மோடியின் ``அமோக வெற்றி`` ஒரு ஊடக மோசடி!
நடந்து முடிந்த இந்தியாவின் 16வது மைய அதிகாரத்துக்கான லோக் சபா பொதுத் தேர்தலில் பாசிச மோடியின் பா.ஜ.க.கட்சி அமோக வெற்றிபெற்று,
தனிப்பெரும்பான்மை கொண்டு அரசாங்கம்-ஆட்சி அமைக்க இந்திய ஜனநாயகம் முடிவு செய்து விட்டதாக ஒரு ஊடகப் புனைவும், பொய்யும், புரட்டும்,மோசடியும் உலக மக்களின் கண்களை மூடி மறைத்து வருகின்றது.
இந்திய தேர்தல் திணைக்கள இணைய தளம், 2014 பொதுத் தேர்தல் குறித்து வெளியிட்ட புள்ளிவிபரங்கள் வருமாறு.
வாக்களித்தோர் விகிதாசாரம் 75%, அதாவது 25%, வாக்குரிமை பெற்ற இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கவில்லை.
வாக்களித்தோரில் பா.ஜ.க.31% மும், காங்கிரஸ் 19%மும் பெற்றன. ஆக மொத்தம் இந்த இரு பெரும் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் ஆக 50 % தான்.( உண்மையில் இதில் தேர்தல் மோசடி வாக்குகள் நீக்கப்படவேண்டும்.) ஆக 75% வீத இந்திய வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளே பா.ஜ.க வும்,காங்கிரசும்.
இதனால் இந்த தேர்தலை காங்கிரஸ் மீது மோடி கொண்ட அறுதிப் பெரும்பான்மை வெற்றியாகக் கொள்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
மாறாக, அதிக பட்சம் இரண்டு கட்சிகளையும் பெரும்பான்மை இந்திய வாக்காளர் நிராகரித்த தேர்தல் என்றே கொள்ள முடியும்.
மேலும் 19% வாக்குப்பெற்ற காங்கிரஸ் 44 பன்றி இருக்கைகளைப் பெற்றிருக்கின்றது, தோராயமாக இதனை 1% வாக்குக்கு 2 இருக்கைகள் என எடுத்துக்கொள்ளலாம்.அப்படியாயின் 31% வாக்குப்பெற்ற பா.ஜ.க.அதிகபட்சம் 65 இருக்கைகளையே பெற்றிருக்க வேண்டும்.ஆனால் பா.ஜ.க.பெற்றதோ 282!!
இந்த 31% வாக்குகளின் மொத்தத் தொகை 171657549 (தோராயமாக-பதினேழேகால் கோடியாகும்). 19% காங்கிரஸ் வாக்குகள் 106938242 (தோராயமாக-பத்தரைக்கோடியாகும்). வாக்கு வேறு பாடு 64719307 (தோராயமாக-ஆறரைக் கோடியாகும்.) பா.ஜ.க.வின் சராசரி இருக்கை வாக்கு 608714 .இதன்படி காங்கிரசுக்கு 175 இருக்கைகள் கிடைத்திருக்கவேண்டும். கிடைத்ததோ ஆக 44!
இது இந்தியத் தேர்தல் வரலாற்றில்இதற்கு முன் என்றும் நடந்திராத நிகழ்வு என Times of India பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. மேலும் அது கூறுகையில்
இந்த இருக்கைகளில் பாதியைக்கூட இதற்கு முந்திய தேர்தல்களில் 31% வாக்குகளைக் கொண்டு எந்தக்கட்சியும் பெற்றதாக தேர்தல் குறிப்புகளில் ஆதாரம் இல்லை என்று ஆணையிடுகின்றது.. மாபெரும் இந்திய ஜனநாயகத்தில்விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு மோசடியான தேர்தல் முறை இந்தத் தடவை மோடிக்கு துணை போயிருக்கின்றது. (தகவல்: தேர்தல் திணைக்களம் மற்றும் Times of India, ஊடகங்கள். குறிப்பு: புள்ளிவிபரங்கள் பொது வாசக நோக்கில் தசமதானங்கள் முழுமைப் படுத்தப்பட்டுள்ளன. 74.3% > 75%, 19.3% > 19% ஆகியவாறு) மன்மோகன் விட்ட இடத்தில் இருந்து,இந்தியாவை அடுத்த கட்ட
இருண்ட யுகத்துக்குள் இட்டுச் செல்ல ஒரு பாசிச அடிமை நியமிக்கப் பட்டிருக்கின்றது.
