Tuesday, 13 December 2016

துண்டுப்பிரசுரம் சிரியா-அலெப்போ!


1) உலக மறுபங்கீட்டு சிரியப்போரில் ரசிய ஈரான் அணியைச் சார்ந்து, அமெரிக்க,ஐரோப்பிய,சவூதி அரேபிய அணியை, சிரிய அசாத் ஆட்சி தோற்கடித்துவிட்டது.

2) அலெப்போ முள்ளிவாய்க்காலுக்கு சற்றும் சளைத்ததல்ல மனித அவலம் சொல்லி மாளாது!ஈழத்தின் நேசக் கரம் அலெப்போ மக்களை நோக்கி உயர்ந்து நிற்கிறது!

3) ``யுத்தக்குற்றம்``, ``மானுட விரோதக் குற்றம்``என, தெருவோர தேனீர்க்கடையில் `இன்றைய ஸ்பெசல்` விளம்பரம் போல ஐ.நா.சபையின் சிரிய ஸ்பெசல்களும், ஊடக ஜாம்பவான்களின் விவாதங்களும் மூச்சு திணற வைக்கின்றன!காதுகள் அடைக்கப் பஞ்சின்றி வெடிக்கின்றன!

4) இரண்டு உலகப்போர்களுக்கு பிந்திய 70 ஆண்டுகளில் உலகைத் தின்று கொழுத்த ஏகபோக மூலதனத்தின் அடங்காப் பசியே, கடந்த 10 ஆண்டுகளின் உலகப் பொருளாதார நெருக்கடியின் அடிப்படைக் காரணப் பொருள் ஆகும்.

5) 2007 நெருக்கடி பொருளாதார வழியில் மீள இயலாத நெருக்கடியாகும்.அரசியல் வழி மீட்சியின் ஆயுதமே, உலக மறுபங்கீட்டுப் போர்!

6) அரபு வசந்தம் ஒரு வழி,

7) ஆட்சிக்கவிழ்ப்பு ஆயுதப் போர் மறு வழி!

8) இரண்டுமே படு தோல்வி!

9) ஆட்சிக்கவிழ்ப்பை  அந்நிய ஏற்பாட்டில் தோற்கடித்த அசாத் ஆட்சியை எதிர்த்த சிரிய மக்கள் ஜனநாயக இயக்கம் முளைக்கும், போராடும்.

10) ஈழம் அதற்கு ஆதரவுக் கரம் நீட்டும்.

Saturday, 10 December 2016

துண்டுப்பிரசுரம் சோ



* சோ ராமசுவாமி நகைச்சுவை வடிவத்தில் அரசியல் பிரச்சாரம் செய்த நடிகர்

* துக்ளக் பத்திரிகை வாயிலாக அரசியல் பிரச்சாரம் செய்தவர்.

*நாடக வாயிலாக அரசியல் பிரச்சாரம் செய்தவர்

*விமர்சனத்தோடு அனைத்து சட்ட பூர்வ பாராளுமன்றக் கட்சிகளுக்கும் ஆலோசகராக இருந்தவர்.

இது எப்படி சாத்தியமானது?

துண்டுப்பிரசுரத்தின் பதில்

சோ இந்திய விரிவாதிக்க இந்துவெறி பாசிஸ்ட்

துண்டுப் பிரசுரம் ஜெயா



* அம்மு ஜெயலலிதா, அம்மாவாகினார்!
 
* ஜெயாவின் முதல் அரசியல் பணி எம்ஜி ஆர்  ஆட்சியின்  `சத்துணவுத் திட்டமாகும்`
 
* இந்த சத்துணவுத் திட்டம் காமாரஜரிடமிருந்து எம்.ஜி.ஆர்.கடன் வாங்கியது ஆகும்.
 
*  எம் .ஜி.ஆர் திட்டத்தின் தொடர்ச்சியும் அபிவிருத்தியுமே அம்மா திட்டமாகும்.
 
ஆக மொத்தம் இது 70 ஆண்டுகள்!

துண்டுப்பிரசுரத்தின் கேள்வி;

70 ஆண்டுகள் ஒரு பெரும் சமூகத்திரளை உற்பத்தி வாழ்வில் இணைய வல்லமையற்றவர்கள் ஆக்கி இலவசத்தில் வாழ வைத்த தமிழகத்தின் பொருளாதாரக் காரணிகள் என்ன?

http://tenn1917.blogspot.co.uk/2016/12/the-myth-of-india-as-upcoming-asian.html

Tuesday, 1 November 2016

Sunday, 24 July 2016

கறுப்பு ஜூலை 2016 முழக்கங்கள்



கறுப்பு ஜூலை 2016 புரட்சி முழக்கங்கள்

* நல்லாட்சி நாடகம் அம்பலமாகிய  ரணில் மைத்திரி பாசிஸ்டுக்களின் தொடரும் ஈழதேசியப் படுகொலையை எதிர்ப்போம்!

* பொதுவாக்கெடுப்பு ,போர்க்குற்றத் தண்டனை கோரி, ஈழச்சமரசவாதிகளை தனிமைப்படுத்துவோம்!

* மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நிலைபெற்ற சமூகமாகிவிட்ட தமிழக ஈழத் தமிழர்களுக்கு, குடியுரிமை, வாழ்வுரிமை, சுதந்திரம் கோரிப் போராடுவோம், அகதி முகாம் அடிமைச் சிறை வாழ்வில் இருந்து விடுதலை அளிப்போம்!


* இன,மத சிறுபான்மை மலையக, இஸ்லாமிய தமிழர்களின், மாகாண, பிரதேச சுயாட்சிக்குக் குரல் கொடுப்போம்! கறுப்பு ஓகஸ்ட் அவலத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோருவோம்!


* இலங்கையில் `நான்கு தேசிய இனக் கோட்பாட்டை` முன்வைக்கும் குட்டி முதலாளித்துவ தாராளவாத ஏகாதிபத்திய NGO கும்பலை தோலுரிப்போம்!


* `மற்றொரு ஜுலை வேண்டாம்`மற்றும் `ஐக்கிய இலங்கை` பேசும் சிங்கள  சமூக தேசிய வெறியர்களை, அம்பலப்படுத்தி சிங்கள உழைக்கும் மக்களை பிரிவினைக்கு ஆதரவாக அணிதிரட்ட  நீண்ட கால அரசியல் பிரச்சாரம் செய்வோம்!


* அமெரிக்க, இந்திய ,உலகமய ,உலக மறுபங்கீட்டு நலன்களுக்கு சேவகம் செய்ய, ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரணில்-மைத்திரி பாசிச ஆட்சியை தூக்கியெறிய ஒன்றுபடுமாறு ஒடுக்கும் சிங்கள தேசத்துக்கு அழைப்பு விடுவோம்! 


* புலம் பெயர் நாடுகளில் தேசிய சிறுபான்மை மக்கள் ( National Minorities) திரள் ஆகிவிட்ட ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு குரல் எழுப்புவோம்!


* பயங்கரவாத அல்கெய்டா, ISIS பூச்சாண்டி காட்டி,மத வெறி,இன வெறி, தேசிய வெறியைத் தூண்டி, உலக தேசிய மக்களை பிளவுபடுத்தி, மோதவிட்டு, இரத்தக் களரிகளை உருவாக்கி ,உலகமய,உலக மறுபங்கீட்டு, போர்களை மக்கள் மீது வலிந்து திணித்து, சொல்லொணாக் கொடுமைகளையும்,துன்ப துயரங்களையும் கட்டவிழ்த்து வரும் ஒரு சிறு நிதியாதிக்கக் கும்பல்களின் சேவகர்களாக இயங்கும் அமெரிக்க ஐரோப்பிய ஆளும் கும்பல்களின் அதிகார வேரை அறுப்போம்!


*இவர்களோடு கரம் கோர்த்து ஈழப்பிரிவினைக்கு குழிபறிக்கும் புலம்பெயர் ஏகாதிபத்திய தாச தரகுப் பேரவைச் சமரசக்திகளை தனிமைப்படுத்துவோம்!


*உலக மறுபங்கீட்டு அநீதி யுத்தங்களை எதிர்ப்போம், சோசலிச,தேசிய ஜனநாயக இயக்கங்களை வளர்ப்போம், இனத்துவ, மதத்துவ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர்களை நிபந்தனையுடன் ஆதரிப்போம்!


*அணு ஆயுத ஒழிப்புக்குப் போராடுவோம்!


* அமெரிக்க போர் அவை, நேற்றோவைக் (NATO) கலைக்க குரல் எழுப்புவோம்!


* ஐரோப்பிய ஏகாதிபத்திய ஆதிக்க அமைப்பு EU வின் அங்கத்துவ நாடுகள் 28 இலும் வாழும் ஈழத்தமிழர்கள் EU வெளியேற்றத்துக்கு பொது வாக்கெடுப்பு கோருவோம், வெளியேற வாக்களிப்போம்!


* இங்கிலாந்தில் மே,அமெரிக்காவில் TRUMP-HILLARY  கூட்டுப் பாசிச தாக்குதலை எதிர்கொள்ள தயாராகுவோம்!


*இஸ்ரேலின் காஸ்மீர் பாலஸ்தீனத்தின்,இந்தியாவின் பாலஸ்தீனம் காஸ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுப்போம்!


*ஆட்சிக் கவிழ்ப்பு (Regime Change) ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா,சிரியா ஆக்கிரமிப்பையும்,UN  அடிமை அரசு உருவாக்கத்தையும் (Nation Buildings) எதிர்ப்போம்!


*உலக மறுபங்கீட்டு போர்களுக்கு ``அமைதித் திரை போடும்`` ஏகாதிபத்திய ஐ.நா(UN) வின் முகத்திரை கிழிப்போம்!


