ஏகாதிபத்திய தாசர்கள் இறுதியில், நட்டாற்றில் விட்டு விட்டனர் ஈழ மக்களை!.

ஆட்சிக்கவிழ்ப்பும் தேசிய ஒடுக்குமுறையும்:

மேலும் இந்த ஆட்சிக்கவிழ்ப்பு, சிங்களம் ஈழ தேசிய ஒடுக்குமுறையைத் தொடரும் வரை தனது அரைக்காலனிய `சுதந்திரத்தைக்` கூட தக்கவைத்துக் கொள்ள இயலாது என்பதற்கு அப்பட்டமான எடுத்துக்காட்டாகும். போர்க்குற்றத்தில் இருந்து தப்புவதற்காக சிங்களம் இன்று கொடுத்துள்ள விலை அளப்பரியது.
உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய சிங்களம் பணிய வைக்கப்பட்டு விட்டது.
இந்நிலைக்கு சிங்களம் ஆளானதற்கு மூல காரணம் அது தனது சொந்த ஈழ தேசத்துக்கு ஜனநாயகத்தை வழங்க - சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க என்றும் மறுத்து வருவதே ஆகும்.

நல்லாட்சியும் 2016 நிதி நிலை அறிக்கையும்:

ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களின் நல்லாட்சி, இலங்கையின் 2016 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுவிட்டது.இதை `மூன்றாவது சீர்திருத்த அலை` என ஏகாதிபத்தியவாதிகள் 
கொண்டாடுகின்றனர்.

முதலாவது அலை - மார்கிரட் தச்சர், ரொனால்ட் ரேகன் கொள்கைகளை தழுவி- எழுபதுகளில் ஜே.ஆர்.ஜெயவர்தனே அமூலாக்கிய `திறந்த பொருளாதாரக் கொள்கை`.

இரண்டாவது அலை- நோர்வே பேச்சுவார்த்தை, ISGA அதிகாரப்பகிர்வு காலத்தில், புலிகளும் ரணிலும் IMF இடம் கடன் வாங்கிய Regaining Sri Lanka திட்டம்.

இந்த மூன்றாவது அலையில்-ஊடகப் பயங்கரவாதிகள் எடுத்துச் சொல்லாத- முக்கிய அம்சம் இராணுவச் செலவினம்:

According to the Appropriation Bill that was tabled in Parliament on Friday, the Government has allocated Rs. 285 billion for the Ministry of Defence for 2015, which is a hike of 12.25% in comparison to this year (2014).
The Defence budget will remain high next year -2016 - also The defence allocation is more than Rs. 306 billion.

அதாகப்பட்டதாவது: `பயங்கரவாதப் போர் 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்று` 5 ஆண்டுகளுக்கு பின்னால், 2014 இல் பக்ச பாசிஸ்டுக்கள் தமது 2015  நிதி நிலை அறிக்கையில் இராணுவச் செலவினத்தை 12.25% ஆல் அதிகரித்தார்கள்.அதன் தொகை Rs. 285 billion ஆகும்.மொத்த தேசிய உற்பத்தியில் இது 2.5% ஐ அண்மித்ததாகும்.இதே விகிதாசாரத்தில் தான் பிரித்தானியாவின் இராணுவச் செலவினமும் இருக்கின்றது!  இது 
போதாதென்று ரணில் மைத்திரி பாசிசம் 2016 ஆண்டுக்கான இராணுவச் செலவினத்தை Rs. 306 billion இற்கு மேலாக (3%) உயர்த்தியுள்ளது!

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து 6 ஆண்டு களுக்கு பின்னால் இராணுவச் செலவினத்தில் 15 சத வீத அதிகரிப்பு ஏன்?

 அமெரிக்க இந்திய  ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம், அரசியல் அதிகாரத்தை சதித்தனமாக கைப்பற்றிய ரணில் மைத்திரி கும்பல்,  உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்யவே இந்த அதிகரிப்பைச் செய்துள்ளது.
இதனால் இது தேசிய அரசாங்கமும் அல்ல, நல்லாட்சியும் அல்ல என்பதை தானே  நிரூபித்து விட்டது . 

ஆட்சிக்கவிழ்ப்பும் நல்லாட்சி நாடகமும்.

இவ்வாறு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப் போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் உண்மை நிலையை மூடி மறைக்க ஆடும் நாடகம் தான் இந்த `நல்லாட்சி`.இதனால் தான் ஏகாதிபத்திய  பயங்கரவாத ஊடக குற்றவாளிகள் இந்த நல்லாட்சியில், இலங்கையில் ஆறு, குளம், நதி, சமுத்திரம் எங்கும் பாலும் தெளிதேனும் பாய்வதாகவும், மக்கள் பாகும் பருப்பும் உண்பதாகவும், சம்பந்தன் சிங்கக் கொடி பிடிப்பதாகவும்,ஜனாதிபதித் தேர்தலில் புரட்சி நடந்ததாகவும், பாராளமன்றத்தேர்தலில் ஜனநாயகம் மலர்ந்ததாகவும்
கூறிவருகின்றனர்,சோழியன் குடும்பி சும்மா ஆடாது!

நல்லாட்சியும் நாட்டு நடப்பும்:

ரணில் மைத்திரி கும்பலும் ஊடகப் பயங்கரவாதிகளும் நல்லாட்சி பற்றி எவ்வளவு தான் பிதற்றினாலும் நாட்டு நடப்பு அதற்கு மாறாகவே, எதிராகவே உள்ளது.

முள்ளிவாய்க்காலில்  யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக பிரகடனம் செய்த பக்ச பாசிஸ்டுக்களின் பக்கத் துணைவராக இருந்த ரணில் மைத்திரி கும்பல் ஈழ தேசிய அழிப்பை வேறு வகையில் தொடர்ந்து வருகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னால், ஈழ தேசத்தின் முடிவை அறிய ஈழத்தமிழ் வாக்கெடுப்பு நடத்த அது மறுத்து வருகின்றது.

போர்க்குற்றவாளிகளான தம்மீது நீதி விசாரணையைத் தவிர்க்க முழு நாட்டையுமே அமெரிக்க இந்திய அணிக்கு விலை கூறி விற்றுவிட்டது.

போர்க்காலத்தில் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படவில்லை.

வாழ் நிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீள் குடியேற்றப்படவில்லை.

ஈழக் கடல் தொழிலாளர்கள் வாழ முடியவில்லை.

ஆகமொத்தம் ஈழ தேசத்தின் விவசாயப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.

ஈழ தேசிய இன ஒடுக்குமுறை யுத்தம் உருவாக்கிய சமூகப் பிரச்சனைகளில் எவையும் தீர்க்கப்படவில்லை.

மாறாகா தீவிரப்படுத்தப்பட்டும் சீரழிக்கப்பட்டும் வருகின்றது.போதை வஸ்து பாவனை அதிகரித்துள்ளது.வக்கிரப் பாலியல் (PONOGRAPHI), பரவி வருகின்றது, ஈழ வித்தியா இவ்வாறு தான் வக்கிரப் பாலியல் படப்பிடிப்பு வர்த்தகத்துக்கு பலியாகி படுகொலை செய்யப்பட்டாள், இதில் இளம் சந்ததியினர், மாணவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர், இராணுவ முகாம்கள் விபச்சார விடுதிகளாக உள்ளன.இவை தவிர்ந்த அரசியல் வாதிகளின் விபச்சார விடுதிகளும் உள்ளன.அனந்தி  இவர்களை கையும் களவுமாக கைப்பற்றி அம்பலப்படுத்தியுள்ளார். இவை சிங்களத்தின் அரசதிகார பலத்துடனேயே நடந்தேறி வருவதாக வடக்கு மாகாண முதல்வர் தொடர்ந்து கூறி வருகின்றார்.

முற்றும் துறந்த பாதிரிகள் தங்கள் மறை ஆசிரையை பாலியல் பலாத்காரம் செய்து பாழ் கிணற்றில் வீசுகின்றனர், ராமதாஸ் பாணியில்! ஒரு சிவில் சமூகமும் குரல் எழுப்பவில்லை தமது திருத் தந்தையர்களுக்கு எதிராக!நாதியற்றுக் கிடக்கின்றது சட்டம் ஒழுங்கு!! சிங்கள மாணவர்கள் போராடினால் மட்டும் நையப்புடைக்கின்றது.

யுத்தக் கைதிகள் பிரச்சனை கூட இன்னமும் தீர்வு காணப்படவில்லை.


இனப்படுகொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் போராளிகளை சரணடையுமாறு சிங்களம் கோரியது.அமெரிக்க அதிபர் ஒபாமா `விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும்` என  பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்களின் இனப்படுகொலை, விடுதலைப் புலிப் படையின் முக்கிய கள முனைத் தளபதிகள் குழு மீதான விச வாயுத் தாக்குதல், யுத்த தர்மம் அனைத்தையும் மீறி சிங்களம் இழைத்த போர்க்குற்றங்கள், இந்திய விரிவாதிக்க அரசு,அதனது தமிழக இன மானத் தொண்டர்கள்- புற முதுகில் குத்திய எண்ணற்ற செயல்கள், புலம் பெயர் தமிழ் விதேசிகளின் துரோகம்,நமது சொந்தத் தவறுகள்,  இவற்றின் இணை விளைவாக ஆயுதங்களை மெளனிக்கும் விடுதலைப்புலிகளின் அறிவிப்போடு யுத்தம் தற்காலிகமாக ஒய்ந்தது.

யுத்தம் ஓய்ந்த கையோடு யுத்தத்தின் அரச எதிர்ப்பு, நீதி யுத்தத்  தரப்பினராகிய விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரும் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும், அது தான் சர்வதேச நியதி.

இரண்டு பெரும் உலக யுத்தங்களிலும், வியட்னாம் யுத்தத்திலும் இவ்வாறுதான் நடந்தது.

வியட் கொங் மக்கள் படையால்,அமெரிக்க போர் விமானத்தில் இருந்து தவறுதலாக  சறுக்கி விழுந்த ஒரு  அமெரிக்க `போர்வீரன்` யுத்தக்கைதி என்கிற அடிப்படையில் விடுதலை  செய்யப்பட்டான்!

இந்த ஜென்மம் இப்போதும் படு பிற்போக்கு யுத்த வெறிப் பிரச்சாரகராக திகழ்கின்றது.

ஆனால் சிங்களம் போர்க் கைதிகளையும் படுகொலை செய்தது.பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.

நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிச ஆட்சி, ஆறு ஆண்டுகள் கடந்தும் எஞ்சியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றது.

இவர்களில் 217 பேர் கடந்த மாதம்சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைக் கூடங்களுக்குள் ஆரம்பித்தனர்.இப் போராட்டத்தை `சம்பந்தன் சுமந்திரன் சேனாதி` துரோகக் கும்பல் போலி வாக்குறுதி அளித்து முறியடித்தது.

சம்பந்தன் கைதிகளை வகைப்படுத்துகின்றான், அதில் முதல் வகையினர் ``பாரதூரமான குற்றம் இழைத்தவர்கள்``!

இதனால் போராளிகள் தம் அனைவரதும் (217), உடனடி விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை சிறைக்கூடங்களுக்குள் ஆரம்பித்தனர், தம்மை மீட்க போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.

போராளிகளின் இந்த அறைகூவலை ஏற்று 13-11-2015அன்று தமீழ மக்கள் கதவடைப்புப் போராட்டத்தில் இறங்கினர்.

அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மலையகம் அடங்கலாக தமிழீழம் தம் வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் மீண்டும் தமிழீழம் ஓரணியில் திரண்டது,திரட்டியவர்கள் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிப் போராளிகள்.

