Tuesday, 13 May 2014

மோடி ஆட்சி- இருண்ட யுகத்துள் இந்தியா!

மோடி ஆட்சி- இருண்ட யுகத்துள் இந்தியா!


இந்திய லோக்சபா தேர்தல் 2014 இல் ஏகாதிபத்தியவாதிகள் திட்டமிட்டவாறு
அரசதிகாரத்தை காங்கிரஸ் பாசிசத்திடமிருந்து, பா.ஜ,க பாசிசத்துக்கு கை மாற்றியுள்ளது இந்திய ஜனநாயகம்! மோடி குஜராத்தில் மாற்று இந்திய அரசாங்கத்தை அமைக்கும் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றார்.
ஈழமக்களையும்,காஸ்மீர் மக்களையும் சுவைகண்ட புதிய இந்திய இராணுவத்தளபதி நியமனத்துக்கு தெரிவாகிவிட்டார்.பங்குச்சந்தை சூதாடிகள் எகிறிக்குதிக்கின்றனர். ஆக மோடி ஆட்சி உறுதியாயிற்று.உதயமாகிற்று!!




இந்திய பொதுத் தேர்தல்-லோக்சபா- 2014 இற்கு சில மாத காலம் முன்னால் அமெரிக்க டைம் சஞ்சிகை மன்மோகன் சிங்கை (அதீத இலக்குகளை எட்டாத) தோல்வியடைந்த இந்தியத் தலைவர் எனப் பிரகடனப்படுத்தியது. அதாவது பழ நெடுமாறனின் `அன்னை இந்திரா` ஆரம்பித்த `அந்நிய மூலதனக் கபளீகரத்துக்கு இந்தியாவை அகலத்திறந்துவிடும் ``தேசியப் பணியை``, மன் மோகன் விட்ட இடத்தில் இருந்து, எகிறிப்பாயும் எத்தனிப்பை வெளியிட்டது.



சிறிது காலம் தள்ளி வந்த டைம் இதழ், மன்மோகன் சிங்கை மோடியால் மாற்றீடு செய்யும் அமெரிக்கத் திட்டத்தை `ஊடகம்` ஊடாக சுயாதீனமாக வெளியிட்டது. `மோடி எமது அணி - Modi means business' எனப் பிரகடனப் படுத்தியது.அவரை அரியணையில் அமர்த்துமாறும் வேண்டிக்கொண்டது.


அதாவது மன்மோகன் விட்ட இடத்தில் இருந்து மேலும் எகிறிப்பாய்ந்து ஒரு-பாய்ச்சலை-எட்டவேண்டுமானால் அது பாசிசத்தை அதன் பச்சை இரத்த வடிவில் அமுலாக்காமல் செய்ய இயலாது.இதற்கான நியமனமே கேடி, மோடி!


இந்தத் தருணமே  அமெரிக்க அடிவருடியும், சி.ஐ.ஏ. கைக்கூலியுமான வை.கோ, பி.ஜே.பி.உடனான உறவை பகிரங்கப்படுத்தினான். குஜராத் படுகொலையாளனை பாசத்தோடு அரவணைத்து,பதவி வெறியோடு புன்னகைத்தான்.

இவன் ``காகிதப் புலி`` அல்ல இந்திய விரிவாதிக்க பாசிசச் சிங்கம்!

2014 இந்திய அரசாங்க மாற்றத்தில் அமெரிக்கா மோடியை அமர்த்துவது என 2009 இற்கு முன்னாலேயே முடிவெடுத்துவிட்டது. அமையப் போகும் மோடி அரசாங்கத்துக்கும்.அதன் உலகமய இந்துத்துவா பாசிசத்துக்கும் விடுதலைப்புலிகள் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக முள்ளிவாய்க்காலில் புலிகளின் கதை முடித்த துரோகிதான் வை.கோ.
தமிழீழ தேசிய இனப்படுகொலையின், ஏகாதிபத்திய,இந்தியவிரிவாதிக்க பங்காளி இவன்.

கத்தோலிக்க தமிழ் திருச்சபையும், மடுத்தேவாலய நிர்வாகமும் சிங்கள ஆளும் கும்பல்களுடன் திரைமறைவில் கூட்டமைத்து,சி.ஐ.ஏ இன் வழிகாட்டுதலில், விடுதலைப் புலிகளின் மடு இராணுவப் பாதுகாப்பு அரணை உடைத்து விடுதலைப் பிராந்தியத்துக்குள் அந்நிய சிங்களப் படைகள் காலடிவைக்க வழி திறந்து விட்டு தமிழீழ விடுதலைப் போருக்கு காலத்தால் அழியாத துரோகத்தை இழைத்தனர்.