இது தான் மோடிப் பாசிசம் ஆட்சி பீடம் ஏறிய யோக்கியம்!
குஜராத்தில் இஸ்லாமியர்களை குற்றுயிரும் குலை உயிருமாக கொன்றொழித்ததன் விளைவாக மோடிக்கு அமெரிக்க விசா ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இதையும் மீறி ஒபா மோடிக்கு அழைப்புவிடுத்துள்ளார், தோளோடு தோள் நின்று இங்கிலாந்துப் பிரதமர் டேவிட் கமெரனும் அழைப்பு விடுத்துள்ளார். மோடியோ இன்னுமொரு அடி மேலே போய் ஈழத் தமிழ்த் தேசிய இனப்படுகொலையாளனுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கவுள்ளான்.
இதை எதிர்த்து தமிழகம் கொந்தளிக்கின்றது. இதைச்சமரப்படுத்த
ஜெயா அரசு வரவேற்பு வைபவத்தைப் புறக்கணித்து, வெறும் வாழ்த்துச் செய்தி மட்டும் அனுப்பியுள்ளது. அதேவேளை ஜனநாயக ரீதியில் மக்கள் எதிர்ப்புத்தெரிவிக்க பொலிஸ் அனுமதி மறுத்து வருகின்றது.தேவைப்பட்டால் பொலிஸ் அராஜகத்தைக் கட்டவிழ்த்து நசுக்கவும் தயங்காது.
மேலும்,காங்கிரஸ் ஒரு எதிர்க்கட்சியாகவும் இருக்க பலமிழந்த
நிலையில் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சியாகவோ,அல்லது எதிர்க்கட்சித்தலைவராகவோ வருவதற்கான முயற்சியும் இந்தமுடிவுக்கு காரணமாக இருக்கலாம்.
தமிழ்த்தரகு அணியும் மோடி ஆட்சியும்:
தமிழகம்:
மோடி அமெரிக்கத் தெரிவு/நியமனம் என்பதால் அமெரிக்க தாசன் வை.வோ.சாமி மோடியோடு கூட்டமைத்தான்.தேர்தலில் மண்கவ்வினான். இருந்தாலும் இவன் கதை,முடியவில்லை.தமிழகத்திலும் புலம்பெயர் களத்திலும் ஈழ ஆதரவு ஜனநாயக இயக்கம் உருப்பெறுவதை கருவறுக்க கங்கணம் கட்டி நிற்கும் `கறுப்புக் காவிச்` சந்தர்ப்பவாதி இவன்.
முள்ளிவாய்க்காலில் ``அமெரிக்கத் தேர்தலில் ஒபாமாவும், இந்தியத் தேர்தலில் (2009) பா.ஜ.க.வும் ஆட்சி அமைத்து உங்களை ராஜபக்சவிடமிருந்து காப்பாற்றும்`` என விடுதலைப் புலிகளுக்கு நயவஞ்சக நம்பிக்கை அளித்த சகுனி இவன்.மோடிப் பாசிசம் அதன் முதல் நாளிலேயே போதிப்பாசிச சிங்கள ராஜபக்சவுக்கு செங்கம்பளம் விரிக்கின்றது.முள்ளிவாய்க்கால் ஈழதேசிய இனப் படுகொலைக்கு அங்கீகாரம் வழங்குகின்றது. இந்த அடிமைச் சந்தர்ப்பவாதச் சகுனி கருப்புக்கொடி காட்ட கிளம்புகின்றது. கதரும் காவியும் இந்தியப்பாசிசத்தின் இரு முகங்கள் என்று நாம் முழங்கியபோது இந்த `கறுப்புச்சட்டைக் கருங்காலி` ஈழத்தமிழனை பா.ஜ.க காக்கும், பா,ஜ,வந்தால் ஈழம் அமையும் என்று பிதற்றியதே அந்த நிலைப்பாட்டுக்கு என்ன பதில்?