* இலங்கையிலும் ஐரோப்பாவிலும் மார்க்சிய திருத்தல் வாதத்தையும் ரொட்ஸ்கிய திருத்தல் வாதத்தையும் முறியடிப்போம்!


* மார்க்சிய லெனினிய மா ஓ  சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்,  சிவப்புச் சித்தாந்த வழி நடப்போம்! 


* உலகத் தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!


* புதிய ஈழப் புரட்சி படைக்க புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவோம்!



இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

புதிய ஈழப் புரட்சியாளர்கள் ENBs





Friday, 13 May 2016

முள்ளிவாய்க்கால் 2016



அன்பார்ந்த தமிழீழ மக்களே, மாணவர்களே, இளைஞர்களே, போராளிகளே,

மே 18 2016, முள்ளிவாய்க்கால் பிரளயத்தின் ஏழாம் ஆண்டு நினைவு தினமாகும்.மே 18 2009 இலிருந்து, ஜனவரி 2015 வரை பக்ச பாசிஸ்டுக்கள் யுத்த வெற்றியின் வெறியில் திளைத்திருந்தனர். நிராயுதபாணியான தமிழீழத்தை ஒட்டு மொத்தமாக கபளீகரம் செய்யத் திட்டமிட்டனர்.இராணுவத்தை உற்பத்தித் துறையில் ஈடுபடுத்தி ஒரு வர்க்கமாக வளர்க்க முயன்றனர்.இனவெறிப் பாசிச சிங்களத்தை, இராணுவ பாசிச சிங்களமாக மாற்ற முயன்றனர்.

சர்வதேசிய நிலைமையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ந்து செல்லும் போக்கையும், அதற்கு முண்டு கொடுக்க இந்திய விரிவாதிக்கம் வெறி பிடித்தலைவதையும் கருத்தில் கொண்டு, ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டுக் கால கட்டத்தில் சீன ஏகாதிபத்திய சார்பு வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தனர்.

இந்த உலக மறுபங்கீட்டுப் போர்க்களத்தில்,அமெரிக்க அணி சார்ந்து  நடத்தப்பட்ட, ஏகாதிபத்தியதாச புலம் பெயர் அமெரிக்க இந்திய விசுவாசிகளின் பேரவைகள் நடத்திய `போர்க்குற்ற ஐ.நா. விசாரணை இயக்கம்` படு தோல்வியில் முடிந்தது.அதுமட்டுமல்ல இந்த இயக்கம் புறவயமாக ஏகாதிபத்தியவாதிகளுக்கு சேவகம் செய்வதில் வந்து முடிந்தது.

உடனடி மீட்சி எனக் கருதி, ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாக்களித்து போர்க்குற்றவாளி மைத்திரியை ஜனாபதியாக்கியது.சிங்கள அடிமை சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவனாக்கியது. சுமந்திரனை  தமிழர் குரலாக்கி சுதந்திரப் போரின் குரல் வளையை நெரித்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்கிற ஈழ விரோத கும்பல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகர்களாகவும்,இந்திய விரிவாதிக்கத்தின் காவலர்களாகவும்,சிங்களத்தின் ஏவலர்களாகவும் அரசியல் பாத்திரம் ஆற்றுவதால் தமிழர் வாழ்வில் எதுவும் மாறவில்லை.

போதாதற்கு ஏகாதிபத்திய `சிவில் சொசைட்டிகளின்` ஊடுருவலாலும்  தமிழர் வாழ்வில் எதுவும் மாறவில்லை.

இத்தகைய சூழலில் தான் ரணில் மைத்திரி பாசிச ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க நலன் காக்கும் நல்லாட்சி தன் சிங்களக் கொடுங் கரத்தை தமிழீழம் மீது விரித்து கொலை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து வருகின்றது.

இதில் ஒரு பகுதி தான் ஈழப்புலிப் போராளிகள் மீளக் கைது செய்யப்படும் நிகழ்வு.

நல்லாட்சி அரசாங்கம் இதற்கு எந்தவித அதிகாரபூர்வ காரணங்களையும் தெரிவிக்கவில்லை.

எதிர்க்கட்சித் தலைவன் சிங்கள அடிமை சம்பந்தனும் இதற்கு பதில் சொல்லவில்லை.

கோடம்பாக்க நடிகர் பாக்கிய ராஜுக்கு தனிப்படக் கடிதமெழுதிய நாடுகடந்த உருத்திரகுமாரனின் அரசாங்கம், வேலைப் பழுவில் போலும், கேள்வி கேட்கவில்லை.

புலம் பெயர் பேரவைகள் `அதிகாரப் பரவலாக்க சமரச சமஸ்டித் திட்டத்துக்கு தமிழீழத்தை தாரை வார்க்கும் பணியில் முழு மூச்சாகவும் மும்முரமாவும் ஈடுபட்டுள்ள நிலையில்` புலி மீட்சி` இவர்களை அச்சுறுத்துவதாக உள்ளது.இதனால் இவர்களும் கண்டு கொள்ளவில்லை.

ஈழமுரசு சேரமான் உள்ளமைப்பு பிறழ்வுகளை விலாவாரியாக விளக்கிவிட்டு ``உண்மைப் போராளிகள்`` கைதுக்கான காரண காரியம் பற்றி ஒரு வரி பேசாமல் `மெளனித்து விட்டார்`!

ஆளும் வர்க்க உளவாளி ஊடகவியளாளன் DBS Jeyarajah தனது கண்டுபிடிப்பில் `புலம் பெயர் புலிகள்,புனர்வாழ்ப் புலிகளை பணம் கொடுத்து வாங்கி ,இலங்கையில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிட்டு வருவதாகவும், இதனால் தேசிய பாதுகாப்பு நலனின் பாற்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையே இப் போராளிகள் கைது என பறைசாற்றியுள்ளான்.

அபத்தம்!

1) இனத்துவப் புலிப் புரட்சி இயக்கம் மீளத்தோன்ற வேண்டுமென்ற  எண்ணம் கொண்ட ஒரு பேரவை கூட புலம் பெயர் நாடுகளில் இல்லை.

2) பணம் கொடுத்து பயங்கரவாத தாக்குதல் நடத்துவது அவர்களது அரசியல் பாதை அல்ல. இவர்கள் சட்டபூர்வ பாராளுமன்ற சமரசவாத சமஸ்டி அரசியல் தரகர்கள்.

3) அந்நியப் பணத்துக்கு கையேந்தி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சாத்தியமான ஒரு கூலிப்படையை உருவாக்கும் சூழல் ஈழத்தில் தற்போது இல்லை, போராளிகளும் அதற்கு தயாராகவும் இல்லை.

ஆக இந்த திடீர் போராளிகள் மீள் கைதுகளுக்கு காரணம் என்ன?
எல்லோரும் மூடி மறைக்கும் அந்த மர்மம் என்ன?



70 களின் பிற்பகுதியில் இலங்கையை உலகமயமாக்கும் ஜே.ஆரின் சிங்கப்பூர் திட்டத்தின் மீது விழுந்த பேரிடி தான் `புலிப் பயங்கரவாதம்`!

இதனால் தான் 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் அவர்கள் முதலில் அறிவித்த பிரகடனம் REGAINING SRI LANKA என்கின்ற அந்நிய அடகுத் திட்டமாகும்.இலங்கையை `மீளப்பெறுவதற்கு` எப்போது இழந்தார்கள்? எதனால் இழந்தார்கள்?

உலகமயத்துக்கு திட்டமிட்ட போது,புலிகளின் விடுதலைப் போராட்டத்தால் இழந்தார்கள்.

அமைதி,சமாதானம்,நல்லிணக்கம்,
நல்லாட்சி,என்கிற பெயர்களில் எல்லாம் தற்போது நடந்தேறி வருவது, இழந்த இலங்கையை உலகமயத்துக்கு மீளக்கையளிப்பதாகும்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் இதற்கு இருந்த தங்கு தடைகள் முற்றாக நீக்கப்பட்டன.

பக்ச பாசிஸ்டுக்கள் ஆரம்பித்ததை, ரணில் மைத்திரி பாசிஸ்டுக்கள் தொடருகின்றார்கள்.TNA சமரசவாதிகளும், சிவில் சொசைட்டி ஏகாதிபத்திய ஏஜெண்டுகளும் தொண்டூழியம் புரிகின்றார்கள்.


இலங்கையில் உலகமயம் அரசியல் வரலாற்றுப் போக்கு

இலங்கையில் உலகமய பொருளாதாரக் கொள்கை அமூலாக்கப்பட்ட வரலாற்றை ஆறு கட்டங்களாக ஈழ அரசியல் நோக்கில் வகைப்படுத்தலாம். அவையாவன;


1) 1948-1977 2) 1977- 1983 3)1983- 2002 4) 2002- 2009 5) 2009 -2015  6) 2015.......

1) 1948-1977

இந்த முப்பதாண்டுக்காலம் போலிச் சுதந்திரத்தின், நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சிக் காலமாகும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுதந்திர விவசாய இயக்கத்தை நசுக்கி,  உள்நாட்டின் பயிற்றுவித்த ஏஜென்டுகளின்  ஏகாதிபத்திய அரசியல் அதிகாரம் இலங்கையில்  நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சியை, இரு பிரிவாக நிறைவேற்றிய காலகட்டமாகும்.

இந்த இரு வர்க்கப்பிரிவுகள் இலங்கையில் இவ்வாறு அமைந்திருந்தன:

1) நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு இலங்கையை முற்றாக -படிப்படியாக- அடிமைப் படுத்தி சேவகம் செய்யும் பாதையை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்தது.

2) நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில் உள்ளூர் சிறு தொழில் துறைக்கு சலுகை அளிக்கும் சார்புப் பாதையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது.

