Tuesday, 31 December 2013

Lenin's Speech On Affiliation To The British Labour Party 1920


''Regarded from this, the only correct, point of view, the Labour Party is a thoroughly bourgeois party, because, although made up of workers, it is led by reactionaries, and the worst kind of reactionaries at that, who act quite in the spirit of the bourgeoisie. It is an organisation of the bourgeoisie, which exists to systematically dupe the workers with the aid of the British Noskes and Scheidemanns.''
Lenin 1920 


Lenin's Speech On Affiliation To The British Labour Party

The Second Congress Of The Communist International
July 19-August 7, 1920

Comrades, Comrade Gallacher began his speech by expressing regret at our having been compelled to listen here for the hundredth and the thousandth time to sentences that Comrade McLaine and other British comrades have reiterated a thousand times in speeches, newspapers and magazines.

I think there is no need for regret. The old International used the method of referring such questions for decision to the individual parties in the countries concerned. That was a grave error. We may not be fully familiar with the conditions in one country or another, but in this case we are dealing with the principles
underlying a Communist Party’s tactics. That is very important and, in the name of the Third International, we must herewith clearly state the communist point of view.

First of all, I should like to mention a slight inaccuracy on the part of Comrade McLaine, which cannot be agreed to. He called the Labour Party the political organisation of the trade union movement, and later repeated the statement when he said that the Labour Party is “the political expression of the workers organised in trade unions”.

I have met the same view several times in the paper of the British Socialist Party. It is erroneous, and is partly the cause of the opposition, fully justified in some measure, coming from the British revolutionary workers. Indeed, the concepts “political department of the trade unions “ or “political expression” of the trade
union movement, are erroneous. Of course, most of the Labour Party’s members are workingmen.

However, whether or not a party is really a political party of the workers does not depend solely upon a membership of workers but also upon the men that lead it, and the content of its actions and its political tactics. Only this latter determines whether we really have before us a political party of the proletariat.

Regarded from this, the only correct, point of view, the Labour Party is a thoroughly bourgeois party, because, although made up of workers, it is led by reactionaries, and the worst kind of reactionaries at that, who act quite in the spirit of the bourgeoisie. It is an organisation of the bourgeoisie, which exists to
systematically dupe the workers with the aid of the British Noskes and Scheidemanns.

We have also heard another point of view, defended by Comrade Sylvia Pankhurst and Comrade Gallacher, who have voiced their opinion in the matter. What was the substance of the speeches delivered by Gallacher and many of his friends? They have told us that they are insufficiently linked with the masses.

But take the instance of the British Socialist Party, they went on. It is still less linked with the masses and it is a very weak party. Comrade Gallacher has told us here how he and his comrades have organised, and done so really splendidly, the revolutionary movement in Glasgow, in Scotland, how in their wartime

tactics they manoeuvred skillfully, how they gave able support to the petty-bourgeois pacifists Ramsay MacDonald and Snowden when they came to Glasgow, and used this support to organise a mass movement against the war.

It is our aim to integrate this new and excellent revolutionary movement—represented here by Comrade Gallacher and his friends—into a Communist Party with genuinely communist, i.e., Marxist tactics. That is our task today.

On the one hand, the British Socialist Party is too weak and incapable of properly carrying on agitation among the masses; on the other hand, we have the younger revolutionary elements so well represented here by Comrade Gallacher, who, although in touch with the masses, are not a political party, and in this sense

are even weaker than the British Socialist Party and are totally unable to organise their political work.

Under these circumstances, we must express our frank opinion on the correct tactics. When, in speaking of the British Socialist Party, Comrade Gallacher said that it is “hopelessly reformist”, he was undoubtedly exaggerating.

But the general tenor and content of all the resolutions we have adopted here show with absolute clarity that we demand a change, in this spirit, in the tactics of the British Socialist Party; the only correct tactics of Gallacher’s friends will consist in their joining the Communist Party without delay, so as to modify its tactics

in the spirit of the resolutions adopted here.

If you have so many supporters that you are able to organise mass meetings in Glasgow, it will not be difficult for you to bring more than ten thousand new members into the Party. The latest Conference of the British Socialist Party, held in London three or four days ago, decided to assume the name of the Communist

Party and introduced into its programme a clause providing for participation in parliamentary elections and affiliation to the Labour Party.

Ten thousand organised members were represented at the Conference. It will therefore not be at all difficult for the Scottish comrades to bring into this “Communist Party of Great Britain” more than ten thousand revolutionary workers who are better versed in the art of working among the masses, and thus to modify the

old tactics of the British Socialist Party in the sense of better agitation and more revolutionary action.

In the commission, Comrade Sylvia Pankhurst pointed out several times that Britain needed “Lefts”. I, of course, replied that this was absolutely true, but that one must not overdo this “Leftism”. Furthermore she said that they were better pioneers, but for the moment were rather noisy. I do not take this in a bad sense,

but rather in a good one, namely, that they are better able to carry on revolutionary agitation.

We do and should value this. We expressed this in all our resolutions, for we always emphasise that we can consider a party to be a workers’ party only when it is really linked up with the masses and fights against the old and quite corrupt leaders, against both the Right-wing chauvinists and those who, like the Right

Independents in Germany, take up an intermediate position. We have asserted and reiterated this a dozen times and more in all our resolutions, which means that we demand a transformation of the old party, in the sense of bringing it closer to the masses.

Sylvia Pankhurst also asked: “Is it possible for a Communist Party to join another political party which still belongs to the Second International?”

She replied that it was not. It should, however, be borne in mind that the British Labour Party is in a very special position: it is a highly original type of party, or rather, it is not at all a party in the ordinary sense of the word. It is made up of members of all trade unions, and has a membership of about four million, and

allows sufficient freedom to all affiliated political parties. It thus includes a vast number of British workers who follow the lead of the worst bourgeois elements, the social-traitors, who are even worse than Scheidemann, Noske and similar people.