இப்போதும் காதடைத்த சிங்களம், இந்த ஈழக் கதவடைப்புக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை.வழக்கம் போல போலி வாக்குறுதி அளித்து காது குத்தவே முயலுகின்றது.

எனவே `217, விடுதலை இயக்கத்தில்` நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.

முதலாவதாக, நாம் ஈழ தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் கட்டிக் காக்க வேண்டும்.ஓரணியில் திரட்ட வேண்டும்.

இரண்டாவதாக,நாம் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அடிப்படையில் சார்ந்து நிற்க வேண்டும்.

மூன்றாவதாக, நாம் தொடர்ந்து போராட வேண்டும்,போராட்டத்தை பரவலாக்க வேண்டும்,தீவிரப்படுத்த வேண்டும்.

நான்காவதாக, இத்தனியொரு குறிக்கோளுக்காக சாத்தியமான அனைத்துச் சக்திகளோடும் ஐக்கியப்படவேண்டும்.

தென்னிலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு குரல் எழுகிறது.யாழ்ப்பாணத்தில் - 217 விடுதலை இயக்கத்தில்- இஸ்லாமியத் தமிழர்கள் இணைந்துள்ளனர்.இஸ்லாமிய சிறு உடமை வியாபாரிகளின் பங்களிப்பு இல்லாமல் ஈழக்கதவடைப்பு போராட்டம் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.முடியவே முடியாது!தமிழகத்தில் கடந்த வாரம் இண்டூரில் நடை பெற்ற ஈழ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் ம.ஜ.இ.கழகத்தின் பிரதான பேச்சாளர் தோழர் மனோகரன், ஈழ யுத்தக் கைதிகள் விடுதலைக்கு குரல் எழுப்பி ,கழகம் சார்பாக தமிழக மக்களை தட்டி எழுப்பினார்.

ஒருகணம் நமது கொள்கை கோட்பாடுகளை யெல்லாம் துறந்த துறவிகளாகி மனித உரிமையாளர்களாக மாறி  நியாயம் கோரக் கூடுமெனில் கூட,  தன் ``காணாமல் போன`` தமையனுக்காக கதறி அழுத ஜெசிக்காவையும் அவளுக்கு ஒரே அடைக்கலமான தாயையும் இன்னமும் ஏன் பிரித்து வைத்து இருகின்றீர்கள் ? இவர்களால் உங்களது தேசிய பாதுகாப்புக்கு என்ன அச்சுறுத்தல்?  நாசமாகுக இந்த நல்லாட்சி!  

மக்களைச் சார்ந்து நின்று போராடினால் `217 விடுதலை இயக்கத்தில்`  நாம் வெற்றி பெறுவது திண்ணம்.

ஆட்சிக் கவிழ்ப்பும் சம்பந்தன் கும்பலின் காட்டிக் கொடுப்பும்:

நாம் ஜனாதிபதித் தேர்தலையும், பொதுத்தேர்தலையும் புறக்கணிக்குமாறு பகிரங்கமாக கோரினோம்.ஏறத்தாள பாதியளவு மக்கள் புறக்கணித்தனர். எஞ்சிய வாக்குகளில் கூட்டமைப்பு கும்பல் ஆசனங்களைப் பெற்றது.இது ரணில் மைத்திரியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.பக்ச பாசிஸ்டுக்கள் இடது சாரி ரொட்ஸ்கியவாதி வாசுதேவ நாணயக்காராவை அணைத்துக் கொண்டது போல,நல்லாட்சியின் அலங்காரப் பொம்மையாக ரணில் மைத்திரி பாசிசம் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக்கியது! 

கேவலம் இந்த எதிர்க்கட்சித் தமிழ்த் தலைவன் ஆகக் குறைந்தபட்சம் போர்க்கைதிகளின் விடுதலையைக் கூட சாதிக்க வில்லை.மாறாக இவனது கொழும்பு கூட்டமைப்பு அவர்களது ஜீவ மரண சிறைவாசப் போராட்டத்தை தொடர்ந்து முறியடித்து வருகின்றது.

உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் தொங்கு சதையாக சம்பந்தன் கூட்டமைப்பு கும்பல் மாறி விட்டது.

மதியப் பொழுது மறைவதற்கு முன்னால் மைத்திரிக்கு வாக்கிடக்கோரிய மனித உரிமை மனோ கணேசனும் யுத்தக்கைதிகள் விவகாரத்தில் கை விரித்து விட்டார்.

கூட்டமைப்பு கும்பலும் ஈழதேசிய பிரச்சனைத் தீர்வும்.

உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக் கால கட்டத்தில் அமெரிக்க இந்திய முகாமின் தென்னாசிய இராணுவத்தளமாக சேவகம் செய்ய தயாராகிவிட்ட சிங்களத்தின் தொங்கு சதையாக சம்பந்தன் கூட்டமைப்பு கும்பல் மாறி விட்டதால் அதன் ஈழ தேசியப்பிரச்சனைக்கான தீர்வும் அந்த முகாமின் நலன்களுக்கு அடங்கியிருப்பது தர்க்க பூர்வமானதே.

இதனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னாலும் கூட்டமைப்புக் கும்பல் 13 வது திருத்தத்திற்கு அமைந்த அதிகாரப் பகிர்வு என்று பம்மாத்து நாடகம் ஆடி இந்திய விரிவாதிக்கத்துக்கு சேவகம் செய்கின்றது.

இதைக் கூட்டமைப்பு மட்டும் செய்யவில்லை, பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட,புலம் பெயர் பேரவைகளும் , நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , EXCELL  வீரர்களும், பாதிரிகளும் இணைந்தே செய்கின்றார்கள்.இதனால் தான் நல்லாட்சி இவர்கள் மீதான தடையை நீக்கியுள்ளது!

இவர்கள் தமது சொந்த வர்க்க நலனில் இருந்தும், ஏகாதிபத்திய தாச விதேசிய மனப்பான்மையில் இருந்தும் ஈழதேசிய சுய நிர்ணய உரிமைப் பிரச்சனையை பேரப்பொருளாக்கி வருகின்றனர்.

இத்துரோகத்தை முறியடிக்க  முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்குப் பின்னால் ஈழ தேசத்தின் முடிவை அறிய ஈழத்தமிழ் வாக்கெடுப்பு நடத்தக் கோரி, தேசம் தழுவிய வெகு ஜன இயக்கத்தைக் கட்டியெழுப்புவது இன்றைய உடனடி அவசியக் கடமை ஆகும்.

ஈழ தேசிய ஒற்றுமையே இதன் ஆதாரத்தூண் ஆகும்.

வெகுஜனப் போராட்டப் பாதையே விடுதலைப் பாதை!

கைதிகள் முதல் கைம்பெண்கள் வரை ஈழத்தில் மக்கள் போராடுகின்றார்கள். வடக்கு கிழக்கு மலையகம் தழுவிய  -ஈழதேசிய யுத்தக் கைதி விடுதலை கதவடைப்புப் போராட்டம் மாபெரும் வெற்றி கண்டுள்ளது.மீள் குடியேற்றத்துக்காகவும்,காவு கொடுத்த உதிரங்களை மீளப் பெறவும் ஈழ மக்கள் போராடுகின்றனர்.விவசாயிகள் போராடுகின்றனர்,கடற் தொழிலாளர் போராடுகின்றனர்,மலையக மக்கள் போராடுகின்றனர்,கறுப்பு ஓகஸ்ட் சமூக நீக்க கொடுமைக்கு நீதி கோரி இஸ்லாமியத் தமிழர்கள் போராடுகின்றனர். தென் இலங்கையில் மாணவர் போராட்டங்கள் தன்னியல்பாக வெடிக்கின்றன.இவை கல்வியில் அந்நிய ஆதிக்கத்தை ஒழிக்கக் கோருகின்றன,இதனால் விதேசிய ரணில் மைத்திரி ஏகாதிபத்திய நலன் ஆட்சி,மாணவர்களின் ஜனநாயகப் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு நசுக்குகின்றது.உலகமய உலக மறு பங்கீட்டு மூன்றாம் உலகப்போர்த் தயாரிப்புக்களை எதிர்த்து உலகமெங்கும் வெகுஜனப் போராட்டப் போர்ப்புயல் வீசி வருகின்றது. 

இந்த உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் ஆதார சக்திகளாகக் கொண்டுதான் ஈழதேசிய விடுதலைப் புரட்சி இயக்கம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் தனது அடுத்த காலடியை முன் வைக்க வேண்டும். 

மாறாக ஏகாதிபத்திய அமெரிக்கா,விரிவாதிக்க இந்தியா,ஏகாதிபத்திய பஞ்சாயத்து மன்றம் ஐ.நா.வை நம்பியோ,ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களோடு பின்கதவு உறவு கொண்டு, உண்டு குடித்தோ,`சிவில் சமூகம்` என்கிற பெயரில் அந்நிய NGO களோடு கள்ள உறவு கொண்டு, தமிழர்களுக்கு  வலை விரித்தோ  அல்ல.

தகரும் நிலையில் ஏகாதிபத்தியமும் அதன் தலைமை நாடான அமெரிக்காவும்.

`ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகும். அதாவது அந்திமக்கால முதலாளித்துவம் ஆகும்.` இதுதான் லெனின் விஞ்ஞான வரையறை. முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையின் அடிப்படை, பண்ட உற்பத்தியாகும்.பண்ட உற்பத்தியின் ஒரே குறிக்கோள் அதிக இலாபம். இந்த அதிக இலாபம் அபரிமிதமான உற்பத்திக்கும், அபரிமிதமான உழைப்புச் சக்தியின்  சுரண்டலுக்கும் தவிர்க்க இயலாமல் இட்டுச் செல்கின்றது.இதன் விளைவு என்னவென்றால் சந்தையில், 

`நுகர்வோரின் வாங்கும் வலிமையை தகர்க்கும் உழைப்புச் சக்தி சுரண்டலும், இதனால் வாங்கும் சக்தியை தொடர்ந்து இழந்து வரும் அவர்களுக்கே அபரி மித உற்பத்திப் பண்டங்களை விற்றுத் தீரவேண்டியதும்` 

ஆன  தீர்க்க முடியாத முரண்பாட்டுக்குள் சிக்கிக் கொள்வதாகும்.இதைத் தீர்ப்பதற்கான ஏகாதிபத்தியவாதிகளின் தீர்வும் திட்டமும் தான் உலக மறுபங்கீடும்,பிராந்திய உலகப் போரும்!

இவ்வாறு அமெரிக்கா,மூன்றாவது உலகமறுபங்கீட்டு போர்க்கால கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்து சிரியா வரை வந்து, சிக்கிக் கொண்டுள்ள நிலை, இவை தீர்வு அல்ல தகர்வு என்பதையே நடைமுறையில் நிரூபித்து நிற்கின்றது.

ஆக தகரும் ஏகாதிபத்தியத்தை நமது வல்லமைக்கு உட்பட்டு தாக்கி அழிக்க வேண்டுமே ஒழிய தாங்கிப் பிடித்து தற்காக்கக் கூடாது.

எனவே எந்த தேசிய விடுதலை இயக்கமும் போலவே ஈழப்புரட்சிகர தேசிய விடுதலை இயக்கமும் தனது குரலை சிங்களத்துக்கு எதிராக மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் இந்திய விரிவாதிக்கத்துக்கு எதிராகவும்,ஒலித்துத் தீர வேண்டும் என்பது புரட்சியின் விதியாகும். இதற்கான வல்லமை ஈழ தேசிய ஒற்றுமையில் தான் தங்கியுள்ளது.

வெற்றிக்கான ஆயுதம்
ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவோம் என்கிற முழகத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட புரட்சிகர செயல் தந்திர திட்டத்தின் மீது அமைந்த அரசியல் பிரச்சார கிளர்ச்சி நடவடிக்கைகளே எமது வெற்றிக்கான ஆயுதமாகும்.