இக்கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் தான் இலங்கையின் முதல் முப்பது ஆண்டு வாழ்வு நடந்தேறியது.

இந்தக்கால கட்டத்தில் உலக வங்கி  ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவித்து வந்தது. இலங்கையின் இரு பெரும் ஆளும் வர்க்கப் பிரிவுகளின் கட்சிகளும் கடைப் பிடித்த  நிதி மூலதனக் காலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக 1970 களின் உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியைச் சார்ந்து உள் நாட்டு நெருக்கடி வெடித்தது. ரோகணாவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதப் போராட்டம்,1972 பாசிச அரசியல் யாப்பு, ஈழ விடுதலை இயக்கத்தின் உதயம் என்பன இக்காலகட்டத்தின் இயற்கைப் பிரசவமாகின.இறுதியில் இது ஈழ சமரசவாதிகளை வட்டுக்கோட்டைத் தூக்குமேடையில் நிறுத்தியது. துரதிஸ்டவசமாக இந்த தூக்குமேடையோ பஞ்சு மெத்தையாக அமையவில்லை! 1977 பொதுத் தேர்தலில் தமிழீழ மக்கள் ஈழப்பிரிவினையை ஏற்று பொது வாக்களித்தனர். இதற்காக 1977 கலவரத்தால் பழி வாங்கப்பட்டனர்.இந்த அநீதிக்கு பழி வாங்க `ஆயுதப் போராட்டம்` என்கிற எண்ணம் கருக்கொண்டது. 1977 பொதுத் தேர்தலில் மலரும் முள்ளும் ஒரு சேர  முகிழ்த்தன. மலர், ஈழப்பிரிவினைக்கான வெகுஜன வாக்கெடுப்பாக அமைந்தது.முள், ஜே.ஆர்.ஆட்சி தனியார்மய தாராளமயக் கொள்கையை `இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன்` `நீதியான சமுதாயம் படைப்பேன், என முழங்கி அமுலாக்கியது.இந்த முள்ளுக்கும் மலருக்கும் இடையான போராட்டம் தான் எஞ்சிய இலங்கை வரலாறாகும்.இன்றுவரை!

2)  1977- 1983

நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு  சேவகம் செய்ய சமஸ்டிக்கட்சி ஈழத்தமிழரின் பொது வாக்கெடுப்புத் தீர்ப்பை பாடையில் ஏற்றி 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற போலி ஏமாற்றுத்தீர்வை ஏற்றுக்கொண்டது.தேர்தலில் பங்கேற்றது.தேர்தல் கூட்ட மேடை மீது கைக்குண்டை வீசி எறிந்து விட்டு தலைமறைவானோர் ஒலித்த குரல்
 `` புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்``.தமிழீழத்தாயகத்தை சிங்கள
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க திண்ணை வேலியில் நடத்தப்பட்ட கண்ணி வெடித்தாக்குதலும் 13 சிங்களச் சிப்பாய்களின் மரணம், காத்திருந்த சிங்களத்துக்கு நல்ல காரணமாய் அமைந்து 1983இனப்படுகொலை வெடித்தது.ஜே ஆரின் சிங்கப்பூர் கனவு தவிடு பொடியாகியது. விடுதலைப்புலிகளை விசர் நாய்கள் என்று அவர் காரணம் இல்லாமல் குரைக்க வில்லை.

உள்நாட்டு யுத்தம் வெடித்தது.ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு இலங்கை அரசை தனது மேலாதிக்கத்துக்கு பணிய வைக்க நிர்ப்பந்தித்தது.

3) 1983 -2002

உள்நாட்டு யுத்த காலம். வடக்கு கிழக்கு ஈழத்தில் நிதி மூலதனக் காலனியாதிக்கம் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.சிங்களத்திலும் அந்நிய மூலதன முதலீடு பாதுகாப்பற்றிருந்தது.ஆனையிறவுப் படைத்தளத்
தாக்குதல் (2000 ஆம் ஆண்டு மார்ச் 26), இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப்புலிகளின் மேலோங்கிய நிலையை நிரூபித்தது.இதற்கு சிகரமாகவும்,வரலாற்று திருப்பு முனையாகவும் அமைந்தது
விடுதலைப்புலிகளின் விமானப் படையின் கட்டு நாயக்கா விமானப் படைத்தள தாக்குதல் (ஜூலை 24, 2001).ஆகும்.இப்போது தான் இலங்கைப் பொருளாதாரம் முதல் தடவையாக எதிர்க்கணிய வீழ்ச்சி கண்டு பொறிந்து விழுந்தது. அரசு நிலை குலைந்திருந்தது. மிக மிக துரதிஸ்டவசமாக இதுவரைக்கும் வந்த புலிகள் இதன் பயன்களை எட்டாதவாறு ஏகாதிபத்திய பொறிக்குள் வீழ்த்தப்பட்டனர் அல்லது வீழ்ந்தனர்.2002ஆம் ஆண்டு மாசி மாதம் நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது.இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால் ஏகாதிபத்திய சதிவலை வீசப்பட்டது.

4) 2002-2009

இந்த பேச்சுவார்த்தையை சூசக மொழியில் PEACE PROCESS என அழைத்தனர்.இதன் பொருள் அது ஒரு தொடர் நிகழ்வு என்பதாகும்.இந்த தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வு, Regainning Sri Lanka.`ஈழ விடுதலைப் போரால் இழந்த` நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை, 'சமாதான காலத்தில்` எவ்வாறு மீள நிர்மாணிக்க வேண்டும் என உலக வங்கி வகுத்தளித்த திட்டமே Regainning Sri Lanka ஆகும்.இது சம்பிரதாய பூர்வமாக ரணில் அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் உலக வங்கியால் `பரிந்துரைக்கப்பட்டது`!

இந்த சமாதானப் பேச்சுவார்த்தை உருவாக்கிய யுத்த நிறுத்தத்தை சிங்களம், அடுத்தகட்ட இனப்படுகொலைப் போருக்கு தயாராகிவிட்ட நிலையில் தன்னிச்சையாக, போர் நிறுத்த உடன்பாட்டை மீறி போர் தொடுத்தது.நோர்வே சிங்களத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தது! இந்த சதிச் சமாதானம் ஆனந்தபுர போர்க்களத்தில் நடத்தப்பட்ட சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறிய விசவாயுத் தாக்குதலில் கோழைத்தனமாக விடுதலைப் புலிப் போர்த் தளபதிகளை கொன்றொழித்தது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.முப்பது ஆண்டுகால முதலாவது `ஈழ யுத்தம் மெளனித்தது`.

5) 2009-2015

யுத்தத்தில் விசவாயுத்தாக்குதல், இனப்படுகொலை, ஆகிய ஆயுதங்களால் வெற்றிவாகை சூடிய பக்ச பாசிசம்,  Regainning Sri Lanka திட்டத்தை மகிந்த சிந்தனை என்கிற மாறு வேடத்தில் வெளியிட்டது. யுத்த வெற்றியை மூலதனமாக்கி ,`இராணுவ சர்வாதிகார குடும்ப ஆட்சியை கட்டியெழுப்ப முயன்றது. இதற்கு சீனாவோடு அணிசேர்ந்தது.

ஐ நா வின் பாசையில் `சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாதை`யில் பயணிக்க எத்தனித்தது.

இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் பக்ச பாசிசம் ஜனவரி 8 2015 இல் அரசியல் அதிகாரத்தை இழந்தது.

6) 2015............

ரணில் மைத்திரிப் பாசிசம் அந்நிய ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

புலிகள் இல்லாத இலங்கை , தங்கு தடையற்ற உலகமயத்துக்கு திறந்து விடப்பட்டது.

அந்தத் திட்டம் வருமாறு:

1)  Naval & Maritime  Hub
2) Aviation Hub
3) Commercial  Hub
4) Energy Hub
5) Knowldge Hub
6) Tourism Hub

வேறு விதமாகச் சொல்வதானால் முழு நாட்டையும் அதன் வளங்களையும் உலகமயக் கொத்தளங்களாகக் கூறுபோட்டு அந்நிய நிதிமூலதன காலனியாதிக்கத்துக்கு தாரைவார்க்க தயாராகிவிட்டது. இது மகிந்த சிந்தனை என்றே இன்றுவரையும்(2016) அழைக்கப்பட்டுவருகின்றது!.இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் உலகமய வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையில் அமைந்திருக்கும் பூகோள ரீதியான வாய்ப்பை இதற்கான மூலதனமாக்கிக்கொள்கின்றது.உண்மையில் இதில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட கடல் பரப்பு ஈழத்துக்குச் சொந்தமானதாகும்.பேடித்தனமாக ஆனந்தபுர விசவாயுத் தாக்குதலில் புலிகள் தலைமையை அழித்து, இனப்படுகொலையால் ஈழ தேசத்தைக் கபளீகரம் செய்த சிங்களம், இப்போது அதை அந்நியனுக்கு ஏலம் போட்டு விற்றுவருகின்றது.பக்ச பாசிசம் சீனாவோடு இணைந்து செய்த அதே கைங்கரியத்தை ரணில் மைத்திரி பாசிசம் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க முகாமின் அடிமைக் கூட்டாளியாக செய்ய முயலுகின்றது.


மேலே காணும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ அந்நியக்கடன் வரைபு (அரசியல் குறிப்புகள் ENB இட்டவை),2002 பேச்சுவார்த்தையில் இருந்து அந்நியக் கடன் அதிகரிப்பைக்காட்டுகின்றது.



