மே நாள் சூளுரை
அன்பார்ந்த ஈழமக்களே, தாய்மாரே,பெண்களே, மாணவர்களே, இளைஞர்களே, உலகத் தொழிலாளர்களே, ஒடுக்கப்பட்ட தேசங்களே;
புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்.
மே நாள் சர்வதேசத் தொழிலாளர் தினமாகும். உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களும்,ஒடுக்கப்படும் தேசங்களும் தத்தமது உள்நாட்டு,மற்றும் சர்வதேசியக் கடமைகளால் ஒன்றிணையும் நாளாகும்.இதனால் தான் இம்மாபெரும் நாளில் தொழிலாளி வர்க்க இயக்கங்கள்,தேசிய இயக்கங்கள்,ஜனநாயக இயக்கங்கள் தமது குறிப்பான புரட்சிகரக் கடமைகளை வரையறை செய்யக் கோரப்படுகின்றன.இதர முதலாளித்துவ,ஆளும்வர்க்க,
திருத்தல்வாத,சீர்திருத்த,மதவாத,அந்நிய அடிவருடிக் கும்பல்களின் சம்பிரதாய களியாட்டச் சடங்காக அல்லாமல், உண்மையிலேயே முரணற்ற ஜனநாயகத்துக்கான எந்த ஒரு பாட்டாளிவர்க்க தேசிய
இயக்கத்துக்கும், மே நாள் கோரும் இக்கடமை ஒரு சர்வதேசியப் பணியாகும்.
புதிய ஈழப்புரட்சியாளர்களாகிய நாமும் இச் சர்வதேசியப் பணியை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையேற்று நடத்திய முப்பது ஆண்டுகால ஈழப்போர், அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகளாலும், ரசிய சீன ஏகாதிபத்தியவாதிகளாலும், விரிவாதிக்க இந்திய அரசு மற்றும் இஸ்ரேல் பாகிஸ்தான் கூட்டாலும்,நோர்வேயின் சமாதானச் சதியாலும்,பாலசிங்கம்- சம்பந்தன் - கருணா உள்ளிட்ட கோடரிக்காம்புகளின் துரோகத்தினாலும், ஐ நா.வின் கைவிரிப்பாலும், மே 18 2009 முள்ளிவாய்க்காலில், இவர்கள் அனைவரும் திட்டமிட்ட ஒரு இனப்படுகொலை மூலம் முறியடிக்கப்பட்டது.இந் நாளில் ஈழ விடுதலை இயக்கம் ( Movement), தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (Organaisation),அதன் முன்னணித் தலைவர்கள்-தளபதிகள், ஒன்றரை இலட்சம் பொதுமக்கள் எதிரிகளால் கொன்றொழிக்கப்பட்டு `வெற்றி வாகை சூடப்பட்டது`!
இதனால் மே 18 ஈழத் தேசிய தினமாகும்.
ஈழத் தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் பணி, சர்வதேசத் தொழிலாள வர்க்க விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியாக அமைவதே முரணற்ற ஜனநாயகப் பாதை என்பதால் நாம் மே தினத்தையும், மே 18 ஈழதேசிய தினத்தையும் ஒரு சேர அனுசரித்து வருகின்றோம்.
எனவே மே 1 இல் எமது கடமை, மே 18 இற்கு பதில் சொல்வது தவிர வேறெதுவும் இல்லை. இதன் பொருட்டு எமது கடமைகளை வகுத்துக்கொள்ள இன்றைய புறச்சூழல் குறித்த பருண்மையான, புறவய ஆய்வு இன்றியமையாதது ஆகும்.
புதிய சர்வதேசியச் சூழல்
ஈழப்புரட்சியின் இன்றைய காலகட்டம் இதற்கு முந்திய காலகட்டங்கள் சந்தித்திராத ஒரு புதிய சர்வதேசியச் சூழலைச் சந்தித்துள்ளது.
ஈழப்புரட்சியில் பின்வரும் ஆண்டுகளில் நிகழ்ந்த நிகழ்வுகளை இன்று ஒப்பிட்டால் இந்த மாற்றங்கள் புலப்படும்.
1) 1983 இல் உள்நாட்டு ஜூலை இனப்படுகொலையைச் சாட்டாக வைத்து ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையீடு செய்த இந்தியா, 1985இல் திம்புவில் ஈழப் போராளிகளின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை ஏற்க மறுத்து, ஈழ விடுதலை இயக்கத்தை நசுக்கவும், சிங்களத்தை பாதுகாக்கவும்,இலங்கையில் இந்திய மேலாதிக்கத்தை நிறுவவும் ஜுலை 1987 இல் ஒப்பந்தம் நிறைவேற்றியது. இதில் திரிகோணமலைத் துறைமுகத்தை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டது.இதற்குக் காரணம் அப்போது- தகர்ந்து கொண்டிருந்த- ரசிய சமூக ஏகாதிபத்தியமும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் என `இரு துருவ உலக ஒழுங்கமைப்பு` இருந்தது. இந்தியா வெளி விவகாரத்துறையில் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்திருந்தது.
2) 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் ரசிய சமூக ஏகாதிபத்தியம் பொறிந்து விழுந்து நொருங்கிச் சிதறி சின்னாபின்னமாகிவிட்டது. அமெரிக்கா தலைமையிலான ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பு உருவாகிவிட்டது. இந்தியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் யுத்த தந்திரக் கூட்டாளியாகிவிட்டது.
3) 2009 முள்ளிவாய்க்கால் காலத்தில் அமெரிக்காவின் ஏக உலக மேலாதிக்கத்துக்கு போட்டியான, ஏகாதிபத்திய வல்லரசுகளாக ரசியாவும் சீனாவும் வளர்ந்துவிட்டன.
4) பக்ச பாசிஸ்டுக்களின் பத்தாண்டு ஆட்சி (19 November 2005 to 9 January 2015) கவிழ்க்கப்பட்டு பத்து மாதத்தில், (November 8, 2016) இல் அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி பிறந்தது!