ஈழதேசிய ஒற்றுமை

இக்கோட்பாட்டு அடிப்படையில் மட்டுமே ஈழ தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும்.

எனவே ஈழவிடுதலைப்புரட்சியின் எதிரிகளான அமெரிக்கா முன்னிட்ட ஏகாதிபத்தியவாதிகளையும்,இந்திய விரிவாதிக்க அரசையும்,சிங்களத்தையும் எதிர்த்து, கூட்டமைப்பு,புலம்பெயர் பேரவைகள், இனமானம் பேசும் தமிழக இந்திய விரிவாதிக்க தரகர்கள் அடங்கிய சமரச சக்திகளை தனிமைப்படுத்தி,ஈழதேசிய ஒற்றுமையைக் கட்டிக் காத்து உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுபட்டு, மாண்ட நம் மக்களதும் மாவீரத் தோழர்களதும் ஒரே கனவான ஈழ தேசத்தை விடுவிக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் ஓரணி திரளுமாறு அறை கூவல் விடுக்கின்றோம்.



புதிய ஈழப் புரட்சியாளர்கள்              தமிழீழம்           27-11-2015
செழுமை 06-12-2015

Saturday, 14 November 2015

வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது தமிழீழம்!


கடமை முடியவில்லை!


யுத்தக் கைதிகள் விடுதலை:திருமலையில் கதவடைப்பு
னப்படுகொலை யுத்தத்தின் இறுதி நாட்களில் போராளிகளை சரணடையுமாறு சிங்களம் கோரியது.அமெரிக்க அதிபர் ஒபாமா `விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய வேண்டும்` என  பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

ஒரு இலட்சத்து அறுபதினாயிரத்துக்கும் மேற்பட்ட ஈழ மக்களின் இனப்படுகொலை, விடுதலைப் புலிப் படையின் முக்கிய கள முனைத் தளபதிகள் குழு மீதான விச வாயுத் தாக்குதல், யுத்த தர்மம் அனைத்தையும் மீறி சிங்களம் இழைத்த போர்க்குற்றங்கள், இந்திய விரிவாதிக்க அரசு,அதனது தமிழக இன மானத் தொண்டர்கள்- புற முதுகில் குத்திய எண்ணற்ற செயல்கள், புலம் பெயர் தமிழ் விதேசிகளின் துரோகம்,நமது சொந்தத் தவறுகள்,  இவற்றின் இணை விளைவாக ஆயுதங்களை மெளனிக்கும் விடுதலைப்புலிகளின் அறிவிப்போடு யுத்தம் தற்காலிகமாக ஒய்ந்தது.

யுத்தம் ஓய்ந்த கையோடு யுத்தத்தின் அரச எதிர்ப்பு, நீதி யுத்தத்  தரப்பினராகிய விடுதலைப் புலிப் போராளிகள் அனைவரும் நிரபராதிகளாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும், அது தான் சர்வதேச நியதி.

இரண்டு பெரும் உலக யுத்தங்களிலும், வியட்நாம் யுத்தத்திலும் இவ்வாறுதான் நடந்தது.வியட் கொங் மக்கள் படையால் விடுவிக்கப்பட்ட ஒரு அமெரிக்க யுத்தக்கைதி இப்போதும் படு பிற்போக்கு யுத்த வெறிப் பிரச்சாரகராக திகழ்கின்றார்.

ஆனால் சிங்களம் போர்க் கைதிகளையும் படுகொலை செய்தது.பெண் கைதிகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது.

நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிச ஆட்சி, ஆறு ஆண்டுகள் கடந்தும் எஞ்சியுள்ளவர்களை விடுதலை செய்ய மறுத்து வருகின்றது.

இவர்களில் 217 பேர் கடந்த மாதம்சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை சிறைக் கூடங்களுக்குள் ஆரம்பித்தனர்.இப் போராட்டத்தை `சம்பந்தன் சுமந்திரன் சேனாதி` துரோகக் கும்பல் போலி வாக்குறுதி அளித்து முறியடித்தது.

சம்பந்தன் கைதிகளை வகைப்படுத்துகின்றான், அதில் முதல் வகையினர் ``பாரதூரமான குற்றம் இழைத்தவர்கள்``!

இதனால் போராளிகள் தம் அனைவரதும் (217), உடனடி விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை சிறைக்கூடங்களுக்குள் ஆரம்பித்து தற்போது தொடர்ந்து வருகின்றனர்,தம்மை மீட்க போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்தனர்.

போராளிகளின் இந்த அறைகூவலை ஏற்று நேற்றைய தினம் 13-11-2015அன்று தமீழ மக்கள் கதவடைப்புப் போராட்டத்தில் இறங்கினர்.

அம்பாறை,திருகோணமலை,மட்டக்களப்பு,வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம்,மலையகம் அடங்கலாக தமிழீழம் தம் வேங்கைகளை மீட்க வெறிச்சோடியது.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் மீண்டும் தமிழீழம் ஓரணியில் திரண்டது,திரட்டியவர்கள் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிப் போராளிகள்.

இப்போதும் காதடைத்த சிங்களம், இந்த ஈழக் கதவடைப்புக்கு காது கொடுப்பதாகத் தெரியவில்லை.வழக்கம் போல போலி வாக்குறுதி அளித்து காது குத்தவே முயலுகின்றது.

எனவே `217, விடுதலை இயக்கத்தில்` நாம் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது.

முதலாவதாக, நாம் ஈழ தேசிய ஒற்றுமையை வளர்க்க வேண்டும் கட்டிக் காக்க வேண்டும்.ஓரணியில் திரட்ட வேண்டும்.

இரண்டாவதாக,நாம் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் அடிப்படையில் சார்ந்து நிற்க வேண்டும்.

மூன்றாவதாக, நாம் தொடர்ந்து போராட வேண்டும்,போராட்டத்தை பரவலாக்க வேண்டும்,தீவிரப்படுத்த வேண்டும்.

நான்காவதாக, இத்தனியொரு குறிக்கோளுக்காக சாத்தியமான அனைத்துச் சக்திகளோடும் ஐக்கியப்படவேண்டும்.

தென்னிலங்கையில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒரு குரல் எழுகிறது.யாழ்ப்பாணத்தில் - 217 விடுதலை இயக்கத்தில்- இஸ்லாமியத் தமிழர்கள் இணைந்துள்ளனர்.இஸ்லாமிய சிறு உடமை வியாபாரிகளின் பங்களிப்பு இல்லாமல் ஈழக்கதவடைப்பு போராட்டம் இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்க முடியாது.முடியவே முடியாது!தமிழகத்தில் கடந்த வாரம் இண்டூரில் நடை பெற்ற ஈழ ஆதரவுப் பொதுக்கூட்டத்தில் ம.ஜ.இ.கழகத்தின் பிரதான பேச்சாளர் தோழர் மனோகரன், ஈழ யுத்தக் கைதிகள் விடுதலைக்கு குரல் எழுப்பி ,கழகம் சார்பாக தமிழக மக்களை தட்டி எழுப்பினார்.

மக்களைச் சார்ந்து நின்று போராடினால் `217 விடுதலை இயக்கத்தில்`  நாம் வெற்றி பெறுவது திண்ணம்.

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

14-11-2015                                                                                   புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Wednesday, 4 November 2015

மாவீரர் தினம் 2015 அடிப்படைப் பிரகடனம்

பிள்ளையார் சுழி!


சுவரொட்டி வாசகங்கள் வருமாறு:
மாவீரர் நாள் 2015 நவம்பர் 27 பிரகடனம்
================================
ஈழ தேசம் என்றால் என்ன?

ஒரு பொதுவான மொழியாலும், பொதுப் பொருளாதார மேம்பாட்டுக்கான அவசியத்தாலும், அதன் விளைவான சமூக உள்ளிணைவால் உருவாகிய பொதுப் பண்பாட்டாலும்,வரலாற்று ரீதியாக உறவு -நிலை பெற்ற ( வட கிழக்கு தமிழர், இஸ்லாமிய தமிழர்,மலையகத் தமிழர் அடங்கிய) சமூகத் திரள், பொது எதிரியின் தாக்குதலில் இருந்து தம்மைத் தற்காத்து ஒருங்கிணைய, தம் பூர்வீக-தார்மீக பூமியை  ,தமது ஆட்சிப் பிரதேசமாக மாற்றுவதே விடிவுக்கு வழி என உணர்ந்த வரலாற்றுக் கட்டத்தின் அரசியல் வகையினமே  ஈழ தேசம் ஆகும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

கறுப்பு ஒக்ரோபர் களங்கம் துடைப்போம்!











Friday, 14 August 2015

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப் பாதை!

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!


அன்பார்ந்த தமிழீழ மக்களே,புலம்பெயர் உழைக்கும் மக்களே, புலிப் போர்க்கால தேசியப் போராளிகளே,மாணவர்களே, இளைஞர்களே,புதிய தலைமுறைச் சிறுவர்களே,உதிரித் தேசிய ஜனநாயகவாதிகளே புரட்சிகர வணக்கம்!

மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே செவ்வணக்கம் தங்கள் தாழ் பணிந்து;

இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி ஒற்றையாட்சி சிங்களப் பாசிசப் பாராளுமன்றத்துக்கு, நாட்டை ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளையும்,அவர்களது கட்சிகளையும்,அரசாங்கத்தையும் தீர்மானிக்கும் பொதுத் தேர்தல் இடம் பெறப் போகின்றது!

இத்தேர்தல் குறித்து நாம் கடைப்பிடிக்க வேண்டிய செயல் தந்திரம் என்ன?

ஒரு புரட்சிகர இயக்கத்தின் வரலாற்று வளர்ச்சியில் ஏற்படும் குறிப்பான திருப்பங்கள் அக்காலப் பகுதியை புரட்சியின் திசையில் நிலை நிறுத்தி போராட்டத்தை தொடர்ந்து நடத்திச் செல்வதற்கு,  குறிப்பான செயல் தந்திரங்களைக் கோருகின்றன.ஆனால் இக் குறிப்பான செயல் தந்திர திசை வழிகள் யுத்த தந்திர கோட்பாடுகளின் வழி நடத்துதலில் இருந்து வரையறை செய்யப்படவேண்டுமென மார்க்சியம் கட்டளை இடுகின்றது.

எந்தக் குறிப்பான திருப்பத்தில் இத் தேர்தல், அரசியல் அரங்கேறியுள்ளது?

1) முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டு,ஈழ தேசம் நிராயுதபாணியாக்கப்பட்ட சூழ்நிலையில்;
2) போர்க்குற்றவாளி ராஜபக்ச அரசு உலக மறு பங்கீட்டில் சீன சார்பு வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்த சூழ்நிலையில்;
3) இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக் கவிழ்ப்பில் பக்ச பாசிஸ்டுக்கள் ஜனாதிபதித் தேர்தலில் அரசதிகாரம் இழந்த நிலையில்;

இப்பொதுத்தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி 2015 இல் நிகழவிருக்கின்றது.

மேலும் வழமைக்கு மாறாக இம்முறை நான்கு பிரிவுகள் தமிழ் பேசும் மக்களிடையே வாக்கு வேட்டையாடக் கிழம்பியுள்ளன.

இந்நிலைமையில் தான் இத்தேர்தல் குறித்து என்ன செயல்தந்திர முடிவை எடுப்பது என்கின்ற கேள்வி எழுகின்றது. இதற்கு பதில்காணுவதற்கு நமது யுத்த தந்திரம் தரும் போதனைகள் என்ன?

