கொன்சலிற்றா மரணம் தற்கொலை அல்ல தமிழ்ப் பாதிரிகள் செய்த படுகொலையே!
அன்பார்ந்த தமிழீழ மக்களே, சர்வதேசமெங்கும் பரந்து வாழும் ஈழ சகோதர சகோதரிகளே,
அன்பார்ந்த தமிழீழ மக்களே, சர்வதேசமெங்கும் பரந்து வாழும் ஈழ சகோதர சகோதரிகளே,
மற்றொரு ஈழ இழவுச் செய்தியோடு இத்தடவை தங்கள் முன்னால் வருகின்றோம்.
மண்டைதீவில் பிறந்து குரு நகரில் வளர்ந்த ஒரு ஏழை மீனவக் குடும்பத்தின் 22 வயது ஈழப் பெண் பிள்ளை கொன்சலிற்றா ஆழ் கிணற்றில் பிணமாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.பிரேத பரிசோதனை அறிக்கை வரும் புதன்கிழமை 23-04-2014 வெளி வரும் என நம்பப்படுகின்றது.
இக் கொலைக்கும் யாழ் ஆயர் இல்ல ஆளுகைக்கு உட்பட்ட மறைக் கல்வி நிலையப்பாதிரிகள் இருவருக்கும்( குயின்ரன், பெர்ணாண்டோ) சம்பந்தம் இருப்பதாகவும், அவர்களது தொடர்ச்சியான பாலியல் இம்சைகளின் விளைவே இந்தமரணம் என்று கொன்சலிற்றாவின் பெற்றோர் சிறீலங்கா பொலிசாரிடம் தமது முறைப்பாட்டைப் பதிந்துள்ளனர்.
மேலும்அவர்கள் இது தொடர்பில் வெளியான ஆயர் நிர்வாகத்தின் அறிக்கையில் தமக்கு நம்பிக்கை இல்லையென கருத்து வெளியிட்டுள்ளனர். ஆயர் நிர்வாக அறிக்கை கூறுகிறவாறு
1) மறைக் கல்வி நிலைய சேவைக்கு கொன்சலிற்றா அவரது நண்பி மூலம் செல்லவில்லை.நேர் மாறாக மறைக்கல்வி நிலைய பாதிரிகளின் தொடர்ச்சியான என் மீதும், என் மகள் மீதுமான நிர்ப்பந்தத்தின் விளைவாகவே சென்றார்.
2) நாம் கொன்சலிற்றாவை தனிமைச் சிறையில் அடைத்து வைத்ததன் விளைவாக நேர்ந்த தற்கொலை என்ற தோரணையில் அந்த அறிக்கை அமைந்துள்ளது.கொன்சலிற்றா பெரிய தேவாலயத்துக்குச் செல்லவில்லையே தவிர மற்றும்படி சுதந்திரமாகத்தான் நடமாடித் திரிந்தா.
எமது தவக்காலக் கடமைகளை நாம் மாற்றுக் கோவிலில் செய்தே வந்தோம்.
எனவே இந்த அறிக்கை உண்மைக்குப் புறம்பானது, என பகிரங்கமாக தெரிவித்துள்ளனர்.
கொன்சலிற்றாவின் இறுதி ஊர்வலம் யாழ் ஆயர் நிர்வாக கந்தோர் முன்பாக நிறுத்தப்பட்டு
``இதற்கு ஒரு முடிவு வேண்டும், இன்னொரு மகளுக்கு இக்கதி நேரக்கூடாது``
எனக் கதறிக் கதறிக் கூக்குரலிட்டு மன்றாடி அழுதனர். ஆயர் மாளிகையின் அரசவைக்கதவு மூடிக்கிடந்தது.ஒரு வெள்ளை அங்கிப் பாதிரியும் இதய சுத்தியோடு வெளியே வந்து ஏன் அழுகின்றீர்கள் எனக் கேட்கவில்லை.
அடுத்த நாள் வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் `மக்கள் தமக்கு முறையீடு செய்யவில்லை` எனக் குற்றம் சுமத்தினர்.
ஆக யுத்தம் முடிந்த சமாதான காலத்தில் ஒரு பாலியல் படுகொலையை பாதிரிகள் அரங்கேற்றியுள்ளனர்.
இது ஈழத் தொலைக் காட்சியின் இசைப்பிரியா அல்ல, யாழ் ஆயர் இல்ல மறைக்கல்வி ஆசிரியர் கொன்சலிற்றா!
வத்திக்கானில் இருந்து தமிழீழம் வரை ` கத்தோலிக்க திருச்சபை` தன ``திரு`` மகுடத்துக்கு தான் தகுதியற்றது என நிரூபித்துள்ளது.
இந்த தகுதியின்மையில் பிரதானமானது அவர்கள் ஆடும் `துறவி` வேடமாகும்.
1) சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்வு
2) பெண் பக்தர்கள் மீதான பாலியல் வன்புணர்வு
இத்துறவிகள் இழைத்த பிரதான குற்றச்செயல்களாகும்.