At the same time, however, the Labour Party has let the British Socialist Party into its ranks, permitting it to have its own press organs, in which members of the selfsame Labour Party can freely and openly declare that the party leaders are social-traitors. Comrade McLaine has cited quotations from such statements by
the British Socialist Party.

I, too, can certify that I have seen in The Call, organ of the British Socialist Party, statements that the Labour Party leaders are social-patriots and social-traitors. This shows that a party affiliated to the Labour Party is able, not only to severely criticise but openly and specifically to mention the old leaders by name, and
call them social-traitors.

This is a very original situation: a party which unites enormous masses of workers, so that it might seem a political party, is nevertheless obliged to grant its members complete latitude. Comrade McLaine has told us here that, at the Labour Party Conference, the British Scheidemanns were obliged to openly raise the
question of affiliation to the Third International, and that all party branches and sections were obliged to discuss the matter. In such circumstances, it would be a mistake not to join this party.

In a private talk, Comrade Pankhurst said to me: “If we are real revolutionaries and join the Labour Party, these gentlemen will expel us.”

But that would not be bad at all. Our resolution says that we favour affiliation insofar as the Labour Party permits sufficient freedom of criticism. On that point we are absolutely consistent.

Comrade McLaine has emphasised that the conditions now prevailing in Britain are such that, should it so desire, a political party may remain a revolutionary workers’ party even if it is connected with a special kind of labour organisation of four million members, which is half trade union and half political and is headed
by bourgeois leaders.

 In such circumstances it would be highly erroneous for the best revolutionary elements not to do everything possible to remain in such a party. Let the Thomases and other social-traitors, whom you have called by that name, expel you. That will have an excellent effect upon the mass of the British workers.

The comrades have emphasised that the labour aristocracy is stronger in Britain than in any other country. That is true. After all, the labour aristocracy has existed in Britain, not for decades but for centuries.

The British bourgeoisie, which has had far more experience—democratic experience—than that of any other country, has been able to buy workers over and to create among them a sizable stratum, greater than in any other country, but one that is not so great compared with the masses of the workers. This stratum is
thoroughly imbued with bourgeois prejudices and pursues a definitely bourgeois reformist policy.

In Ireland, for instance, there are two hundred thousand British soldiers who are applying ferocious terror methods to suppress the Irish. The British Socialists are not conducting any revolutionary propaganda among these soldiers, though our resolutions clearly state that we can accept into the Communist International

only those British parties that conduct genuinely revolutionary propaganda among the British workers and soldiers. I emphasise that we have heard no objections to this either here or in the commissions.

Comrades Gallacher and Sylvia Pankhurst cannot deny that. They cannot refute the fact that, in the ranks of the Labour Party, the British Socialist Party enjoys sufficient freedom to write that certain leaders of the Labour Party are traitors; that these old leaders represent the interests of the bourgeoisie; that they are
agents of the bourgeoisie in the working-class movement.

They cannot deny all this because it is the absolute truth. When Communists enjoy such freedom it is their duty to join the Labour Party if they take due account of the experience of revolutionaries in all countries, not only of the Russian revolution (for here we are not at a Russian congress but at one that is international).

Comrade Gallacher has said ironically that in the present instance we are under the influence of the British Socialist Party.

That is not true; it is the experience of all revolutions in all countries that has convinced us. We think that we must say that to the masses. The British Communist Party must retain the freedom necessary to expose and criticise the betrayers of the working class, who are much more powerful in Britain than in any other
country. That is readily understandable.

Comrade Gallacher is wrong in asserting that by advocating affiliation to the Labour Party we shall repel the best elements among the British workers. We must test this by experience. We are convinced that all the resolutions and decisions that will be adopted by our Congress will be published in all British
revolutionary socialist newspapers and that all the branches and sections will be able to discuss them.

The entire content of our resolutions shows with crystal clarity that we are representatives of working-class revolutionary tactics in all countries and that our aim is to fight against the old reformism and opportunism. The events reveal that our tactics are indeed defeating the old reformism.

In that case the finest revolutionary elements in the working class, who are dissatisfied with the slow progress being made—and progress in Britain will perhaps be slower than in other countries—will all come over to us. Progress is slow because the British bourgeoisie are in a position to create better conditions for
the labour aristocracy and thereby to retard the revolutionary movement in Britain.

That is why the British comrades should strive, not only to revolutionise the masses—they are doing that splendidly (as Comrade Gallacher has shown), but must at the same time strive to create a real working-class political party. Comrade Gallacher and Comrade Sylvia Pankhurst, who have both spoken here, do not as yet belong to a revolutionary Communist Party.

That excellent proletarian organisation, the Shop Stewards’ movement, has not yet joined a political party. If you organise politically you will find that our tactics are based on a correct understanding of political developments in the past decades, and that a real revolutionary party can be created only when it absorbs the best elements of the revolutionary class and uses every opportunity to fight the reactionary leaders, wherever they show themselves.

If the British Communist Party starts by acting in a revolutionary manner in the Labour Party, and if the Hendersons are obliged to expel this Party, that will be a great victory for the communist and revolutionary working class movement in Britain.

Lenin 1920

Thursday, 26 December 2013

தேசிய சுயநிர்ணய உரிமை, மார்க்சியத்தின் பத்துக் கோட்பாடுகள்! செல்வம் செங்கொடிக்கு சமர்ப்பணம்!


செங்கொடிக்கு சமர்ப்பணம்:

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? 

1) ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது.

2) ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது.

3) சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. சுய நிர்ணய உரிமை என்பதை தனி அரசாக நிலவும் உரிமை என்ற பொருளில் அன்றி வேறு விதமாக வியாக்கியானம் செய்வது தவறானதாகும்.பிரிந்து செல்லும் உரிமையும், பிரிவினையும் ஒன்றல்ல.

4) பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

5)இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும்.

6) அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி
மட்டுமே கவலைப்படும்.

7) பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது.

8)எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை
இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன.

9) அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும்.

