Tuesday, 23 September 2014

திலீபன் 27 - இந்திய விரிவாதிக்க எதிர்ப்பு முழக்கங்கள்!


திலீபன் 27 ம் ஆண்டு நினைவாக!

திலீபன் நினைவு நீடூழி வாழ்க!

இந்திய விரிவாதிக்க மோடிப் பாசிச அரசே,

* இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை திரும்பப்பெறு!

* ஈழத்தமிழர்கள் மீதான இந்திய இராணுவ அட்டூழியங்களை மூடி மறைக்க, போர்க்குற்ற விசாரணை இயக்கத்தை முறியடிக்காதே!

*ராஜீவ் கொலை நிரபராதிகளை உடனே விடுதலை செய்!

* விடுதலைப் புலிகள் மீதான தடையை உடனே நீக்கு!

* `13 இற்கு மேல்` நாடகமாடி ஈழத்தமிழரின் பிரிவினை இயக்கத்தை நசுக்காதே!

* ஈழத்தமிழரை மத அடிப்படையில் மோதவிடும் சதியைக் கைவிடு!

* இந்திய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!

* காஸ்மீர் பிரிவினை இயக்கத்தை ஒடுக்காதே!

* பழங்குடி மக்களின் நலனுக்காகப் போராடும் ஆந்திர நக்சல்பாரிப் போராளிகளை வேட்டையாடாதே!

*தமிழகத்தில் ஆங்கில, இந்தி அந்நிய மொழி ஆதிக்கத்தைத் திணிக்காதே!

* துரோகம் போதும், ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!

ஜெயா அரசே,

* மோடியின் தேச விரோத, மக்கள் விரோத,ஈழ விரோத கொள்கைகளைப் பின்பற்றாதே!

* விடுதலைப் புலிகளால் ஆபத்து என்று புரளி கிளப்பாதே!

* பாசிச குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெறு!

*தேசிய,ஈழப்பிரிவினை ஆதரவு, மக்கள் ஜனநாயக இயக்கங்களை நசுக்காதே!

பக்ச பாசிசமே,

*தொடரும் ஈழ இனப்படுகொலையை நிறுத்து!

*ஈழப்பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து!

* போர்க்குற்ற விசாரணைக்கு முகங்கொடு!

* மோடிப்பாசிசத்துடன் கை கோர்த்து ஈழத்தமிழர் மத்தியில் மத மோதலைத் தூண்டாதே!

கூட்டமைப்புக் கும்பலே,

* மோடிக்கும்,ராஜபக்சவுக்கும்,ஒபாமாவுக்கும்,ஈழத்தமிழரைக் கூட்டிக் கொடுக்கும் இழி செயலைக் கைவிடு!

புலம் பெயர், தமிழக, சமரச தரகுக் கும்பலே,

* திலீபன் நினைவை உயர்த்தி இந்திய விரிவாதிக்க,ஆக்கிரமிப்பு,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடு!

தமிழீழ மக்களே,

திலீபன் கனவு நனவாக பிரிவினை இயக்கத்தை உயர்த்திப் பிடிப்போம்!

ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம், இந்திய விரிவாதிக்கத்தை தோற்கடிப்போம்!

உலகத்தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

``அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்த்த சோசலிச தமிழீழத்துக்காக``  இறுதிவரை போராடுவோம்!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.
24-09-2014