மேலே காணும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ அந்நியக்கடன் வரைபு (அரசியல் குறிப்புகள் ENB இட்டவை),2009 முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் அந்நியக் கடனின் சடுதியான அதிகரிப்பைக் காட்டுகின்றது.மேலும் 2009 இல் 1500000 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய்களாக இருந்த அந்நியக்கடன் 2016 இல் 3000000  மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாய்களாக-இரு மடங்காக- அதிகரித்துள்ளமையைக் காட்டுகின்றது.போருக்குப் பிந்திய காலத்தில் அந்நியக் கடன் இருமடங்காக அதிகரித்ததை எவ்வாறு விளங்கிக் கொள்வது? அமைதி, சமாதானம், நல்லிணக்கம், நல்லாட்சி,என்கிற பெயர்களில் எல்லாம் தற்போது நடந்தேறி வருவது, இழந்த இலங்கையை உலகமயத்துக்கு மீளக் கையளிப்பதாகும்.ஒட்டு மொத்த நாட்டையும் அந்நிய நிதி மூலதனத்துக்கும்,உலக மறுபங்கீட்டுக்கும் அடகு வைப்பதாகும்.


மேலே காணும் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரபூர்வ அந்நியக்கடன் வரைபு,அந்நியக்கடன் மொத்த தேசிய உற்பத்தியில்
வகிக்கும் விகிதாசாரத்தை அளவிட்டுள்ளது.இவ்வரைபின் படி இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியில் அந்நியக்கடன்(வட்டி உட்பட) 75% இலிருந்து மேலும் அதிகரித்துச் செல்லும் போக்கைக் கொண்டிருக்கின்றது.

அதாவது சாதாரண வாழ்வில் ஒரு குடியானவன்,ஒரு ஓட்டோக்காரன்,ஒரு ரிக்ஸாக் காரன் தனது 100 ரூபா வருமானத்தில் 75 ரூபாவை கந்து வட்டிக் கடனுக்கு கொடுத்துவிட்டு,எவ்வாறு வெறும் 25 ரூபாவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளானோ,அதே நிலமையில் தான் இலங்கை நாடே இருக்கின்றது.

கிரேக்கம் எவ்வாறு ஐரோப்பிய ஜூனியனால் மென்று, தின்று, விழுங்கப்பட்டதோ,இதுவே தான் IMF கடனால் இலங்கைக்கு நிகழப்போவதும்!

இவ்வாறு அரைக்காலனிய நாடுகளின் ஏகாதிபத்திய தாச ஆளும் வர்க்கங்கள் எந்தளவுக்கு எந்தளவு அதிக சந்தையை அபகரித்து தாரை வார்க்கின்றார்களோ,எந்தளவுக்கு எந்தளவு சுதந்திர தேசங்களை,தேசிய இயக்கங்களைகொன்றொழித்து இரத்தக் கறை படிகிறார்களோ,அந்தளவுக்கு அந்தளவு ஏகாதிபத்திய வெகுமதி பெறுகின்றார்கள்.

தென்னாசியாவிலும்,மத்திய ஆசியப்பகுதிகளிலும் அமெரிக்க நலன்களைப் பாதுகாக்கும் அடிமைச் சேவகம் தான் இந்திய விரிவாதிக்க அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான யுத்ததந்திர கூடணியாகும்.

ஈழத்தை சிங்களம் ஆக்கிரமித்திருப்பதும் முழு இலங்கை நாட்டையும் உலகமயத்துக்கும், உலக மறுபங்கீட்டுக்கும் பாதுகாப்புத் தளமாக மாற்றுவதற்கேயாகும்.

உலகமயத்துக்கும்,உலக மறுபங்கீட்டுக்கும்,நாடு தாரைவார்க்கப்படுவதால் எழும் சமூகக் கொந்தழிப்புகளைத் திசை திருப்பும் ரணில் மைத்திரி பாசிசத்தின் மோசடிதான், இப்புலிப்பூச்சாண்டி.

வழக்கம் போல இரண்டு தரகுக் கட்சிகளும், தமிழ் மற்றும் இடது சாரிக் கும்பல்களும். பக்ச பாசிஸ்டுக்களும்,சிவில் சொசைட்டிகளும்,ஊடகப் பயங்கரவாதிகளும், இந்த உண்மையை மூடி மறைக்கின்றனர்.

``பிரபாகரன் வருவார்``,``பொட்டம்மான் இருக்கின்றார்`` ,``தற்கொலை அங்கி கண்டு பிடிப்பு``,``புலம் பெயர் புலிகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு திட்டமிடுகின்றனர்`` என்றவாறு பொய்யான போலியான பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, புலிப்பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.

இதை நியாயப்படுத்தும் பொருட்டு ``புனர் வாழ்வு`` பெற்று விடுவிக்கப்பட்டு பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் போராளிகளை மீண்டும் கைது செய்து வருகின்றது சிங்களம்.அரசியல் சுதந்திரத்தை அச்சுறுத்துகின்றது.அடக்குமுறைகளைக் கட்டவிழ்க்கின்றது. பாதுகாப்பற்று பய பீதியில் வாழ நிர்ப்பந்திக்கின்றது.

ஆயுதங்கள் அற்று,அமைப்பு வாழ்க்கையற்று, பொதுவான அரசியல் குறிக்கோள் அற்று, உதிரிகளாக தேசிய உணர்வோடு வாழவும்,தமது முப்பது ஆண்டுகால போர்வாழ்வை,பதியவும்,பகிரவும்,படைக்கவும் உள்ள உரிமையையும் இந்தப் போலி நல்லாட்சி மறுத்துவருகின்றது.

ஏழு ஆண்டுகள் ஆகியும் இன்னமும் விடுதலைப் போர்க் கைதிகளை விடுவிக்கவில்லை.அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மீளக் கையளிக்கப்படவில்லை.இன ஒடுக்குமுறை யுத்தத்தின் வடுக்களில் இருந்து ஈழ தேசம் மீளவில்லை.வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை.அபிவிருத்தி திட்டங்களும், மாகாண எல்லைத் திருத்தங்களும், அரசியல் அமைப்புத் திருத்தமும் ஈழத்தை துண்டாடுவதையே குறிகோளாகக் கொண்டுள்ளன.

சிங்களப் பேரினவாதமும், பெளத்த மதவாதமும், இராணுவ ஆக்கிரமிப்பும்,கலாச்சார ஆதிக்கமும்,உலகமயமும்,உலக மறுபங்கீடும் என எண்ணற்ற அந்நிய தளைகளில் சிங்களம் ஈழத்தைக் கட்டிப்போட்டு அடிமைத் தேசமாக ஆக்கியுள்ளது.

``பிளவு படாத  இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு`` என்கிற முழக்கம் ஈழ தேசத்தை அமெரிக்க,இந்திய,சிங்கள அல்லது ரசிய சீன சிங்கள ஏகாதிபத்திய முகாம்களில் ஏதோ ஒன்றின் அடிமைத் தேசமாக மாற்றும் முழக்கமே ஆகும்.தற்போது   ஈழ தேசத்தை அமெரிக்க, இந்திய,சிங்கள முகாமுக்கு அடிமைப்படுத்தும் முழக்கமாகவும், சீன திருத்தல்வாதிகளால் ரசிய சீன சிங்கள ஏகாதிபத்திய முகாமுக்கு அடகு வைக்கும் முழக்கமாகவும் உள்ளது.

முள்ளிவாய்க்காலுக்கு பின்னால் இனத்துவ விடுதலைப் புரட்சி அரசியல் மெளனித்து, புதிய ஜனநாயக ஈழப் புரட்சி அரசியல் எழுந்து கொண்டிருக்கும் இடை வெளியில், சமரச சமஸ்டி எதிர்ப்புரட்சி அரசியல் ஓங்கி நிற்பதே அனைத்து தமிழர் அவலங்களுக்கும் பிரதான காரணமாகும். மேலும் இது இலங்கையில் மட்டும் இடம் பெறவில்லை,தமிழகத்தில் நிகழ்ந்தன,புலம் பெயர் நாடுகளிலும் நிகழ்ந்தன.திரைமறைவில் ஒன்றிணைந்தே நிகழ்த்தப்பட்டன.

ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்கால் ஏழாம் ஆண்டில் அநுபவிக்கும் இன்னல்கள் இந்தச் சூழலில் தான் நிகழ்ந்தேறுகின்றன..

இந்த எதிர்ப்புரட்சி சூழலை மாற்றியமைத்து, புதிய ஈழப்புரட்சிச் சூழலை உருவாக்க பின்வரும் முழக்கங்களின் மீது அணிதிரளுமாறு அறைகூவி அழைக்கின்றோம்.

* நல்லாட்சி நாடகமாடும் ரணில் மைத்திரி பாசிசமே, இலங்கைத் திரு நாட்டை உலகமய , உலக மறுபங்கீட்டு போர்க்களத்திற்கு தீனியாக்கும் திட்டத்தைக் கைவிடு!

* இலங்கையை நல்லிணக்க நாடாக மாற்ற ஈழத்தமிழ்த் தேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரி!

* சிங்கள பெளத்த இராணுவ மேலாதிக்கத்தை ஈழம் மீது திணிக்காதே!

* ஈழ தேசிய பிரிவினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்து!

* அபகரிக்கப்பட்ட ஈழ விவசாய நிலங்களை ஏழை விவசாயிகளிடம் உடனே ஒப்படை!

* போராளிகள் மீள் கைதை உடனே நிறுத்து;அவர்கள் பொது வாழ்வுக்கு அச்சுறுத்தல் விடாதே!

* விடுதலைப் போர்க்கைதிகளை உடனே விடுதலை செய்!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்


Monday, 4 April 2016

ஆனந்தபுர வழக்கு




முதல் ஈழ  யுத்தம்[1979-1983-2009] , 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. 

