Saturday, 14 July 2012

கறுப்பு ஜூலை 2012 நினைவாக!


பக்ச பாசிச சிங்களமே;
 
* தமிழீழ தேசத்தை வேரறுக்கும் தேசிய இன அழிப்புக் கொள்கையைக் கை விடு!
 
 * தமிழீழ தேசத்தை அழிக்க நடத்தும் திட்டமிட்ட சிங்கள, இராணுவ,குடியேற்றத் திட்டங்களை நிறுத்து!

* தமிழீழ விடுதலைப்புலி யுத்தக்கைதிகளை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்!

* தனியார்மய, தாராளமய, உலகமய ஏகாதிபத்திய பொருளாதார நலன்களுக்கு இலங்கையை விற்காதே!

* ஏகாதிபத்திய உலக மறு பங்கீட்டின் போர்க்களமாக இலங்கையை மாற்றாதே!

விரிவாதிக்க இந்திய அரசே;

* ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!

விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரிய அமெரிக்க ஒபாமா நிர்வாகமே,

* நிராயுதபாணியான ஈழத்தமிழர்கள் மீதும், சிறைக் கைதிகள் மீதும், சிங்களத்தின் தொடரும் வெறியாட்டங்களுக்கு பொறுப்பெடு!

ஓடுகாலிக் கூட்டமைப்பே,
* ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக் கோரிப் போராடு!

* மக்கள் போராட்டங்களை வாக்குப் பொறுக்கப் பயன்படுத்தி தேர்தல் பாதையில் சீரழிக்காதே!

ஏகாதிபத்திய தாச புலம் பெயர் தமிழர் பேரவைகளே,

* அமெரிக்க,பிரித்தானிய, இந்திய அரசுகளுக்கு அடிபணிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு குழிபறிக்காதீர்!

புதிய தலைமுறை ஈழப்புதல்வர்களே விடுதலைப் புரட்சியைக் கற்றறியுங்கள்!
உழைக்கும் தமிழ்பேசும் மக்களே சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடித்து, புரட்சிப்பாதையில் முன்னேறுங்கள்!

ஒடுக்கும் சிங்கள மக்களே தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள்!

தங்கள் இன்னல்களுக்கு காரணம் பக்ச பாசிஸ்டுக்களின் உலகமயமாக்கல் கொள்கைகளே தவிர தமிழர்கள் அல்ல என்பதை உணருங்கள்!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

மார்க்சிய லெனினிய மா ஓ சேதுங் சிந்தனை வெல்க!