அமெரிக்காவில் ரம்பின் ஆட்சி இதற்கு முன் என்றும் இருந்திராத, முற்றிலும் மாறான புதிய சர்வதேசியச் சூழ்நிலையில் நிகழ்ந்தேறிய ஒன்றாகும். ஏகாதிபத்திய நெருக்கடியின் பல தொடர் நிகழ்வுகளின் விளைவுகளில் ஒன்றாகும்,
அத் தொடர் நிகழ்வுகள் ஆவன:
a) 70களில் ஏகாதிபத்திய நெருக்கடிக்கு தீர்வாக உலகெங்கும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், ஐ.நாவும் இவர்களது ஏஜென்டுகளாக IMF,WB,IBRD உம் அமூலாக்கிய தனியார்மய, தாராளமய, சுதந்திர வர்த்தக பொருளாதார உலகமயக் கொள்கைகள், பின் தள்ளப்பட்ட நாட்டு மக்களை மட்டுமல்ல, முன்னேற்றப்பட்ட நாட்டு மக்களையும் ஒட்டச்சுரண்டி வாங்கும் சக்தியைப் பறித்தெடுத்துவிட்டது.
b) வாங்கும் சக்தியற்றோருடன் போலிப் பத்திரங்களைக்கொண்டு நடத்திய வர்த்தகத்தை ஆதாரமாக வைத்து கணக்கிடப்பட்ட வங்கிகளின் சொத்து மதிப்புப் பொய்க்கணக்கு, மெய்யான போது படிப்படியாக ஏகாதிபத்திய பெரு வங்கிகள் திவாலாகின. 2008 financial crisis சாராம்சத்தில் இதுவே!
('' It was only a few years later that an even nastier crisis would hit the entire world’s financial markets. In many ways it has still has not ended, with the billions in losses and slowing global economy manifesting themselves in the current European sovereign debt crisis. It resulted in the collapse of a number of large financial institutions and is considered by many economists to be the worst crisis since the Great Depression. While the causes are numerous, the main trigger is considered to be the crash of the US housing market``. - A history of the past 40 years in financial crises - IFR 2000 issue Supplement By Spencer Anderson )c) இப் பகிரங்கத் திருட்டுக்கு, பகல் கொள்ளைக்கு காரணமான எந்த தனிப்பட்ட அதிகாரியும்,நிறுவனமும் தண்டிக்கப்படவில்லை, மாறாக எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என, எஞ்சியிருந்த கோடிக்கணக்கான சொத்துக்களை வாரிச் சுருட்டிக்கொண்டு, `சட்டத்தின் பிடியில் இருந்து இவர்கள்` சந்தோசமாக` தப்பிவிட்டார்கள்.
d) இவர்களை தப்புவித்த அதே அரசுகள் பொறிந்து விழுந்த வங்கிகளை மீண்டும் தூக்கி நிறுத்த மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி இறைத்தன. இந்தக் கைங்கரியத்துக்கு கஜானாவை நிரப்ப மக்களுக்கு austerity எனும் நாசகாரத் திட்டத்தை அறிவித்தன.
e) இது முன்னேற்றப்பட்ட நாட்டு மக்களை குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ் மட்ட உழைக்கும் மக்களை ஒட்டாண்டிகள் ஆக்கியது. உலகப் போருக்குப் பிந்திய `பொது நல அரசுகள்`-என்பதற்கு அலங்காரக் குஞ்சங்களான அனைத்துச் சலுகைகளும் வெட்டிக் குறைக்கப்பட்டன.பின் தள்ளப்பட்ட நாடுகளில் கிரேக்கம் என்கிற ஒரு பழம் பெரும் நாடே திவாலாகியது!
f) இதன் விளைவாக ஏகாதிபத்தியத்தை எதிர்த்த உடனடிப் பொருளாதார-சமூக நலன்களுக்கான,நாட்டு இறையாண்மைக்கான,தேசிய சுயநிர்ணய உரிமைக்கான தன்னியல்பான வெகுஜன இயக்கங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
இவ் வெகுஜனத்திரள் காலம் காலமாக தம்மை `ஆட்டிப்படைத்த` நிலைமைகள் மீது அதிர்ப்தியும் எதிர்ப்பும் கொண்டிருந்தது. அதிகாரபூர்வ ஆளும் வர்க்க கட்சிகள்,வங்கிகள்,ஏகபோக காப்பரேட்டுக்கள், ஜனநாயகத்தின் ஒரு எலும்பான ஊடகங்கள், சட்டம் ஒழுங்கின் காவலர்கள்,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் மானுடத்தை மீட்டெடுத்த (பெரிய பிரித்தானியாவின் வின்ஸன் சேர்ச்சில் போன்ற!) `மோசேஸ்`கள்- சுருங்கச் சொன்னால் ஒட்டு மொத்த அமைப்புமுறை அரசுமுறை மீதும் அதிர்ப்தி அடைந்திருந்தனர்.
g) துரதிஸ்ரவசமாக புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தாலோ, புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியாலோ வழி நடத்தப்படாதவர்களாவும் இவர்கள் இருந்தனர்.
h) இதனால் ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சித் திட்டத்தில் இருந்து இவர்களைத் திசை திருப்புவது எதிரிகளுக்கு, கூடவே சமரச சக்திகளுக்கு சாத்தியமாக இருந்தது.
i) இந்த விளைநிலத்தில் தான் Populism மற்றும் Populist Leaders தோன்றி இப்போராட்டங்களை, பாசிச தேசிய வெறிப் பாதையில் திசை திருப்பினர், கடவுளால் எப்போதும் ஆசீர்வதிக்கப்படும் அமெரிக்கா இப்போதும் முன்னணி வகுத்து, ரம்ப் அமெரிக்காவின் தலைவர் ஆனார்.ஐரோப்பிய ஜூனியனின் தகர்வின் தொடக்கமாக இங்கிலாந்தில் பிரிவினை வாக்கெடுப்பு வெற்றிபெற்றது.