ஆனந்தபுரத்தில் பிரபாகரனும் தளபதிகளும் ஒன்று கூடி நிற்கின்றனர் என அறிந்த சிங்களப்படை அச்சூழலை சுற்றி வளைத்து பெட்டியடித்தனர். ஆயிரக்கணக்கான சிங்களப் படையினர் களமிறக்கப்பட்டனர்.

தம்மைச் சுற்றி பெட்டியடிக்கப்பட்டதை உணர்ந்த புலிகள் அதனை உடைத்து புதுமாத்தளன் பகுதிநோக்கி நகர முயன்றனர். இதற்காக சுமார் ஆயிரம் விடுதலைப் புலிகள் நாலாயிரத்துக்கு மேற்பட்ட சிங்களப்படையை எதிர்த்து கடும் சமரில் ஈடுபட்டனர்.  சிங்களப் படை நூற்றுக்கணக்கில் பலியாகியது.

சிறிய நீதிப்படையை, பெரிய அநீதிப்படையால் வெல்ல முடியாத நிலை தோன்றியது. 
களத்தில் பிரிகேடியர் தீபன், கேர்ணல் கடாபி, கேர்ணல் விதுசா, கேர்ணல் துர்க்கா நின்று களமாடுவதை சிங்களப்படை அறிந்து கொண்டது.
இந்த புலிப் போர் அணி அங்கே நின்றால் தம்மால் முன்னேற முடியாது என்பதை நன்குணர்ந்த எதிரிகள் , இந்தியா நயவஞ்சக மாற்றுத் திட்டம் வகுக்க,சிங்களம் தமது படையணியை  திடீரென  பின் நோக்கி நகர்த்தினர். 

அடுத்து அப்பகுதிக்குள், அந்நியர்[அமெரிக்கா-சீனா]
வழங்கிய நச்சுவாயுக் குண்டுகளும், எரிதணல் பொஸ்பரஸ் குண்டுகளும் ஏவப்பட்டன . 


தீய்ந்து போன தீபனின் வித்துடல்

ஏப்ரல் முதல் நாள் முதல், நான்காம் நாள் வரை இப்பலிக்களம் அரங்கேறியது.
விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வெல்ல முடியாத சிங்களம், கோழைத்தனமாகவும் பேடித்தனமாகவும் நச்சுக் குண்டுகளை  ஏவி பிரிகேடியர் தீபன், கேணல் கடாபி, கேணல் விதுசா, கேணல் துர்க்கா ஆகிய போர்க்களத் தளபதிகளை கொன்றொழித்து விடுதலை யுத்தத்தின் இராணுவத்தலைமையை பூண்டோடு அழித்தது. 

இது யுத்தத்தில் ஒரு தலைகீழான திருப்பத்தை ஏற்படுத்தியது. 

`` பொஸ்பரஸ் குண்டுகள் வீசப்பட்டதை மட்டும் ஏற்றுக் கொண்டு, இவ்வாறு ஆனந்தபுரம் முறியடிக்கப்படவில்லையெனில் யுத்தம் வேறு திசையில் சென்றிருக்குமென`` எதிரிகளின்  `உளவாளி ஊடகவியலாளர்` டி.பி.எஸ்.ஜெயராஜ் சாட்சியம் பகர்ந்துள்ளார். 

கடந்த மாதத்தில் (மார்ச் 2016),  ஈழப் போர்க் குற்றத்துக்கு யார் அதிக பொறுப்பு என்கிற போட்டியில் கோத்தபாயாவை எதிர்த்து சரத் பொன்சேகா சவால் விடுகின்றார்.

அதில் அவர் சொல்லுகின்றார் 
``நிலத்தப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த யுத்தத்தை நான் நடத்தவில்லை,பயங்கரவாதிகளை பூண்டோடு ஒழித்தால் யுத்தம் நின்று விடும் என்பதே எனது போர்த்தந்திரமாக இருந்தது``.  சரத் பொன்சேகா
இதுவேதான் வெற்றிக்கு வித்திட்டது எனப் பிரகடனம் செய்துள்ளான். இந்தக் கூற்று தன்னளவிலேயே ஒரு யுத்தக் குற்றமாகும்.

எனினும் ஆனந்தபுர தமிழ்ப் புலிப் போர் வீரர் படுகொலையை சிங்களம் தனித்து நின்று செய்யவில்லை.

1987 இந்திய ஆக்கிரமிப்பு காலத்தில் இராணுவ பேச்சுவார்த்தை ஒன்றில் கலந்து கொண்ட பிரபாகரனையும், மாத்தையாவையும் கொன்றொழிக்குமாறு டிக்ஸிற் விடுத்த உத்தரவை, ``வெள்ளைக் கொடியோடு வருபவர்களை கொல்வது இராணுவ மரபல்ல`` எனக்கூறி தான் மறுத்துவிட்டதாக இந்திய ஜெனரல்
கல்கட் எழுதியுள்ளார்.

இதற்குப் பின்னால் ரோ அறிவுஜீவிகள் `அரபாத் இல்லாத பாலஸ்தீனமே இலங்கைக்கு தீர்வு` என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

ஒபாமா `ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடை` என பகிரங்கமாக விடுத்த ஆணைக்கும்
விடுதலைப் புலிகள் அடிபணியவில்லை.

இதனால், அமெரிக்க ஏகாதிபத்தியமும், இந்திய விரிவாதிக்க அரசும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழ தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கம் மீது தொடுத்த,கோழைத்தனமான,பேடித்தனமான தாக்குதலின் விளைவே ஆனந்தபுர விச வாயுத் தாக்குதலும், விடுதலைப்புலிகளின் அழிவும்,அதன் விளைவான முள்ளிவாய்க்கால் ஈழ தேசிய இனப் படுகொலையுமாகும்.மேலும்;

 இன்றைய தமிழரின் நிர்க்கதி நிலையுமாகும்.




புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Monday, 8 February 2016

போலிச்சுதந்திரம் பாகம் 2- இலங்கையில் உலகமயம்

ENB புலிக் கடற்படை
இலங்கையில் உலகமயம்
அரசியல் வரலாற்றுப் போக்கு

இலங்கையில் உலகமய பொருளாதாரக் கொள்கை அமூலாக்கப்பட்ட வரலாற்றை ஆறு கட்டங்களாக ஈழ அரசியல் நோக்கில் வகைப்படுத்தலாம். அவையாவன;


1) 1948-1977 2) 1977- 1983 3)1983- 2002 4) 2002- 2009 
5) 2009 -2015  6) 2015.......

1) 1948-1977

இந்த முப்பதாண்டுக்காலம் போலிச் சுதந்திரத்தின், நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சிக் காலமாகும்.ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசிய சுதந்திர விவசாய இயக்கத்தை நசுக்கி,  உள்நாட்டின் பயிற்றுவித்த ஏஜென்டுகளின்  ஏகாதிபத்திய அரசியல் அதிகாரம் இலங்கையில்  நிதிமூலதனக் காலனியாதிக்க ஆட்சியை, இரு பிரிவாக நிறைவேற்றிய காலகட்டமாகும்.

இந்த இரு வர்க்கப்பிரிவுகள் இலங்கையில் இவ்வாறு அமைந்திருந்தன:

1) நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு இலங்கையை முற்றாக -படிப்படியாக- அடிமைப் படுத்தி சேவகம் செய்யும் பாதையை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்தது.

2) நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில் உள்ளூர் சிறு தொழில் துறைக்கு சலுகை அளிக்கும் சார்புப் பாதையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்தது.

இக்கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் தான் இலங்கையின் முதல் முப்பது ஆண்டு வாழ்வு நடந்தேறியது.

இந்தக்கால கட்டத்தில் உலக வங்கி  ஐக்கிய தேசியக் கட்சியை ஊக்குவித்து வந்தது. இலங்கையின் இரு பெரும் ஆளும் வர்க்கப் பிரிவுகளின் கட்சிகளும் கடைப் பிடித்த  நிதி மூலதனக் காலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக 1970 களின் உலக ஏகபோக முதலாளித்துவ பொது நெருக்கடியைச் சார்ந்து உள் நாட்டு நெருக்கடி வெடித்தது. ரோகணாவின் ஆட்சிக் கவிழ்ப்பு ஆயுதப் போராட்டம்,1972 பாசிச அரசியல் யாப்பு, ஈழ விடுதலை இயக்கத்தின் உதயம் என்பன இக்காலகட்டத்தின் இயற்கைப் பிரசவமாகின.இறுதியில் இது ஈழ சமரசவாதிகளை வட்டுக்கோட்டைத் தூக்குமேடையில் நிறுத்தியது. துரதிஸ்டவசமாக இந்த தூக்குமேடையோ பஞ்சு மெத்தையாக அமையவில்லை! 1977 பொதுத் தேர்தலில் தமிழீழ மக்கள் ஈழப்பிரிவினையை ஏற்று பொது வாக்களித்தனர். இதற்காக 1977 கலவரத்தால் பழி வாங்கப்பட்டனர்.இந்த அநீதிக்கு பழி வாங்க `ஆயுதப் போராட்டம்` என்கிற எண்ணம் கருக்கொண்டது. 1977 பொதுத் தேர்தலில் மலரும் முள்ளும் ஒரு சேர  முகிழ்த்தன. மலர், ஈழப்பிரிவினைக்கான வெகுஜன வாக்கெடுப்பாக அமைந்தது.முள், ஜே.ஆர்.ஆட்சி தனியார்மய தாராளமயக் கொள்கையை `இலங்கையை சிங்கப்பூர் ஆக்குவேன்` `நீதியான சமுதாயம் படைப்பேன், என முழங்கி அமுலாக்கியது.இந்த முள்ளுக்கும் மலருக்கும் இடையான போராட்டம் தான் எஞ்சிய இலங்கை வரலாறாகும்.இன்றுவரை!

