Monday 8 February 2016

போலிச்சுதந்திரம் பாகம் 2- இலங்கையில் உலகமயம்

ENB புலிக் கடற்படை
இலங்கையில் உலகமயம்
அரசியல் வரலாற்றுப் போக்கு

இலங்கையில் உலகமய பொருளாதாரக் கொள்கை அமூலாக்கப்பட்ட வரலாற்றை ஆறு கட்டங்களாக ஈழ அரசியல் நோக்கில் வகைப்படுத்தலாம். அவையாவன;


1) 1948-1977 2) 1977- 1983 3)1983- 2002 4) 2002- 2009 
5) 2009 -2015  6) 2015.......

1) 1948-1977

இந்த முப்பதாண்டுக்காலம் போலிச் சுதந்திரத்தின், நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சிக் காலமாகும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுதந்திர விவசாய இயக்கத்தை நசுக்கி,  உள்நாட்டின் பயிற்றுவித்த ஏஜென்டுகளின்  ஏகாதிபத்திய அரசியல் அதிகாரம் இலங்கையில்  நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சியை, இரு பிரிவாக நிறைவேற்றிய காலகட்டமாகும்.

இந்த இரு வர்க்கப்பிரிவுகள் இலங்கையில் இவ்வாறு அமைந்திருந்தன:

1) நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு இலங்கையை முற்றாக -படிப்படியாக- அடிமைப் படுத்தி சேவகம் செய்யும் பாதையை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்தது.

2) நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில் உள்ளூர் சிறு தொழில் துறைக்கு சலுகை அளிக்கும் சார்புப் பாதையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது.

இக்கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் தான் இலங்கையின் முதல் முப்பது ஆண்டு வாழ்வு நடந்தேறியது.

இந்தக்கால கட்டத்தில் உலக வங்கி  ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவித்து வந்தது. இலங்கையின் இரு பெரும் ஆளும் வர்க்கப் பிரிவுகளின் கட்சிகளும் கடைப் பிடித்த  நிதி மூலதனக் காலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக 1970 களின் உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியைச் சார்ந்து உள் நாட்டு நெருக்கடி வெடித்தது. ரோகணாவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதப் போராட்டம்,1972 பாசிச அரசியல் யாப்பு, ஈழ விடுதலை இயக்கத்தின் உதயம் என்பன இக்காலகட்டத்தின் இயற்கைப் பிரசவமாகின.இறுதியில் இது ஈழ சமரசவாதிகளை வட்டுக்கோட்டைத் தூக்குமேடையில் நிறுத்தியது. துரதிஸ்டவசமாக இந்த தூக்குமேடையோ பஞ்சு மெத்தையாக அமையவில்லை! 1977 பொதுத் தேர்தலில் தமிழீழ மக்கள் ஈழப்பிரிவினையை ஏற்று பொது வாக்களித்தனர். இதற்காக 1977 கலவரத்தால் பழி வாங்கப்பட்டனர்.இந்த அநீதிக்கு பழி வாங்க `ஆயுதப் போராட்டம்` என்கிற எண்ணம் கருக்கொண்டது. 1977 பொதுத் தேர்தலில் மலரும் முள்ளும் ஒரு சேர  முகிழ்த்தன. மலர், ஈழப்பிரிவினைக்கான வெகுஜன வாக்கெடுப்பாக அமைந்தது.முள், ஜே.ஆர்.ஆட்சி தனியார்மய தாராளமயக் கொள்கையை `இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன்` `நீதியான சமுதாயம் படைப்பேன், என முழங்கி அமுலாக்கியது.இந்த முள்ளுக்கும் மலருக்கும் இடையான போராட்டம் தான் எஞ்சிய இலங்கை வரலாறாகும்.இன்றுவரை!

2)  1977- 1983

நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு  சேவகம் செய்ய சமஸ்டிக்கட்சி ஈழத்தமிழரின் பொது வாக்கெடுப்புத் தீர்ப்பை பாடையில் ஏற்றி 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற போலி ஏமாற்றுத்தீர்வை ஏற்றுக்கொண்டது.தேர்தலில் பங்கேற்றது.தேர்தல் கூட்ட மேடை மீது கைக்குண்டை வீசி எறிந்து விட்டு தலைமறைவானோர் ஒலித்த குரல்
 `` புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்``.தமிழீழத்தாயகத்தை சிங்கள
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க திண்ணை வேலியில் நடத்தப்பட்ட கண்ணி வெடித்தாக்குதலும் 13 சிங்களச் சிப்பாய்களின் மரணம், காத்திருந்த சிங்களத்துக்கு நல்ல காரணமாய் அமைந்து 1983இனப்படுகொலை வெடித்தது.ஜே ஆரின் சிங்கப்பூர் கனவு தவிடு பொடியாகியது. விடுதலைப்புலிகளை விசர் நாய்கள் என்று அவர் காரணம் இல்லாமல் குரைக்க வில்லை.

உள்நாட்டு யுத்தம் வெடித்தது.ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு இலங்கை அரசை தனது மேலாதிக்கத்துக்கு பணிய வைக்க நிர்ப்பந்தித்தது.