``அறுதிப் பெரும்பான்மை பெற்ற மோடி ஆட்சியை`` கடந்த 10 ஆண்டுகள் பதவி வகித்த அதிகாரிகள் தவறாக நடத்துகின்றார்கள், என மோடியை ஒன்றும் தெரியாத பாப்பா, எனச் சப்பைக்கட்டுக் கட்டுவது அயோக்கியத்தனம் இல்லையா? `` அறுதிப்பெரும்பான்மை பெற்ற ஒரு கட்சியின் மாற்று ஆட்சியை``அதிகாரிகள் தவறாக வழி நடத்த முடியும் என்றால், இதை `உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்` எனப்பிதற்றுவது பித்தலாட்டம் இல்லையா?
இந்திய ஆளும் வர்க்கம், அதன் இரு பெரும் கட்சிகளான, பா.ஜ.க, காங்கிரஸ், அவற்றின் விரிவாதிக்க நலன், உலகு தழுவிய அமெரிக்க மேலாதிக்கத்துக்கு தொண்டூழியம் புரியஇவர்களிடயே உள்ள போட்டா போட்டி, இவற்றின் விளைவாக தனித் தமிழீழக் கோரிக்கையுடன் இக்கட்சிகளுக்கு உள்ள பகைமையான முரண்பாடு குறித்து, இந்தக் கறுப்புச் சட்டைக்
கருங்காலிகள் எப்போதுமே சந்தர்ப்பவாதிகள் ஆவர்,1983 இலிருந்து 2015-இன்றுவரையான 32 ஆண்டுகளில், ஈழப்பிரச்சனையில் ஒரு, முரணற்ற ஜனநாயக நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்கள் அல்ல.
ஒரு மாதம் நிலைத்திருக்க முடியாத,கூற்றுக்களின் மீது, பொய்கள், புரளிகள்,மோசடிகள்,மீது ஒரு நிறுவனமோ, தலைவனோ நிலைத்து நிற்க முடியாது.இது வை.கோ.சாமிக்கு மட்டுமல்ல, நெடுமாறன் ஐயாவுக்கும்,சீமான் அண்ணனுக்கும் முற்றும் பொருந்தும்.
கருணாநிதி ``ராஜபக்சவின் வரவை எதிர்ப்பதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல`` என்று கூறியுள்ளதோடு, மூத்த தலைவரான தனக்கு அழைப்பு வழங்கப்படவில்லையென்ற கவலையையும் வெளியிட்டுள்ளார்! இது எப்படி இருக்கு!!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு.பிரபாகரன் `புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்` என்ற முழக்கத்தோடு ஈழ அரசியலில் பங்கேற்றார். அதற்காக ஒரு படையைக் கட்டி அமைத்தார்.இன்று அந்தப் புலிப்படை -வை.கோ.சாமி.துணையில்- கொன்றொழிக்கப்பட்டுவிட்டது.ஆனால் அந்த இலட்சிய நிலைப்பாடும்,ஆயுதப்போராட்டமும் இன்றும் பொருந்தும்,இன்னும் பன்னெடுங்காலத்துக்குப் பொருந்தும்.சிங்களம் ஜனநாயகமயப்படும்(?!) காலம் வரைக்கும் பொருந்தும். இது ஒரு நெருப்பு.நெடுமாறன்,வை.கோ.சாமி,சீமான் இத்தியாதி...இத்தியாதி தமிழகத்தின் தமிழ்த்தரகுசமரச அணியினர் இந்த நெருப்போடு விளையாடி வருகின்றார்கள்.இதில் அவர்கள் தீய்ந்து கருகுகின்ற காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழக உழைக்கும் மக்களின் நேர்மையான,தூய்மையான,இதய சுத்தியுள்ள இனப்பற்றும், இளைஞர்கள், மாணவர்களின் கோபமும் கொந்தளிப்பும், கழகத்தின் ஜனநாயகத் தலைமையும், வளர்ச்சியும், இந்த மயானத் தீயை மூட்டியே தீரும்.இவ்வாறு தான் ஈழத்தில்,1977 இல் தமிழீழத் தீர்மானத்தோடு சமஸ்டிக்கட்சி விளையாடி இன்று வெறும் எதிரியின் அடியாட்களாக மாறியுள்ளது.
