
சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான,
சமூக பாசிச அனுரா ஆட்சியே இந்திய அரசுக்கு அடிபணியாதே!
இதற்கு முந்திய எல்லா ஆட்சியாளர்களும் இணங்க மறுத்த,
உலக மறுபங்கீட்டு இராணுவ ஒப்பந்தத்திற்கு உடன்படாதே!
தேசிய ஈழப்பிரச்சனையையும், பொருளாதார வங்குரோத்து நிலையையும் பயன்படுத்தி இலங்கையை உலகமறுபங்கீட்டு யுத்தத்தில், இந்திய இராணுவக் காலனியாக்க ஒப்பந்தம் செய்ய வந்திருக்கும்,
பாசிச இந்திய மோடியே, இலங்கையில் கால்பதியாதே, திரும்பிப் போ!
இந்திய இலங்கை ஆக்கிரமிப்பு அரசியல் ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான சிங்களப் புதல்வர்களை பலிகொடுத்துவிட்டு, இன்று திரை மறைவில் ஆக்கிரமிப்பு இராணுவ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும்,
ஜே.வி.பி கும்பலின், தேசத்துரோகத்தை முறியடிக்க, இலங்கையராய்
ஒரணி திரள்வோம்!
முள்ளிவாய்க்கால் முடிந்து 15 ஆண்டுகள் `தமிழ்த் தேசியம்` என்கிற பெயரில் ஈழப்புரட்சிக்கு குழி பறித்த,
இனத்துவ இந்தியக் கைக்கூலித் தமிழ்க் கும்பலே, இலங்கை இணைக்கப்படாத இந்திய மாநிலமாக துணைபோகாதே!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
Eelam New Bolsheviks (ENB)
04-04-2025