10)  ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்,அத்துடன் இது ஏகாதிபத்திய சகாப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

மாமேதை லெனின்


குறிப்பு: இந்த பத்துக் கட்டளைகளில் எந்த ஒன்றை விலக்கிவிட்டு `சுயநிர்ணயம்` பற்றிப் பேசினாலும் அது மார்க்சியம் ஆகாது.


======================================================================

தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான 

மார்க்சியத்தின் விடுதலைப் பதாகை!

இதுவே தமிழீழ விடுதலைப் பாதை!!


Monday, 2 December 2013

சிங்களத்தின் யுத்த இழப்புக் கணக்கெடுப்பு, இனப்படுகொலையை மூடிமறைக்கும் இருட்டடிப்பு!

பக்ச பாசிச போர்க்குற்றவாளிகளின் `யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` இனப்படுகொலையை மூடிமறைக்கும் மோசடி,இருட்டடிப்பு!

பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கையில் நடத்திய இனப்படுகொலைக்கும், மானுட விரோத மற்றும் போர்க்குற்றங்களுக்கும், தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் வலுத்து ஒலித்து வருகின்றது.

இதிலிருந்து தப்பித்துக்கொள்ளவும்,இவ்வியக்கத்தை திசை திருப்பவும் தம்மால் ஆன வழிகளில் எல்லாம் முயன்றனர் பக்ச பாசிஸ்டுக்கள். அத்தகைய ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபட்டு அம்பலப்பட்டு நின்றனர்.

இப்போது, போர்க்குற்றத்தின் பங்காளிகளான அமெரிக்கா,இந்தியா,சீனா போன்ற நாடுகளாலும் சிங்களத்துக்கு முண்டு கொடுக்க இயலாதவாறு முரண்பாடு முற்றிவிட்டது.இதிலிருந்து தப்பித்துக்கொள்ள இப்போது `சாகடித்தோர்`,மற்றும் `சாய்த்துக் கொண்டுபோனோர்,சொத்தழிப்பு தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப் போவதாகக் கதைவிடுகின்றது!

சிங்களம் கணக்குக் காட்டுவதில் பலே கில்லாடி!

மகாவம்சத்தின் தப்புக் கணக்கைத்தான் சிங்களம் இன்னும் இலங்கையின் குடியேற்ற வரலாறாக போதித்து வருகின்றது.

சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ,குடும்பங்களைத் தலை வேறு,கால் வேறாகத் துண்டாடி, தமிழகத்திற்கு நாடு கடத்தப்பட்டமலையகத் தமிழருக்கு இன்றுவரை கணக்கில்லை.

சிங்கள-முஸ்லிம் கலவரம் முதல், 1983 ஜூலை இனப்படுகொலை வரை,
மாறி,மாறி ஏவிய `கலவரங்கள்` மூலம் சிங்களம் கொன்று குவித்தவர்களுக்கு எந்தக் கணக்கும் இல்லை! கொன்றவர்களுக்கு விசாரணையோ, தண்டனையோ கூட இல்லை.மாறாக இந்தக் குற்றவாளிகள் பதவி உயர்வும், பரிசில்களும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதற்கு ஏராளம் உதாரணங்கள் இலங்கையில் உண்டு.

1977 பொதுத்தேர்தலை ஒட்டி, எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் அவர்களும், அவரது பாரியாரும் யாழ் பொலிஸ் நிலையத்துக்குச்  சென்றபோது, பாரியாரை வசை பாடி, வாகனத்தை அடித்து நொருக்கிய ஒரு சாதாரண சிங்கள பொலிஸ்காரர்,துணைப் பொலிஸ் அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டு, சிங்களப் பகுதிக்கு இடமாற்றம் பெறும் சலுகையும் பெற்றார்!

யுத்தத்திற்குமுன்னால்,எந்தளவுக்கு தமிழர்களுக்கு அநீதியும் ,அட்டூழியமும், இழப்பும் ஏற்படுத்துகின்றார்களோ, அந்தளவுக்கு அரசியல் செல்வாக்கும், அதிகாரச் சுவையும்,பதவி உயர்வும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை யுத்த காலத்தில் `கண்மூடித்தனமான தாக்குதலும், காட்டுமிராண்டித்தனமான படுகொலையும் எந்தளவுக்கெந்தளவு, அதிகமாகவும்,குரூரமாகவும் கட்டவிழ்த்து விடப்படுகின்றதோ அந்தளவுக்கு பதவி உயர்வும் , அதிகார அந்தஸ்த்தும் அளிக்கப்பட்டு வந்தது.` இராணுவ ஒழுக்க நியதி-Code of Conduct- என்பது இன ஒடுக்குமுறையாகவே இருந்தது.இவ்வாறு தான் `தலை முதல் கால் வரை` ஒரு இன வெறிப் பட்டாளம் கட்டியமைக்கப்பட்டது.இது முப்படைகளுக்கும் பொருந்தும்,
முழு அரச எந்திரத்துக்கும் பொருந்தும்.

முப்பது ஆண்டுகாலப் போரில் ஒரு சமர்க்களத்திலாவது சிங்களம் வெற்றி பெற்றதில்லை.ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதலில் இருந்து, ஆனையிறவு பெரும்படைத்தள வீழ்ச்சி வரை பின்வாங்கி ஓடிய பெருமை மிக்கது சிங்களம்.பின்னர் இந்தத்தளபதிகளுக்கு பட்டயங்களும், பதவி உயர்வுகளும் எதனால் கிடைத்தன? படுகொலைகளாலும்,பெண் வதைகளாலும், பாதாளக்குழிகளாலும் பெறப்பட்டவை அவை. அதிகம் அழித்தவன் அதிகம் செழித்தான்.சரத் பொன் சேகா,சந்திர சிறீ, மேஜ ஜெனரல் சவேந்திர சில்வா போன்றவர்கள் இவ்வாறு தான் `கட்டளைத் தளபதிகள்` ஆனார்கள்.இப்படி ஒரு பட்டியலே போடலாம் விதி விலக்கில்லாமல் அனைத்துத் தளபதிகளுக்கும்!