ஈழம்:
மோடிப்பாசிசம் தனது பதவியேற்பு நிகழ்விற்கு, போதிப்பாசிசத்துக்கு `சார்க் நாடுகளின் சகோதரத்துவம்` என்ற திரையில் அழைப்புவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழகம் கொந்தளித்து நிற்கின்றது.இந்தியத் திருவிழாவில் தனது மாகாணப் பங்காளி நீதியரசர் (?) (ஊடகப் பங்காளிகள் சூட்டிய மகுடம் இது.) சி.வி.விக்னேஸ்வரனை துணைக்கழைத்திருந்தான்.இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளாத நீதியரசர், இதையேற்று பங்கு கொண்டால் வடக்கு மாகாண சபை சுமூகமாக இயங்குவதாக அர்த்தமளிப்பதாக ஆகிவிடும் என்று கூறியுள்ளார்.ஆக நீதியரசுக்கு இது ஒரு அதிகார பேரப்பிரச்சனை
ஆகவே தெரிகின்றது.ஈழ தேசிய இனப்படுகொலைப் பிரச்சனையாகத் தெரியவில்லை.மே 20 2014 இல் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற மே 18 நினைவுப் பிராத்தனையை புறக்கணித்த அயோக்கியன் தான் இந்த நீதியரசன்!
இந்திய தேர்தல் அறிவிக்கப்பட்டு பாசிச மோடி பகிரங்கமான கணமே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கிற துடைப்பக்கட்டையில், ஒப்பீட்டில் ஓரளவு சகிக்க கூடியதாய் இருந்துவந்த சிறீதரன் என்கிற ஜென்மம் `மோடி ஆட்சியில் தமிழர்களுக்கு` மும்மாரி பொழியும் என்று பிரகடனம் செய்துவிட்டது.
சம்பந்தன்,சுமந்திரன் என்கிற ராஜபக்சவின் அடியாட்கள், மோடி ஆட்சியுடன் ``கை கோர்த்து நடப்போம்`` என்று கோழைத்தனமாக குரைக்கின்றன.
ஆக இந்த மூவர் குழு ஈழத் தமிழ்த் தரகு அணி மோடிப்பாசிசத்துடனும், போதிப்பாசிசத்துடனும் கைகோர்த்து ஈழதேசிய இனப்படுகொலையை மூடி மறைத்து, ஈழப்பிரிவினை வாக்கெடுப்பு ஜனநாயக இயக்கத்தைஎதிர்த்து நின்று பக்ச பாசிஸ்டுக்களின் பாதந்தாங்கிகளாக ``அதிகாரப் பகிர்வு`` என்ற மோசடிப் பாதையில் தமிழீழத்தை விற்றுப்பிழைக்க எதிரிகளுடன் கை கோர்த்து நிற்கின்றது.
`அதிகாரப் பகிர்வு` குறித்த நிலை என்ன?
வடக்கு மாகாணசபையின் முதலமைச்சரின் பதவி வரையறை வாசகம் வருமாறு, அதாவது மாகாண சபையின் கடமைகளும் செயல் பரப்பும் வருமாறு;
நிதியும் திட்டமிடலும்: சட்டமும் ஒழுங்கும்:மின்சக்தி:வீடமைப்பும் நிர்மாணமும்:கூட்டுறவு அபிவிருத்திசமூக சேவைகள்: புனர்வாழ்வளித்தல்: மகளிர் விவகாராம்:தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர்
மேம்பாடு:சுற்றுலா:உள்ளூராட்சிமற்றும்மாகாண நிர்வாகம்:உணவு வழங்கல்/விநியோகம் அமைச்சர்.
நிதியும் திட்டமிடலும்:
சிங்களத்தின் வரவு செலவுத் திட்டம் தான் வடக்கு மாகாண சபைக்கு நிதி ஒதுக்க வேண்டும்.
சட்டமும் ஒழுங்கும்:
இராணுவத்தின் கையில் உள்ளது.