j) இதனோடு கூடவே, ஏகாதிபத்திய பொருளாதார உலகமயம், நாடு சாராத, எந்தவித சட்ட திட்டங்களுக்கும் உட்படாத, `அலைந்து திரியும்`, உற்பத்திசாராத வழி வகைகளில் திரட்டப்பட்ட மூலதனத்தின் புல்லுருவி வர்க்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளது. இவர்களும்தான் அந்த 1% பேர்! இவர்களுக்கு ஒரு நாடில்லை,ஒரு அரசில்லை,ஒரு கட்சி இல்லை,ஒரு ஊடகம் இல்லை ஆனால் தீவுக் கூட்டங்கள் உள்ளிட்ட உலகின் 200 நாடுகளும் இந்த மூலதனத்தின் கோரப்பிடிக்குள்ளேயே சிக்குண்டுள்ளது.மாபெரும் நாடுகளும், கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் கூட இதற்கு விதிவிலக்கில்லை. பிரித்தானியாவின் ரொனி பிலேயரும், அமெரிக்காவின் ரம்ப்பும், பிரான்சின் மக்ரோனும் மிகச் சிறந்த உதாரணங்கள் ஆவர்.ஆட்சிக் கவிழ்ப்புக் கூட அவசியமில்லை; ஒரு `ஜனநாயகத் தேர்தல்` மூலமே தமது அடியாட்களை ஆட்சியில் அமர்த்த இவர்களால் முடியும்.ரம்ப் இவ்வாறுதான் ஆட்சியைப் பிடித்தார்.
வட அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகளின் கதி இது வென்றால், தென் அமெரிக்க கிழக்கு ஐரோப்பிய, ஆசிய ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளின் கதியை எண்ணிப்பாருங்கள்.அவர்களுக்கு ஆவணம் இல்லாது போக வேண்டும் என்றால், இவர்களுக்கு கோவணம் இல்லாது போனாலும் போதும்! அல்லாமல் எவரேனும் எதிர்த்தால் அவை `அடிபணியா`-முரட்டு அரசுகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
k) இக்காரணங்களால் 2008 நெருக்கடி தீரவில்லை, மென்மேலும் தீவிரமடைந்து மீள முடியாத நெருக்கடியாகிவிட்டது.
l) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் என்கிற மகத்தான நூலில் `ஏகாதிபத்திய நெருக்கடிக்கு யுத்தத்தை தவிர வேறு தீர்வு உண்டா` என்பார் மாமேதை லெனின்; இன்றைய யுத்தங்களும் அத்தகைய `தீர்வுகள்` தான்!
m) உலகை மறுபங்கீடு செய்வதற்கான யுத்தம்; அதன் மூலம் நெருக்கடிக்கு தீர்வு!
ஆக ஈழப்புரட்சியின் இன்றைய காலகடத்தின் புதிய சர்வதேசியச் சூழலை, உற்பத்திசாராத வழி வகைகளில் திரட்டப்பட்ட மூலதனத்தின் ஒரு புல்லுருவி வர்க்கத்தினதும்,`சொந்த` நாடுகளின் ஆளும் வர்க்கங்களதும் கூட்டு,ஏகாதிபத்தியத்தின் - ஏகபோக நிதி மூலதனத்தின் - நெருக்கடிக்குத் தீர்வாக உலகை மறுபங்கீடு செய்யும், ஆட்சிக் கவிழ்ப்புகளையும் யுத்தங்களையும் தூண்டிவரும் காலம் எனக் கூறலாம்.
உலகிலுள்ள அனைத்து நாடுகளதும் உள் நாட்டு நிலைமைகளும் இப்பொதுவான சர்வதேசச் சூழலை சார்ந்து தான் ஏதோ ஒரு வகையில் அமைகின்றன.
ஏகாதிபத்தியம் மானுட விரோத சமூக அமைப்பு:
ஏகாதிபத்தியம் என்பது யுத்தம்:
ஏகாதிபத்திய நெருக்கடியின் இன்றைய குறிப்பான சூழ்நிலையை மேலே கண்டோம்.இது மட்டுமல்ல பொதுவாகவே ஏகாதிபத்தியம் ஒரு மானுட விரோத சமூக அமைப்பும் ஆகும்.2008 உலக நெருக்கடி உடனடியாக சடுதியாக தோன்றவில்லை, முப்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட, Savings and loans crisis – 1980s, LatAm sovereign debt crisis – 1982, Stock market crash – 1987, Junk bond crash – 1989, Tequila crisis – 1994, Asia crisis – 1997 to 1998, Dotcom bubble – 1999 to 2000,எனத் தொடர்ந்த பகுதி நிகழ்வுகளின் மொத்த விளைவே Global financial crisis – 2007 to 2008 ஆகும். ஆக ஏகாதிபத்தியம் தனது இயல்பு காரணமாக இடைவிடாது நெருக்கடிகளுக்குள்
சிக்குகின்றது. நெருக்கடி முற்றி உலகப் பொது நெருக்கடியாக வெடிக்கின்ற போது யுத்தத்தின் மூலம் தீர்வு காண்கின்றது.இந்த யுத்தங்களின் சுமையை மக்கள் மீது சுமத்துகின்றது.மேலும் யுத்தம் என்பது உயிரழிவு,பொருளழிவு மட்டுமல்ல உற்பத்தி சக்திகளின்
பேரழிவுமாகும்.ஒரு நாட்டில் வளர்ச்சி அடைந்த உற்பத்தி சக்திகளை யுத்தம் நிர்மூலம் செய்கின்றது.பின்னர் அதை நிர்மாணம் செய்வது (Nation Building!),என்கிற பெயரில் சந்தையை உருவாக்குகின்றது. இந்தச் சந்தையில் அந்த 1% புல்லுருவிகள் முதலீடு செய்கின்றார்கள், இது அனைத்துக்கும் கங்காணி வேலை பார்க்கின்றது ஐ.நா.எனவே ஏகாதிபத்தியம் என்பது சாராம்சத்தில் நிதிமூலதனத்தின் நலனுக்கான யுத்தம், இது தவிர வேறெதுவும் இல்லை.
