1) உலக மறுபங்கீட்டு சிரியப்போரில் ரசிய ஈரான் அணியைச் சார்ந்து, அமெரிக்க,ஐரோப்பிய,சவூதி அரேபிய அணியை, சிரிய அசாத் ஆட்சி தோற்கடித்துவிட்டது.
2) அலெப்போ முள்ளிவாய்க்காலுக்கு சற்றும் சளைத்ததல்ல மனித அவலம் சொல்லி மாளாது!ஈழத்தின் நேசக் கரம் அலெப்போ மக்களை நோக்கி உயர்ந்து நிற்கிறது!
3) ``யுத்தக்குற்றம்``, ``மானுட விரோதக் குற்றம்``என, தெருவோர தேனீர்க்கடையில் `இன்றைய ஸ்பெசல்` விளம்பரம் போல ஐ.நா.சபையின் சிரிய ஸ்பெசல்களும், ஊடக ஜாம்பவான்களின் விவாதங்களும் மூச்சு திணற வைக்கின்றன!காதுகள் அடைக்கப் பஞ்சின்றி வெடிக்கின்றன!
4) இரண்டு உலகப்போர்களுக்கு பிந்திய 70 ஆண்டுகளில் உலகைத் தின்று கொழுத்த ஏகபோக மூலதனத்தின் அடங்காப் பசியே, கடந்த 10 ஆண்டுகளின் உலகப் பொருளாதார நெருக்கடியின் அடிப்படைக் காரணப் பொருள் ஆகும்.
5) 2007 நெருக்கடி பொருளாதார வழியில் மீள இயலாத நெருக்கடியாகும்.அரசியல் வழி மீட்சியின் ஆயுதமே, உலக மறுபங்கீட்டுப் போர்!
6) அரபு வசந்தம் ஒரு வழி,
7) ஆட்சிக்கவிழ்ப்பு ஆயுதப் போர் மறு வழி!
8) இரண்டுமே படு தோல்வி!
9) ஆட்சிக்கவிழ்ப்பை அந்நிய ஏற்பாட்டில் தோற்கடித்த அசாத் ஆட்சியை எதிர்த்த சிரிய மக்கள் ஜனநாயக இயக்கம் முளைக்கும், போராடும்.
10) ஈழம் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டும்.