மின்சக்தி:
வடக்கு மின்சாரம் தென் இலங்கையில் இருந்துதான் வருகின்றது.
வீடமைப்பும் நிர்மாணமும்:
இந்தியா குத்தகைக்கு எடுத்துள்ளது.
கூட்டுறவு அபிவிருத்தி சமூக சேவைகள்:
இவை அந்நிய என்.ஜி.ஓக்களால்,சிவில் சொசைற்றிகளால் நடத்தப்படுகின்றன.
புனர்வாழ்வளித்தல்:
மக்கள் இன்னும் மீள்குடியமர்த்தப்படவில்லை, குடியிருப்பு,விவசாய விளை நிலங்கள் கையளிக்கப்படவில்லை, மாறாக சிங்களக் குடியேற்றமும்,பெளத்தமத ஊடுருவலும்,பெயர்ப்பலகைகளில்
தமிழ் மொழி அழிப்பும் தொடர்கின்றது.அரசகரும மொழியாகக் கூட தமிழ் அமூல்படுத்தப்படுவதில்லை.தனிச் சிங்கள மொழி தொடர்பாடல் இன்னும் அமூலில் இருக்கின்றது.(1956 இல் ஆரம்பித்த பிரச்சனை!)
மகளிர் விவகாரம்:
இசைப்பிரியா உள்ளிட்ட போர்க்குற்ற பெண்வதைகள், விதவைகள் பிரச்சனை, ``காணாமல் போனோர் என்கிற பெயரில் சிங்களத்துக்கு தம் பிள்ளைச் செல்வங்களைக் காவு கொடுத்த தாய்மாரின் பிரச்சனை,பெண்கள் படைச் சேர்ப்பு,கட்டாயக் கருக்கலைப்பு, பாதிரிகள் செய்த பாலியல் படுகொலைகள்,தாயும் 13வயதுச் சிறுமி விபூசிக்காவும், பயங்கரவாதப் பட்டம் சூட்டி பிரித்து சிறைப்படுத்தப் பட்டிருக்கும் கொடுமை என, தொடரும் ஒரு பிரச்சனைக்கு மாகாண சபை தீர்வு கண்டதுண்டா? இரண்டாவது அதிகப்படியான வாக்குகளால் வெற்ற பெற்ற அனந்தி சசிதரனைக் கூட இந்த மூவர் கும்பல் பேசவோ,சுதந்திரமாக செயற்படவோ அனுமதிப்பதில்லை! இதுவா மகளிர் விவகாரம்?
தொழில் துறை மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு:
தொழில் துறை என்று ஒரு துறை வடக்கில் கிடையாது.இல்லாத துறைக்கு என்ன மேம்பாடு.ஓரிரு தொழிற்சாலைகளும்,பெருமளவிலான,சிறு தொழில்,சிறு வணிகம் போன்றவையும்,உலமயக் கொள்கைகளாலும், இராணுவ ஆதிக்கத்தாலும், வடக்குக்கு பிழைக்க படையெடுக்கும் சிங்களவர்களாலும் நலிந்து நசிந்து வருகின்றது.
சுற்றுலா:
இது முற்றிலும் இராணுவ முதலீட்டுத் துறை ஆகிவிட்டது. இவற்றைக் கொண்டு தான் சிங்கள இராணுவம் ஒரு வர்க்கமாக வளர்ந்து வருகின்றது.
உள்ளூராட்சிமற்றும் மாகாண நிர்வாகம்:
மாகாண நிர்வாகத்தின் கடமைகளுக்குள் பாதுகாப்பு,காணி,மொழி, அதிகாரம் இல்லையென்பதைக் கவனியுங்கள்.மாகாண நிர்வாகத்தின் நிலை இதுவென்றால் உள்ளூராட்சி நிர்வாகத்தைக் கற்பனை பண்ணிப்பாருங்கள்.
