ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும் மிக்க
இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப,
சிங்களமே;
ஈழதேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கிகரி!
இல்லையேல் ஈழப்பிரச்சனைக்கு தீர்வு காண, ஈழமக்களிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!
ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கு!
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறி!
ஏற்றத்தாழ்வான அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் ரத்துச் செய்!
அநியாய அந்நியக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாது என அறிவி!
IMF, World Bank உள்ளிட்ட அனைத்து அந்நிய நிதியாதிக்க கும்பல்களும்
நாட்டின் பொருளாதாரத் திட்டமிடலில் தலையிடுவதை நிறுத்து!
தனியார்மய, தாராளமய, உலகமய அந்நியப் பொருளாதாரக் கொள்கை களைக் கைவிடு!
இக்கொள்கைகளுக்குச் சேவகம் செய்யும் ஏற்றுமதி சார்ந்த சேவைத் துறையை ஊக்குவிக்காதே!
பட்டி தொட்டியும் பரந்து, முழு நாட்டையும் மூலை முடுக்கெங்கும் மின்சாரமயமாக்கு! `இரவைப் பகலாக்கு`!!
பட்டி தொட்டியும் பரந்து, முழு நாட்டையும் மூலை முடுக்கெங்கும் மின்சாரமயமாக்கு! `இரவைப் பகலாக்கு`!!
62 ஆண்டுகளாக உலக வங்கி தடை செய்து வரும் பெருவீதத் தொழிற் துறையில் முதலீடு செய்!
நிலத்தடி, நீரடி வளங்களை அந்நியருக்கு தாரை வார்க்காதே!
நிலத்தடி, நீரடி வளங்களை அந்நியருக்கு தாரை வார்க்காதே!
நீண்ட காலக் குத்தகையில் அந்நிய கொம்பனிகளுக்குத் தாரை வார்த்துள்ள நிலங்களை அரசுடமையாக்கு!
பெளத்த மடாலயங்களுக்கும், கிறீஸ்தவத் தேவாலயங்களுக்கும், பெரும் இந்துக் கோவில்களுக்கும் மற்றும் நிலவுடமையாளர்களுக்கும்
சொந்தமான பெருநில உடமைகளைப் பறிமுதல் செய்து நிலமற்ற வறிய விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கு!
பெருந்தோட்டம், நெல் விவசாயம், உப உணவுப் பயிர்ச்செய்கை, கடற்றொழில், வனத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் துறைகளை நவீனமயப்படுத்து!
மூலிகை விவசாயத்தை வளர்த்தெடு, மூலிகை விஞ்ஞானத்தை பல்கலைக்கழகம் வரை போதனைப் பாடமாக்கு, மூலிகை மருத்துவத்தை
விஞ்ஞான மயமாக்கு!
அந்நியர்கள் மூலவளங்களை அபகரிக்கவோ நாசப்படுத்தவோ அனுமதிக்காதே!
அபிவிருத்தி என்ற பெயரால் உற்பத்தி சாராத ஊதாரி உல்லாச, இராணுவத் துறைகளில் முதலீடு செய்யாதே!
அரச கட்டுப்பாட்டில் அல்லாத அனைத்து அந்நிய பணவரவுகளையும் பறிமுதல் செய்!
உளவாளிகளும் ஊடுருவலாளர்களுமான, அனைத்து NGO க்கள், மற்றும் போலி `மக்கள் சங்கங்களின்` உடைமைகளைப் பறிமுதல் செய்து நாட்டை விட்டு விரட்டு!
உள்நாட்டுத் தரகுமுதலாளிய நிறுவனங்களுக்கு அளிக்கும் வரிச் சலுகைகளை நிறுத்து! அவை மீது அதிக வரி அறவிடு!
உள்ளூர் உற்பத்தியாளர்களையும் விவசாயிகளையும் ஊக்குவிக்க வரிச் சலுகை வழங்கு!