யுத்தகாலத்தில் போர்க்களச் சேதங்கள் குறித்து `லங்கா புவத்`- சிங்கள அரச ஊடகம் காட்டிய கணக்குப் புழுகு மூட்டைகளால் ஒரு செங்கோட்டையே கட்டலாம்.ஏறத்தாழ 1986 அளவில் சிங்களம் கொன்றழித்தாகக் கூறிய `புலிப் பயங்கரவாதிகளின்` எண்ணிக்கைபுலிகளின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் தாண்டிவிட்டது!இதற்குப் பிறகுதான் இந்திய ஆக்கிரமிப்புப் படை தோற்கடிக்கப்பட்டது.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்த சிங்கள பின்தங்கிய கிராமப்புற சிறு விவசாய இளைஞர்களின், ஜே.வி.பி தலைமையில் நடத்தப்பட்ட கிளர்ச்சியில் நரபலி எடுக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன கணக்கு? எங்கே விசாரணை? ஜே.வி.பி.தலைவர் ரோகண விஜேவீராவை அவர் பதுங்கியிருந்த (தலைமறைவாக இருந்த) மாளிகையில் கைது செய்து, நீதி விசாரணை எதுவுமின்றி சுட்டு வீசியது பிரேமதாசாஅரசு.இங்கேதான் இரத்தத்தை பருகவும், பிணத்தைப் புசிக்கவும் கற்றுக்கொண்டது சிங்களம். இது முள்ளிவாய்க்காலுக்கான ஒத்திகையாகும்.அங்கே (சிறீலங்காவில்) களனி ஆறு காவிச்சென்றது, இங்கே (தமிழீழத்தில்) நாயும் தின்னாமல் நாறிக்கிடந்து மண்ணோடு மண்ணானது வேட்கை!

அன்றைய மனித உரிமையாளரும், இன்றைய மாட்சிமை தங்கிய மகாராஜாவுமாகிய ராஜபக்சவோ, யு.என்.பி.ஆட்சியாளர்களோ கால்
நூற்றாண்டுகளாக தம் சொந்தத் தேசிய சிங்கள இன இளைஞர்களை,அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்தும், நாட்டுப் பிரிவினையை எதிர்த்தும் போராடிய தங்கள் சொந்தப் புதல்வர்களுக்கு நீதி வழங்கவில்லை.

ரோகன விஜே வீர ஈழப்பிரிவினை
எதிர்ப்பாளர்
சமூக தேசிய வெறியர்களான ஜே.வி.கும்பலும், அதிலிருந்து கிளைவிட்ட NGO உதிரிகளும், குழுக்களும் இத்தகைய ஒரு நீதிக்காக இன்றுவரை போராடவில்லை.ஜே.வி.பி.சமூக தேசிய வெறியர்களோ கொலைபாதகர்களுடன் கூட்டமைத்து, தமிழின விரோத நஞ்சை சிங்கள மக்களிடையே கக்கி அரச அதிகார சுகம் அநுபவித்து வருகின்றனர்.

தமிழீழம் முழுவதும் மாவீரர் துயிலும் இல்லங்கள் உழுது தரை மட்டமாக்கப்பட்டுவிட்டன. ஆனால் இரு தேசிய இனமக்களும் வெளியேறு என்று கோரி இரத்தம் சிந்திப் போராடி, இறுதியில் இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவே வெளியேற வேண்டும் என்று கோரிய இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு ஒரு நினைவாலயத்தை எழுப்பி சிங்களம் தொழுது வருகின்றது.

சிங்களம் காட்டாத கணக்கு:

விடுதலைப் புலிகளின் யுத்தத்தின் இறுதிக்கடத்தில்

 1) முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சிக்குண்டிருந்த மக்கள் தொகை
2) நந்திக்கடல் தாண்டி சிங்களத்திடம் சரணடைந்த மக்கள் தொகை
3) யுத்தக் கைதி மக்கள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் தொகை
4) அங்கிருந்து கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட நபர்கள் தொகை
5) சரணடைவு உத்தரவை ஏற்று, சரணடைந்த போராளிகளின் தொகை,
6) பகிரங்கமாக அறியப்பட்டு சரணடைந்த முக்கிய நபர்களின்தொகை, நிலை தொடர்பான பதில்
(உதாரணமாக: அனந்தி அவர்களின் கணவர் எழிலன்,ஈரோஸ் பாலகுமார், புலவன் புதுவை இரத்தினதுரை) இவையெல்லாம் புள்ளிவிபரத் திணைக்களம் தகவல் திரட்டி பதில் சொல்லுகின்ற விடயங்கள் அல்ல.இந்த தகவல்களை மக்களிடம் இருந்து பெற முடியாது அரசிடம் இருந்தே பெற முடியும்.

இவற்றுக்கு எல்லாம் சிங்களத்திடமிருந்து எந்தப் பதிலும் இதுவரை இல்லை.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்த யுத்தகாலம் முழுமையிலும், இறுதிக்கட்டத்திலும் மொத்தமாக இறந்த முப்படைத்தரப்பினர்
எத்தனைபேர் என்று கூட சிங்களம் இதுவரை கணக்குக் காட்டியதில்லை!

இத்தகைய `கணக்கெடுப்பு வரலாற்று` கீர்த்திகள் பெற்ற சிங்களம், இப்போது `யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` நடத்திக்கொண்டிருக்கின்றது.

 `யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` சிங்களத்தின் பிரகடனம்.

1) கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மற்றொரு கோரிக்கை நிறைவேற்றம்.

2) யுத்த உயிர் இழப்பு நாற்பதினாயிரம்,ஒன்றரை இலட்சம் என கூறுபவர்கள் கூறட்டும், நாம் ஆய்வு செய்து உண்மையை நிரூபிப்போம்.

3) இது ஒட்டுமொத்த இலங்கை நாடு தழுவிய கணக்கெடுப்பாகும்.