எதிரி சர்வதேச சமூக ஆதரவோடு பெரும்படைபலத்தோடு, ஒட்டுமொத்த அழித்தொழிப்பு என்கிற `தமிழீழ தேசிய இனப்படுகொலை`த் திட்டத்தோடு தமிழீழ மண்ணுள் புகுந்தான்.இதிலிருந்து படிப்படியாக தளப்பிரதேசங்களை இழந்து இறுதியில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் முற்றுகையிடப்பட்டனர். எனவே மடு, இராணுவ ரீதியில்  விடுதலைப்புலிகள் பின் வாங்கியிருக்க வேண்டிய தருணம் ஆகும்.

அவ்வாறு அவர்கள் செய்யாமைக்கு அகக்காரணங்களாக அமைந்தவை, எதிரி (அமெரிக்கா) மீதான ஊசலாட்டமும்,சமரச சக்திகள் குறித்த தவறான மதிப்பீடும், நம்பிக்கையுமே ஆகும். ஒருவேளை தமது பலம், தியாகம், போர்த்திறன்,மீது கொண்ட அதீதநம்பிக்கையும் காரணமாய் இருக்கலாம். அறிவைக் காட்டிலும் துணிவை துணையாக நம்பிய மாவீரர்கள் அவர்கள்.

இதைப்பயன் படுத்தி அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவின் மறுவருகையும், இந்தியத் தேர்தலில் பி.ஜே.பி.ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பும் அடங்கிய `புதிய அமெரிக்க,இந்திய அரசியல் சூழல்` விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக அமையும் என்று கூறி முள்ளிவாய்க்கால் பலிக்களம் வரைக்கும் புலிகளை இட்டுச் சென்றவன் வை.கோஆவான்.

இந்தியத் ``தேர்தல்`` ஆரம்பிப்பதற்கு முன்னமே அனைத்து மேற்குலக ஏகபோக ஊடகங்களும் அடுத்த இந்தியப் பிரதமர் மோடி என பகிரங்கமாக பிரகடனம் செய்து விட்டன.

(இந்தப் பின்னணியில் தான் நாம் காங்கிரசை பின்தள்ளி பி.ஜே.பி.க்கு எதிரான பிரச்சாரத்தை முதன்மைப் படுத்தினோம், நிலமைக்கு அமைய நமது முழக்கத்தை மாற்றீடு செய்தோம்!)  

அவர்கள் முரசறைந்து நியமித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இப்போது தேர்தலில்`` மக்கள்-தெரிவாக- தீர்ப்பாக`` முளைத்து நிற்கின்றான்!

இருண்ட யுகத்துக்குள் இந்தியா நுழைகின்றது!

இந்திய மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கும், தேசிய இன விடுதலைப் போராட்டங்களுக்கும்,தமிழீழ தேசிய விடுதலைப் புரட்சிக்கும் இது மேலும் நெருக்கடியான காலமாகும்.

இந்திய, தமிழக புரட்சிகர இயக்கங்கள், மோடிப்பாசிசத்தின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து தம்மை அமைப்பு ரீதியாக தற்காத்துக்குக் கொள்ளும் செயல் தந்திரத்தை வகுத்து,மோடிப்பாசிசத்தை முறியடிக்க அரசியல் வழியில் முன்னணியில் நின்று செயற்படவெண்டிய காலமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்திய கைக்கூலியும்,இந்திய விரிவாதிக்கத்தின் பாதுகாவலனும், மோடிப் பாசிசத்தின் பங்காளியும்,முள்ளிவாய்க்கால் கொலைக்குற்றவாளியுமான வை.கோ.ஈழவிடுதலைப் புரட்சியின் எதிரி என்பதை ஈழமக்களுக்கு உணர்த்த புதிய ஈழப்புரட்சியாளர்கள் முந்நின்று உழைக்க வேண்டிய காலமாகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிப்பாதையில் நிலை நிறுத்த விடாப்பிடியுடன் போராடவேண்டிய காலமாகும்.

பாசிசம் தோற்கும்!  புரட்சி வெல்லும்! இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!



புதிய ஈழப்புரட்சியாளர்கள்                                                                                                                  மே 13 2014