உணவு வழங்கல்/விநியோகம் :
இவை பெரும்பாலும் தனியார் துறை சார்ந்தவை.பொதுத்துறை உணவு விநியோகம் என்பது, மாகாண நிர்வாகம் உருவாகுதற்கு பலதசாப்தங்களுக்கு முன்னதாகவே ,பல நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் (MPCS), என்ற நாடு தழுவிய வலைப்பின்னல் அமைப்பைக் கொண்டு இயங்கி வந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஒரு சபை, ஒரு நிர்வாகம், இதற்கு ஒரு முதலமச்சர் தேவையா? துறை துறையாக மாகாணசபையின் மேற்கண்ட நிலை, மைய அதிகாரம் மென்மேலும் குவிக்கப்பட்டு,இராணுவமயப்பட்டு,சிங்களமயப்பட்டு,
ஒரு தமிழ் மாகாணம் இல்லாதொழிக்கப்படுதற்கு ஒரு மூடு திரையாக இந்தச் சபை-திட்டம்- பங்காற்றுகின்றது என்பதையே காட்டுகின்றது. அதுவே சிங்களத்தின் திட்டமாகும்.13வது திருத்த மாகாணசபைகள் சட்டம் அவ்வாறு தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. நன்றி புண்ணியவான் ராஜீவ்!
இந்த மாகாணசபையைக் கொண்டு, இதற்கு அதிகாரங்களைப் பகிர்ந்து`` நீதியான மற்றும் சமத்துவ அடிப்படையிலான கௌரவமான ஒரு சமாதானம் இலங்கையில் உருவாக்க முடியும் `` என சம்பந்தன் மூவர் குழு
மோடிக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதற்கு எந்த தர்க்க நியதியும் இல்லை.
இந்தமாகாண சபைக்கு போர்க்குற்றவாளி ராஜபக்ச தேர்தல் நடத்தியதை, நல்லிணக்க ஆணைகுழுவின் வெற்றி என்றும், நல்லிணக்கம் மீண்டுவருவதாகவும்,ஒபாமாவும்,கமெரனும்,மன்மோகன்சிங்கும் (மோடி இணைகிறார்),நவநீதம் பிள்ளையும்,ஐ.நா.சபையும் கூறி வருவது அபத்தமாகும்.
புலம்பெயர் நாடுகளில்:
கடந்த வாரம் மே 18 2014, முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை தமிழீழக் கொடியேற்றி ஆரம்பிக்க பிரித்தானிய தமிழர் பேரவை என்கிற தமிழ்த் தரகு அமைப்பு தடை வித்தது. இந்தக்கொடி பிரித்தனியாவில் சட்டபூர்வக்
கொடியாக இருந்த போதும் ``பிரித்தானிய கமெரன் அரசாங்கத்திடமிருந்து `` தமக்கு நெருக்கடி வருவதாக காரணம் கூறியுள்ளனர்.
தரகுத் தமிழ் அணிப் பேரவைகள் கருதுவது போல் ஈழத்தமிழ்மக்கள் அணிதிரள்வது இவர்களது பெயர்ப்பலகைகளுக்குப் பின்னால் அல்ல, தமிழீழம் என்ற இலட்சியதுக்கும், தமிழீழக் கொடிக்கும்,தளபதி பிரபாகரனுக்கும்,மாவீரர்களுக்கும் பின்னாலேயே ஆவர்.தமிழீழக் கொடிதான் அவர்களை ஒன்றுதிரட்டுகின்றது,அதன் கீழ் தான் அவர்கள் ஒன்று திரளுகின்றனர்.இதற்கு ஆப்பு வைக்க பிரித்தானிய தமிழர் பேரவை, தலைப்பட்டுவிட்டதையே மேற்பட்ட நிகழ்வு காட்டுகின்றது.
இந்தியாவில் குஜராத் கொலையாளியின் பாசிச ஆட்சி அரங்கேறி -யிருக்கின்றது. அனைத்துத் துறைகளையும் ` உலகமய, தனியார்மய, தாராளமய` பாதைக்குத் திறந்து விடுவதென பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இதனால் கிடைக்கப் போகும், சந்தை, அந்நிய நிதி மூலதன முதலீடு, ஆயுத வியாபாரம் போன்ற வாய்ப்புகள் தமது மீளமுடியாத நெருக்கடிக்கு தற்காலிகத் தீர்வாக முடியும் என்கிற அவாவிலேயே ஏகாதிபத்தியவாதிகள் மோடிக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
அமெரிக்கா தனது உலக மேலாதிக்க, பசுபிக் பிராந்தியத் திட்டத்தின் யுத்ததந்திரக் கூட்டாளியாக மோடி ஆட்சியுடனும், தொடர்ந்து பயணிக்கும்.ஏனெனில் காங்கிரசும்,பி.ஜே.பி.உம் இந்திய பாசிசத்தின் இரு முகங்களே.அமெரிக்க தாசக் கட்சிகளே,` உலகமய, தனியார்மய, தாராளமய` பாதைக்கு இந்திய நாட்டை விற்றுப்பிழைக்கும் கட்சிகளே.