4) 1982 இலிருந்து 2009 வரையான 27 ஆண்டு நிகழ்வுகளின் கணக்கெடுப்பு இதுவாகும்.

5)14,022 கிராம சேவகர் பிரிவுகளில், 16,000 பணியாளர்கள் இக்களப்பணியில் இறக்கப்பட்டுள்ளனர்.

6)Thursday November 28 இல் ஆரம்பித்து  டிசம்பர் 15 2013 இல் இந்த களப்பணி முடிவு செய்யப்படும்.

7)சர்வதேச தரம் வாய்ந்த புள்ளிவிபர மதிப்பீடுகளை வழங்கியுள்ள புள்ளிவிபரத் திணைக்களத்தால் இக்கள ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது.

8)இதன் மூலம் உலகத்துக்கு  உண்மையை உரைக்கும் எமது அரசின் கடமையை நாம் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு சிங்களம் பிரகடனம் செய்துள்ளது.

ஆனால் பி.பி.சி.தமிழோசையில் மக்கள் அளித்த தகவல்கள் முற்றிலும் வேறுவிதமாக உள்ளன.

Professionally designed household survey

1) இந்தக் கள ஆய்வுக்காக L1,L2 என இரண்டு படிவங்கள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்டுள்ளன.

2) இதில் படிவம் 1ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களதும் பொதுவான விபரங்கள் ( பெயர்,வயது,தொழில்,படிப்பு,மதம்
இத்தியாதி..இத்தியாதி) அடங்கியதாகும்.மேலும் இது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டும் அல்ல நாடு தழுவிய இலங்கையின்
மொத்தச் சனத்தொகைக்குமான கள ஆய்வாகும்.இதில் எவருக்காவது போரினால் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் ) L2 படிவம் நிரப்பப் படுகின்றது.

3) L2 படிவம் யுத்த உயிர் இழப்புகள் குறித்து பின்வரும் முக்கிய கேள்விகளை உள்ளடக்கியுள்ளது, அவையாவன;

அ) புலிப்பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டவர்கள்,

ஆ) வேறு பயங்கரவாதக் குழுக்களால் கொலை செய்யப்பட்டவர்கள்,

இ) இராணுவம் என சந்தேகப்படும் குழுக்களால்  கொலை செய்யப்பட்டவர்கள்.

ஆக இந்த`` professionally designed household survey`` இல்  இலங்கை முப்படையினரால் குறிப்பாக இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்ற ஒரு கேள்வியே இல்லை.இந்தக் கேள்வி இல்லாமல் யுத்த இழப்பைக் கணக்கிடுவது எப்படி? இராணுவம் என சந்தேகிக்கப்படும் குழுக்கள்
30 ஆண்டுகள் கொலை செய்து கொண்டு திரிய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? ஒருவேளை இந்தக் கள ஆய்வில் இராணுவம் என சந்தேகப்படும் குழுக்களால்  கொலை செய்யப்பட்டவர்கள், 40000 என அறியப்பட்டால், அந்த இராணுவம் என சந்தேகப்படும் குழுக்களை எங்கே கண்டு பிடிப்பது? எப்படித் தண்டிப்பது? எவரைத் தண்டிப்பது?

4) மேலும் இந்த  L2 படிவம் கணவன் மனைவி பிள்ளைகள் அடங்கிய குடும்பத்தை முறையீடு செய்வதற்கு உரிமையுள்ள சமூக அலகாக
அனுமானிக்கின்றது.இதன் மூலம் ஒரு குடும்பம் முற்றாக அழிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இந்தக் கணக்கெடுப்பில் இணைத்துக்
கொள்ளப்படமாட்டார்கள்.அவர்கள் சார்பில் எவரும் முறையீடு செய்யமுடியாது.இதனால் தான் இது `` professionally designed household survey`` என
அழைக்கப்படுகின்றது.

நவாலி புனித
பேதுருவானவர் தேவாலயம்

சிங்களம் இந்த யுத்தத்தில் தமிழீழ மக்களை குடும்பம் குடும்பமாகக் காவுகொண்டது.வீடு வீடாகச் சென்று நடத்திய படுகொலைகள் மட்டுமல்ல,
பன்குளம் விவசாயிகள் படுகொலை, குமுதினிப் படகுப் படுகொலை, நவாலி தேவாலயப் படுகொலை,புத்தளம் பள்ளிவாசல்ப் படுகொலை இவ்வாறு
தொகுப்புத் தொகுப்பாக, கூட்டம் கூட்டமாக, குவியல் குவியல்களாக கொன்று குவித்திருக்கின்றது.இதில் எல்லாம் குடும்பம் குடும்பமாக மக்கள்
கொன்றொழிக்கப்பட்டனர்.திருமண மண்டபத்தில் குண்டு வீசி திருமணத் தம்பதிகளை கொன்றொழித்து மணவீட்டைப் பிணவீடாக்கியது சிங்களம்.

நவாலி புனித பேதுருவானவர் தேவாலயம் தஞ்சம் புகுந்த அகதிகள் சந்திரிக்கா அரசின் விமானத்தாக்குதலில் ஆலயத்துக்குள் குடும்பம் குடும்பமாக பலியான சோகம்.












எனவே இந்த ஒரு அனுமானமே- அல்லது தடையே யுத்த இழப்பின் பாதிச் சனத்தொகை பதிவு பெறாமல் போவதற்கு போதுமானது.
5) 1982 இலிருந்து 2009 வரையான கால யுத்த இழப்பைக் கணக்கிடும் .professionally designed household survey ஏனோ இந்திய ஆக்கிரமிப்புப் படையின் கொலை வெறியாட்டம் குறித்தும் எதுவும் கேளாமல் இருட்டடிப்புச் செய்துவிட்டது.

ஜனாதிபதி பிரேமதாசா நாட்டை விட்டு வெளியேறக் கோரிய IPKF இற்கு சிங்களம் கட்டியெழுப்பியுள்ள நினைவாலயம்.