உலக வேலையின்மை:
2018 ம் ஆண்டில் ஏற்கெனவே உள்ள வேலையில்லாப் பட்டாளத்தோடு மேலதிகமாக 27 இலட்சம் பேர் இணைந்து கொள்வர் என ஐ.நா.வின் சர்வதேச தொழிற் திணைக்கள(ILO) ஆய்வில் கூறப்படுள்ளது.
உலகெங்கும் விவசாயம் புறந்தள்ளப்பட்டு அபரிமித ஏகாதிபத்திய பண்ட உற்பத்தியையும்,நிதி மூலதனத்தையும் பரிவர்த்தனை செய்வதற்கான சேவைத் துறை ஊக்குவிக்கப்படுவது வேலையின்மைக்கு முதன்மையான காரணமாகும்.இதனை
ஏகாதிபத்தியத்தின் கீழ் தீர்க்க முடியாது. வேலையின்மையே வறுமையின் ஊற்று மூலம்.
உலக வறுமை
உலகத்தில் வறுமை பற்றிய புள்ளிவிபரங்களுக்கு புகழ் போன நிறுவனமும் உலக வங்கிதான்! அதனுடைய 2013 ஆண்டு கணக்குப்படி உலகில் 800மில்லியன் மக்கள், அதிகார பூர்வ சர்வதேச வறுமைக்கோட்டு அளவுகோலான நாளுக்கு US$1.90 - இலங்கை ரூபாய் வெறும் 300!- இற்கு குறைவாக பெறுவோர் ஆவர்.இது ஏற்கத் தகுந்தது அல்ல என உலக வங்கியே கூறுகின்றது. பணவீக்கத்தோடு ஒப்பிடுகையில் இலங்கை ரூபாய் 300 வறுமை நிலையைத் தாண்ட எவ்வகையிலும் போதுமானது அல்ல.இலங்கையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தினக் கூலி ஆக 500 முதல் 600 ரூபாய் வரைதான்.இது அவர்களை வறுமையில் இருந்து மீட்கவில்லை.
கனிம வளம்மிக்க ஆபிரிக்கக் கண்டத்தில் நாடு நாடாக பசி பஞ்சம் பட்டினிச் சாவுகள் நிலவுகின்றன.ஆக உலக வங்கியின் 800மில்லியன் கணிப்பை யதார்த்தமாக கொள்ள இயலாது.
உலக குடியிருப்புப் பிரச்சனை
According to the UN Habitat 30% of the world’s urban population lives in slums, deplorable conditions where people suffer from one or more of the following basic deficiencies in their housing: lack of access to improved water; lack of access to improved sewage facilities (not even an outhouse); living in overcrowded conditions; living in buildings that are structurally unsound; or living in a situation with no security of tenure (that is, without legal rights to be where they are, as renters or as owners).35% of the world’s rural population lives in unacceptable conditions.Overall more than 2 Billion people are in desperate need of better housing....In London, for example, the average monthly rent and mortgage payments equate to roughly 135% of monthly net income.உலக குடிநீர் பிரச்சனை
Why fresh water shortages will cause the next great global crisis. As a result, some 1.1 billion people worldwide lack access to water, and a total of 2.7 billion find water scarce for at least one month of the year. Inadequate sanitation is also a problem for 2.4 billion people—they are exposed to diseases, such as cholera and typhoid fever, and other water-borne illnesses. Two million people, mostly children, die each year from diarrheal diseases alone. Report WWF
உலக பருவநிலைப் பிரச்சனை
Do scientists agree on climate change?
Yes, the vast majority of actively publishing climate scientists – 97 percent – agree that humans are causing global warming and climate change. Most of the leading science organizations around the world have issued public statements expressing this, including international and U.S. science academies, the United Nations Intergovernmental Panel on Climate Change and a whole host of reputable scientific bodies around the world.அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் இதனை சீனப்புரளி என்கிறார்.
ஆக ஏகாதிபத்தியம் வேலையின்மை,வறுமை,குடியிருப்புப் பிரச்சனை,குடிநீர் பிரச்சனை,பருவநிலைப் பிரச்சனை இன்னும் எண்ணற்ற பிரச்சனைகளின் ஊற்று மூலமாக இருந்து, மானுட வாழ்வின் ஆதாரங்களையெல்லாம் அழித்தொழித்து, சோசலிசத்தின் பாதையில் ஒரு இடறுகட்டையாக இருந்து தன் இருப்பை செயற்கையாக,பலவந்தமாக தக்க வைப்பதற்காக வனமுறையையும்,யுத்தத்தையும் கையிலேந்திய நாசகார மானுடவிரோத சமூக அமைப்புமாகும் .
இதனால் மிக அதிக அளவில் பாதிக்கப்படுபவர்கள் உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் தேசங்களுமே.இதனால் இந்த வேண்டாப் பிண்டத்தை வெட்டி எறிவதும் அவர்களேதான்.
முள்ளிவாய்க்காலுக்குப் பிந்திய சூழல்
மே 18 2009 இலிருந்து February 12, 2018 பிரதேச சபைத் தேர்தல்வரையான ஒன்பது ஆண்டுகள், பிரபாகரன் - விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில் இலங்கையிலும்,தமிழகத்திலும்,புலம்பெயர் நாடுகளிலும் ஈழ அரசியல் - ( அது சார்ந்து சமூக சக்திகள்_வர்க்கங்கள் தமது நிலையில்) ஒரு முழுச் சுற்றை முடித்து எதிர்காலப் பாதையை தீர்க்கமாகத் தேர்ந்துகொண்ட காலப்பகுதியாகும்.
எமது கடந்த வருட (2017),மே நாள் பிரசுரத்தில் உள்நாட்டுச் சூழ்நிலை,
மற்றும் புலம் பெயர் சூழலை பின்வருமாறு மதிப்பீடு செய்திருந்தோம்.
இ) உள்நாட்டுச் சூழ்நிலை:
1) மூன்றாம் உலகப்போர் மறுபங்கீட்டுச் சூழலில், பக்ச பாசிஸ்டுக்களுக்கு சீனாவுடன் அணிசேரும் ``சுதந்திரம்`` அனுமதிக்கப்படாததின் விளைவாக, அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் மைத்திரி-ரணில்-சந்திரிக்கா-பொன்சேகா
போர்க்குற்றக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. தமது ஆட்சியை நல்லாட்சி எனப் பிரகடனம் செய்தது.ஆனால் இந்த நல்லாட்சி நாடகம் வெகுஜன உணர்வில் நாடு தழுவி இன்று அம்பலமாகிவிட்டது.
2) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் முழு மூச்சுடன் நாசகார -Regaining Sri Lanka- நவீன காலனிய திட்டத்தை அமூலாக்கிய சிங்களம் மற்றும் `நல்லாட்சி` , ஒட்டு மொத்த நாட்டையும் மீள இயலாத கடன் பொறிக்குள் வீழ்த்திவிட்டு விட்டது. அதாவது அந்நிய மூலதனத்துக்கு நாடு விலை போய்விட்டது.
3) இதனால் கிளர்ந்தெழும் உழைக்கும் மக்களின் எதிர்ப்பை நசுக்க, கடந்த 65ஆண்டுகளாக சிங்களம் கடைப்பிடித்து வந்த அதே தந்திரத்தைத்தான் இந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நல்லாட்சியும் கடைப்பிடித்து வருகின்றது.ஒரு புறம் இராணுவ சர்வாதிகார பாசிசத்தைக் கட்டவிழ்ப்பது, மறுபுறம் சிங்கள தமிழ் உழைக்கும் மக்கள் ஒன்றுபடாது தடுக்க, ஈழ தேசத்தை ஆக்கிரமித்து சிங்களவர்களுக்கு தாரை வார்த்து இனப் பகைமையை தக்கவைப்பது.நடைமுறையில் இக்கொள்கையை அமூலாக்கிய வண்ணமே சிங்களம் நல்லிணக்க நாடகமாடுகின்றது.
4) ஏகாதிபத்தியவாதிகள் இந்த நல்லிணக்கத்தின் முன்னேற்றத்துக்கு, `மாணாக்கன் இலங்கைக்கு` மாதா மாதம் மார்க்குகள் வழங்கி, தகுதியின் அடிப்படையில் கடன் வழங்கி- அந்நிய நிதி மூலதன முதலீடு செய்து வருகின்றனர்.
5) ஏகாதிபத்திய அடிவருடிகளின் `போர்க்குற்ற நீதிமன்றம்` ஐ.நா.சபை, வெசாக் கொண்டாடுகின்றது!
6) ஏகாதிபத்திய தாச சமரசவாத சத்திராதிகளின் ஐ.நா.மோசடிப் பாதை அம்பலமாகி முழு நிர்வாணமாகிவிட்டது.
7) அந்நிய தேசத்துரோக ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஈழமக்களை தேர்தல் பலிக்கடாக்கள் ஆக்கி, நல்லாட்சியுடன் அரச சுகத்தை பகிர்ந்து தின்ற வண்ணம், அதிகாரப் பகிர்வு-சமஸ்டி நாடகம் ஆடும் கூட்டமைப்புக் கும்பலை ஈழ மக்கள் இனம் கண்டு தீ மூட்டி எரித்து விட்டனர்.
8) அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக மறுபங்கீட்டு மேலாதிக்கத்தை நிலை நிறுத்த, `ஜனநாயக ரீதியில்` தெரிவு செய்யப்பட்ட ஆட்சிகளை தன் நலனுக்கேற்ப கவிழ்த்து கலைத்து வருகின்றது.இதற்கு அதன் கூலிப் போர்ப்படையான NGO க்களை ஏவி வர்ணப் புரட்சிகள் நடத்தி வருகின்றது. போலந்திலிருந்து வெனிசுவேலா வரை இது தொடரும் கதையாகும்.
9) மண்டையன் குழு சுரேஸ் பிரேமச்சந்திரன், காமுகச் சாமியார் பிரேமானந்த பக்தன் விக்னேஸ்வரன், ------ இரு தேசப் புத்திரன் கஜேந்திரன் அடங்கிய தமிழ்நெற், மற்றும் கத்தோலிக்க பாதிரிகளின் பின் புலத்தில் இயங்கும், `எழுக தமிழ்` முழக்கம் மேற்கண்ட NGO க்களின் வகைப்பட்ட ஒன்று தான்.இதன் கோரிக்கை சம்பந்தன் சுமந்திரனின் அதிகாரப் பகிர்வு தான்! இந்தத் தேசத்துரோகக் கும்பலோடு இந்து சமுத்திர பிராந்திய இந்தியக்
காவலர்களான இடது சாரி சமுத்திரர்களும் இணைந்து விட்டார்கள்.
10) இதன் காரணத்தால் தான் இக் கும்பல், போர் மீண்ட மக்களின் போராட்டங்களோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வதில்லை.!
11) போர் மீண்ட மக்களின்-வாழ்வாதார போராட்டக் கோரிக்கைகளில் எவையும் கூட எட்டு ஆண்டுகளாக தீர்த்து வைக்கப்படவில்லை.
12) நம்பிக்கை நட்சத்திரமாக நல்லாட்சி அமைந்து, அருமை ஐயா சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் ஆன பின்னரும் எதுவும் மாறவில்லை!
13) மாறாக அரசியல் அமைப்புத் திருத்தம், முழு நாடு தழுவிய வாக்கெடுப்பு என, ஈழதேசம் மீது ஒரு அடிமைத் தீர்வை திணிக்க சிங்களம் தினவெடுத்து நிற்கின்றது.
ஈ) புலம் பெயர் நாட்டுச் சூழ்நிலை
1) நாட்டுக்கு நாடு அமைந்திருந்த புலம் பெயர் பேரவைகள், நாடுகடந்த அரசாங்கம், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெறக் காட்டிய ஐ.நா பாதை அம்பலமாகிவிட்டது.
2) புலம் பெயர் நாடுகளில் மாவீரர் தின `புலி` வாரிசுகள் வெறும் சொத்துச் சேர்க்கும் பணந்தின்னிகளாக ஆகி விட்டனர். `புலிச் சொத்து பணக்காரர்` என்கிற ஒரு புல்லுரிவிக் கும்பல் உருவாகிவிட்டது.