யுத்த தந்திர கோட்பாட்டு நிலைகள்

1) நாம் வாழும் இன்றைய சமூக வரலாற்றுக் கால கட்டம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சோசலிச,புதிய ஜனநாயக, விவசாய- தேசிய இன விடுதலைப் புரட்சிகளின் சகாப்தமாகும்.
2) இக்காலகட்டத்தில் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறை வரலாற்று வழியிலும், நடைமுறை வழியிலும் காலாவதி ஆகிவிட்டது.
3) சோசலிச, மக்கள் ஜனநாயக சோவியத் ஆட்சிமுறை அரங்கேறி விட்டது.
4) எந்த ஒரு நாட்டினதும் - தேசத்தினதும், விடுதலைப் புரட்சியும்,உலக சோசலிச மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகிவிட்டது.
5) இப்புரட்சிகளின் மக்கள் யுத்தப் பாதைக்கு தேர்தல் பாதை என்பது நேர் எதிர் முரணானதாகும்.

இவைதான் செயல் தந்திர வழியை வரையறை செய்வதற்கான யுத்ததந்திர கோட்பாட்டு வழிகாட்டுதலாகும்.

இலங்கை அரசும், இலங்கைப் பாராளுமன்றமும்,இரு பெரும் கட்சிகளும்,அரசாங்களும்!

1) இலங்கை அரசு
இலங்கை நாட்டின் அரசு முறை இன ஒடுக்கு முறையின் மீது கட்டப்பட்டதாகும்.
2) இலங்கைப் பாராளுமன்றம் 
இரு பெரும், தமிழ்த் தேச அழிப்பை தமது நிரந்தர யுத்ததந்திரத் திட்ட மாகக் கொண்ட கட்சிகளின் கொலைக்கூடமாகும்.
3) இரு பெரும் கட்சிகள்
இரு பெரும் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்களப் பேரின வெறியர்களும்,பெளத்த மத வெறியர்களும் மட்டுமல்ல, இதற்கும் மேலாக, விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்களின் இரு அணிகளும் ஆகும்.
4) அரசாங்கம்
இவ்விரு கட்சிகளில் ஒன்று தனித்தோஅல்லது கூட்டமைத்தோ அமைப்பதாகும்.

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!
(யுத்த தந்திர நோக்கு நிலையில்)

நாம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சோசலிச,புதிய ஜனநாயக, விவசாய- தேசிய இன விடுதலைப் புரட்சிகளின் சகாப்தத்தில் வாழ்வதாலும்,இக்காலகட்டத்தில் முதலாளித்துவ பாராளுமன்ற ஆட்சி முறை வரலாற்று வழியிலும், நடைமுறை வழியிலும் காலாவதி ஆகிவிட்டதாலும்,சோசலிச, மக்கள் ஜனநாயக சோவியத் ஆட்சிமுறை அரங்கேறி விட்டதாலும், எந்த ஒரு நாட்டினதும் - தேசத்தினதும், விடுதலைப் புரட்சியும்,உலக சோசலிச மக்கள் ஜனநாயகப் புரட்சியின் ஒரு பகுதியாகி, இப்புரட்சிகளின் மக்கள் யுத்தப் பாதைக்கு தேர்தல் பாதை என்பது நேர் எதிர் முரணானதாக ,எதிர்ப்புரட்சிகரமானதாக, பிற்போக்கானதாக,வரலாற்றுச் சக்கரத்தை பினோக்கி இழுப்பதாக மாறி விட்டதாலும், தேர்தல் பாதை குறித்த எமது யுத்த தந்திர நிலைப்பாடு புறக்கணிப்புப் பாதை ஆகும்.இக் கோட்பாட்டு அடிப்படைகளில் இருந்து,

யுத்த தந்திர நோக்கு நிலையில் தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப் பாதை எனப்பிரகடனம் செய்கின்றோம்.


தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!
(செயல் தந்திர நோக்கு நிலையில்)

இலங்கை நாட்டின் அரசுமுறை ஒற்றை ஆட்சி அமைப்பில் இன ஒடுக்குமுறையின் மீது கட்டியமைக்கப்பட்டு விட்டதாலும், இலங்கை நாட்டின் இரு பெரும் ஆளும் வர்க்க கட்சிகளும்,சிங்களப் பேரின வெறியர்களும்,பெளத்த மத வெறியர்களும் மட்டுமல்ல, இதற்கும் மேலாக, விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்களின் இரு அணிகளாக இருப்பதாலும், சிறுபான்மை கட்சிகள் எனச் சொல்லப்படுகின்ற வகையறாக்கள்-அதாவது சிறுபான்மை ஏகாதிபத்திய தாச தரகர்களான சமரச சக்திகள்-எவ்வளவுதான் ``எமது மக்கள்`` குறித்து பேசினாலும் அவர்களது தொப்புள் கொடி உறவு இவர்களும் விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்கள் என்ற உணர்வு மேலோங்கி, ஒடுக்கும் தேசத்தின் விதேசிய ஏகாதிபத்திய தாச தரகர்களுடன் எப்போதும் ஐக்கியப்பட விளைகின்றது.ஒரு வர்க்கம் என்கிற முறையில் தனது நலனை எட்ட அது தமிழீழ தேசத்தை அடகுவைக்கின்றது.இதுதான் சமஸ்டி அரசியல்!

எனவே செயல் தந்திர நோக்கு நிலையிலும் தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை எனப் பிரகடனம் செய்கின்றோம்!

தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை!
(நடைமுறை நோக்கு நிலையில்)

1) உலகமெங்கும், நாடுகள் எங்கும் பாராளுமன்றம் என்பது சர்வாதிகாரம் அணிந்துள்ள முகமூடீயே ஆகும்.
இங்கிலாந்தில் தேர்ந்தெடுக்கப்படாத மகாராணிக்குத்தான் இங்கிலாந்து அரசாங்கம் சொந்தம், அவர் எனது அரசாங்கம் என்றுதான் இறுமாப்புடன் கூறுகின்றார், அமெரிக்க ஜனாதிபதிக்கு வீற்றோ அதிகாரம் உண்டு! இலங்கை இதை விடவும் பல அடி முன்னோக்கிப் பாய்ந்த பாசிச வடிவமாகும்! இலங்கையில் ஜனாதிபதி அந்த நாட்டின் கடவுள், (நம்பினோர் கைவிடப்படுவர்!), அரசியல் சட்டம் கூறுகிறவாறு அவர் `சர்வ வல்லமை மிக்கவர்` (இனப்படுகொலை உட்பட!)

2) தமிழீழ விடுதலையின் நோக்கில் பார்த்தால் ஆறாவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் தேசிய விடுதலை குறித்த விவாதத்தை சட்ட விரோதம் ஆக்கிவிட்டது,ஈழ தேசத்துக்கு சிங்களப் பாராளுமன்றத்தில் குரல் இல்லை என்று ஆக்கிவிட்டது!

3) இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் அமைப்பில் பெரும்பான்மை ஆசனங்கள் இரு சிங்களப் பேரினவெறிக் கட்சிகளையே சேரும்!

4) ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் எண்கணிதப் பெரும்பான்மையை ஜனநாயகம் என்று ஏற்றுகொண்டு ஒடுக்கப்படும் ஈழ தேசம் பயணிக்குமானால்,பெரும்பான்மை வாக்குகளால் ஈழதேசத்துக்கு மரணதண்டனை கூட வழங்க முடியும். அதுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது!

5) இந்த விதியை மீறியும் ஜனநாயகப் பாதையில் பயணிக்க எண்ணுவோர் பெற்றுக் கொள்ள வேண்டிய வரலாற்றுப் படிப்பினை என்ன?

அ) 1972 அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ``ஜனநாயக ரீதியாக`` ஏற்கவில்லை
ஆ) 1978 பாசிச ஜனாதிபதி ஆட்சிமுறை யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை
இ) 13 வது திருத்த மாகாண சபைகளையும் ஈழத்தமிழர்கள் ஏற்கவில்லை

எனவே நடைமுறை நோக்கு நிலையிலும்  தேர்தல் புறக்கணிப்பே புரட்சிப்பாதை எனப் பிரகடனம் செய்கின்றோம்!
===================
தேர்தல் பங்கேற்பு நாடகத்தில் அரசியல் கட்சிகளின் பங்கு பாத்திரம்  குறித்த ஆய்வு தொடரும்
==================
                                                                                                       புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Thursday, 23 July 2015

ENB - கறுப்பு ஜூலை 2015 நினைவாக

புதிய ஈழ விடுதலையை வென்றெடுக்க 
புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவோம்!

அன்பார்ந்த தமிழீழ மக்களே மாணவர்களே, இளையோரே, புலம்பெயர் புதிய தலைமுறையே,``புனர் வாழ்வுப்`` போராளிகளே! புலத்தமிழ் ஈழ சிறு முதலாளித்துவ சில்லறை வர்த்தக வணிகர்களே,

கறுப்பு ஜூலையின் 32 ஆம் ஆண்டு நினைவில், புதிய ஈழ விடுதலையை வென்றெடுக்க புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம் என முழங்குவோம்! 



ஏன் இந்த முழக்கம் இதன் சமுதாய அவசியம் என்ன? 
கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் சம்பவம் , 30 ஆண்டு கால சிங்கள அடக்குமுறையை எதிர்த்து, ``போராடிய`` சமரசவாதம் அம்பலமாகி, இறுதியாக ஈழ தேசம் ஆயுதம் ஏந்தி ஆக்கிரமிப்புச் சிங்கள இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து விரட்டியடிக்கும் பொருட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தொடுத்த வெற்றிகரமான யாழ் திண்ணைவேலி கெரில்லா இராணுவத்தாக்குதலுக்கு, பதில் என்ற போலிக் காரணத்தில் 1983 ஜீலை மாதம் 23 ம் தேதி ஈழ தேச மக்கள் மீது சிங்களம் நடத்திய தேசிய இனப்படுகொலைத் தாக்குதல் ஆகும். 

இவ்வாறு நாம் கூறுகையில் இது ஒரு பொதுச் சித்திரத்தைத்தான் வரைகின்றது.

58 இற்கும், 61  இற்கும், 77 இற்கும் , 81இற்கும் 83  இற்கும் இடையிலான தனிக்குறிப்பான எதிரியின் குறிகோளை இந்த பொதுச் சித்திரம் குறிப்பாக விளக்கவில்லை.

1983 ஜூலைக்கலவர இனப்படுகொலையைக் குறித்த எழுத்துக்கள் எதிரியின் வெளித்தோற்ற இன வெறி வன்முறையை விளக்கிய அளவுக்கு, அந்த வன்முறை சாதித்த, மீண்டும் வெற்றி கொண்ட , உள்ளடக்க அரசியல் குறிக்கோளை இதுவரை முன்னிலைப்படுத்தவில்லை.

1983 ஜூலைக் கலவர இனப்படுகொலையின் மூலம் சிங்களம் சாதித்தவை எவை?

1) கொழும்பு முதல் தென்னிலங்கை அடங்கிய சிங்கள தேசத்தில் ஈழத் தமிழர் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அழித்தொழித்து , ஈழத்துக்கு விரட்டியடித்தது, எஞ்சியோரை அடிமைகளாக அடிபணிய வைத்தது.
2) கொழும்பு வர்த்தகத்தில் இருந்து ஈழத் தமிழர்களின் அனைத்து வர்க்கங்களையும் `தமிழன்` என்ற பேரால் தறித்தெறிந்து நக்கிப் பிழைக்கும் நிலைக்கு தள்ளியது.
3) இந்த அடக்குமுறையை மலையக மக்கள் மீதும் ஏவி, நீங்களும் தமிழரே என எச்சரித்தது.
4) இதர தேசிய இன மத சிறுபான்மையினர் மீதான பகைமையே சிங்கள தேசத்தின் விடுதலைக்கு வழி என பெருந்தேசிய சிங்கள மக்களை இன வெறிப்போரில் தமிழர்களுக்கு எதிரான நிரந்தர எதிரிகளாக நிறுத்தியது.
5) இது அரசியல் அமைப்புச் சட்டமாக்கப்பட்டது.(இலங்கை அரசியல் யாப்பபுக்கான 6வது திருத்தம்)

இதில் வெற்றி கொண்ட சிங்களம் இலங்கையின் அரசியல் யாப்பை ஆறாவது தடவையாகத் திருத்தியது.

இந்த ஆறாவது திருத்தம் ஈழத்தமிழர் பிரிவினை கோருவதை சட்டவிரோத தேச விரோத பயங்கரவாதக் குற்றமாகப் பிரகடனப்படுத்தியது.

இதன் விளைவாகவே ஈழத்தமிழரின் அரசியல் இரத்தம் சிந்துவதாக மாறியது. இன்றும் அந்த நிபந்தனையின் மீதுதான் ஈழப்புரட்சி நகர்கின்றது.

ஈழ விடுதலையின் எதிரிகளின் எதிர்ப்புரட்சி, எப்போதும் ஆயுதம் ஏந்திய வன்முறையாகும்; இதனால் நாம் மெழுகு வர்த்தி ஏந்தி புரட்சி செய்ய முடியாது!

இதன் சுருக்கமானஅரசியல்  வரலாற்றுப் பின்னணி வருமாறு;

1) 1947 போலிச் சுதந்திர அதிகாரக் கை மாற்றுதலைத் தொடர்ந்து
2)சிங்கள ஆளும் கும்பல் ஏகாதிபத்தியவாதிகளுக்கு நிரந்தர சேவை செய்யும் பொருட்டு
3) இனப்பகைமையை நாட்டில் திட்டமிட்டு தூண்டி வளர்த்தனர்,
4)  இதன் மறுபக்கமாக அரசியல் அதிகாரத்தை சிங்கள ஏகபோகமாக்க முயன்று வெற்றிபெற்றனர்.
5) இவ்வாறு சுதந்திரம் என்ற பெயரால் ஏகாதிபத்திய நலன் பேணும் அரைக்காலனிய அரை நிலப்பிரவுத்துவ அடிமை அரசு இனப்பகைமையின் மீது இலங்கையில் நிறுவப்பட்டது.
6) இதன் விளைவாகவே அன்று(1947) முதல் இன்று (2015) வரை இன மோதலும் இரத்தக்களரியுமாக அந்தச் சின்னத்தீவு மாறியுள்ளது.
7) இவ்வாறு இனமோதல் களமாக மாறிய இலங்கைத் திரு நாடு இன்று ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டு போர்க்களமாகவும் மாறி விட்டது
8) அமெரிக்காவின் ஆசிய பசுபிக் ஆக்கிரமிப்புத்திட்டம்
9) அதற்கு சேவகம் செய்யும் இந்திய அரைக்காலனிய அரசு
10) உலக மறுபங்கீட்டில் இலங்கை மீதான சீனாவின் தலையீடு,

இவைபால் தமிழ்ச் சமூக வர்க்க சக்திகளின் மதிப்பீடு!

அ) இந்த முரண்பாட்டில் ஈழவிடுதலை சாத்தியம் என்று கற்பிக்கின்ற அந்நிய சக்திகள்- புலம்பெயர் தமிழர் பேரவைகள்,
இ) சிவில் சொசைற்றி அரசியலைப் பரப்பும் அந்நிய ஏஜெண்டுகள்
ஈ) `20 ஆசனம் பெற்று பேரம் பேசுவோம்` என்கிற பாராளமன்ற சட்ட வாத , சம்பந்தன்,சேனாதி,சுரேஸ்,சுமந்திரன் கும்பல்,
உ) பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு முழக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு `ஒரு நாடு இரு தேச` ஐக்கிய இலங்கைக்கு வாக்குப் பொறுக்கும் கஜேந்திரகுமார் கும்பல்
ஊ) இவர்கள் அனைவருக்கும் பங்குபாகம் பிரித்து சேவகம் செய்யும் யாழ் பல்கலைக் கழகம்!
எ) ஈழதேசிய இனப்பிரச்சனையை, கலாச்சார தேசியமாகக் குறுக்கி ,நான்கு தேசிய இனங்களின் ஐக்கிய இலங்கையில் கும்மியடிக்கும் இடது சாரிய, ``புதிய ஜனநாயக` NGOகள்

சபாஸ் நாவலர்களே!

இவர்கள் அனைவருமே, கறுப்பு ஜூலையின் 32ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டிய நாட்களில் தான் இந்தத் தேர்தல் திருவிழாவை அரங்கேற்றினார்கள், அரங்கேற்றி வருகின்றார்கள்.

சிங்களம் இன்று பெருமனதோடு பிரகடனம் செய்கின்றது: இலங்கை நாடு இலங்கை மக்களுக்கு உரியது, எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்று.

ஐ நா சபை மகிழ்ச்சியில் சிரித்து வாய் கிழிந்து கொடுப்பில் ஆனந்த இரத்தம் கொட்டிக் கொண்டாடுகிறது!

நம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நம் தாய் நிலமே நம் வசம் இல்லை என்பதுதான் உண்மை!

தங்கள் நிலமென்று உரிமை கோரி எங்களை விரட்டியடித்து, எங்கள் பூர்வீகப் பூமியையும் அபகரித்து கபளீகரம் செய்து, இதற்காக அறுபது ஆண்டுகள் இரத்தப் பலி கொண்ட ஒடுக்கும் தேசத்தின் ஆளும்கும்பலுக்கு `நிபந்தனையற்று ஆதரவளித்தோம்` என்கிறான் சுமந்திரன்.

வீட்டுக்கதவைத் தட்டி வாக்குக் கேட்க வருகின்றார்கள்!

புலம் பெயர் பினாமி  ஊடகங்கள் புல்லாங்குழல் இசைக்கின்றார்கள்!

இதிலிருந்து மீள்வதற்கு ஒரே வழி கறுப்பு ஜூலை நினைவாக,

தேர்தல் பாதையை நிராகரிப்பதும்,  புதிய ஈழ விடுதலையை வென்றெடுக்க  புரட்சிகர தலைமையைக் கட்டியெழுப்புவதுமே ஆகும்!

புதிய ஈழப் புரட்சியாளார்கள்

Thursday, 30 April 2015

2015 மே நாள் முள்ளிவாய்க்கால் போர்வீரம் நீடூழி வாழ்க!

மே நாள் முள்ளிவாய்க்கால் போர்வீரம் நீடூழி வாழ்க!

`ரணில்- மைத்திரி-பொன்சேகா`-போர்க்குற்றவாளிகளின் தேசத்துரோக ஆட்சியை நிராகரிப்போம்!

ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்புக் கோரி போராடுவோம்!!
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
உலகெங்கும் பரந்து வாழும் ஈழ மாணவர்களே, இளைஞர்களே,உழைக்கும் மக்களே, ஜனநாயக உணர்வாளர்களே, அறிவுஜீவிகளே,போராளித் தோழர்களே;

மீள முடியாத நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஏகாதிபத்தியம் பொருளாதார உலகமய, தேசிய உலகமறுபங்கீட்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களை
பூமிப்பரப்பெங்கும் ஏவி வரும் காலம் இதுவாகும்.இன்றைய தருணத்தில் பரந்த பிராந்திய யுத்தங்களின் வடிவைப் பெற்றுள்ள இம் முரண்பாடு ஒரு முழு உலகப் போராக உருமாறுவதற்கான அத்தனை கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.மூன்றாவது உலகப்போர் இராணுவ நிலையில் கருக்கொண்டுவிட்டது.

இத்தகைய ஒரு சர்வதேச சூழலில் தான் இவ்வாண்டு மே நாளையும், முள்ளிவாய்க்கால் நினைவின் ஆறாம் ஆண்டையும் நாம் எதிர் கொள்கின்றோம்.

ஈழ தேசிய விடுதலைக்கான புரட்சித்திட்டத்துக்கு புதிய சூழ்நிலையால் உயிரூட்டவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சர்வதேசியப் புரட்சியில் நமது நிலையை வரையறை செய்யவும், உலக மறுபங்கீட்டை ஒட்டிய அணிசேர்க்கையில் நமது நிலையை வகுத்துக்கொள்ளவும்,  இன்றைய சர்வதேச சூழ் நிலையின் பொதுப்போக்கு பற்றிய அரசியல் ஆய்வு இன்றியமையாததாகும்.

இன்றைய சர்வதேச சூழ் நிலை:

ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப்பின்னால் (1991 ) அமெரிக்கா தலைமையிலான ஒரு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கமைப்புத் தோன்றியது.இந்தச் சூழலையைப்பயன்படுத்தி புதிய உலக மறுபங்கீட்டில் ஏகாதிபத்தியவாதிகள் குதித்தனர்.அமெரிக்க, ஐரோப்பிய, ஏகாதிபத்திய வாதிகள் நேட்டோ இராணுவ குழுமத்தின் துணையுடனும்,ஐ.நா.சபையின்
ஆசீர்வாதத்துடனும் சோவியத் யூனியனின் அங்க நாடுகளாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை, பெர்லின் சுவரைத் தகர்த்து சுதந்திர விழாக்கொண்டாடி ஐரோப்பிய ஜூனியனின் கீழ் இணைத்தனர்.அந்நாடுகளின் அடிபணியாத தேசியவாதிகளை `இனச்சுத்திகரிப்பு'க் குற்றம் சாட்டி,ஹேக்நீதி மன்றத்தில் நிறுத்தினர். (1992-1995)

அடுத்து மத்திய கிழக்கைக் குறிவைத்தனர்.``முரட்டு அரசுகளைக் கவிழ்ப்பது`` என்கிற கொள்கையை வகுத்தனர்.இந்தத் தருணத்தில் தான் அமெரிக்காவின்
ஆதிக்க இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டன(2001).இந்த இராணுவ நடவடிக்கையில் பங்கு கொண்ட பெரும்பான்மையோர் சவூதி அரேபியராக இருக்க அமெரிக்கா ஆப்கானிஸ்தானை கற்காலத்துக்கு பின்னோக்கித் தள்ளும் ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்தது(2001).அதேவேளையில் அமெரிக்காவால் ஏககாலத்தில் மூன்று நாடுகளுக்கு எதிராக யுத்தம் புரிய சக்தி உண்டு என புஸ் சென்னி கும்பல் மார் தட்டியது, இதர இரு நாடுகளும் ஈராக்கும் ஈரானும் ஆகும்.ஆதிக்கக் கோபுரத்தாகுதலில் 3000 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிய அநுதாபம் தமது உலகமறுபங்கீட்டீற்கு உறுதுணையாக இருக்குமென பாசிஸ்டுக்கள் நம்பினர். அயர்லாந்துப் பிரச்சனைக்கு அதிகாரப்பகிர்வு தீர்வு கண்டு:அதாவது உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தி,அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்உலக மறுபங்கீட்டில் `தோளோடு தோள்`நிற்க,  புதிய தொழில் கட்சி என புத்தவதாரம் எடுத்த தொழில் கட்சி முடிவு செய்தது. ஈராக் அதிபர் சதாம் ஹுசைன் `மனிதப் பேரழிவு ஆயுதங்களை` உற்பத்தி செய்கின்றார் என்கிற ஆதாரமற்ற சோடிக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டின் பேரில் ஈராக் மீது யுத்தம் தொடுத்தனர்(2003).இந்தத்தடவை இது ஐ.நா.வின் ஆசீர்வாதம் இன்றியே அரங்கேறியது.அதனால் சட்டவிரோத யுத்தம் எனப் பெயர் பெற்றது!புஸ் சென்னி பிளேயர் கும்பலின் எதிர்பார்ப்புக்கு மாறாக இலட்சோப இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி `` எண்ணெய்க்கான இந்த யுத்தத்தை எமது பெயரால் தொடுக்காதே, நிறுத்து!``, என உலகின் மிகப்பெரும் பிரதான நகரங்கள் எங்கும் விண்ணதிர முழங்கினர், எனினும் பாசிச ஆக்கிரமிப்பு வெறியர்கள் ஈராக்கில் இறங்கினர்.பொன் விளைந்த அந்தப் பூமியை 'பொரிமாத்தோண்டியின் கனவு போல்` நிர்மூலமாக்கினர்.