ஆக இதுதான் சிங்களம் யுத்த இழப்புக் கணக்கெடுப்பு நடத்தும் சீத்துவம்.

இவ்வாறு ஒரு போலிக் கணக்கெடுப்பை நடத்தி உண்மையான இழப்பை மறைக்கவும், தான் நடவடிக்கை எடுத்ததாகக் காட்டவும், அதுவே சரியானது என வாதாடவும் முயலுகின்றது சிங்களம்.


போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவோம்! தமிழீழப் பிரிவினைக்கு பொது வாக்கெடுப்புக் கோருவோம்!!

 என நாம் முழங்கும் போது, பக்ச பாசிஸ்டுக்களின் யுத்தப் பங்காளிகளான, அமெரிக்க ஏகாதிபத்திய வாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும்,ஐ.நா சபையும் `நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நிறைவேற்று` என சிங்களத்தைக் கோரிவந்தனர்.அதன் படி சிங்களம் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்திவிட்டது.காணாமல் போனோர் ஆணைக்குழு முதலாவது கலைந்து மற்றது பிறக்கப்போகின்றது.இப்போது யுத்த இழப்புக் கணக்கெடுப்பு நடத்துகின்றது.ஆக ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவை எதிர்கொள்ள சிங்களம் தயாராகிவருகின்றது.வடக்குத் தேர்தல் விக்னேஸ்வரன் வீட்டுத்தோட்டம் வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றார், விக்கி சம்பந்தன்,சுரேஸ் சுமந்திரன் &co  ஜனாதிபதியோடு நல்லிணக்கம் கண்டுள்ளனர்.

தமிழீழ மக்களுக்கு கிடைத்தது என்ன?

யுத்தக் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை, இறுதிக்கட்டத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை,காணாமல் காவு கொள்ளப்பட்டோர் யாரும் கண்டுபிடிக்கப் படவில்லை,சலிப்புற்ற மக்கள் மரணச் சான்றிதழ்கள் பெறத் தொடங்கி விட்டனர்.யுத்தத்தேவைக்காக கைப்பற்றப்பட்ட விவசாயக் காணிகள் மீளக் கையளிக்கப்படவில்லை.மீள்குடியேற்ற உரிமை மறுக்கப்படுகின்றது.நில அபகரிப்பும்,பெளத்த விரிவாதிக்கமும் பரவுகின்றது.யுத்தத்துக்குப் பின்னான சமாதானச் சந்தையை பங்கு போட அந்நிய வல்லூறுகள் பசி தாகம் கொண்டு விசர் நாய் போல் அலைகின்றன.பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கையை ஒரு சூதாட்ட நாடாக மாற்றி வருகின்றனர்.இதற்கேற்ப இராணுவமயப் படுத்தி வருகின்றனர்.

யுத்தத்துக்குப் பின்னான சமாதானச் சந்தையை பங்கு போடும் உலகமயமாக்கலும்,தமிழீழ சுய நிர்ணய (வாக்கெடுப்பு) மறுப்பும்,
இராணுவ மயமாக்கலும் ஒன்றோடு ஒன்று கை கோர்த்து பயணிக்கின்றன.

இந்தப் பின்புலத்தில் சிங்களம் தமிழீழ ஆக்கிரமிப்பை தீவிரப் படுத்திவருகின்றது.பாலஸ்தீனத்தை இஸ்ரேல் விழுங்கிய மாதிரி தமிழீழத்தை விழுங்க கங்கணம் கட்டியுள்ளது. இதைத் தமிழர்கள் தடுக்க இயலாதவாறுஇராணுவம்,புலனாய்வுப்பிரிவு,கூலிப்படைகள்,உள்ளூர் உளவாளிகள் அடங்கிய பாசிசச் சூழலில் தமிழீழம் கூண்டுக் கிளியாகியுள்ளது. வடக்கில் நாலு மனிதருக்கு  ஒரு இராணுவீரர் என விகிதாசாரம் இருப்பதாக தேர்தல் ஜனநாயக நீதிபதி விக்கி கூறுகின்றார்.தமிழீழ விடுதலை யுத்தம் ஓய்ந்ததோடுஇஸ்லாமியத் தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் எதிரான தாக்குதலை பாசிச பிக்கு முன்னணி ஏவிவருகின்றது.இவைதான் ஏகாதிபத்தியவாதிகளும்,இந்திய விரிவாதிக்க அரசும்,விக்கி சம்பந்தன்,சுரேஸ்,சுமந்திரன் & co வும் தமிழீழ மக்களுக்குப் பெற்றுக்கொடுத்தவை.

இந்த நிலைமையைப் புரிந்து தமிழீழ மக்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுகின்றன.இங்கிலாந்துப் பிரதமர்
டேவிட் கமெரனின் அதிகாரபூர்வ வடக்கு சுற்றுப் பயணத்தை வழிமறித்து தமிழீழ மக்கள் நடத்திய பிரச்சார சமர், வலிகாமம் மேற்கு மக்களின் நில
மீட்புப் போராட்டம், 2013 தமிழீழ மாவீரர் தின அனுஸ்டிப்பு,மலையகத் தமிழர்களும், இஸ்லாமியத் தமிழர்களும் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்கள் நிரூபித்துள்ளன.