2)  1977- 1983

நிதி மூலதனக் காலனியாதிக்கத்துக்கு  சேவகம் செய்ய சமஸ்டிக்கட்சி ஈழத்தமிழரின் பொது வாக்கெடுப்புத் தீர்ப்பை பாடையில் ஏற்றி 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை என்கிற போலி ஏமாற்றுத்தீர்வை ஏற்றுக்கொண்டது.தேர்தலில் பங்கேற்றது.தேர்தல் கூட்ட மேடை மீது கைக்குண்டை வீசி எறிந்து விட்டு தலைமறைவானோர் ஒலித்த குரல்
 `` புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்``.தமிழீழத்தாயகத்தை சிங்கள
இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க திண்ணை வேலியில் நடத்தப்பட்ட கண்ணி வெடித்தாக்குதலும் 13 சிங்களச் சிப்பாய்களின் மரணம், காத்திருந்த சிங்களத்துக்கு நல்ல காரணமாய் அமைந்து 1983இனப்படுகொலை வெடித்தது.ஜே ஆரின் சிங்கப்பூர் கனவு தவிடு பொடியாகியது. விடுதலைப்புலிகளை விசர் நாய்கள் என்று அவர் காரணம் இல்லாமல் குரைக்க வில்லை.

உள்நாட்டு யுத்தம் வெடித்தது.ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு இலங்கை அரசை தனது மேலாதிக்கத்துக்கு பணிய வைக்க நிர்ப்பந்தித்தது.

3) 1983 -2002

உள்நாட்டு யுத்த காலம். வடக்கு கிழக்கு ஈழத்தில் நிதி மூலதனக் காலனியாதிக்கம் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.சிங்களத்திலும் அந்நிய மூலதன முதலீடு பாதுகாப்பற்றிருந்தது.ஆனையிறவுப் படைத்தளத்
தாக்குதல் (2000 ஆம் ஆண்டு மார்ச் 26), இராணுவ பலச் சமநிலையில் விடுதலைப்புலிகளின் மேலோங்கிய நிலையை நிரூபித்தது.இதற்கு சிகரமாகவும்,வரலாற்று திருப்பு முனையாகவும் அமைந்தது
விடுதலைப்புலிகளின் விமானப் படையின் கட்டு நாயக்கா விமானப் படைத்தள தாக்குதல் (ஜூலை 24, 2001).ஆகும்.இப்போது தான் இலங்கைப் பொருளாதாரம் முதல் தடவையாக எதிர்க்கணிய வீழ்ச்சி கண்டு
பொறிந்து விழுந்தது.அரசு நிலை குலைந்திருந்தது.மிக மிக துரதிஸ்டவசமாக இதுவரைக்கும் வந்த புலிகள் இதன் பயன்களை எட்டாதவாறு ஏகாதிபத்திய பொறிக்குள் வீழ்த்தப்பட்டனர் அல்லது வீழ்ந்தனர்.2002ஆம் ஆண்டு மாசி மாதம் நோர்வே பேச்சுவார்த்தை ஆரம்பமானது.இன்னும் பொருத்தமாகச் சொல்வதானால் ஏகாதிபத்திய சதிவலை வீசப்பட்டது.

4) 2002-2009

இந்த பேச்சுவார்த்தையை சூசக மொழியில் PEACE PROCESS என அழைத்தனர்.இதன் பொருள் அது ஒரு தொடர் நிகழ்வு என்பதாகும்.இந்த தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வு, Regainning Sri Lanka.`ஈழ விடுதலைப்
போரால் இழந்த` நிதி மூலதனக் காலனியாதிக்கத்தை, 'சமாதான காலத்தில்` எவ்வாறு மீள நிர்மாணிக்க வேண்டும் என உலக வங்கி வகுத்தளித்த திட்டமே Regainning Sri Lanka ஆகும்.இது சம்பிரதாய பூர்வமாக ரணில் அரசாங்கத்தினதும், விடுதலைப் புலிகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் உலக வங்கியால் `பரிந்துரைக்கப்பட்டது`!

இந்த சமாதானப் பேச்சுவார்த்தை உருவாக்கிய யுத்த நிறுத்தத்தை சிங்களம்,
அடுத்தகட்ட இனப்படுகொலைப் போருக்கு தயாராகிவிட்ட நிலையில் தன்னிச்சையாக, போர் நிறுத்த உடன்பாட்டை மீறி போர் தொடுத்தது.நோர்வே சிங்களத்துக்கு சாமரம் வீசிக் கொண்டிருந்தது! இந்த சதிச் சமாதானம் ஆனந்தபுர போர்க்களத்தில் நடத்தப்பட்ட சர்வதேச யுத்த விதிமுறைகளை மீறிய விசவாயுத் தாக்குதலில் கோழைத்தனமாக விடுதலைப் புலிப் போர்த் தளபதிகளை கொன்றொழித்தது. முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலையை நடத்தி முடித்தது.முப்பது ஆண்டுகால முதலாவது `ஈழ யுத்தம் மெளனித்தது`.

5) 2009-2015

யுத்தத்தில் விசவாயுத்தாக்குதல், இனப்படுகொலை, ஆகிய ஆயுதங்களால் வெற்றிவாகை சூடிய பக்ச பாசிசம்,  Regainning Sri Lanka திட்டத்தை மகிந்த சிந்தனை என்கிற மாறு வேடத்தில் வெளியிட்டது. யுத்த வெற்றியை மூலதனமாக்கி ,`இராணுவ சர்வாதிகார குடும்ப ஆட்சியை கட்டியெழுப்ப முயன்றது. இதற்கு சீனாவோடு அணிசேர்ந்தது.

ஐ நா வின் பாசையில் `சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளாத பாதை`யில் பயணிக்க எத்தனித்தது.

இதன் விளைவாக அமெரிக்க இந்திய ஆட்சிக்கவிழ்ப்பில் பக்ச பாசிசம் ஜனவரி 8 2015 இல் அரசியல் அதிகாரத்தை இழந்தது.

6) 2015............

ரணில் மைத்திரிப் பாசிசம் அந்நிய ஆட்சிக் கவிழ்ப்பில் அதிகாரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.


புலிகள் இல்லாத இலங்கை , தங்கு தடையற்ற உலகமயத்துக்கு திறந்து விடப்பட்டது.

அந்தத் திட்டம் வருமாறு:

1)  Naval & Maritime  Hub
2) Aviation Hub
3) Commercial  Hub
4) Energy Hub
5) Knowldge Hub
6) Tourism Hub

வேறு விதமாகச் சொல்வதானால் முழு நாட்டையும் அதன் வளங்களையும் உலகமயக் கொத்தளங்களாகக் கூறுபோட்டு அந்நிய நிதிமூலதன காலனியாதிக்கத்துக்கு தாரைவார்க்க தயாராகிவிட்டது. இது மகிந்த சிந்தனை என்றே இன்றுவரையும்(2016) அழைக்கப்பட்டுவருகின்றது!.இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் உலகமய வர்த்தகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையில் அமைந்திருக்கும் பூகோள ரீதியான வாய்ப்பை இதற்கான மூலதனமாக்கிக்கொள்கின்றது.உண்மையில் இதில் மூன்றில் இரண்டுக்கும் மேற்பட்ட கடல் பரப்பு ஈழத்துக்குச் சொந்தமானதாகும்.பேடித்தனமாக ஆனந்தபுர விசவாயுத் தாக்குதலில் புலிகள் தலைமையை அழித்து, இனப்படுகொலையால் ஈழ தேசத்தைக் கபளீகரம் செய்த சிங்களம், இப்போது அதை அந்நியனுக்கு ஏலம் போட்டு விற்றுவருகின்றது.பக்ச பாசிசம் சீனாவோடு இணைந்து செய்த அதே கைங்கரியத்தை ரணில் மைத்திரி பாசிசம் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்க முகாமின் அடிமைக் கூட்டாளியாக செய்ய முயலுகின்றது.
---------------
மோடி ஆட்சியும் உலக மயமும்
பாகம்(3) தொடரும்.

Thursday, 4 February 2016

போலிச் சுதந்திரம் பொசுங்கியே தீரும்! ஈழப்புரட்சி வெடித்தே தீரும்!

 போலிச் சுதந்திரம் பொசுங்கியே தீரும்! ஈழப்புரட்சி வெடித்தே தீரும்!
(பாகம் 1)



மெரிக்க இந்திய ஆட்சிக் கவிழ்ப்பில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ரணில் - மைத்திரி பாசிசம் 68வது சுதந்திர விழாவை காலி முகத்திடலில் இன்று கொண்டாடி வருகின்றது.

காலனியாதிக்க அரசியல் அதிகாரக் கைமாற்றத்தை `சுதந்திர தினமாக` விளக்கி விழா எடுப்பது இலங்கையில் மட்டுமல்ல, இலங்கை போன்ற அனைத்து அரைக்காலனிய நாடுகளினதும் ஆளும் வர்க்கங்கள் நடத்தும் பொதுத் திருவிழாவாகும். இதன் இலங்கை வெளியீடே  பெப்ரவரி 4 ஆகும்.

மேலும் இது முதல் உலகப் போரையும் ரசிய சோசலிசப்  புரட்சியையும், இரண்டாம் உலகபோரையும் மக்கள் சீனப் புரட்சியையும், சார்ந்து காலனி நாடுகளில்  நேரடிக் காலனியாதிக்கம் நீங்கி அரைக்காலனியாதிக்கம் நிறுவப்பட்டதை,  காலனியநீக்கம் என விளக்கிய திருத்தல்வாதத்தின் தொடர்ச்சியுமாகும்.