அனைத்து மறைமுக வரிகளையும் நீக்கு!
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து!
விவசாயிகளின் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கு!
குறைந்த வட்டியில் கடன் வழங்கி உள்ளூர் உற்பத்தியை ஊக்குவி!
படகு மற்றும் படகு இயந்திரத் தொழிற்துறையை உருவாக்கு!
பதனிடும் சாலைகளைப் பரவலாக்கு!
நகர கிராம பேதமின்றி நாடுதழுவிய போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கு!
உள்நாட்டு உற்பத்தியை நாசப்படுத்த திட்டமிட்ட வெளிநாட்டு இறக்குமதி களைச் செய்யாதே!
வனவளங்களைப் பாதுகார்! வக்கிர புத்தியில் விடுதலைப்புலிகள் வளர்த்து உருவாக்கிய செயற்கைக் காடுகளை அழிக்காதே!
வனத்துறை வளங்களை மூலப்பொருளாகக் கொண்ட முதலாளித்துவ தொழிற்துறையைக் கட்டியெழுப்பு!
அந்நியச் செலாவாணி, நாணய மதிப்பிறக்கம் போன்ற நாசகார ஏகாதிபத்திய கொள்கைகளால் நாட்டு மக்களின் உழைப்புச் சக்தியின் மதிப்பை
மலிவுபடுத்தாதே!
பங்குவர்த்தகச் சூதாடிகளை சிறையில் அடை, சூதாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வை!
ஊழலை ஒழி! அனைத்து ஊழல் பெருச்சாளிகளையும் கூண்டிலடை!
யுத்தகாலப் பேரழிவை மீளக்கட்டியமைக்க முழு இராணுவத்தையும் உடல் உழைப்பில் ஈடுபடுத்து!
முதலீட்டில் ஈடுபடுத்தி இராணுவ முதலாளிகளை உருவாக்காதே!
வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறு!
நாட்டை இராணுவமயப்படுத்தி இலங்கையை மியான்மார் (பர்மா) ஆக்காதே!
உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையை பலிக்களம் ஆக்காதே!
இந்து சமுத்திரப்பிராந்தியத்தை அமைதிப் பிராந்தியமாக்கப் போராடு!
ஐ.நா.வின் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு `காக்கிச்சட்டை அணிந்த சிங்கள விவசாயிகளை` விற்றுப் பிழைக்காதே!
உலகமயமாக்கல் பொருளாதார நலன்களக் காக்கவும், உள்நாட்டு அடக்கு முறைக்கும் நடைமுறையில் உள்ள அனைத்துக் கறுப்புச் சட்டங்களையும் காலாவதியாக்கு!
தொழிலாளர் நலச்சட்டங்களை அமூலாக்கு!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரால் நாட்டின் உழைப்புச் சக்தியை மலிவுக் கூலிகளாகவும், அடிமைத் தொழிலாளர்களாகவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுப் பிழைக்காதே!
பெண்ணடிமைத்தனத்துக்கு முடிவு கட்டு!
மாணவர், பாலகர் பாலியல் குற்றவாளிகளிகளுக்கு ஆயுள் தண்டனை அளி!
உலகமயமாக்கல் நகரங்களையும், உல்லாசத்துறையையும், ஏழ்மையையும் சார்ந்து கலாச்சாரச் சீரழிவுக்கு வழிவகுக்காதே!
சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டு, பாதாளக்குழுக்களின் வெள்ளை வான் ஆட்சி நடத்தாதே!
ஊடக, இணைய சுதந்திரத்தில் கை வையாதே!
யுத்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கு!
ஒன்றுபட்ட ஜனநாயக நாட்டை உருவாக்க இனமத பூசல்களைத் தூண்டாதே!
அரசில் இருந்தும் கல்வியில் இருந்தும் மதத்தை வேறுபிரி!
பெளத்த மதத்துக்கு அரசியல் சாசனத்தில் வழங்கியுள்ள விஷேட அந்தஸ்தை ரத்துச் செய்!