மோடி ஆட்சி, பிரதமர் பதவியேற்பு வைபவத்துக்கு,`சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்` எனக் கூறி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, பாகிஸ்தான் பிரதமர் (மோடிக்கு அடுத்ததாக அதீத தனிப்பட்ட பாதுகாப்பு பெறும் இரு
அரசுத்தலைவர்கள் இவர்கள் இருவருமே ஆவர்!) உட்பட, சார்க் நாடுகளின் அரசுத்தலைவர்கள் அனைவருக்கும், ஆப்கான் அதிபர் கார்சாய் உட்பட அழைப்புவிடுத்துள்ளது.
இந்த ``சார்க் நாடுகளோடு சகோதரத்துவம்`` என்பது அகண்ட பாரதக் கனவும்,அமெரிக்க மேலாதிக்க சேவையும் தவிர வேறெதுவும் இல்லை.
அமெரிக்க ஜனநாயகத்துக்குக் கீழேயே கலிபோர்னியாவில் பிரிவினைப் போராட்டம் வெடிக்கும் போது, மோடிப்பாசிசத்தின் கீழ் சார்க் நாடுகள் ஒன்றுபடும் என்று ஒரு தற்குறிகூட நம்பமாட்டான்.
இந்த நிலையில் அமெரிக்க தாசர்களும்,இந்திய விரிவாதிக்க பாசர்களுமான புலம் பெயர் தரகுத் தமிழணிகள் தமிழீழ விடுதலையிலோ,பொது ஜன வாக்கெடுப்பிலோ, போர்க்குற்றத் தண்டனை இயக்கத்திலோ,
இதய சுத்தியோடு ஊன்றி நின்று, உறுதியாகப் போராடப் போவதில்லை.
எனவே இந்தியாவில் மோடிப்பாசிசம் ஆட்சி பீடம் ஏறி இருக்கும் இத்திருப்பத்தில், இச்சமரசவாத தமிழ்த்தரகு அணிகளை தனிமைப்படுத்தி, ஈழ விடுதலையைப், புரட்சிப்பாதையில் முன்னெடுக்க பின்வரும்
முழக்கங்களின் கீழ் அணிதிரளுமாறு தமிழீழ உழைக்கும் மக்களையும், தேசிய ஜனநாயக புரட்சிகர சக்திகளையும் அறை கூவி அழைக்கின்றோம்.
* இந்தியப் பாசிசத்தின் இரு முகங்களே, காங்கிரசும் பி.ஜே.பி.யும்!
* போர்க்குற்றவாளி ராஜபக்சவுக்கு செங்கம்பள வரவேற்பளிக்கும், மோடி ஆட்சியைக் கண்டிப்போம்!
* ஈழத்தமிழர்களுக்கும், தேசிய இனங்களுக்கும் எதிரான மோடி ஆட்சியைத், தாங்கிப்பிடிக்கும்
தமிழ்த் தரகு சமரச அணிகளைத் தனிமைப்படுத்துவோம்!
*போர்க்குற்றத்தண்டனைக்கும்,பொதுஜன வாக்கெடுப்புக்கும், தமிழீழப் பிரிவினைக்கும் புரட்சிப்பாதையில்
தொடர்ந்து போராடுவோம்!
*மாவீரர் தாகம் தமிழீழத்தாயகம் என உரத்து முழங்குவோம்!
* மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வழி நடப்போம்!
* உலகத் தொழிலாளர்களுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!
புதிய ஈழப்புரட்சியாளர்கள். 25-05-2014
No comments:
Post a Comment