இது குறித்து ருசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே நடைபெற்ற மாபெரும் விவாதத்தில் காலனிய நீக்கம் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 4வது விமர்சனம் புதிய காலனியாதிக்கத்தின் தாசர்கள் என்று தலைப்பிட்டு  ஐப்பசி 22 1963 வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது;

``இரண்டாம் உலக போருக்குப் பின் ஏகாதிபத்தியவாதிகள் காலனியாதிக்கத்தை கைவிடவில்லை. புதிய காலனியம் என்கின்ற வடிவத்தை மட்டுமே புதிதாக மேற் கொண்டிருக்கின்றார்கள். ஏகாதிபத்தியவாதிகள் சில இடங்களில் தங்களது பழைய முறையான  நேரடி காலனியாட்சி வடிவத்தை  கைவிடுமாறும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்ட ஏஜென்டுகள் மூலம் ஒரு புதிய வகை காலனியாட்சியையும் சுரண்டலையும் மேற்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது புதிய காலனியாதிக்கத்தின் முக்கிய குணாம்சமாகும்``. 
(மாபெரும் விவாதம் கேடயம் வெளீயீடு முதற்பதிப்பு 1988 பக்கம் 390)

இந்த முக்கிய குணாம்சத்தின் அடிப்படையில் அமைந்தது தான் அரைக்காலனிய இலங்கை.

இரட்டைத் துருவ உலக ஒழுங்கமைப்பு நிலவிய காலத்தில்  அணிசேரா நாடுகள் என தம்மை அழைத்துக் கொண்ட நாடுகளும் அவற்றின் அடிமைத் தரகு ஆளும் வர்க்கங்களும் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களில் ஏதோ ஒரு முகாமை சார்ந்து  இயங்கியவர்களேயாவர்.

எழுபதுகள் வரை உள்ளுர் சிறு தொழிற் துறையை ஊக்குவித்தும் பெருவீத தொழிற் துறையை ஏகாதிபத்தியவாதிகளிடம் விட்டு வைத்து விடுவதுமான பொருளாதாரக் கொள்கையை SLFP  கடைப்பிடித்தது.

இந்த அளவிற்குத் தான் அதனுடைய தேசிய தொழிற்துறை பாசம் இருந்தது.

இந்த மாய மானைக் கண்டு மயங்கித்தான் நமது சீன வீரர்கள் இக் கட்சியை தேசிய முதலாளித்துவக் கட்சி என வரையறை செய்து  ஈழப் பிரிவினையை எதிர்த்து எதிரிகளுடன்  ஐக்கியப்பட்டனர்.

அதேவேளை ஐதேக UNP- முற்றிலுமாக நாட்டை ஏகாபத்தியத்திடம் அடகு வைக்கும் கொள்கையை கொண்டிருந்தது.

ஆனால் 1977 இல் திறந்த பொருளாதாரக் கொள்கை ஐதேக ஆட்சியில் ஜேஆர் தலைமையில் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இவ்விரு கட்சிகளுமே ஒரே பாதையில் தான் பயணித்து வருகின்றன.

 எந்தளவிற்கு எந்தளவு இந்த அரைக்காலனிய அரசியல் அடிமைத்தனத்திற்கும், உலகமய பொருளாதார அடிமைத்தனத்திற்கும் சிங்களம்  உள்ளாக்கப்பட்டு வந்ததோ. அந்தளவிற்கு அந்தளவு உள்நாட்டு அடக்குமுறையும், தேசிய இன ஒடுக்குமுறையும் அரசு  பாசிசமயப்படுவதும் வளர்ந்து வந்துள்ளன. 

இதனால் இலங்கையின் உள்முரண்பாடுகள் அந்நாடு கடைப்பிடிக்கும் அந்நிய சார்பு அரசியல்- பொருளாதார-வெளிவிவகாரக்  கொள்கைகளின்  நேரடி விளைவாகும்.

இதனை மூடி மறைப்பதற்கான ஒரு கருத்தியல் ஆயுதமாகத்தான் பௌத்த சிங்கள பேரினவாதம் கையாளப்பட்டு வருகின்றது. 

ஈழத்தமிழின முதலாளித்துவ தேசிய இன வாதிகள் தமது வர்க்க இயல்பும்,ஏகாதிபத்திய தாச வசதியும் கருதி இரண்டாம் அம்சத்தையே உயர்த்திப் பிடிக்கின்றனர்.

முதல் அம்சத்தை மூடி மறைக்கின்றனர்.

ஆனால் முதல் அம்சமே முக்கியமானது ஆகும்.

சிக்களத்தின் இந்த போக்கு,  அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கைகளில் இருக்கின்றது என்பதால் தீர்மானிக்கப்படுகின்றது..

இலங்கையின் அரசியல் அதிகாரம் சிங்கள தரகு முதலாளிய அரைநிலவுடமை வர்க்கங்களின் கையில் இருக்கின்றது.இந்த வர்க்க சக்திகளுக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவு தான்
இக் கொள்கைகள் கடைப்பிடிக்கப்படுவதற்கான காரணமாகும்.

இதனால் ஈழ தேசிய இனப்பிரச்சனையில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன;

1) ஒன்று ஒட்டுமொத்த இலங்கை நாட்டையும் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுவிக்கின்ற விடுதலைப் பிரச்சனை;

2) ஒடுக்கும் சிங்கள தேசத்திடம் இருந்து ஈழ தேசம் விடுதலை பெறும் தேசியப் பிரச்சனை;

3) அ) பிரிவினை அல்லாத வழியில் இப்பிரச்சனை தீக்கப்படக்கூடிய வாய்ப்பு எழுமானால் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்த புரட்சிகர வர்க்கங்களின் இலங்கை மக்கள் ஜனநாயகக் குடியரசை புரட்சிகரப் போராட்டத்தின் மூலம் அமைத்தல்,அத்தகைய வாய்ப்பு அற்றுப்போன இன்றைய சூழ்நிலையில் ஈழம் பிரிந்து சென்று ஈழமக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்துக் கொள்ளும் புரட்சிகரப் போராட்டம், பொது வாக்கெடுப்பு தழுவிய ஜனநாயகப் பிரச்சனை.
ஆ) மேற்குறித்த இரு நிலைமைகளிலும் மலையகத் தமிழர்களின் மாநில சுயாட்சி, இஸ்லாமியத் தமிழர்களின் பிரதேச சுயாட்சி,  ஜனநாயக வழியில் உத்தரவாதம் செய்வதற்கான போராட்டத்தை தொடரும் இன மத சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைப் பிரச்சனை.

சிங்களத் தரகு வர்க்கங்களும் பொருளாதார உலக மயமும்.

போலி அதிகாரக் கைமாற்றம் நடந்து முடிந்த கையோடேயே இலங்கைப் பொருளாதாரத்தை வழிகாட்டியும் நெறிப்படுத்தியும் வந்தது உலக வங்கி ஆகும்.ஆக தேசத் தந்தை டி.எஸ்.சேனநாயக்கா முதல் ரணில் மைத்திரி பாசிசம் வரை இலங்கையின் ஆட்சி உலக வங்கியின் ஆட்சிதான்.

உலக வங்கியின் வரலாறு:

1916 ஆம் ஆண்டில்  லெனின் எழுதி 1917 இல் வெளியிட்ட ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம்  என்கிற நூலில் ஏகாதிபத்தியத்தின் தனி விசேசமான இயல்புகளை பின் வரும் 5 அம்சங்களில் வரையறை செய்தார் . அந்த வரையறை வருமாறு:

1) பொருளாதார வாழ்வில் தீர்மானகரமான பங்காற்றும் ஏகபோகங்களைத் தோற்றுவிக்கும்படியான உயர்ந்த கட்டத்துக்கு உற்பத்தியின் ,மூலதனத்தின் ஒன்று குவிப்பு வளர்ந்துவிடுதல்;

2) வங்கி மூலதனம் தொழிற்துறை மூலதனத்துடன் ஒன்றுகலத்தலும், இந்த ``நிதி மூலதனத்தின் `` அடிப்படையில் நிதியாதிக்க கும்பல் உருவாகுதலும்;

3) பண்ட ஏற்றுமதியில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டியதாகிய மூலதன ஏற்றுமதி தனி முக்கியம் பெறுதல்

4) சர்வதேச ஏகபோக முதலாளித்துவக் கூட்டுகள் உருவாகி , உலகையே இவை தமக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுதல்;

5) மிகப்பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே அனைத்து உலகப்பரப்பும் பங்கிடப்பட்டுக் கொள்ளுதல் நிறைவுறுகிறது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் எந்தக்கட்டத்தில் ஏகபோகங்கள்,நிதி மூலதனம் ஆகியவற்றின் ஆதிக்கம் நிலை நாட்டப்படுகின்றதோ, மூலதன ஏற்றுமதி முனைப்பான முக்கியத்துவம் பெற்றுவிட்டதோ, சர்வதேச ரஸ்டுகளுக்கிடையில் உலகம் பங்கிடப்படுவது தொடங்கியுள்ளதோ, உலகின் நிலப்பரப்பு அனைத்தும் மிகப் பெரிய முதலாளித்துவ அரசுகளுக்கிடையே பங்கிடப்படுவது நிறைவு பெற்றுவிட்டதோ, அக்கட்டத்திலான முதலாளித்துவமே ஏகாதிபத்தியமாகும்.
(லெனின் நூல்திரட்டு 2(4) ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் முன்னேற்றப் பதிப்பகம்- 1977 பக்கம் 142)  

இவ்வியல்பு காரணமாக ஏகாதிபத்திய முரண்பாடானது,நிதி மூலதன  ஏற்றுமதிக்கும்,மூல வளத்திருட்டுக்கும்,சந்தைக் கைப்பற்றலுக்குமான கொள்ளைக்கார  நாடு பிடிக்கும் போர்களுக்கும்,இறுதியில் உலக மறுபங்கீட்டு உலகப் போருக்கும் இட்டுச் செல்லும் என எச்சரித்தார்.