3) 1983 -2002

உள்நாட்டு யுத்த காலம். வடக்கு கிழக்கு ஈழத்தில் நிதி மூலதனக் காலனியாதிக்கம் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.சிங்களத்திலும் அந்நிய மூலதன முதலீடு பாதுகாப்பற்றிருந்தது.ஆனையிறவுப் படைத்தளத்
தாக்குதல் (2000 ஆம் ஆண்டு மார்ச் 26), இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப்புலிகளின் மேலோங்கிய நிலையை நிரூபித்தது.இதற்கு சிகரமாகவும்,வரலாற்று திருப்பு முனையாகவும் அமைந்தது
விடுதலைப்புலிகளின் விமானப் படையின் கட்டு நாயக்கா விமானப் படைத்தள தாக்குதல் (ஜூலை 24, 2001).ஆகும்.இப்போது தான் இலங்கைப் பொருளாதாரம் முதல் தடவையாக எதிர்க்கணிய வீழ்ச்சி கண்டு
பொறிந்து விழுந்தது.அரசு நிலை குலைந்திருந்தது.மிக மிக துரதிஸ்டவசமாக இதுவரைக்கும் வந்த புலிகள் இதன் பயன்களை எட்டாதவாறு ஏகாதிபத்திய பொறிக்குள் வீழ்த்தப்பட்டனர் அல்லது வீழ்ந்தனர்.2002ஆம் ஆண்டு மாசி மாதம் நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது.இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால் ஏகாதிபத்திய சதிவலை வீசப்பட்டது.

4) 2002-2009

இந்த பேச்சுவார்த்தையை சூசக மொழியில் PEACE PROCESS என அழைத்தனர்.இதன் பொருள் அது ஒரு தொடர் நிகழ்வு என்பதாகும்.இந்த தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வு, Regainning Sri Lanka.`ஈழ விடுதலைப்
போரால் இழந்த` நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை, 'சமாதான காலத்தில்` எவ்வாறு மீள நிர்மாணிக்க வேண்டும் என உலக வங்கி வகுத்தளித்த திட்டமே Regainning Sri Lanka ஆகும்.இது சம்பிரதாய பூர்வமாக ரணில் அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் உலக வங்கியால் `பரிந்துரைக்கப்பட்டது`!

இந்த சமாதானப் பேச்சுவார்த்தை உருவாக்கிய யுத்த நிறுத்தத்தை சிங்களம்,
அடுத்தகட்ட இனப்படுகொலைப் போருக்கு தயாராகிவிட்ட நிலையில் தன்னிச்சையாக, போர் நிறுத்த உடன்பாட்டை மீறி போர் தொடுத்தது.நோர்வே சிங்களத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தது! இந்த சதிச் சமாதானம் ஆனந்தபுர போர்க்களத்தில் நடத்தப்பட்ட சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறிய விசவாயுத் தாக்குதலில் கோழைத்தனமாக விடுதலைப் புலிப் போர்த் தளபதிகளை கொன்றொழித்தது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.முப்பது ஆண்டுகால முதலாவது `ஈழ யுத்தம் மெளனித்தது`.

5) 2009-2015

யுத்தத்தில் விசவாயுத்தாக்குதல், இனப்படுகொலை, ஆகிய ஆயுதங்களால் வெற்றிவாகை சூடிய பக்ச பாசிசம்,  Regainning Sri Lanka திட்டத்தை மகிந்த சிந்தனை என்கிற மாறு வேடத்தில் வெளியிட்டது. யுத்த வெற்றியை மூலதனமாக்கி ,`இராணுவ சர்வாதிகார குடும்ப ஆட்சியை கட்டியெழுப்ப முயன்றது. இதற்கு சீனாவோடு அணிசேர்ந்தது.

ஐ நா வின் பாசையில் `சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாதை`யில் பயணிக்க எத்தனித்தது.

இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் பக்ச பாசிசம் ஜனவரி 8 2015 இல் அரசியல் அதிகாரத்தை இழந்தது.

6) 2015............

ரணில் மைத்திரிப் பாசிசம் அந்நிய ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.


புலிகள் இல்லாத இலங்கை , தங்கு தடையற்ற உலகமயத்துக்கு திறந்து விடப்பட்டது.

அந்தத் திட்டம் வருமாறு:

1)  Naval & Maritime  Hub
2) Aviation Hub
3) Commercial  Hub
4) Energy Hub
5) Knowldge Hub
6) Tourism Hub

வேறு விதமாகச் சொல்வதானால் முழு நாட்டையும் அதன் வளங்களையும் உலகமயக் கொத்தளங்களாகக் கூறுபோட்டு அந்நிய நிதிமூலதன காலனியாதிக்கத்துக்கு தாரைவார்க்க தயாராகிவிட்டது. இது மகிந்த சிந்தனை என்றே இன்றுவரையும்(2016) அழைக்கப்பட்டுவருகின்றது!.இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் உலகமய வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையில் அமைந்திருக்கும் பூகோள ரீதியான வாய்ப்பை இதற்கான மூலதனமாக்கிக்கொள்கின்றது.உண்மையில் இதில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட கடல் பரப்பு ஈழத்துக்குச் சொந்தமானதாகும்.பேடித்தனமாக ஆனந்தபுர விசவாயுத் தாக்குதலில் புலிகள் தலைமையை அழித்து, இனப்படுகொலையால் ஈழ தேசத்தைக் கபளீகரம் செய்த சிங்களம், இப்போது அதை அந்நியனுக்கு ஏலம் போட்டு விற்றுவருகின்றது.பக்ச பாசிசம் சீனாவோடு இணைந்து செய்த அதே கைங்கரியத்தை ரணில் மைத்திரி பாசிசம் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க முகாமின் அடிமைக் கூட்டாளியாக செய்ய முயலுகின்றது.
---------------
மோடி ஆட்சியும் உலக மயமும்
பாகம்(3) தொடரும்.