3)இவர்களின் பின் புலத்தில் , சிறு மதி கொண்ட ஒரு சிறு கும்பல் சிங்களத்தோடு சமரசம் செய்ய தொடர்ந்து முயன்று வருகின்றது.
4) தொகுப்பில் இது புலம் பெயர் ஈழ விரோத, தேசத்துரோக ஏகாதிபத்திய தாச கும்பல் ஆகும்.
5) இதன் செல்வாக்கு சரிந்து வருகின்றது.
மேற்கண்ட நிலைமைகள் இன்றும் தொடர்கின்றன. ஆனால் இந்த ஆண்டில் நிகழ்ந்த உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தலும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும், மேற்கண்ட சூழ்நிலைகளை இயக்கிய சக்திகளின் ஈழ அரசியல் தொடர்பான நிலை, ஒரு முழுச் சுற்றை முடித்து, ஈழ விரோத எதிர்காலப் பாதையை தீர்க்கமாகத் தேர்ந்து கொண்டதன் தெளிவான அடையாளமாகும்.
இத்துடன் ஈழப்புரட்சியின் இரண்டாம் காலப்பகுதி நடைமுறை வழியிலும் முற்றுப்பெற்றுவிட்டது. இனிமேல் இந்தக் குதிரைகளை நம்புவோர் ஆடத்தான் முடியும், ஓடமுடியாது.
கடந்த பெப்ரவரி மாதம் இலங்கையின் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.கூட்டாக நல்லாட்சி அமைத்திருக்கும் UNPஉம் SLFPஉம் தனித்தனியாகப் போட்டியிட்டன.ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்ச தனியாகப்
போட்டியிட்டார். `கொள்கை முரண்பாடுகளால்` தமிழ்த்தேசிய அரசியல் பிளவுபட்டு மும்முனைப் போட்டி இடம்பெற்றது. நான்காவது முனையில் வாழைத்தோட்ட வெள்ளைவான் டக்ளஸ் போட்டியிட்டார்.மண்டையன் குழுவும் சடலம் சங்கரியும் கூட்டமைத்து தனித்துப் போட்டியிட்டனர்.அகில இலங்கை திடீரென இரண்டு தேசமாகி தமிழ் மக்கள் முன்னணி என்ற புதிய அவதாரத்தில் பொன்னம்பலம் கஜேந்திர குமார் அதே சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டார்.முஸ்லிம் கட்சிகளும், மனோ கணேசனும் தேர்தலில் பங்கு கொண்டனர்.
இலங்கையின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் உள்ளூர் ஆட்சி சபைகள் எந்த வல்லமையும் கொண்டவை அல்ல.அவற்றின் வரவு செலவுத் திட்டம் கூட களவாடத்தான் போதுமானது, கொள்ளையடிக்கப் போதுமானது அல்ல.
ஆனால் பின்வரும் சம்பவங்களால் இந்தத் தடவை இத்தேர்தல் அரசியல் முக்கியத்துவம் பெற்றது.
1) புலம்பெயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கும்பல், கொழும்போடு ஒருங்கிணைய பொன்னம்பலம் கஜேந்திர குமாருடன் தேசியக் கூட்டமைத்தது.
2) ஆட்சி கவிழ்க்கப்பட்ட ராஜபக்ச இத் தேர்தலில் பெரு வெற்றிபெற்று பாராளமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்துமாறு கோரினார்.
3) நல்லாட்சி, இஸ்லாமியத் தமிழர் மீது கட்டவிழ்க்கப்பட்ட வன்முறையை கைகட்டிப் பார்த்து ரசித்தது.தமிழ்த்தேசியம் தன் சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் வாழ்தல் கண்டு, மாற்றான் தாய் மனப்பான்மையில் பாராமுகம் காட்டியது.
4) ஊழல்,தேர்தல் தோல்வி,இஸ்லாமியத் தமிழர் வன்முறை எல்லாமுமாக பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
5) அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் அனைத்துக் கட்சிகளோடும் ``ஆலோசனை`` நடத்தினர்.
6) கூட்டமைப்பு,முஸ்லிம் கட்சிகள்,மனோ கணேசன், SLFP இன் 6 பா.உ.கள் துணையுடன் ரணில் வெற்றி பெற்றார்.
7)அமெரிக்காவும்,இந்தியாவும் உருவாக்கிய நல்லாட்சி மீண்டும் நிலை நிறுத்தப்பட்டது.தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது.
8) பெரும்பான்மை வாக்குகள் பெறாத பெரும்பான்மையான சபைகளில், தமிழரசுக்கட்சி டக்ளஸோடு கூட்டமைத்து தனது கடைசிக் கோவணத்தையும் வாழைத்தோட்டத்தில் புதைத்தது.
9) ரணிலை 10அம்ச கோரிக்கைகளின் நிபந்தனையின் அடிப்படையில் காப்பாற்றியதாகக் கூறிய பச்சைப் பொய் அம்பலமானது.காணாமல்ஆக்கப்பட்டோர், நிலப்பிரச்சனை, ஆனந்தன் விடுதலை என எந்தக் கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படவில்லை.
10) ஏறத்தாழ இதே காலத்தில் தான் தமிழகத்தின் `கருணா` வை.கோ, மீண்டும் தி.மு.க.வில் இணைந்து கொண்டார்.வை கோவை சீமான் தெலுங்கன் என்கிறார்.தான் ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறந்த தமிழன் என்கின்றார்.பதிலுக்கு வைகோ பருதி கொலையில் சம்பந்தப்பட்டவர்களென `புலிகள்` அனுப்பிய புகைப்படங்களில் உள்ளவர்கள் சீமானோடு இருப்பவர்கள் எனக் கொலைக் குற்றம் சாட்டுகின்றார்! சீமானை விட பிரபாகரனுக்கு அதிகம் நெருக்கமானவர் தான் தான் என்று உரிமை கொண்டாடுகின்றார்.