இது குறித்து ஐ.நா.சபையின் சிறுவர் நலப் பிரிவு தெரிவித்த கண்டனத்தை தமது `சொந்த விவகாரத்தில் தலையிடுவதாக கண்டித்து
இக் குற்றச்சாட்டை வத்திக்கான் அரசு நிராகரித்துள்ளது!
இந்த இழி கலாச்சாரத்தில் அயர்லாந்து கத்தோலிக்க திருச்சபை கொடுமுடியாகத் திகழ்கின்றது.இதனோடு அமெரிக்கப் பாதிரிகள்
போட்டி போட்டு ஓடுகின்றனர்.
இது மேற்குலக கிறிஸ்தவ அதிகாரம் என்றால் கிழக்குலக ஆசிய ஆபிரிக்க மத அதிகாரத்தைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.
அண்மையில் ஆபிரிக்க நாடொன்றில் ஒரு இலட்சாதிபதி ஆயர் பணி நிறுத்தம் செய்யப்பட்டார்.
புலிகள் இல்லாத தமிழீழத்தில், பாதிரி எலிகளுக்கும் ஆண்மை மிடுக்கேறி சாமிக்காரர்கள் எல்லாம் ஆமிக்காரர்கள் ஆகி வருவதன் அறிகுறி தெரிகின்றது.
ஆக ஓரிரு சிலரால் திருச்சபைக்கு களங்கம் என்ற வாதம் கவைக்குதவாதது.இந்த திருச்சபையே மானுடத்துக்கு ஒரு மாபெரும் களங்கம் ஆகும்.
பொருளாதாரத் துறையில் 50 பில்லியன் ஈரோ சொத்து மதிப்புள்ள வத்திக்கான் வங்கி, மோசடியின் சிகரமாக விளங்குகின்றது என FT பத்திரிகையின் 11 வருடகால ஆய்வு தெரிவிக்கின்றது.
ஈழத்தில் உள்ளூர் `திருச்சபைகளோ`
1) நில உடைமையாளர்களாக உள்ளனர்
2) மேற்குலகில் இருந்து பெருந்தொகை நிதி பெறுகின்றனர்
3) காணிக்கை என்ற பெயரில் விவசாயிகளின் உற்பத்தியை உண்டு கொழுக்கின்றனர், உண்டியல் கொள்ளை நடத்துகின்றனர்.
இவற்றால் இவர்கள் உழைக்காமல் வாழ்கின்றனர்.
கலாச்சாரத்துறையில் `கன்னியர் மடம்` என்கிற பெண் விடுதிகளை தமது பக்கத்துணையாகக் கொண்டுள்ளனர்.ஏகாதிபத்திய இழி கலாச்சாரத்தின் அத்தனை விம்பங்களும் இவர்களை புடை சூழ்ந்துள்ளது.இவர்கள் திரை மறைவில் இவற்றை அநுபவித்து மகிழ்கின்றனர.
மனிதாபிமானத்துறையில் திருச்சபை மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது, என்பது உண்மைதான். திருச்சபை தனது இருப்பை இவ்வாறுதான்
-இந்த சீர்திருத்த தொண்டு மோசடியின் மூலம் தான் புரட்சிகர சமூக மாறுதலை பின்தள்ள முயன்று வருகின்றது.லத்தீன் அமெரிக்காவை
மேலும் சிறப்பாக ஆபிரிக்க பெரும் கண்டத்தைப் பாருங்கள் பைபிளின் மோசடியை அறிவீர்கள்.
அரசியல் துறையில் கத்தோலிக்க தமிழ் திருச்சபை:
அரசியல் துறையில் கத்தோலிக்க திருச்சபையின் வரலாறு, ஈழ விடுதலைப் போராட்டத்தின் காட்டிக் கொடுப்பின் வரலாறே ஆகும்.
1) வர்க்க அணிசேர்க்கையில் கத்தோலிக்க திருச்சபையும்,சமஸ்டிக் கட்சியும்
வணிகத் தரகுமுதலாளிய ஐக்கிய தேசியக் கட்சியும் ஓரணி சேர்ந்தவை ஆகும்.
2) கத்தோலிக்க திருச்சபை பாலஸ்தீனப் பிரச்சனையில் பைபிள் நிலை நின்று ``தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்`` இஸ்ரேலியர்கள் என பாலஸ்தீன அபகரிப்புக்கு ``மகாவம்ச`` பாணி நியாயம் சொல்லும் நிறுவனம் ஆகும்.
3) இதனால் எழுபதுகளின் பிற்பகுதியில் ஈழ மாணவர் இயக்கத்தின் பரம எதிரியாக விளங்கியது.
4) அடுத்த கட்டத்தில் அந்நிய நிதி உதவியில் இயங்கிய `அபிவிருத்தி நிறுவனங்கள்` புலிகளின் இராணுவ செயல் திட்டம்/ மற்றும்
நடவடிக்கைகள் குறித்த நாளாந்த விபரங்களை சேகரித்து கொழும்பு தலைமையகம் ஊடாக CIA இற்கு அநுப்பி வந்தன.
