ஆனந்தபுரத்தில் பிரபாகரனும் தளபதிகளும் ஒன்று கூடி நிற்கின்றனர் என அறிந்த சிங்களப்படை அச்சூழலை சுற்றி வளைத்து பெட்டியடித்தனர். ஆயிரக்கணக்கான சிங்களப் படையினர் களமிறக்கப்பட்டனர்.
தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளன் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் ஆயிரம் விடுதலைப் புலிகள் நாலாயிரத்துக்கு மேற்பட்ட சிங்களப்படையை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர். சிங்களப் படை நூற்றுக்கணக்கில் பலியாகியது.
சிறிய நீதிப்படையை, பெரிய அநீதிப்படையால் வெல்ல முடியாத நிலை தோன்றியது.
களத்தில் பிரிகேடியர் தீபன், கேர்ணல் கடாபி, கேர்ணல் விதுசா, கேர்ணல் துர்க்கா நின்று களமாடுவதை சிங்களப்படை அறிந்து கொண்டது.
இந்த புலிப் போர் அணி அங்கே நின்றால் தம்மால் முன்னேற முடியாது என்பதை நன்குணர்ந்த எதிரிகள் , இந்தியா நயவஞ்சக மாற்றுத் திட்டம் வகுக்க,சிங்களம் தமது படையணியை திடீரென பின் நோக்கி நகர்த்தினர்.
அடுத்து அப்பகுதிக்குள், அந்நியர்[அமெரிக்கா-சீனா]
வழங்கிய நச்சுவாயுக் குண்டுகளும், எரிதணல் பொஸ்பரஸ் குண்டுகளும் ஏவப்பட்டன .
தீய்ந்து போன தீபனின் வித்துடல் |
ஏப்ரல் முதல் நாள் முதல், நான்காம் நாள் வரை இப்பலிக்களம் அரங்கேறியது.
விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வெல்ல முடியாத சிங்களம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை ஏவி பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகிய போர்க்களத் தளபதிகளை கொன்றொழித்து விடுதலை யுத்தத்தின் இராணுவத்தலைமையை பூண்டோடு அழித்தது.
இது யுத்தத்தில் ஒரு தலைகீழான திருப்பத்தை ஏற்படுத்தியது.
`` பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இவ்வாறு ஆனந்தபுரம் முறியடிக்கப்படவில்லையெனில் யுத்தம் வேறு திசையில் சென்றிருக்குமென`` எதிரிகளின் `உளவாளி ஊடகவியலாளர்` டி.பி.எஸ்.ஜெயராஜ் சாட்சியம் பகர்ந்துள்ளார்.
கடந்த மாதத்தில் (மார்ச் 2016), ஈழப் போர்க் குற்றத்துக்கு யார் அதிக பொறுப்பு என்கிற போட்டியில் கோத்தபாயாவை எதிர்த்து சரத் பொன்சேகா சவால் விடுகின்றார்.
அதில் அவர் சொல்லுகின்றார்
``நிலத்தப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த யுத்தத்தை நான் நடத்தவில்லை,பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழித்தால் யுத்தம் நின்று விடும் என்பதே எனது போர்த்தந்திரமாக இருந்தது``. சரத் பொன்சேகாஇதுவேதான் வெற்றிக்கு வித்திட்டது எனப் பிரகடனம் செய்துள்ளான். இந்தக் கூற்று தன்னளவிலேயே ஒரு யுத்தக் குற்றமாகும்.
எனினும் ஆனந்தபுர தமிழ்ப் புலிப் போர் வீரர் படுகொலையை சிங்களம் தனித்து நின்று செய்யவில்லை.
1987 இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இராணுவ பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொண்ட பிரபாகரனையும், மாத்தையாவையும் கொன்றொழிக்குமாறு டிக்ஸிற் விடுத்த உத்தரவை, ``வெள்ளைக் கொடியோடு வருபவர்களை கொல்வது இராணுவ மரபல்ல`` எனக்கூறி தான் மறுத்துவிட்டதாக இந்திய ஜெனரல்
கல்கட் எழுதியுள்ளார்.
இதற்குப் பின்னால் ரோ அறிவுஜீவிகள் `அரபாத் இல்லாத பாலஸ்தீனமே இலங்கைக்கு தீர்வு` என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.
ஒபாமா `ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடை` என பகிரங்கமாக விடுத்த ஆணைக்கும்
விடுதலைப் புலிகள் அடிபணியவில்லை.
இதனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விரிவாதிக்க அரசும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கம் மீது தொடுத்த,கோழைத்தனமான,பேடித்தனமான தாக்குதலின் விளைவே ஆனந்தபுர விச வாயுத் தாக்குதலும், விடுதலைப்புலிகளின் அழிவும்,அதன் விளைவான முள்ளிவாய்க்கால் ஈழ தேசிய இனப் படுகொலையுமாகும்.மேலும்;
இன்றைய தமிழரின் நிர்க்கதி நிலையுமாகும்.
புதிய ஈழப் புரட்சியாளர்கள்