Thursday 20 March 2008

விமர்சன அரங்கம்: கார்த்திகைப் பூக்கள்

''விமர்சனத்தைக் கண்டு நாம் அஞ்சுவதில்லை'' மா-ஓ-சேதுங்
0000000000000000000000000000000000000000000000000000000000
விவாதப்பொருள்:
உலகெங்கும் ஒடுக்கப்படும் பெண் ஆடுகள் நனைவதைக் கண்டு மார்க்சிய விரோத ஓநாய்கள் அழுகின்றன! - ஈழ மாலதி-20/03/08
( 1 )
செல்லதுரை on March 20, 2008 9:46 pm
எங்கள் கொள்கை திறந்த பொருளாதார கொள்கை என்று விடுதலை புலிகள் தலைவர் பத்திரிகை மா(நா)னாட்டில் பொன்மொழி உதிர்த்தார். எஙகள் நேச சக்தி நோர்வேயும் மேற்குலக (நா)னாடுகளும் என்ற தொனியில் இறுதியாக புலி ஒரு கட்டுரை விட்டது. ஒன்டுமே ச(ரி)ரவராதெண்டவுடனை இப்ப மாக்சிய கோசங்களை செந்தணல் என்ட புளக் விட்டு புலிக்கு மாக்சிய ஆடையை போ(ர்)த்து விட பாக்குது. அனைத்து இடதுசாரிகளையும் வடகிழக்கில் கொலை செய்து அல்லது வாய் மூட செய்த பாரம்பரியம் புலி பாரம்பரியம். அண்ணாமலையிலிரு(ந்)த்து இது தொடங்குகிறது.
(ந்நி)ன்னிலையில் நாவலனதும் நிர்மலாவினதும் விவாதத்திற்கு மாலதி ஒரு பதில் கொடுத்து இருவரையும் சாடியுள்ளார். இதன் பின்னணி நீங்கள் இருவரும் ‘துரோகிகள்’ உங்களுக்கு தமிழ் மக்களை பற்றி கதைக்க அருகதையில்லை எனபதே. என்ன தான் மாக்சிய போர்வை போர்த்தாலும் புலி புலி தான்.
குறிப்பு: (1)நீலக்குறியிட்ட அச்சுத்திருத்தங்கள் பிரசுரிப்பாளர் உடையவை.

(2)

senthil on March 21, 2008 8:48 am

என்ன கதை குழப்பமாய்ப் போட்டுதே ரதன் திருமதி நிர்மலா எண்டு உயர்த்தி எழுத மாலதி வந்து துரோகி எண்டுட்டா புலிக்கு கொமியுனிக்கேசன் பிறேக்டவுனோ.

(3)
Rathan on March 21, 2008 9:53 am

//என்ன கதை குழப்பமாய்ப் போட்டுதே ரதன் திருமதி நிர்மலா எண்டு உயர்த்தி எழுத மாலதி வந்து துரோகி எண்டுட்டா//ரதன் தனது கருத்தை சொன்னார். மாலதி தனது கருத்தை சொன்னார். இவற்றிற்கு இடையில் நீங்கள்தான் புலியை வலிஞ்சு திணிக்கிறீர்கள். உங்கள் தொடர்பாக கருத்தெழுத வேண்டிவந்தால் உங்களையும் திரு செந்தில் என்றுதான் எழுதுவேன்.

உலகெங்கும் ஒடுக்கப்படும் பெண் ஆடுகள் நனைவதைக் கண்டு மார்க்சிய விரோத ஓநாய்கள் அழுகின்றன!


மார்க்சிய விரோதிகளின் பெண்ணிய நாடகம் அம்பலம்!















[குறிப்பு:மார்ச் /13/2008 இல் '21ம் நூற்றாண்டுப் பெண்ணியச் சிந்தனை' என்கிற தலைப்பில் சபா. நாவலன் என்கிற ஆண் எழுதி வெளியான ஆக்கத்துக்கு, மார்ச்/18/2008 இல்'ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுகிறது!' என்கிற தலைப்பில் நிர்மலா ராஜசிங்கம் என்கிற பெண் பதில் அளித்திருந்தார்.தேசம் இணையதளத்தில் இடம்பெற்ற இவ்விவாதம் குறித்த வாசகர் மாலதியின் விமர்சனம்.]
லகெங்கும் ஒடுக்கப்படும் பெண் ஆடுகள் நனைவதைக் கண்டு மார்க்சிய விரோத ஓநாய்கள் அழுகின்றன! -மாலதி
மது நாட்டின் 'மேதைகள்' இருவருக்கிடையே தேசம் இணையதளத்தில் மல் யுத்தம் ஒன்று ஆரம்பித்திருக்கின்றது. மல்லாடும் நிர்மலா மற்றும் நாவலன் என்ற இருவருக்கும் உள்ள பொதுப்பண்பு யாதெனில் இருவருமே கோட்பாடு,கோட்பாடு என்று கூச்சலிடுவார்களே அன்றி, அவற்றுக்கான விளக்கமோ அல்லது ஏற்றுகொள்வது மற்றும் மறுப்பதற்கான காரணங்களையோ கூறமாட்டார்கள்.உசாத்துணை நூல்களின் மேலாக ஒரு தாவு தாவுவார்கள். ஆனால் இடம் சுட்டி,பொருள் வழங்கமாட்டார்கள்.இந்த அறிவுலக தர்மத்தை இவர்கள் கண்டு கொள்வதேயில்லை.இப்பண்பு தமது அறியாமைமீது இவர்களின் மமதையையும், தாம் வாழும் சமூகத்தில் இருந்து அவரவர் பெற்றுக்கொண்ட அறிவை சமூகம் பயனுற மறுவழங்கல் செய்வதென்ற மனப்பாங்கை நிராகரிக்கும் அறிவூற்று உடமையாளர்கள் என்ற அகந்தையைச் சுட்டி நிற்பதாகும்.