`இலங்கை ஒரு நாடு இரு தேசம்` என்ற முழக்கம் குறித்து:
புலம்பெயர் பேரவைகளின் ஒருங்கிணைப்புக் கும்பல், கஜேந்திர குமாருடன் அமைத்த கூட்டை தமிழ்த் தேசியக் கூட்டு எனக் கூறியது.இதற்கு ஏதுவாக கஜேந்திரன் `இலங்கை ஒரு நாடு இரு தேசம்` எனக் கூறிவந்தார்.2002 நோர்வே பேச்சுவார்த்தைக் காலத்தில் பாராளமன்றத்தைப் போர்க்களமாக்கிய `ஆய்வாளர்கள்`, இப்போது புதியதொரு போர்வீரனை கொழும்பில் கண்டுபிடித்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!
ஈழத்தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இந்த முழக்கம் மூன்று பொருள்களில்-உள்ளடக்கங்களில்- பேசப்பட்டு வருகின்றது.
1) இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடியினர்.வடக்கு கிழக்கு அவர்களுடைய தாயகம் (தேசம்).அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படக்கூடாது.இலங்கை என்கிற ஒரு நாட்டுக்குள்,ஒரு அரசுக்குள் சமஸ்டி ஆட்சிமுறையின் அடிப்படையில் அவர்கள் சமத்துவமாக ஆட்சி செய்யப் படவேண்டும்.
2) இதனை சுதந்திரத்தின் போது சோல்பரி அரசியல் யாப்பு உறுதி செய்யாததாலும், தொடர்ந்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களை வன்முறை கொண்டு ஒடுக்கி, அவர்கள் தாய் நிலத்தைப் பறித்து வந்ததாலும்,அரசியல் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டதாலும், நிபந்தனையற்ற பிரிவினையை ஆயுதமேந்திப் போராடிப் பெற்று, தமிழர்கள் தம்மைத் தாமே ஆள்வது.
3) இலங்கையின் அரசுமுறையின் - சிங்களத்தின், கீழ் தேசிய இன சமத்துவம் அடையப்பட முடியாததாகி விட்டதால், வட கிழக்கு தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடமைப்பதும், அதில் இஸ்லாமியத் தமிழர்களின் ஆட்சிஉரிமை, பிரதேச சுயாட்சி மூலம் உத்தரவாதம் செய்யப்படுவதும், மலையகத் தனி மாநிலம் வாக்கெடுப்பின் மூலம் ஈழத்துடன் இணைவதா இல்லையா என்பதை முடிவு செய்வதும்.
எனினும் இப்பிரிவினை முழக்கமானது- சிங்கள மக்கள் மத்தியில் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு ஜனநாயக இயக்கம் தோன்றி, தமது சொந்த அரசை எதிர்த்து உறுதி தளராது தொடர்ந்து போராடுமேயானால்,மறுபரிசீலனை செய்யப்படும் என்கிற- நிபந்தனைக்கு உட்பட்டது.
இதில் முதலாவதுதான் ஈழத்தமிழர் அரசியலின் அடிநாதமான கோட்பாடாகும்.சமஸ்டி என்பது ஒடுக்கும் தேசத்து -சிங்கள- ஆளும் வர்க்கத்துடன், ஒடுக்கப்படும் தேசத்து - தமிழ்- ஆளும் வர்க்கம் எவ்வாறு அதிகாரங்களைப் பகிர்ந்து மக்களை ஆளுவது என்பதற்கான முறைமை பற்றியது. இறையாண்மை என்பது தமிழர்களை ஆளுவதற்கு தமிழ் ஆளும் வர்க்கத்துக்குள்ள சட்டபூர்வ உரித்தைக் குறிக்கின்றது.இந்த சிந்தனைப்போக்கு போலிச் சுதந்திரத்துக்கு முன்னரே தமிழ் ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளான அரசியல் தலைவர்களிடம் இருந்தது. திரு ஜி.ஜி.பொன்னம்பலம் அவர்கள் 1939 இலேயே State Council இல் இது குறித்து நீண்ட விவாதம் நடத்தியுள்ளார்.
இதுவே சமஸ்டிக் கட்சியின் நிலைப்பாடாகவும் தொடர்ந்தது.1972 அரசியல் யாப்பு தமிழ் ஆளும் வர்க்கத்தின், தமிழர்களை ஆளும் உரிமையை நிராகரித்து, அனைத்து மக்களையும் ஆளும் உரிமையை தனது ஏகபோகம் (ஒற்றையாட்சி) ஆக்கிக் கொண்டது.இதை எதிர்த்த Trial At Bar வழக்கில் தமிழர்கள் ஒரு தனியான தேசம் என்பது சட்டபூர்வமாக நிரூபிக்கப்பட்டு வழக்கு வெற்றி பெற்று திரு அமிர்தலிங்கம் அவர்கள் விடுதலை
செய்யப்பட்டார்.ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இது ஒரு மாபெரும் சட்ட விவாதம்! அது வரலாறு; அதனை எவராலும் இனி மாற்றியமைக்க முடியாது.
இதனால்தான் 1977 சர்வஜன வாக்கெடுப்பை சட்டத்தின் மூலம் தடுக்க சிங்களத்தால் இயலவில்லை.
1) Sixth Amendment to Sri Lanka Constitutionமேலே காணுகின்றவாறு, 1983 ஜூலை விடுதலைப் புலிகளின், திண்ணைவேலி இராணுவத் தாக்குதலின் பின்னால், 1978 அரசியல் யாப்புக்கு ஓகஸ்டில் கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தம், ஒரு தனி அரசை உருவாக்குவதற்கான முயற்சிகளைத்தான் தடை செய்கின்றது. பிரபாகரனும் மாவீரரும் செய்தது இதுதான்:
Certified on 8th August, 1983
Prohibition against violation of territorial integrity of Sri Lanka
157A.
(1) No person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate State within the territory of Sri Lanka.
(2) No political party or other association or organisation shall have as one of its aims or objects the establishment of a separate State within the territory of Sri Lanka.
பிரபாகரனுடைய நிலை மேற் கூறியவற்றில் இரண்டாம் வகைப்பட்டது.
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியரசென்றிடுவோம்!