இன மத நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கும் பெளத்த மத வெறி அமைப்புக்களை ஊட்டி வளர்க்காதே!
நடைமுறையில் தமிழர்களை சிங்கள மொழிபடிக்க நிர்ப்பந்திப்பதில் போய் முடியப் போகிற, மும்மொழித் திட்டத்தைக் கைவிடு!
தாய்மொழிக்கல்வியை அமூலாக்கு!
வடக்குக் கிழக்கு மாகாணங்களை சட்டரீதியாக ஒன்றிணை!
வரலாற்று ரீதியான பொதுமொழித் தொடர்பாலும், பொது உற்பத்தி உறவாலும், பொது மொழி மற்றும் கலாச்சாரத்தாலும் இயல்பாக. அவர்கள் ஒரு சந்தையாக உருவானதை வலுக்கட்டாயமாகப் பிரிக்காதே!
மத்திய மலைநாட்டில் மலையக மக்கள் செறிந்து வாழும் மாவட்டங்களை தனிப்பிரதேசமாக ஒன்றிணைத்து பிரதேச சுயாட்சி அந்தஸ்து வழங்கு!
இஸ்லாமியத் தமிழர்களுக்கு தனியான சுயாட்சி அலகை உருவாக்கு!
அனைத்து தேசிய, இன, மத மக்களையும் ஜனநாயகக் கூட்டாட்சியில் ஒன்றிணை!
நிறைவேற்று சேர்ந்து வாழ்வோம்! இல்லையேல் பிரிந்து போவோம்!
ஜனநாயகமும் சுதந்திரமும் சுபீட்சமும் மிக்க இலங்கை நாட்டைக் கட்டியெழுப்ப, மேற்கண்ட புதிய ஜனநாயக அரசியல்,தேசிய ஜனநாயாகப் பொருளாதாரப் பாதையே ஒரே வழியாகும். வேறெந்த வழியும் கிடையாது.மாறாக அந்நிய உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையிலும், அந்நிய நிதி மூலதனத்திலும் தங்கியிருக்கும் வரை, நாடு தனது அரைக்காலனிய சுதந்திரத்தையும் இழந்து முழு அடிமை நாடாகிவிடும். இன ஒடுக்குமுறை மேலும் கூர்மையடையும்.இத்தகைய ஒரு போக்கில் ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் ஒடுக்கும் சிங்களத்துடன் `அதிகாரத்தைப் பகிரும்` சீர்திருத்த வழியில் தனது சுதந்திரத்தை உறுதி செய்யமுடியாது.
ஒரு மக்கள் ஜனநாயக குடியரசால் இத்தகைய திட்டத்தை அதன் முதல் ஐந்தாண்டிலேயே நிறைவேற்றிவிட முடியும்.ஆனால் 64 ஆண்டுகளாக இலங்கையின் ஆளும் கும்பல்கள் நாட்டை விதேசிய திட்டத்தில் வழி நடத்தி வந்துள்ளனர். அதனால்த்தான் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கின்றது. இனப் பூசல் தொடர்கின்றது.இதற்குக் காரணம் தமிழர்கள் அல்ல.சிங்கள ஆளும் கும்பல்களே ஆகும். ஆட்சி அதிகாரம் இவர்கள் கையில் உள்ளவரை அதுவே இனியும் தொடரப்போகின்றது.
* பக்ச பாசிஸ்டுக்கள் தேசபக்தர்கள் அல்ல ஏகாதிபத்திய தாசர்களே!
* அவர்கள் கொண்டாடுவது சுதந்திரம் அல்ல, 64 ஆண்டுகால அரைக்காலனிய அடிமைத்தனமே!!
* புதிய ஜனநாயக இலங்கை உருவாக பிரிந்து செல்லும் உரிமையை
உயர்த்திப் பிடிப்போம்!!!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்
ஜனவரி-30-2012