நிர்மலாவின் கட்டுரையில் மோர்கனின் 'பண்டைய சமூகம்' நூலும், ஏங்கெல்சின் 'குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்'- என்கிற நூலும் ''19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வந்தன, இன்றோ புராதன சமூகம் பற்றிய மோர்கனின் பார்வையோ, ஏங்கெல்சின் அணுகுமுறையோ உலகளாவியதில்லையென நிராகரிக்கப்பட்டுள்ளது'' என்கிற கருத்து மிக மையமானதாகும். மோர்கனின் பார்வை என்றும், ஏங்கெல்சின் ணுகுமுறை என்றும் நிர்மலா சொல்லுவது மார்க்சிய இயங்கியல் பொருள்முதல் வாதம் தவிர வேறென்ன? மார்க்சிய இயங்கியல் பொருள்முதல் வாதம் உலகளாவியரீதியில்(!!) நிராகரிக்கப்பட்டுள்ளது என்று பிரச்சாரம் செய்வதனூ்டாக,தமது ஆளும்வர்க்க விசுவாசத்தை நிரூபிப்பதே நிர்மலாவின் பெண்ணியமாகும்.உலகெங்கும் ஒடுக்கப்படும், பெண் ஆடுகள் நனைவதைக் கண்டு மார்க்சிய விரோத ஓநாய் அழுகிறது!

ர்க்கப் போராட்டத்தை மறுதலித்து;- 1)பொருளுற்பத்தி வளர்ச்சியின் ஒரு குறிப்பான வரலாற்றுக் கட்டத்துடன் வர்க்கங்களின் இருப்பு பிணைக்கப்பட்டுள்ளதையும் 2) இவ்வர்க்கங்களிடையேயான போராட்டம் தவிர்க்க இயலாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்லுமென்பதையும் 3) இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே அனைத்து வர்க்கங்களையும் ஒழித்து வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்பதையும் வரையறுத்த- ஒடுக்கப்படும் மக்களின் கலங்கரை விளக்கமான மார்க்சியத்தை நிராகரிப்பதே இவர்களின்நோக்கமாகும். ஒடுக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதாக நாடகம் ஆடுவார்கள்; உண்மையில் இவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் ஆளும் கும்பல்களுக்கும் எதிராக போராடும் வர்க்கங்கள் ஓரணியில் நின்று போர்க்கொடி உயர்த்துவதை தடுக்க முயலுகின்றனர். ஒடுக்கப்படும் வர்க்கங்களை பெண்ணியம், தலித்தியம்,என்று பிளவுபடுத்தி வர்க்க ஒற்றுமையை குலைத்து,வர்க்கப்போராட்டத்தை பலவீனப்படுத்துவதன் மூலம், ஏகாதிபத்தியத்துக்கும் ஆளும்கும்பல்களுக்கும் 'ஜன கண மன' பாடுகின்றனர்.
மூகவியல் என்ற பெயரிலே ஆளும்வர்க்க கல்வி நிறுவனங்கள் தனது தலைக்குள் கவிழ்த்துக்கொட்டிய குப்பை கூளங்களை வாரி இறைத்து, மேதாவி என்று கெக்கலி கொட்டுவது நிர்மலாவின் ஆசை.நாவலனுக்கோ தான் ரெலோ என்பதை மறைக்க , 'பாசறை' வீரனாக பந்நெடுநாள் இடது-செந்தில்- சாரியாக, தன்னைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை. உலகமயமாக்கல் என்ற முகமூடியில் நடக்கும் நவீனகாலனியாதிக்க உலக மறு பங்கீடு கூட,பழைய காலனியாதிக்கம்; புகையிரதப்பாதை,கல்வி-(தேசியக்கொள்ளைக்காக போட்ட அடித்தளங்கள்)- தந்தது போல் ஏதேனும் பிச்சையிடும். பிச்சை வாங்கவேண்டும். மக்களையும் பிச்சைக்காரராக்க வேண்டும் என்ற ஏகாதிபத்திய தாசத்தவிப்பு.