எனினும் இவ்விரு நிலைகளும் ஈழத்தமிழர் பிரச்சனையை - தேசிய இனப்பிரச்சனையாக, சுய நிர்ணய உரிமைப்பிரச்சனையாக, நிலப்பிரச்சனையை விவசாயப் பிரச்சனையாகப் பார்க்கவில்லை. இனப்பிரச்சனையாக மட்டுமே பார்த்தனர்.பிரபாகரனோடு இது ஒரு இனத்துவ வாதமாக வளர்ந்தது.இலங்கையின் குறிப்பான வரலாற்றுச் சூழலில், உள் நாட்டு நிலமைகளில் இந்த இனத்துவ வாதம் எந்தளவுக்கு தர்க்க ரீதியானதும், நீதியானதும், நியாயமானதும், ஜனநாயகமானதும், பலமானதாகவும் இருந்ததோ, மேலும் முக்கியமாக புறவயமாக ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலை கொண்டதாக இருந்ததோ, அதே நேரத்தில் அகவயமாக இன்றைய (ஏகாதிபத்தியத்தினதும் சோசலிச ஜனநாயகப் புரட்சிகளினதும்) சகாப்தத்தில், சர்வதேசிய முரண்பாடுகளைக் கையாளுவதற்கு வலுவானதாக இருக்கவில்லை.
இது ஒரு வரலாற்று விபத்து, இதற்கு பிரபாகரனோ, விடுதலைப் புலிகள் அமைப்போ தனிப்படப் பொறுப்பாகாது. விடுதலைப் புலிகளின் முப்பதாண்டுப் போர்க்காலம் ஈழத்தேசிய ஜனநாயகப் புரட்சியின் இரண்டாம் கட்டம் ஆகும். தமிழ்த் தரகுமுதலாளிய வர்க்கத்தின் முதல்கட்டம் எந்தளவுக்கு எந்தளவு புரட்சியைப் பின் தள்ள -சாகடிக்க- முயன்றதோ, அந்தளவுக்கு அந்தளவு பிரபாகரனின் மாவீரப் புலிப்படை புரட்சியை முன் தள்ள முடிந்த வரைக்கும்
இறுதி மூச்சு இருந்த வரைக்கும் முயன்றது. இந்த வீரகாவியம் தேசியப் புரட்சிகளின் வரலாற்றில் ஈழ ஓவியமாக என்றும் நீடித்து நிலைத்திருக்கும்.
மேலும் இவ்விரு நிலைகளும் தமக்குள் இணக்கம் கொண்டதற்கான அடிப்படைக் காரணம் அந்தக் குரலை எழுப்பிய சமூகப் பிரிவுகளின் வர்க்கநிலை ஆகும்.
முதல் தரப்பினர் தரகு முதலாளிய, நில உடமை வர்க்கத்தினர். இரண்டாம் தரப்பினர் சிறு உடமை வர்க்கத்தினர்.
ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்த வர்க்கங்களின் சிந்தனை செலுத்திய ஆளுமை முடிவுக்கு வந்து, முற்றுப்பெற்றுவிட்டது.
இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதித்துவ ஆட்சியை, அமெரிக்காவும் இந்தியாவும் அனுமதிக்கத் தயாராக இல்லை.சீனாவும் பிக்குத்துவமும் பக்ச பாசிஸ்டுக்களைக் கைவிடவில்லை.இலங்கை அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகம் உலக மறுபங்கீட்டுப் போர்க்களத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது.மலையக, முஸ்லிம் ஆளும் தரப்பைப்போலவே தமிழ்த்தரப்பும் அமெரிக்க இந்திய ரணில் முகாமைச் சார்ந்து இயங்குகின்றது. புலம்பெயர் பேரவைகள் கஜேந்திரன் மூலம் கொழும்போடு ஒருங்கிணைய முயல்கின்றன. ஆண்ட பரம்பரை டக்ளஸோடு சேர்ந்து மாகாணசபையையும் ஆள நினைக்கின்றது- என்ன குறை!
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னால் இலங்கைச் சூழலில் மேலதிகமாக ஏற்பட்ட மாற்றங்கள் இதுவாகும்.
இதனால்தான் ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்த வர்க்கங்களின் சிந்தனை செலுத்திய ஆளுமை முடிவுக்கு வந்து முற்றுப் பெற்றுவிட்டது என்கிறோம்.மக்கள் காரணம் இல்லாமல் கொடும்பாவி எரிக்கவில்லை!
இனிமேல் புதிய ஈழப் புரட்சித் திட்டத்தில், தேர்தல் புறக்கணிப்புப் பாதையில், விடுதலைப் புரட்சியின் மூன்றாம் கட்டமே முன்னேறிச் செல்லும்.
மே 18 முள்ளிவாய்க்கால் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே;
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்,
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்,
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
மீண்ட நம் மக்களே, போராளிப் புலிகளே, முன்னணி சக்திகளே;
உலக மறுபங்கீட்டு, உலகப் பெரும் போர் வெறியர்களைத் தோற்கடிப்போம்!
அமெரிக்க ஐரோப்பிய, ரசிய சீன, ஏகாதிபத்தியம் ஒழிப்போம், இந்திய விரிவாதிக்கம் தகர்ப்போம்!
இந்திய -சீன முகாம்களுக்கு இலங்கையைத் தாரைவார்க்க போட்டி போடும் சிங்கள ஆளும் கும்பல்களை அம்பலப்படுத்துவோம்!
ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச ஈழச் சமரச சக்திகளை தனிமைப்படுத்துவோம்!
போலிப்பாரளுமன்ற தேர்தல் பாதையைப் புறக்கணிப்போம்!
ஈழ தேசிய (இஸ்லாமிய,மலையக ) ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம்!
ஈழ விடுதலைக்கு ஆதரவாக சிங்கள உழைக்கும் மக்களை வென்றெடுக்கப் போராடுவோம்!
போர் ஓய்ந்த மக்களின் - மண்ணின் வாழ்வாதாரங்களுக்காகப் போராடுவோம்!
ஈழம் காணும் வரை ஓயமாட்டோம்!
இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
Eelam New Bolsheviks
மே-1-2018