Saturday, 18 September 2010

தியாக தீபம் திலீபன் தொடங்கிய போரைத் தொடர்வோம்.

* தியாக தீபம் திலீபன் தொடங்கிய போரைத் தொடர்வோம்.
* விடுதலைப் போரைக் கருவறுத்த விஸ்தரிப்புவாத இந்திய அரசை பழிக்குப் பழி வாங்குவோம்!
* அரசியல்,பொருளாதார, இராணுவ,மற்றும் ஒட்டு மொத்த நாட்டின் இறைமையின் பாற்பட்டு இலங்கையை அடிமைப்படுத்திய,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்!
* இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை முறியடிக்க 'இந்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைக்' கட்டியமைப்போம்!
* இந்து சமுத்திரப் பிராந்தியத்தை, ஏகாதிபத்திய உலக மறு பங்கீட்டிற்கான போர்க்களமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துவோம்.!
* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயாக இருந்து இலங்கை மக்களை 'இந்திய சீன மேலாதிக்கப் போட்டிக்குள் இழுத்து விடுவதை எதிர்ப்போம்!
* நவீன காலனியாதிக்கத்தின் தாசன் மன் மோகன் சிங், 'அபிவிருத்தி' என்ற பெயரால் உலகமயமாக்கல் கொள்கையை இலங்கை மக்கள் மீது திணிப்பதை எதிர்ப்போம்!
* 'இன மானம்' 'தமிழ் வீரம்', பிரபாகரன் புகழ் பாடி, தமிழக மக்களை ஏமாற்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை தாங்கிப்பிடிக்கும், சமரசவாத, சீர்குலைவுவாத நெடுமாறன், வை கோ, சீமான் கும்பலைத் தனிமைப் படுத்துவோம்.
* காங்கிரஸ், பாரதிய ஜனதா, போலிக் கொம்யூனிஸ்ற் கும்பல்களின் அதிகாரத்தின் கீழ் நசுக்கப்படும் இந்திய தேசிய இனங்களுடன் ஒன்றுபடுவோம்!
* காஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிபோம்
* ஆந்திர பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், அவர் வாழ் நிலத்தின் வளங்களைக் காப்பதற்காகவும் போராடும் மா ஓ இஸ்டுக்களுக்கெதிராக மன் மோகன் கும்பல் தொடுத்துள்ள பச்சை வேட்டைப் பயங்கரத்தை எதிர்போம்!
* தமிழகத்தில் மக்கள் ஜனநாயக இயக்கங்களுடன் ஐக்கியப்படுவோம்!

இந்தப் பாதையிலேயே, மக்கள் புரட்சி வெடிக்கும்!
சுதந்திர தமிழீழம் மலரும்!
திலீபன் தியாகம் நனவாகும்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

No comments: