தமிழீழப் போரில் இனிமேலும்
ஒயோம் உறுதி!
கார்த்திகை 27- 2013
இம்மாவீரர் பெரு நாளில்,
தமிழீழ விடுதலைக்கு விளக்கேற்றுவோம்!
மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!
அன்பார்ந்த தமிழீழமக்களே,
மாணவர்களே,இளைஞர்களே,உழைக்கும் விவசாய, கடற்தொழிலாள, சிறுவர்த்தக,அதிகார சிற்றூழிய வெகுஜனங்களே, ஈழத்தமிழ்ப் பெண் குலமே,
இன்று கார்த்திகை 27-2013 மாவீரர் பெரு நாள்.
முதல் முப்பது ஆண்டு பகை முடிக்க, அடுத்த முப்பது ஆண்டு தமிழீழ தேசிய விடுதலைக்காய் மாண்டு மடிந்த மக்களதும், மாவீரத் தோழர்களதும் கனவைச் சுமக்க சபதம் ஏற்கும் பெருநாள்,தமிழீழ தேசிய விடுதலைத் திரு நாள்!
நிணமும்,பிணமும்,இரத்தமும்,சதையும்,நிலமும் புலமும் அவலமும் ஓலமும்,அழுகையும்,தொழுகையும்,இறைஞ்சலும் இளவும் என இன்றும் வாழும் தேசத்தின் எழுகைக்கு அறை கூவும் போர் நாள்!!
அறைகூவல்:
`பொது வாக்கெடுப்பு, போர்க்குற்றத் தண்டனை` !
அன்பார்ந்த தமிழீழ மக்களே,
இந்த அறைகூவலை முரணற்ற ஜனநாயக வழியில் முன்வைப்பதும், அதற்காக முன் நின்று போராடுவதும் தான், மாண்ட நம் மக்களுக்கும் மாவீரத் தோழர்களுக்கும், நாம் செலுத்தும் காணிக்கையாகும்! இது நமது தேசியக் கடமையுமாகும்.
அறைகூவலை முரணற்ற ஜனநாயக வழியில் முன்வைப்பது:
1) 1947 போலிச் சுதந்திரத்தில் இருந்து, 2009 போர் ஓய்ந்த வரையான வரலாறு இனப்படுகொலையின் வரலாறே!
2) சிங்களம் `இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட` ஒரு இனப்படுகொலை அரசு!
3) தமிழீழ தேசத்தைப் படுகொலை செய்யும் சிங்களத்தை ஆதரிக்கும் சிங்கள தேசம் (சிறீ லங்கா), தான் ஒரு போதும் சுதந்திரமாக வாழமுடியாது.தமிழீழ தேசியப் படுகொலைக்கு துணைபோகும் வழியில் அது தனது சுருக்குக் கயிற்றை மென்மேமேலும் நெருக்கிக் கொள்கிறது.
4) தமிழ் சமரசவாத சமஸ்டி இயக்கம் 1977 இல் தமிழீழப் பிரிவினை வாக்கெடுப்புக் கோர நிர்ப்பந்திக்கப்பட்டது,தமிழீழ மக்கள் பிரிவினைக்கு வாக்களித்தனர்.
5) முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் `புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்` என்ற தேசிய விடுதலைப் பதாகையை ஏந்தியே நடத்தப்பட்டது.இதனால் தான் அந்தப் பேரியிக்கம் அழித்தொழிக்கப்பட்டது.
6) 2009 மே 18 இற்குப் பின்னால்`` போர் இல்லை, பயங்கரவாதம் இல்லை, வன்முறை இல்லை``
7) கூடவே நாலரை ஆண்டுகள் தாண்டியும் தமிழர்களுக்கு நிலம் இல்லை,விவசாயம் இல்லை,கடற்தொழில் இல்லை,உள்ளூர்த் தொழில் இல்லை,பாதுகாப்பு இல்லை, சுதந்திரம் இல்லை,போராட உரிமை இல்லை கேவலம் மாகாண சபைக்கே அதிகாரம் இல்லை. தாய் நில ஆக்கிரமிப்பு தொடர அநுமதித்தால் தமிழீழம் இல்லை.
8) ஆதலால் தமிழர் தம் தலைவிதியைத் தீர்மானிக்க தமிழீழப் பொதுவாக்கெடுப்பு நடத்து!
போர்க்குற்றத் தண்டனை:
1) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழீழத்தை ஆக்கிரமிக்க சிங்களம் ஏவிய தேசிய ஆக்கிரமிப்பு யுத்தம்.
2) தமிழீழம் (விடுதலைப் புலிகள்) நடத்தியது, தற்காப்பு யுத்தம்!
3) சிங்களம் NO FIRE ZONE என திட்டமிட்டு தீர்மானித்து அறிவித்த நிலப்பரப்பு அழித்தொழிப்பில் இருந்து மக்கள் தப்பிக்க முடியாத படுகொலைப் பிராந்தியம் ஆகும்.
4) அங்கே ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் தமிழ் உயிர்களை சிங்களம்
முன்னேற்பாடான திட்டத்தின்படி பலிகொண்டது.
5) முப்பது ஆண்டுகால யுத்தத்தின் இறுதி நாட்களில் ஆனந்தபுர போர்க்களத்தில் விடுதலைப்புலி இராணுவத் தலைமை அணியை, விசவாயு அடித்து இந்திய விரிவாதிக்க அரசு படுகொலை செய்து, பழி தீர்த்ததுடன் புலிகளின் ஈழப் போர் முடிவுக்கு வந்தது. இது வரைக்கும் பக்ச பாசிஸ்டுக்களின் வலது கரமாக இருந்தவர்கள் ஏகாதிபத்தியவாதிகளும்,இந்திய விரிவாதிக்க அரசுமே!
6) அமெரிக்காவினதும்,பிரித்தானியாவினதும் வரலாறு சர்வதேச போர்க்குற்றங்கள் மீதுதான் இன்றும் கட்டியெழுப்பப்பட்டுவருகின்றது!
7) சர்வதேச போர்க்குற்றவாளிகளின் தயவில் உள்ளூர் போர்க்குற்றவாளிகளிகளுக்கு தண்டனை வழங்கும் செயல்தந்திரம் கோமாளித்தனமானது.கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதீர்கள் என ராஜபக்ச டேவிட் கமெரனை எச்சரித்துள்ளார்!
8) மிக விசேடமாக ஒபாமா போரின் இறுதி நாட்களில் ஆயுதங்களை ஒப்படைத்து புலிகள் சிங்களத்திடம் சரணடைய வேண்டுமென பகிரங்கமாக உலகத்துக்கு அறிவித்து தமிழீழத்தை நிராயுத பாணி ஆக்கி படுகொலைக்கு ஆளாக்கினார்.
9) எனவே தமிழீழப் போர்க்குற்றவாளிகள் `ராஜபக்ச, மன்மோகன், ஒபாமா` அடங்கிய இலங்கை இந்திய அமெரிக்க கூட்டணியே ஆகும்.
10) போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது, விசாரணை அல்ல தண்டனையே தீர்வு!
போலிப் பொய்யுரைகள் குறித்து:
1) ஈழப்பிரச்சனை தேசிய இனப்பிரச்சனை `மனித உரிமைப் பிரச்சனையல்ல`!
2) இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் `சிவிலியன்கள்` அல்ல தமிழர்கள்!
3) தமிழர்களின் உரிமை `நல்லிணக்க வாழ்வு அல்ல` பிரிந்து செல்லும் உரிமை தமிழீழ வாக்கெடுப்பு.
4)இனப்படுகொலைப் பங்காளிகளின், இலங்கையின் அ) மனித உரிமை மீறல் ஆ) சட்டத்தின் ஆட்சியின் சீர் குலைவு இ) பொலிஸ் அரசு ஈ) ஊடக சுதந்திரப் பறிப்பு என்ற ஊளைகள் எல்லாம் ஏகாதிபத்திய தலையீட்டிற்கான, சந்தை மறு பங்கீட்டிற்கான `அருவருக்கத்தக்க குரூர` முயற்சியே!
சமரச சக்திகள் குறித்து:
இம் மூன்று நிலைகளிலும் சமரச சக்திகள் எதிரிகளுக்குச் சார்பாக, சந்தர்ப்பவாதிகளாக விடுதலைப் புரட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர்.
அவர்களுடைய முரண் நிலையைக் கண்டறிந்து அம்பலப்படுத்தி இச் சமூக சக்திகளை தனிமைப் படுத்த வேண்டும்.மக்களை எதிரிகளுக்கு எதிராக சலனமோ சஞ்சலமோ அற்ற திடமான புரட்சிப்பாதையின் மீது நிறுத்த வேண்டும்.இதுவே புதிய ஈழப் புரட்சியாளர்களின் இன்றைய பெரும் சவாலும்,பெரும் பணியும், பெரும் போராட்டமுமாகும்.
மாவீரர் நாள் முழக்கங்கள்
* ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க,ரசிய, சீன, ஆதிக்க சக்திகளை எதிர்த்து சிங்களமிடமிருந்து தமிழினம் விடுதலை பெற தமிழீழப் பொது வாக்கெடுப்புக்குப் போராடுவோம்!
* தமிழீழம் பாலஸ்தீனம் ஆவதை அநுமதியோம்,
தாய்நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மீள் குடியேற்ற உரிமைக்குப் போராடுவோம்!
* கருக்கலைப்பு,காணாமல் போதல்,இராணுவ கலப்புத்திருமணம் என இன அழிப்பு தொடர்வதை எதிர்ப்போம்!
* தமிழீழப் பெண்குலம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் அமைதிக்கால பெண்வதையை எச்சக்தி கொண்டும் தடுப்போம்!
* இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு மரம் நாட்டுவிழா நடத்திய அடிமை வடக்கு மாகாண சபையை
மாவீரர் துயின்ற இல்லங்களை மீளக் கட்டியமைக்கக் கோருவோம்!
* தமிழீழ மக்கள் விவசாயம் செய்த அவர்களது சொந்த பயன் தரு நிலமும், கடற் தொழிலாளிகளின் பெரும் கடலும் அவர்கள் உழைத்து வாழ அவர் வசம் கிடைக்க போராடுவோம், அந்நிய உதவி மாயை எதிர்ப்போம்!
* தமிழீழ விடுதலைக்கு புதிய விளக்கேற்ற தடையாக இருக்கும் சமரசவாதிகளைதனிமைப்படுத்துவோம்!
* தன்னியல்புப் பாதையின் தவறுகளைக் களைவோம், அரசியல் போர்த்தந்திரப் பாதையில் புரட்சிப் பயணம் தொடர்வோம்!
* தமிழீழத்தாயகத்தின் காவல் அரண்கள் விவசாயிகளும், கடற்தொழிலாளர்களும்,சிறுவர்த்தகர்களுமான
உழைக்கும் தமிழ் மக்களே என்பதை உணர்வோம்!
* `பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றத்தண்டனை`ஈழத்தமிழர் ஆதரவு உலக ஜனநாயக இயக்கம் வெற்றி பெற உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!