ஏகபோக உலகமய பொருளாதார அமைப்பு மீளமுடியதா நெருக்கடியில் சிக்குண்டுள்ளது.இதன் விளைவாக இதைச் சார்ந்த உற்பத்திச் செயல் முறையைப்பின்பற்றிய நாடுகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.இதிலிருந்து மீள்வதற்காக மெற்கொள்ளப்பட்ட உலக மறுபங்கீட்டு யுத்தங்கள், ஆட்சிக்கவிழ்ப்புகள்,அரபு வசந்தங்கள்,வர்ணப் புரட்சிகள் அத்தனையும் தோல்விகண்டுவிட்டன.வேலையின்மைப் பிரச்சனை ஐரோப்பாவை உலுப்பி எடுக்கின்றது.குறிப்பாக இளைஞர் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.சில நாடுகளில் 50வீதத்தை எட்டிவிட்டது.உள்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் -பொருளாதார சிக்கன நடவடிக்கைகள்-இலட்சோப இலட்சம் மக்களை தம் சொந்த அரசுகளுக்கு எதிராக வீதியில் இறக்கியுள்ளது.மேலை நாடுகளின் பெரு நகரப் பெருந்தெருக்கள் எல்லாம் போர்க்களமாய்க் காட்சியளிப்பது நாளாந்த நிகழ்வாகிவிட்டது.இது கீழை நாடுகள் எங்கும் பரவிவருகின்றது. எவ்வளவுதான் பாசிச சர்வாதிகாரத்தக் கொண்டு இவர்கள் மக்களை மிரட்டினாலும்,கோழைத்தனமான மேலும் கோரத்தனமான றோன் தாக்குதல் நடத்தி தமது வீரத்தைப் பறை சாற்றினாலும், இவர்கள் காகிதப் புலிகளே என்பதை போராடும் மக்கள் நிரூபித்து வருகின்றனர்.

எனவே நவீன காலனியாதிக்க தாசர்களின் ஏகாதிபத்திய,இந்திய விரிவாதிக்க சார்பு சமரசப் பாதையை எதிர்த்து, புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில்
தமிழீழ விடுதலைக்கு பொது வாக்கெடுப்புக்கோரி போராடுவோம்!

மலையக, இஸ்லாமிய தமிழர்களுடன் ஐக்கியப்படுவோம்!

உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!

பக்ச பாசிச,போர்க்குற்றவாளிகளின்
`யுத்த இழப்புக் கணக்கெடுப்பு` 
இனப்படுகொலையை மூடிமறைக்கும் மோசடி இருட்டடிப்பு!

என்ற முழக்கத்தை தெருமுனை எங்கும் அறைவோம்!

புதிய ஈழப்புரட்சியாளர்கள்


புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

Sunday, 24 November 2013

மாவீரர் பெரு நாளில் தமிழீழ விடுதலைக்கு விளக்கேற்றுவோம்!



தமிழீழப் போரில் இனிமேலும் 
ஒயோம் உறுதி!


கார்த்திகை 27- 2013 
இம்மாவீரர் பெரு நாளில், 
தமிழீழ விடுதலைக்கு விளக்கேற்றுவோம்!

மாண்ட நம் மக்களே மாவீரத் தோழர்களே செவ்வணக்கம்!

அன்பார்ந்த தமிழீழமக்களே,
மாணவர்களே,இளைஞர்களே,உழைக்கும் விவசாய, கடற்தொழிலாள, சிறுவர்த்தக,அதிகார சிற்றூழிய வெகுஜனங்களே, ஈழத்தமிழ்ப் பெண் குலமே,

இன்று கார்த்திகை 27-2013 மாவீரர் பெரு நாள்.

முதல் முப்பது ஆண்டு பகை முடிக்க, அடுத்த முப்பது ஆண்டு தமிழீழ தேசிய விடுதலைக்காய் மாண்டு மடிந்த மக்களதும், மாவீரத் தோழர்களதும் கனவைச் சுமக்க சபதம் ஏற்கும் பெருநாள்,தமிழீழ தேசிய விடுதலைத் திரு நாள்!

நிணமும்,பிணமும்,இரத்தமும்,சதையும்,நிலமும் புலமும் அவலமும் ஓலமும்,அழுகையும்,தொழுகையும்,இறைஞ்சலும் இளவும் என இன்றும் வாழும் தேசத்தின் எழுகைக்கு அறை கூவும் போர் நாள்!!


அறைகூவல்: 

`பொது வாக்கெடுப்பு, போர்க்குற்றத் தண்டனை` !

அன்பார்ந்த தமிழீழ மக்களே,

இந்த அறைகூவலை முரணற்ற ஜனநாயக வழியில் முன்வைப்பதும், அதற்காக முன் நின்று போராடுவதும் தான், மாண்ட நம் மக்களுக்கும் மாவீரத் தோழர்களுக்கும், நாம் செலுத்தும் காணிக்கையாகும்! இது  நமது தேசியக் கடமையுமாகும்.

அறைகூவலை முரணற்ற ஜனநாயக வழியில் முன்வைப்பது:


பொது வாக்கெடுப்பு

1) 1947 போலிச் சுதந்திரத்தில் இருந்து,  2009 போர் ஓய்ந்த வரையான வரலாறு இனப்படுகொலையின் வரலாறே!

2) சிங்களம் `இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட` ஒரு இனப்படுகொலை அரசு!

3) தமிழீழ தேசத்தைப் படுகொலை செய்யும் சிங்களத்தை ஆதரிக்கும் சிங்கள தேசம் (சிறீ லங்கா), தான் ஒரு போதும் சுதந்திரமாக வாழமுடியாது.தமிழீழ தேசியப் படுகொலைக்கு துணைபோகும் வழியில் அது தனது சுருக்குக் கயிற்றை மென்மேமேலும் நெருக்கிக் கொள்கிறது.

4) தமிழ் சமரசவாத சமஸ்டி இயக்கம் 1977 இல் தமிழீழப் பிரிவினை வாக்கெடுப்புக் கோர நிர்ப்பந்திக்கப்பட்டது,தமிழீழ மக்கள் பிரிவினைக்கு வாக்களித்தனர்.

5) முப்பது ஆண்டுகால தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் `புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்` என்ற தேசிய விடுதலைப் பதாகையை ஏந்தியே நடத்தப்பட்டது.இதனால் தான் அந்தப் பேரியிக்கம் அழித்தொழிக்கப்பட்டது.