ஆனால் மூன்று நாடுகளுக்கு எதிராக ஏக காலத்தில் யுத்தம் செய்ய முடியும் என மார் தட்டியபோதும் ஈராக் யுத்த காலத்தில் ஏகாதிபத்திய பொருளாதார நிதியாதாரப் பொறிமுறை மீது பேரிடி விழுந்ததது.இது Financial crisis (2007-2008) என அழைக்கப்படுகின்றது. இதில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடுமுடி நிறுவனங்கள் அனைத்தும் சரிந்து விழுந்து மக்களின் வரிப்பணத்தால் முண்டு கொடுத்து மரணத்தறுவாயில் துரோகத்தனமாக காக்கப்பட்டன.

இதன் காரணமாகவும் ஆப்கானிஸ்தானிலும்,ஈராக்கிலும் வாங்கிய உதையின் வலி காரணமாகவும்,அமெரிக்கா தனது உலகமறுபங்கீட்டு ஆட்சிக் கவிழ்ப்புகளை, நேரடியாக தனது படையை இறக்கி சாதிப்பதற்கு திராணியற்றதாகியது.இதை ஈடு செய்ய `ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்களை`யும், துணைக்கூலிப்படைகளையும்,`புலம் பெயர் ஓடுகாலிகளையும்` ஏவி. `அரபு வசந்தம்`(2010) என்கிற ஆட்சிக்கவிழ்ப்பு
நாடகத்தை  அரங்கேற்றியது.துனூசியா,எகிப்து,லிபியா, வரிசையில் பேரவாக் கொண்டு சிரியா மீது பாய்ந்தது.

ரசிய சமூக  ஏகாதிபத்தியத்துக்கு  ஆப்கான் போர் அமைந்தது போல், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சிரியாப் போர் அமைந்துவிட்டது.சிரிய அதிபர் சதாத்தின் நாட்கள் எண்ணப்படுகின்றன என ஆர்ப்பரித்து ஆரம்பித்த ஆட்சிக்கவிழ்ப்புப் போர் (March 2011),நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இரண்டரை இலட்சம் மக்களைப் பலிகொண்டு, தொடர்ந்த வண்ணம் உள்ளது!.அதுமட்டுமல்லாமல் புதிய பரிமாணங்களையும் எட்டியுள்ளது.

ஈரானின் (மற்றும் ரசியாவின்) அனுசரணை இல்லாமல் சிரியாவில் ஒரு அடியும் இனிமேல் அமெரிக்காவால் முன்னேற முடியாது,கூடவே சதாம் இல்லாத ஈராக்கில் ஈரான் ஆழ வேரூன்றிவிட்டது,மட்டுமல்லாமல் ஈரான் சிவில் அணு ஆயுத தயாரிப்பிலும் இறங்கிவிட்டது, இவை அனைத்தும் ரசிய பின்பலத்துடன் நடப்பவை ஆகும்.இவற்றில் அணு ஆயுதப் பிரச்சனையில் ஈரானுடன் சமரசம் காணுதல் அமெரிக்க நலன்களுக்கு முதன்மை ஆகியது.

ஆனால் இத்தகைய சமரசம் இஸ்ரேல் சவூதி அரேபிய அமெரிக்க உறவில் விரிசலைத் தோற்றுவித்துள்ளது.இதன் விளைவு தான், சவூதி மற்றும் அரபுக் கூட்டாளிகளின் தன்னிச்சையான யேமன் யுத்தம் ஆகு

ஆக ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி அதிகாரபூர்வமாகப்  பிரகடனம் செய்யப்பட்ட 1991 ஆம் ஆண்டிலிருந்து இன்று (2015) வரையான கால் நூற்றாண்டில், அமெரிக்கா ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில்
தனது மேலாண்மைய நிலை நிறுத்த எடுத்த ஆக்கிரமிப்பு சாகச வெறியாட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்து அமெரிக்காவை ஒரு முடி இழந்த மன்னனாக உலகில் உலாவ விட்டுள்ளது.

ரசிய சீன எழுச்சி

மாறாக இதே காலத்தில் ரசியாவும் சீனாவும் எழுந்து வந்தன.

ரசியா எண்ணெய் வளத்தைக் கொண்டும்,ஆயுத வியாபாரத்தைக் கொண்டும் தன்னை ஒரு ஏகாதிபத்தியமாக வளர்த்துக்கொண்டது.2020 ஆண்டளவில் ரசியா தனது ஆயுத ஏற்றுமதியை மும்மடங்காக அதிகரித்து அமெரிக்காவின் முதல் நிலையை எட்ட முயலும் என இராணுவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சீனா அந்நிய முதலீட்டிக்கும் , தேசிய மூலதனத்துக்கும் இடையில் ஒரு சமரச நிலையக் கடைப்பிடித்து, மிக மலிவாக உழைப்புச் சக்தியை சுரண்டி, மூலதன வலிமைமிக்க பிரமாண்டமான உலக உற்பத்திச்சாலையாக மாறியது. அமெரிக்காவை தனது கடனாளி நாடாக மாற்றியது.January 16, 2014FOX Business இன் தரவின் அடிப்படையில் (China Now Owns a Record $1.317T of U.S. Government Debt.) அதாவது அமெரிக்க அரசாங்கக் கடனில் 1.37ரில்லியன் டொலர் பெறுமதியான கடனை சீனா பொறுப்பேற்றுள்ளது. ஆசியா ஆபிரிக்கா தழுவிய வகயில் தனது விரிவாதிக்கத்தை விஸ்தரித்துக் கொண்டது.

இவ்வகையில் இரு மாபெரும் நாடுகள் உலக அரங்கில் உள்நாட்டு அடித்தளம் கொண்டு அமெரிக்காவுக்கு சவாலாகத்  தோன்றின. இவை இரண்டும் மத்திய கிழக்கில் ஈரானின் மேலாண்மையை ஆதரிக்கின்றன.

இத்தகைய புதிய சூழலில் ஒற்றைத்துருவ அமெரிக்க உலக ஒழுங்கமைப்பு சவாலுக்குள்ளானது.

இதனை எதிர்கொள்ள அமெரிக்கா ரசியாவை இராணுவரீதியில் சுற்றிவளைத்தது.இதற்காக கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தளமாக்கியது.கொசோவைப் பிரித்தது (2008), குறிப்பாக உக்ரேயினில் தலையீடு செய்தது.ரசியாவுக்கு எதிரான இராணுவத்தளமாக உக்ரேனை மாற்றியது.நேற்றோவைக் கொண்டு உக்ரேயின் இராணுவத்தை ரசிய எல்லைகளில் நிறுத்தியது.

முதல் இரு கட்டங்களிலும் இருந்தது போலல்லாமல் இந்தத்தடவை ரசியா நேரடியாக கிரீமியாவை ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து பதிலடி கொடுத்தது.சிரியாவுக்கும்,ஈரானுக்கும் பகிரங்கமாகவே ஆயுத விநியோகம் செய்தது. பொருளாதாரத் தடைக்கு மேல் அமெரிக்காவால் எதுவும் செய்ய இயலவில்லை.

இது ஒரு புதிய காலகட்டத்தின் தோற்றமாகும்.

இக்காலகட்டத்தில்  ரசிய சீன எதிர்ப்பு உலக அமைப்பை உருவாக்குவது  அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்கு அவசியமாகிவிட்டது.அணு ஆயுதப்பிரச்சனையில் ஈரானுடன் சமரசம் செய்துகொண்டாலும்
அமெரிக்காவின் உலக மேலாதிக்க யுத்ததந்திர நலனின் கோணத்தில் ரசிய சீன வரிசையில் ஈரானும் எதிராளி நாடே ஆகும்.

இந்தப் பின்னனியில் தான் ஜப்பானுடன், இந்திய விரிவாதிக்க அரசையும் தனது யுத்ததந்திர கூட்டாளி ஆக்கியுள்ளது அமெரிக்கா. மோடி அரசு முழந்தாளிட்டு சேவகம் செய்ய தயாராகிவிட்டது.

இதனடிப்படையில் தனது ஏகாதிபத்திய தொண்டை தென்னாசிய,இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் மீது நிறைவேற்றும் பொருட்டு இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையீடு நடத்தி வருகின்றது இந்திய விரிவாதிக்க அரசு..
உள்நாட்டுச் சூழ்நிலை:

30 ஆண்டுகால ஈழப்போரில் ஆனையிறவுப் பெரும் படைத்தளத்தை தகர்த்து புலிகள் தமது முகட்டை எட்டினர்.யாழ் நோக்கிச் செல்ல ஏகாதிபத்தியம்  தடை விதித்தது.

பேச்சு வார்த்தை நாடகம் ஆடினர்.அன்ரன் பாலசிங்கம் `அதிகாரப்பரவலாக்கத்துக்கு` ஒஸ்லோவில் துரோகத்தனமாக கையொப்பம் இட்டான்.

ரணில் கருணாவை கைப்பற்றினான்,யுத்த பல சமநிலை மாறியது,இறுதியில் புலிகளின் தலைமைத் தளபதிகளை  விசவாயுத் தாக்குதலில் கோழைத் தனமாக படுகொலை செய்தனர்.

விடுதலைப்புலிகள் ஒரு ஸ்தாபனம் என்ற வகையில்(As an Organaisation) முற்றாக அழித்தொழிக்கப்பட்டனர்.

இதற்கு முழு உரிமை கொண்டாடிய பக்ச பாசிஸ்டுக்கள், இந்த யுத்த வெற்றியை மூலதனமாகக் கொண்டு தமது பாசிச இராணுவ, குடும்ப சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்பினர்.

பக்ச பாசிஸ்டுக்களின்  இனப்படுகொலைக்கு அமெரிக்காவும், இந்தியாவும், உறுதுணையாக இருந்த போதும் சில மட்டுப்பாடுகள் இருந்தன.

இவை எதுவுமின்றி இந்துசமுத்திரத்தில் தனது கடலாதிக்கத்தை உறுதி செய்யும் பொருட்டு ஆயுதங்களையும், நிதியையும் அள்ளி அள்ளி வழங்கியது சீன அரசு.

இலங்கை இந்தியாவைக் காட்டிலும் சீனாவை சார்ந்த வெளிவிவகாரக் கொள்கையை நாடுவதற்கு தமிழகமும், ஈழப்பிரிவினை இயக்கமும் ஒரு முக்கிய காரணமாகும்.

இலங்கையின் சீன சார்பு போக்கு பக்ச பாசிஸ்டுக்களால் தோற்று விக்கப்பட்டது அல்ல.70களில் சிறீமா அரசாங்கம், சீன  அரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது.தமிழீழம் மன்னார் பேசாலையில் எண்ணெய் ஆய்வுக்கான குத்தகை சீன நிறுவனத்துக்கே வழங்கப்பட்டிருந்தது.