உலகப் பெருமந்தம் காரணமாக உலக மறுபங்கீட்டிற்காக  மூண்ட முதல் உலகப் போரின் அநுபவங்கள் லெனின் ஆய்வால் அரசியல் விஞ்ஞானமாகின.

28 ஜூலை 1914 இல் ஆரம்பித்து,  70 இலட்சம் பொது மக்களின் உயி குடித்து 11 நவம்பர் 1918 இல் முடிவுக்கு வந்தது இக்கொடிய கொள்ளைக்காரப் போர். .

இந்த யுத்தத்தில் போர் புரிந்த நாடுகளின் கம்ஜூனிஸ்ட் கட்சிகளில் தாய் நாட்டைக்காப்போம் என்று முழங்கி ஏகாதிபத்திய யுத்தத்தில் பங்கேற்கும் திருத்தல் வாதப்போக்கு உருவாகியது.லெனினியமோ உலகப்போரை உள் நாட்டு யுத்தமாக மாற்றவேண்டுமென முழங்கியது. இச்சரியான யுத்த தந்திரத்தின் விளைவாக 1917 இல் ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி வாகை சூடியது.

இனிமேல் யுத்தம் வராது என மக்களுக்கு சத்தியம் செய்து எடுக்கப்பட்ட அத்தனை முயற்சிகளையும் மீறி ஜேர்மனியின் கிட்லரின் நாசிச பாசிச ஐரோபிய விரிவாதிக்க தேசிய வெறியை எதிர்த்த இரண்டாம் உலப்போர் 1939 இல் ஆரம்பித்து 1945 இல் முடிவுக்கு வந்தது.இந்தப் போரில் தோழர் மா ஓ சே துங் கடைப்பிடித்த சரியான யுத்த தந்திரம் காரணமாக ஒக்ரோபர்1, 1949 இல் மக்கள் ஜனநாயக சீனக்குடியரசு உதித்தது.

ஹிட்லரின் பாசிசம் சோவியத் செஞ்சேனையின் மாபெரும் தியாகத்தாலும், தோழர் ஸ்ராலினின் தலைமத்துவத்தாலும் தோற்கடிக்கப்பட்டது. உலகம், ஏகாதிபத்திய முகாம் சோசலிச முகாம் என இரு இயல்பான பகைமை முகாம்களாக இறுதியில் பிரிந்தது.

முதல் உலகப் போரில் தாமதமாக பங்கெடுத்துக் கொண்ட அமெரிக்கா யுத்தத்தால் நொடிந்து போன நாடுகளின் நிலைமையைப் பயன்படுத்தி,ரசிய சோசலிசப் புரட்சிக்கு அஞ்சி, உலகை தனது மேலாண்மையின் கீழ் கொண்டு வர முயன்றது.

இந்த புறவயச் சூழலில் தான் முதலாளித்துவத்தின் அந்திமக்காலத்தை நீடிப்பதற்காக `அறிவார்ந்த முயற்சிகள்` அவசியப்பட்டன. இதன் விளை பொருள்தான் கெயின்ஸ் [John Maynard Keynes (1883 - 1946)]
என்கிற ஆங்கிலேய முதலாளித்துவ பொருளாதார கல்விமான்.

இவர் முதலாளித்துவ நெருக்கடிகள் சந்தை நிலைமகளால் தாமாகவே சரி செய்யப்படும் என்கிற `மூலச்சிறப்பு மிக்க ` முதலாளித்துவ பொருளாதாரக் கோட்பாட்டோடு உடன்பாடு காணவில்லை.``அதற்கிடையில்- அதுவரை காத்திருந்தால்-  நாம் இறந்து போவோம்`` என எள்ளி நகையாடி பிரகடனம் செய்தார். இதற்கு இடை நடுவில் முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பாதுகாக்க சமரச சன் மார்க்கம் ஒன்றை கண்டறிந்தார்.

இந்த குறளி வித்தைக்காரனின் அந்த மந்திரக்கோல் என்னவெனில் `சந்தைப் பொருளாதாரத்தை நெறிப்படுத்தும் அரச தலையீடு`.

இரு உலக யுத்தங்களையும் அதன் பொருளாதாரக் காரணிகளையும்  அதற்கு காரணமான முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை முரண்பாடுகளையும் இயல்பாகவே இவர் நிராகரித்தார், அல்லது மூடி
மறைத்தார்.


உள் நாட்டில் அரச தலையீட்டுப் பொருளாதாரம், சமூக நல அரசு, எஞ்சிய உலகின் மீது அந்நிய நிதி மூலதன ஆட்சிக்கு பரிந்துரை செய்தார்.

இவர் தான் உலக வங்கியின் தந்தை.

இந்த `உலக வங்கி`  (WORLD BANK) , அமெரிக்க பிரித்தானிய அந்நிய நிதி மூலதன வங்கியே! இதன் உலக வர்த்தக வங்கியே International Monitery Fund (IMF) ஆகும்.

ஏகாதிபத்தியத்தை யுத்த வீழ்ச்சியில் இருந்து மீட்க கை கொடுத்த தெய்வம் கெயின்ஸ்,

தெய்வம் நின்று கொல்லுமாம்: கெயின்ஸ் 1977 இல் கொல்லப்பட்டார்! இவரது குறளிவித்தைகள் அனைத்தும் மீண்டெழுந்த 1977 உலகப் பொருளாதார நெருக்கடியில் எரிந்து சாம்பராகின.

இவரின் சவக்குழுயில் பிறந்ததுதான் நவ தாராளவாதப் பொருளாதார கோட்பாடு. இக் கோட்பாடு அந்நிய நிதிமூலதனத்தின் நலன்களுக்கு எதிராக இருக்கும் அனைத்து தேசியச் சுவர்களையும் தகர்த்தெறிவதைக் குறிக்கோளாகக் கொண்டதாகும்.இதனை அமூலாக்க ஏகாதிபத்திய நிதி மூலதன இரட்டை வேட்டை நாய்களான,  உலக வங்கியும், ஐ.எம்.எஃப் உம், சுதந்திர தேசங்களை,அரைக்காலனிய நாடுகளை மென்மேலும் குதறி குருதி குடித்து `நிதி மூலதன காட்டு மிராண்டிக் காலனியாதிக்கத்துக்கு` அடிமைப்படுத்த   ஏவப்பட்டன.

அமெரிக்காவில் ரொனால்ட் ரேகனும், பிரித்தானியாவில் மார்க்கிரட் தச்சரும் இதை உலகப் பரப்பின் மீது நிலை நிறுத்தினர்.

உலகமயம் என்றால் என்ன?
1) உலகமய பொருளுற்பத்தி முறையானது அடம் ஸ்மித்தின் ஒரு தொழிற்சாலைக்குள் அடங்கிய வேலைப்பிரிவினையை சர்வதேச வேலைப்பிரிவினையாக மாற்றியுள்ளது. ஓரு பண்டம் முடிவுப் பண்டம் ஆகும் தருணத்துக்கு முன்னால் அதன் பாகங்கள், பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வேறொரு நாட்டில் ஒருங்கு சேர்க்கப்படுகின்றன.

ஒரு நூறு உலக ஏக போக நிறுவனங்களின் காலனித் தொழிற்சாலைகளாக முழு உலக நாடுகளும் மாறிவிட்டன.

2) இந்தத் தொழிற்சாலை அந்தஸ்த்துக்காக அரைக்காலனி, மற்றும் சார்பு நாடுகளின் ஆளும் கும்பல்கள் போட்டியிடுகின்றன.தம் நாடுகளை ஏலம் போட்டு விற்கின்றனர்.  Make in India, Make In Sri Lanka என வாங்குவோர் விதித்த விலைக்கு விலை பேசாமலே விற்கின்றனர்.

3) இந்த உற்பத்திமுறையின் விளைவான பண்டங்களை பரிமாற்றவும், விநியோகிக்கவுமான பொறிமுறைகள்,மற்றும் சர்வதேச நிதிக் கொடுக்கல் வாங்கல் பொறிமுறைகள், பங்குச் சந்தை, Hedges Funds என்பவை
சேவைத்துறைகள் என அழைக்கப்படுகின்றன.

4) முகியமாக இந்த பொறிமுறை அனைத்தும் அந்நிய நிதி மூலத்தின் அசுரப் பற்களுக்குள் சிக்கிக் கிடக்கின்றன.

5) ஒரு ஏக போக நாடோ, ஒரு ஏக போக நிறுவனமோ, ஒரு ஏகபோக வங்கியோ இச்சூதாட்டப் பொறிமுறையில் சரிந்து விழுந்தால் முழு உலகமும் அதற்கு விலை கொடுக்கின்றது.

6) உலக மயத்தின் ஆதரவாளர்கள் இதில் வெற்றி அடைவோர் தோல்வி பெறுவோர் (Winners and Loosers) என இதன் விளைவுகளைப் பாகுபடுத்துகின்றனர்.

கேள்வியெல்லாம் ஒரு நூறு ஏக போக நிறுவனங்களின் நலனுக்காகாக, கோடான கோடி மக்கள், நாம் வாழும் ஒரே பூமிக் கிரகம், நாசமடைந்து தோல்வியடைந்து நிர்மூலமாக வேண்டுமா? இதைத்தடுக்க எழாமல் சோர்ந்திருப்போமா?
==============================================================
செழுமை 08 02 2016
பாகம் (2)
இலங்கையில் உலகமயம் (தொடரும்)