5) புலிகள் அமைப்பின் வளர்ச்சியைத் தடுக்க உள்ளூர் அதிகார -திருச்சபை வலைப்பின்னல் அமைப்பின் - அதிகாரத்தை முழுதாகப்
பிரயோகித்தனர்.வன்முறைக்கு எதிராக கோவில் கோவிலாக பிரசங்கம் செய்தனர்.
6) இதையும் மீறி புலிகள் வளர்ந்த தருணத்தில் தொடர்ந்து சமரசத்துக்கு நிர்ப்பந்தித்து வந்தனர்.
7) 2002 இல் ரணிலோடு கூட்டுச் சேர்ந்து அமெரிக்க - நோர்வே பேச்சுவார்த்தைப் பொறியில் புலிகளை வீழ்த்தினர்.
8) புலிகளின் மடு பாதுகாப்பு அரணை திட்டமிட்டு திறந்து விட்டு சிங்கள இராணுவ வியூகம் முள்ளிவாய்க்காலில் வெற்றி வாகை சூட வழி சமைத்தனர்.
6) LLRC இன் விசாரணையில் ஜேம்ஸ் பத்தினாதர் என்கிற பாதிரி `புலிகளின் இனப்படுகொலைக்கு` சாட்சியம் பகிர்ந்தான்.
7) முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் நாலாண்டு முடிவில் யாழ் மறை மாவட்ட பெரிய பாதிரியார் கூறுவதைக் கேளுங்கள்;
Rt Rev Dr Thomas Savundaranayagam
Bishop of Jaffna Rt Rev Dr Thomas Savundaranayagam
“As we celebrate this feast of Christmas, we are also grateful to the government and also the SL Army among us for all the beautiful services they renderedto our people. I want to thank our Maj Gen Hathurusinghe for organizing this beautiful evening of carol singing. We experience a joy of Christmas,” said the Bishop of Jaffna addressing the gathering full of children.
“We also want to thank the government for all that they are doing to develop Jaffna after years of war. We know that it is not easy task. But, nevertheless we have seen for ourselves the things that are being done and still there are things to be also fulfilled,” the Bishop of Jaffna certified the ‘development’.
The violence the Bishop saw was only internal in the society: “During this feast of Christmas there are also some dark spots. We are increasingly worried about the violence that is among our people, especially the young. Adding to this also the menace of drug and alcohol that is being consumed increasing this violence.
Therefore, people of all responsibility, they have to assist in destroying this menace from our society because of all the evils it brings to us,” the Jaffna Bishop said.
“At the same time, we also want to say that the parents are not very happy regarding the university classes not being conducted. Long vacation, long holidays.
Therefore, we appeal to the government also to re-open the university and conduct the classes for the best of our students,” the Bishop said.
“We also want to reiterate here that we don’t want the war again. Absolutely, we are against the war. We don’t want the war to take place once again,with all its violence among us. But, at the same time also, we request the government to accept us as equals,” the Bishop of Jaffna was pleading.
மூலம்: தமிழ் நெற்
``We don’t want the war to take place once again, with all its violence among us.``
என்று கூறுகையில் பெரிய பாதிரியார் எதை மனங் கொண்டு பேசுகின்றார்.
``எல்லாவித வன்முறைகளினதும் மொத்த வடிவமான யுத்தம் மீண்டும் ஒரு தடவை தலை தூக்குவதை நாம் விரும்பவில்லை.`` என்கிறார். யுத்தம் இரண்டு இராணுவங்களுக்கு இடையில் நடக்கும் இராணுவ மோதல் ஆகும். இலங்கையில் தற்போது ஒரு இராணுவம் தான் இருக்கின்றது.எனவே யுத்தம்
வன்முறை மீண்டும் தலை தூக்கக்கூடாது என்பது புலிகள் மீண்டும் தலை தூக்கக் கூடாது, அல்லது தமிழ் மக்கள் மீண்டும் ஆயுத பாணிகள் ஆகக்
கூடாது என்பது தவிர வேறெதுவும் இல்லை.சிங்களம் ஆயுத பாணியாகவும் தமிழீழம் நிராயுதபாணியாகவும் இருக்க வேண்டும் என்று கோருகின்றார்.
அப்போதுதான் மறைக்கல்வியின் பெயரால் அறைக் கலவிகள் நடத்தலாம், அதுவேதான் நடந்தேறியிருக்கின்றது.
ஆக ஒரு 22 வயது ஈழப் பெண் பிள்ளையை `` இளம் பெண் மேல் கொண்ட காம பசி தாகத்தால் `` படுகொலை செய்து விட்டு, மத மற்றும் அரசியல்
அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்துக்கொள்ள முயலுகின்றது யாழ் ஆயர் நிர்வாகம்.
இதனை ஒரு போதும் அநுமதியோம்! அநியாயத்தை அம்பலப்படுத்துவோம்! அமைப்பு ரீதியாக அணிதிரளுவோம்! நீதி நிலை நாட்டப்படும் வரை
தொடர்ந்து போராடுவோம்! அநீதி வெல்லாது, நீதி நிலை பெறும்!