1972 அரசியல் யாப்பை எதிர்த்து சிறை சென்ற தமிழ் இளைஞர்களில் ஒருவரான புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் ஒருவரின் பிரசுரிக்கப்படாத உணர்ச்சிக் கவிதை வரிகள் பின்வருமாறு:
`` சிறீமாத் தாய்- தமிழர்க்கு நாய் ;
சூ என் லாய்- படுத்துறங்கிய பாய்``!
(ஆதாரம்: அவர் கூட சிறையிருந்தவர்கள்) 
ஆனால் யுத்தத்துக்கு, சீனா வழங்கிய நிபந்தனையற்ற பேருதவியின் காரணமாகவும், இனப்படுகொலை,மனித உரிமை மீறல், ஐ.நா.விசாரணை என மேற்குலக அரசுகள்  மிரட்டி வந்ததாலும், யுத்த வெற்றிக்குப் பின்னால் வெளியுறவு கொள்கையில் ஒரு அடிப்படையான மாற்றத்தை பக்ச பாசிஸ்டுக்கள் ஏற்படுத்தினர்.

அமெரிக்க இந்திய சார்பு நிலைக்கு மாறாக, சீன ஈரான் நிலையைத் தேர்ந்து கொண்டனர்.

இலங்கை ஒரு இந்திய எதிர்ப்பு நாடாகும்.குறிப்பாக சிங்கள மக்கள் எப்போதும் இந்தியாவை நம்பியதில்லை.பழங்காலப் படையெடுப்புகள் மட்டுமல்ல, நிகழ்காலப் படையெடுப்புகளும் இற்கு காரணமாகும்.ராஜீவ் காந்தி மீதான சிங்கள சிப்பாய் ஒருவனின் தாக்குதல் இதன் விளைவே .இலங்கை மீது இந்தியா குறைந்த பட்சம் 4 தடவை தலையிட்டுள்ளது.இந்திய இலங்கை ஒப்பந்தம் ஒரு மேலாதிக்க ஆக்கிரமிப்பு ஒப்பந்தமாகும்.தன் கையை முறுக்கி இந்தியா செய்த ஒப்பந்தம் என்று ஜே.ஆர் வர்ணித்தார். மேலும் யுத்த வெற்றியின் விளைவாக மன்னர் ராஜபக்ச இரண்டுதடவை அமோக வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டார், `ஜெயித்துக் கொண்டே இருப்பேன்` என நம்பிக்கை கொண்டிருந்தார்! இந்த அடிப்படையான அயல் உறவுக் கொள்கை மாற்றத்துக்கு மக்களின் ஆதரவு இருந்தது.

இந்த நம்பிக்கையில் தனது பதவிக்காலம் முடியும் முன்னமே, எதிர்க் கட்சியான ஐக்கிய தேயக் கட்சி உட்கட்சி பூசலில் சிக்கிக் கொண்டிருந்த வேளையில் தேர்தலை அறிவித்து, மூன்றாவது பதவிக்கால வெற்றியைப் பெற முயன்றார்.

அமெரிக்காவும் இந்தியாவும் திட்டமிட்டிருந்த ஆட்சிக்கவிழ்ப்பை இந்தத் தேர்தலில்(2013) அமூலாக்க முடிவு செய்தனர்.RAW நேரடியாக தலையீடு செய்தது.ராஜபக்சவுக்கு எதிராக அவரது சொந்தக்கட்சி உறுப்பினரும்,சொந்த அரசாங்க அமைச்சரும்,இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை யுத்த அமைச்சருமான மைத்திரிபால சிறீசேன தேர்தலில் ராஜபக்சவை எதிர்த்து போட்டியிட்டார்.

இந்திய நாடாளுமன்றத்தேர்தல்களில் பொதுவிதியாகவும்,இலங்கை நாடாளமன்றத் தேர்தலில் மிக விதிவிலக்கானதுமான `கட்சி தாவல்`தாராளமாக இடம்பெற்றது.இவ்வாறு கட்சி தாவியோர் காலம் காலமாக தமது எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரவோடு இரவாக  கூட்டமைத்தனர்.இந்தியக் கைக்கூலி தமிழ்க் கூட்டமைப்பும், இதர தமிழ் அடிமைகளும், அந்நிய சிவில் சொசைட்டிகளும்,பாதிரிமார்களுமாக
தமது பங்குக்கு தமிழ் மக்களின் வாக்கை மைத்திரிக்குப் பெற்றுக் கொடுத்து தமிழ் வாக்குகளால் `போர்க்குற்றவாளிகள்` அதிகாரத்தைக் கைப்பற்ற வழியமைத்தனர்.மைதிரிபால சிரீசேனா ஜனாதிபதி ஆனார்.

பக்ச பாசிஸ்டுக்களின் சாம்ராஜ்ஜியக் கனவு தற்காலிகமாகத் தகர்ந்தது.மைதிரி ஆட்சி ``புதிய அரசு`` என ஊடகச் சிங்கங்களால் அழைக்கப்பட்டது.மேற்குலக ஊடகங்கள் மாத்தறை பாக்கு நீரிணையை தொடுவதாகவும்: இலங்கை தலைகீழாக மாறிவிட்டதாகவும், `நடுநிலையாக` செய்தி சொன்னன!

மைதிரி-ரணில் அரசாங்கம் 100 நாள் திட்டத்தை அறிவித்தது. ஒரு நாளும் ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் 19 A, நிறைவேற்றப்பட்டது என்றால் அதற்கு முக்கிய காரணம், ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர அனைத்து வல்லமையும் பெற்றிருந்த ஜனாதிபதி, பக்சபாசிஸ்டுக்களின் ஆட்சியில், அந்த சர்வவல்லமைமிக்க அதிகாரத்தை அமெரிக்க இந்திய நலனுக்கு எதிராக பிரயோகித்ததாகும்.மேலே நாம் கண்ட ஆக்கிரமிப்புகளிலும்,ஆட்சிக்கவிழ்ப்புகளிலும் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை,தமது உலக மறுபங்கீட்டுக்குப் பயன்படுத்திக்
கொண்டார்களோ,அவ்வாறே ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிராக 1978 இல் அது அமூலாக்கப்பட்ட காலம் முதலே இருந்து வந்த எதிர்ப்பைப் பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பை இலங்க்கையில் நடத்தினார்கள் என்பதே உண்மை.

மைத்திரி அரசின் யோக்கியம்:

தேசியமும்,ஜனநாயகமும்,சட்டம் ஒழுங்கும்  பேசும் மைத்திரி அரசாங்கம்,இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியவில்லை,ஆறாவது திருத்தச்சட்டத்தை நீக்கவில்லை,தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்க -வில்லை.பெளத்த மதத்தை அரச மதமாக முடியில் சுமக்கின்றது.வடக்கு கிழக்கில் இருந்து சிங்கள இராணுவத்தை வெளியேற்ற மறுக்கின்றது. வடக்குக் கிழக்கில் சிறு தொழில்,சுற்றுலாச்`சேவை`,வர்த்தகம் போன்ற இராணுவ முதலீடுகளை முடக்க மறுக்கின்றது.சிவில் சமூக வாழ்வில் இராணுவத் தலையீடு தொடர்கின்றது.ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் விவசாய குடியிருப்பு நிலங்கள் முற்றாக மீளக் கையளிக்கப்படவில்லை. யுத்தக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை,தம்வசம் இல்லை என்று கைவிரிக்கின்றது.கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பொறுப்பேற்க மறுக்கின்றது.சிங்கள மக்களும், புதல்வர்களும் ஜீவமரணப் போராட்டம் நடத்தி, பல பத்தாயிரம் பேரைப் பலிகொடுத்து,களனியாற்றில் கரிக்கட்டைகளாக மிதந்து,விடுதலைப் புலிகளால் முதுகெலும்பு முறிக்கப்பட்டு,இறுதியாக இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவே நாட்டை விட்டு வெளியேறக் கோரிய அந்நிய ஆக்கிரமிப்பு இந்திய இராணுவத்துக்கு கொழும்பில் மண்டபம் அமைத்து காவல் காத்து பூச்செண்டு வைக்கும் சிங்களம்,மாவீரர் துயிலும் இல்லங்களின் மேல் இராணுவ முகாம் அமைத்து நல்லிணக்கத்துக்கு அழைப்புவிடுகின்றது!கேவலம் யுத்த விதவைகள் பிரச்சனையில் கூட இராணுவ விதவைகளுக்கும்,தமிழ் விதவைகளுக்கும்
பாரபட்சம் காட்டுகின்றது.அரசியல் பிரமுகர் பாலகுமார்,ஆஸ்தான புலவன் புதுவை இரத்தினதுரை எங்கே என்று எம் தேசத்துக்கு பதில் சொல்லவில்லை. இராணுவப் புதைகுழிகளுக்கு விசாரணை இல்லை, மாகாணசபை உறுப்பினர் அனந்தி அவர்கள் கூட இராணுவத்திடம் ஒப்படைத்த தனது கணவரை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவரோடு அணிவகுத்து கண்ணீரும் கம்பலையுமாய்,அன்னையர்,மனைவியர், சகோதரர் என ஒரு பட்டாளம், தட்டாத கதவில்லை.விபூசிக்கா குடும்பம் கூட இன்னும் -100 நாள் திட்டம் முடிந்தும் ஒன்றிணையவில்லை- தூ!

பக்ச பாசிஸ்டுக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கூட வெறும் அரசியல் பழிவாங்கல் என்பதற்கு மேலாக எதுவும் நடந்தேறிவிடவில்லை, மேலும் இனப்படுகொலை குறித்த பிரச்சனையில் பக்ச பாசிஸ்டுக்களின் உள்ளக விசாரணை என்பதே மைத்திரி பாசிஸ்டுக்களினதும் நிலையாகும். அயல் உறவுக் கொள்கையில் எடுத்த திருப்பம் காரணமாக தற்போது`உள்ளக விசாரணையை` அமெரிக்காவும்,ஐ.நாவும் ஏற்றுக்கொண்டுவிட்டன!

இதுதான் 100 நாள் திட்டம்!

ஆனால் அவசர அவசரமாக இந்தியா சென்று,செங்கம்பள வரவேற்புப்பெற்று, இராணுவ ஒப்பந்தம் உள்ளிட்ட நான்கு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டது.மோடி அரசு தென்னாசிய சகோதரத்துவம் என்று பீத்திக்கொண்டது.~`சிங்களத் தீவுக்கு பாலம் அமைப்பதாக` பாரதியை அவமதித்தது. ஆனால் உலக வர்த்தக நிறுவனத்தின் கடந்த ஆண்டு ஆய்வறிக்கையின் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் இந்திய
இறக்குமதியின் பெறுமதி 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.ஆனால் இலங்கை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததோ ஆக 5மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  மேலும் இத்தரவுப் படி இலங்கை இறக்கு மதியின் முதன்மை நாடு இந்தியாவாகும். 70 களில் ஜே.ஆர் உலகமயப் பொருளாதாரக் கொள்கையை ஏற்று , இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று பிரகடனம் செய்து திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிவித்த காலத்தில் இந்த இடத்தைப் பிடித்திருந்தது ஜப்பான் ஆகும்.இந்தச் சந்தைப்போராட்டத்தின் ஒரு களமாகத்தான் இந்திரா ஈழப்போராட்டத்தைக் கையாண்டார்.காங்கிரஸ் கருங்காலி நெடுமாறன் தொடர்ந்து கூறி வரும் `இந்திராவினதும் எம் ஜி ஆர் இனதும் ஈழப்போராட்ட ஆதரவு` என்பது  இந்தச் சந்தைக் கைப்பற்றல் தான்.

