18 வது அரசியல் அமைப்புத் திருத்தம் ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விஸ்தரிப்புவாத அரசும், இலங்கை மக்கள் மீது நிறுவும், பக்சபாசிஸ்டுக்களின் அப்பட்டமான பாசிச இராணுவ சர்வாதிகார அரசே!
* சிங்களப் பெரும் தேசிய இனம், தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு துணைபோனதன் தர்க்க ரீதியான துர்ப்பாக்கிய விளைவே!
* இலங்கைத் திரு நாட்டை அந்நியருக்கு விற்றுப் பிழைக்க,அதனால் எழும் அனைத்து மக்களதும் எதிர்ப்பை ஒடுக்க வேண்டிய பாசிச, இராணுவ சர்வாதிகார அரசை உருவாக்கும் பக்ச பாசிஸ்டுக்களின் 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை எதிர்ப்போம்!
* பக்ச பாசிஸ்டுக்களே உத்தேச 18வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற நாடு தழுவிய மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பை அறிவி!
* திரைமறைவில் விலை கொடுத்து வாங்கிய மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றாதே!
* உயர் நீதிமன்றமே மக்கள் நலனுக்கு சார்பாக தீர்ப்பளி!
* தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிப்போம்!
* நாடு பரந்த பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியைக் கட்டியமைப்போம்!
* பக்ச பாசிசத்தின் பங்காளிகளான யு.என்.பி, மற்றும் சமூக தேசிய வெறியரான ஜே.வி.பி, இந்திய விஸ்தரிப்புவாதத்தின் ஏதிலி ஏஜென்ட் ரி.என்.ஏ கும்பலைத் தனிமைப்படுத்துவோம்!
* ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவகம் செய்ய, பக்ச பாசிஸ்டுக்களைப் பலப்படுத்தும் இந்திய விஸ்தரிப்புவாத அரசின், இலங்கைத் திரு நாட்டின் மீதான தலையீட்டை ஒன்றிணைந்து முறியடிப்போம்!
* இலங்கை நாட்டின் சுதந்திரம் பறிபோவதையும், ஈழதேசத்தின் சுய நிர்ணயம் ஒடுக்குப்படுவதையும் வெறும் மனித உரிமைப் பிரச்சனையாகக் குறுக்கும் என்.ஜி.ஓ கும்பல்களையும், பாதிரிப் பிரசங்கிகளையும் அம்பலப்படுத்துவோம்!
* பக்சபாசிஸ்டுக்களின் பாசிச இராணுவ சர்வாதிகார அரசைத் தூக்கியெறிய, மக்கள் ஜனநாயக புரட்சிப்பாதையில் அணிதிரள்வோம்!
* ரொட்ஸ்கிய திருத்தல்வாதத்தை எதிர்ப்போம்! மார்க்சிய லெனினிய மா சே துங் சிந்தனை வழி நடப்போம்!
* இலங்கை வாழ் உழைக்கும் மக்களே;
பக்ச பாசிஸ்டுக்களைத் தோற்கடிக்க ' ஈழத்தமிழரின் பிரிந்து செல்லும் (சுய நிர்ணய) உரிமையை அங்கீகரித்த மக்கள் ஜனநாயகக் குடியரசு ' என்கிற ஒரு கொடியின் கீழ் அணிதிரள்வோம்!
புதிய ஈழப்புரட்சியாளர்கள் ------- தமிழீழம் ------ 06 09 2010