மேலும் நிர்மலா ''ஆண்களே பெண் அடக்குமுறையின் பிரதான இயக்கிகளாக (agents) சமூககட்டமைப்பில் பங்கேற்கிறார்கள்." என்கிறார்.
அப்படியானால் உலகின் முதல் பெண்பிரதமரை படைத்த எம் இலங்கைத்தீவில் பெண் அடிமையை ஒழிக்க திருமதி பண்டாரநாயக்கா கையாலாகாதவரா? அவர் கையில் இருந்த அரசியல் அதிகாரம் யாருக்கு சேவை செய்தது? உள்நாட்டில் பெளத்த சிங்கள பேரினவாதத்துக்கும்,அந்நிய நிதி மூலதனத்துக்குமா? அல்லது ஆணாதிக்கத்துக்கா? கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலய அடிமைச் சந்தையில் பெண்களுக்கு நிரந்தர முதுகுவலியை சீர்வரிசையாக்கியது குறைந்தகூலித் தொழிலாளர்களுக்காக உலகெங்கும் அலையும் ஏகாதிபத்தியத்தின் நவீன காலனியாதிக்கமா? அல்லது குறட்டைத் திலகங்களா? மேலைத்தேய மெல் இதயக் கிறீஸ்தவர் சோனியாகாந்தியின் தலைமையில் ஒளிரும் இந்தியாவில் உழுதுண்டு வாழ்ந்தோரை எலி தின்று சாவோராக்கியது உலகமயமாக்கலா? அல்லது ஆண் உழவர்களின் ஆணாதிக்கமா? தமிழீழமண்ணில் பள்ளிக்கூடம் செல்லவும் பயந்து இளம் பள்ளி மாணவிகள் அஞ்சி நடுங்குவதும், காணாமல் போவதும், கற்பழிக்கப்படுவதும் இலங்கை அரசின் பாசிச இனவெறித்தாண்டவத்தாலா? அல்லது ஆணாதிக்கத்தாலா?
ராக்கிரமபாகு காலத்திலேயே தன் நிறைவு பெற்று நெல் மணிகளை ஏற்றுமதி செய்த நாட்டின் இளம் கண்மணிகள் மத்திய கிழக்கிலே குதறப்படுவதன் காரணம் காலனியாதிக்கத்தின் கொடூரக்கொள்ளையா? அல்லது ஆணாதிக்கமா?

சியாவின்இருதயமான ஆப்கானிஸ்ரானிலும்,மத்தியகிழக்கின் நாகரீகச்சின்னமான ஈராக்கிலும் பெண்கள் குதறப்படுவது ஒற்றைத்துருவ அமெரிக்காவின் நவீன காலனியாதிக்க வேட்டையாலா? ஆணாதிக்கத்தாலா?

முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் இன்றைய இளந்தளிர்கள் மேற்குலகின் சிவப்பு விளக்குக் குண்டர்களால் சீரழிக்கப்படுவது ஏகாதிபத்தியத்தின் சதிச்செயலான திரிபுவாதத்தின் விளைவா? அல்லது ஆணாதிக்கமா?
நெஞ்சில் கொண்ட கோரிக்கையும், ஏந்தியுள்ள ஆயுதமும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஆளும் கும்பல்களுக்கு எதிரானது என்பதனால் விடுதலைப்புலித் தங்கைச்சிகளை நிர்மலா வசதியாக மறந்துவிடுகிறார். கடந்த இரு தசாப்தங்களாக உலகின் பெண்மைக்கே ஒளி தந்த தமிழீழத் தங்கைகளின் வீர சாதனைகளை எச்சிறுபுல்லும் எச்சிறு தளிரும் எப்போதும் பாடும், எச்சில் பொறுக்கிகள் பாடுவார்களா?!
'புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்' என்ற புரட்சித்தீயில் வெந்துகருகிய 'பல்கலைத் தத்துவங்கள்', போராட்டத்தின் தற்காலிக பின்னடைவைப் பயன்படுத்தி மீண்டும் முனக ஆரம்பித்துள்ளன. வெங்கொடுமைச்சாக்காட்டில் வெந்துபோன வேங்கைகளதும், மக்களதும் தியாக வரலாற்றை இனிமேல் மறுதிசையில் திருப்ப யார் முயன்றாலும் அது தோல்வியிலேயே முடியும் என்பது திண்ணம். மாலதி-ஈழம்.
நமது பெண்ணியம்
'அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள் எரிப்பதற்காக எழுகிறோம் இங்கே'.(1982) ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஈழப்பெண்கள் இந்த முழக்கத்தின் பின்னால் அணிதிரண்டார்கள். இறுதியில் ஈழவிடுதலைப் புரட்சியில் ஆயுதமேந்தி உலகப் பெண் விடுதலை இயக்கத்துக்கு முன் உதாரண மங்கையர் ஆகினர்.இது முடியவில்லை, இபோதுதான் தொடங்கியுள்ளது. இன்றும் இனியும் இவ்வரலாறு அகில உலகத்துக்கும் பெண்விடுதலையின் நினைவுச் சின்னமாய் என்றும் நின்று நிலை பெறும்.ENB