சிறீ சேனா அடிமை அரசாங்கம் மோடி ஆட்சியுடன் செய்து கொண்ட நான்கு ஒப்பந்தங்கள்,இந்திய இலங்கை ஒப்பந்தத்துடன் இணைந்து இலங்கையின் அரைக்காலனிய சுதந்திரத்தை இறையாண்மையை அமெரிக்க இந்திய உலகமறு பங்கீட்டு நலன்களுக்கு  அடகு வைத்த  தேசத்துரோகச் செயலாகும்.

புதிய அரசின் அந்நிய பினாமிகளான `சந்திரிக்கா,ரணில், பொன்சேகா, மைத்திரி ` அனைவரும் போர்க்குற்றவாளிகள் ஆவர்.
சந்திரிக்கா ஜெயசுக்குறுவின் நாயகி- நவாலித்தேவாலய இனப்படுகொலையாளி, ரணில் பேச்சுவார்த்தைப் போர்வையில் `கருணாச்சதியை` நிறைவேற்றிய நாயகன்,பொன்சேகா, இனப்படுகொலை யுத்த இராணுவத் தளபதி,ஆழ ஊடுருவும் படையின் சிற்பி, மைத்திரி முள்ளிவாய்க்கால் இராணுவ அமைச்சர்! ஏன் சம்பந்தன் கூட `எரிக் சொல்கெய்ம் பிரபாகரனைப் புரிந்து கொள்ள’ உதவியவர்!

ஆக இந்தப் ``புதிய அரசு`` உலகமறுபங்கீட்டு அணிசேர்க்கையில் அமெரிக்க இந்திய அணி சேர்ந்த, போர்க்குற்றவாளிகளின் தேசத்துரோக அரசாகும்.

ஆதலால், `ரணில்- மைத்திரி- பொன்சேகா`- போர்க்குற்றவாளிகளின் தேசத்துரோக ஆட்சியை  நிராகரிப்போம்!

பக்சபாசிஸ்டுக்களின் மீள்வருகைக்கான புறநிலை வாய்ப்புகள்:

1) இலங்கை அரசு இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டது,
2) பெரும்பான்மைச் சிங்கள மக்கள், சிங்களப்பேரினவாத பெளத்தமதவாதத்துக்கு பலியாக்கப்பட்டவர்கள்.
3) ``முப்பது ஆண்டுகால புலிப்பயங்கரவாத்திடமிருந்து`` நாட்டை மீட்டவர் ராஜபக்ச!
4) ராஜபக்ச ஒக்ஸ்பேர்ட் பல்கலைகழகம் உற்பத்தி செய்த தரகன் அல்ல, அவன் உள்நாட்டுத் தரகன்.
5) இலங்கை அரசியலில் என்றும் தீர்மானகரமான பாத்திரம் ஆற்றும் பெளத்த நிறுவன சமூக சக்திகளின் பலத்த ஆதரவு கொண்டவன்.
6) `ரணில்-சந்திரிக்கா-மைத்திரி-பொன்சேகா` கும்பல் அமெரிக்க இந்திய அந்நிய அரசுகளுடன் இணைந்து நடத்திய ஆட்சிக்கவிழ்ப்பு , `தேசபக்தன்` ராஜபக்சவுக்கு ஒரு பலமான தேர்தல் துரும்பாகும்.மகிந்த
ஒபாமாவைப்போல் எழுதியதைப் பேசும் கிளிப்பிள்ளையும்  அல்ல.
7) மைத்திரி கும்பலின் உலகமய இந்திய விரிவாதிக்க பொருளாதாராப் பாதை எவ்வகையிலும் பக்ச பாசிஸ்டுக்களின் பாதைக்கு மேலானது அல்ல.இதனால் ஒடுக்கப்படும் விவசாய உழைக்கும் மக்களை ராஜபக்ச தன் பக்கம் திரட்டிக்கொள்வான், நமது ஐக்கிய இலங்கை `இடது சாரிகள்` அதற்கு துணை நிற்பார்கள்.
8) ராஜபக்ச பலம் பெறும் போது மைத்திரியிடம் தாவிய `கொள்கைக் குன்றுகள்` மீண்டும் இரவோடு இரவாக பக்ச பாசிஸ்டுக்கள் பக்கம் தாவமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
9) சிங்கள வாக்குகளின் அடிப்படையில் மகிந்த பெறத்தவறியது சிறு தொகை தான்.தமிழ் மக்களின் வாக்குகள் தான் மைத்திரியை ஜனாதிபதி ஆக்கியது, இதைத் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள்.
10) மைத்திரி வெற்றி பெற்றது ஜனாதிபதித்தேர்தலில், ஆனால் பொதுத் தேர்தலை சிறிலங்கா சுதந்திரக்கட்சி சந்தித்தாகவேண்டும்.
இவையெல்லாம் பொதுத்தேர்தலில் மகிந்த மீண்டெழுவதற்குள்ள புறவய வாய்ப்புகள் ஆகும்.

பக்ச பாசிஸ்டுக்கள் பலி கொள்ளப்படவில்லை, கிலி கொள்ள வைக்கப்பட்டிருக்கின்றார்கள், இதிலிருந்து அவர்களால் மீண்டெழ முடியும், அதற்கான சமூக வேர்களும் புறச்சூழலும் உள்ளன!

ஈழப்புரட்சியின் பாதை என்ன?

மூன்றாம் உலகப்போரை நோக்கிய உலக மறுபங்கீட்டின் போர்க்களமாக இலங்கை ஆகி விட்டது. ஈழப்பிரிவினை இதன் ஒரு பகுதியாகிவிட்டது.

இச்சூழலில் அமெரிக்க இந்திய அணியோ,சீன ரசிய அணியோ
இரண்டுமே ஏகாதிபத்திய அணிகளே ஆகும்.

இதில் எதையும் நாம் சார முடியாது, இதில் எது ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

இந்த இரண்டு அணியும் தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட நடத்தும் சித்து விளையாட்டே இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல்களாகும்.

இந்த இலங்கை நாடாளு மன்றத் தேர்தலில் பங்கேற்கும் இரு தரப்பு மேற்கண்ட ஏகாதிபத்திய அணியின் இரு தரப்பே ஆகும்.

ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் எந்த அணிக்கு சேவகம் செய்ய, அரைக்காலனிய அடிமைகளை தேர்வு செய்கின்றோம் என்பதே `பொதுத்தேர்தல் ஆகும்`!

எனவே இயற்கையாகவே இந்தப்பாதையில் ஈழம் தனது விடுதலையை அடைய முடியாது. எனவே தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம்!

இதனால் ஈழ தேசத்துக்கு தன் சொந்தப் பாதையை தேர்ந்து கொள்ளும் சுதந்திரம் உத்தரவாதம் செய்யப்படவேண்டும்.
எனவே ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்புக் கோரி போராடுவோம்!!
================================================================

ஈழப்புரட்சியாளர்களின் மே1 மே18 முழக்கங்களின் மீது அணிதிரளுமாறு அறைகூவல் விடுக்கின்றோம்.

 மே1-மே18
புரட்சித்திருநாள் சூளுரைகள்:

அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 
மைத்திரி-ரணில்-பொன்சேகா கும்பலின் அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கமே!

ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் ரசிய-சீன முகாமுக்கு எதிராக அமெரிக்க இந்திய முகாமுடன் 
அணி சேரும் வெளிவிவகாரக் கொள்கை, `அணி சேராக் கொள்கை`யைக் கைவிடும் விதேசியப் பாதையே!

உலக மறுபங்கீட்டுப் போரில் இந்த முகாம்களில் எந்த ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று மைத்திரி ரணில் பாசிஸ்டுக்கள் அல்ல!

சரிந்து வரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க சாகச வெறியாட்டங்களை எதிர்ப்போம்!

முண்டு கொடுக்கும் இந்திய அரசின் ஆசிய விரிவாதிக்க கனவை தகர்ப்போம்!

அண்டிப் பிழைக்கும் மைத்திரி - ரணில் கும்பலின் தேசத்துரோக அரசாங்கத்தை தூக்கியெறிவோம்!

அதிகாரப்பரவலாக்கல் பாதையை நிராகரித்து, ஈழச்சமரசவாதிகளை, நாடுகடந்த-புலம் பெயர்ந்த 
தமிழீழ ஏகாதிபத்திய தாசர்களை, தமிழக- இந்திய விரிவாதிக்க நீசர்களை தனிமைப்படுத்துவோம்!

சிங்கள, தமிழ் - இரு தேச உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்க ஈழப்பிரிவினையை உயர்த்திப்பிடிப்போம்!

மலையக முஸ்லிம் ஈழத்தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் கட்டியமைக்க போராடுவோம்!

ஏகாதிபத்திய உலகமய, உலக மறுபங்கீட்டு கொடுங்கோன்மையை எதிர்த்து அலைகடலென 
ஆர்ப்பரிக்கும் உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!

இனப்படுகொலையாளரை கூண்டிலேற்ற ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

பாராளமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம், புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

மே நாள் தியாகம் - முள்ளிவாய்க்கால் தியாகம் நீடூழி வாழ்க! 

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

புதிய ஈழம் மலர்க!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப்புரட்சியாளார்கள்                                                                    மே 2015

Monday, 27 April 2015

மே1-மே18 புரட்சித்திருநாள் சூளுரைகள்:

மே1-மே18
புரட்சித்திருநாள் சூளுரைகள்:

* அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றிய 
மைத்திரி-ரணில்-பொன்சேகா கும்பலின் அரசாங்கம் தேசத்துரோக அரசாங்கமே!

* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டில் ரசிய-சீன முகாமுக்கு எதிராக அமெரிக்க இந்திய முகாமுடன் அணி சேரும் வெளிவிவகாரக் கொள்கை, `அணி சேராக் கொள்கை`யைக் கைவிடும் விதேசியப் பாதையே!

* உலக மறுபங்கீட்டுப் போரில் இந்த முகாம்களில் எந்த ஒன்றைச் சார்பவர்களும் ஏகாதிபத்திய தாசர்களே!

* பக்ச பாசிஸ்டுக்களுக்கு மாற்று மைத்திரி ரணில் பாசிஸ்டுக்கள் அல்ல!

* சரிந்து வரும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க சாகச வெறியாட்டங்களை எதிர்ப்போம்!

* முண்டு கொடுக்கும் இந்திய அரசின் ஆசிய விரிவாதிக்க கனவை தகர்ப்போம்!

* அண்டிப் பிழைக்கும் மைத்திரி - ரணில் கும்பலின் தேசத்துரோக அரசாங்கத்தை தூக்கியெறிவோம்!

* அதிகாரப்பரவலாக்கல் பாதையை நிராகரித்து, ஈழச்சமரசவாதிகளை, நாடுகடந்த-புலம் பெயர்ந்த தமிழீழ ஏகாதிபத்திய தாசர்களை, தமிழக- இந்திய விரிவாதிக்க நீசர்களை தனிமைப்படுத்துவோம்!

* சிங்கள, தமிழ் - இரு தேச உழைக்கும் மக்களையும் ஒன்றிணைக்க ஈழப்பிரிவினையை உயர்த்திப்பிடிப்போம்!

* மலையக முஸ்லிம் ஈழத்தமிழ் மக்களின் ஐக்கியத்தைக் கட்டியமைக்க போராடுவோம்!

* ஏகாதிபத்திய உலகமய, உலக மறுபங்கீட்டு கொடுங்கோன்மையை எதிர்த்து அலைகடலென ஆர்ப்பரிக்கும் உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்றுசேருவோம்!

* இனப்படுகொலையாளரை கூண்டிலேற்ற ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

* பாராளமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம், புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!

மே நாள் தியாகம் - முள்ளிவாய்க்கால் தியாகம் நீடூழி வாழ்க! 

மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வெல்க!

புதிய ஈழம் மலர்க!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப்புரட்சியாளார்கள்