6) 2009 மே 18 இற்குப் பின்னால்`` போர் இல்லை, பயங்கரவாதம் இல்லை, வன்முறை இல்லை``

7) கூடவே நாலரை ஆண்டுகள் தாண்டியும் தமிழர்களுக்கு நிலம் இல்லை,விவசாயம் இல்லை,கடற்தொழில் இல்லை,உள்ளூர்த் தொழில் இல்லை,பாதுகாப்பு இல்லை, சுதந்திரம் இல்லை,போராட உரிமை இல்லை கேவலம் மாகாண சபைக்கே அதிகாரம் இல்லை. தாய் நில ஆக்கிரமிப்பு தொடர அநுமதித்தால் தமிழீழம் இல்லை.

8) ஆதலால் தமிழர் தம் தலைவிதியைத் தீர்மானிக்க தமிழீழப் பொதுவாக்கெடுப்பு நடத்து!


 போர்க்குற்றத் தண்டனை:


1) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் தமிழீழத்தை ஆக்கிரமிக்க சிங்களம் ஏவிய தேசிய ஆக்கிரமிப்பு யுத்தம்.

2) தமிழீழம் (விடுதலைப் புலிகள்) நடத்தியது, தற்காப்பு யுத்தம்!

3) சிங்களம் NO FIRE ZONE என திட்டமிட்டு தீர்மானித்து அறிவித்த நிலப்பரப்பு அழித்தொழிப்பில் இருந்து மக்கள் தப்பிக்க முடியாத படுகொலைப் பிராந்தியம் ஆகும்.

4) அங்கே ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் தமிழ் உயிர்களை சிங்களம் 
முன்னேற்பாடான திட்டத்தின்படி பலிகொண்டது.

5) முப்பது ஆண்டுகால யுத்தத்தின் இறுதி நாட்களில் ஆனந்தபுர போர்க்களத்தில் விடுதலைப்புலி இராணுவத் தலைமை அணியை, விசவாயு அடித்து இந்திய விரிவாதிக்க அரசு படுகொலை செய்து, பழி தீர்த்ததுடன் புலிகளின் ஈழப் போர் முடிவுக்கு வந்தது. இது வரைக்கும் பக்ச பாசிஸ்டுக்களின் வலது கரமாக இருந்தவர்கள் ஏகாதிபத்தியவாதிகளும்,இந்திய விரிவாதிக்க அரசுமே! 

6) அமெரிக்காவினதும்,பிரித்தானியாவினதும் வரலாறு சர்வதேச போர்க்குற்றங்கள் மீதுதான் இன்றும் கட்டியெழுப்பப்பட்டுவருகின்றது!

7) சர்வதேச போர்க்குற்றவாளிகளின் தயவில் உள்ளூர் போர்க்குற்றவாளிகளிகளுக்கு தண்டனை வழங்கும் செயல்தந்திரம் கோமாளித்தனமானது.கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியாதீர்கள் என ராஜபக்ச டேவிட் கமெரனை எச்சரித்துள்ளார்! 

8) மிக விசேடமாக ஒபாமா போரின் இறுதி நாட்களில் ஆயுதங்களை ஒப்படைத்து புலிகள் சிங்களத்திடம் சரணடைய வேண்டுமென பகிரங்கமாக உலகத்துக்கு அறிவித்து தமிழீழத்தை நிராயுத பாணி ஆக்கி படுகொலைக்கு ஆளாக்கினார்.

9) எனவே தமிழீழப் போர்க்குற்றவாளிகள் `ராஜபக்ச, மன்மோகன், ஒபாமா` அடங்கிய இலங்கை இந்திய அமெரிக்க கூட்டணியே ஆகும்.

10) போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டது, விசாரணை அல்ல தண்டனையே தீர்வு!

போலிப் பொய்யுரைகள் குறித்து:

1) ஈழப்பிரச்சனை தேசிய இனப்பிரச்சனை `மனித உரிமைப் பிரச்சனையல்ல`!
2) இறுதிப்போரில் கொல்லப்பட்டவர்கள் `சிவிலியன்கள்` அல்ல தமிழர்கள்!
3) தமிழர்களின் உரிமை `நல்லிணக்க வாழ்வு அல்ல` பிரிந்து செல்லும் உரிமை தமிழீழ வாக்கெடுப்பு.
4)இனப்படுகொலைப் பங்காளிகளின், இலங்கையின் அ) மனித உரிமை மீறல் ஆ) சட்டத்தின் ஆட்சியின் சீர் குலைவு இ) பொலிஸ் அரசு ஈ) ஊடக சுதந்திரப் பறிப்பு என்ற ஊளைகள் எல்லாம் ஏகாதிபத்திய தலையீட்டிற்கான, சந்தை மறு பங்கீட்டிற்கான `அருவருக்கத்தக்க குரூர`  முயற்சியே!


சமரச சக்திகள் குறித்து:

இம் மூன்று நிலைகளிலும் சமரச சக்திகள் எதிரிகளுக்குச் சார்பாக, சந்தர்ப்பவாதிகளாக விடுதலைப் புரட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர்.
அவர்களுடைய முரண் நிலையைக் கண்டறிந்து அம்பலப்படுத்தி இச் சமூக சக்திகளை தனிமைப் படுத்த வேண்டும்.மக்களை எதிரிகளுக்கு எதிராக சலனமோ சஞ்சலமோ அற்ற திடமான புரட்சிப்பாதையின் மீது நிறுத்த வேண்டும்.இதுவே புதிய ஈழப் புரட்சியாளர்களின் இன்றைய பெரும் சவாலும்,பெரும் பணியும், பெரும் போராட்டமுமாகும்.



மாவீரர் நாள் முழக்கங்கள்

* ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க,ரசிய, சீன, ஆதிக்க சக்திகளை எதிர்த்து சிங்களமிடமிருந்து தமிழினம் விடுதலை பெற தமிழீழப் பொது வாக்கெடுப்புக்குப் போராடுவோம்!

* தமிழீழம் பாலஸ்தீனம் ஆவதை அநுமதியோம்,
தாய்நில ஆக்கிரமிப்பை எதிர்த்து மீள்  குடியேற்ற உரிமைக்குப்  போராடுவோம்!

* கருக்கலைப்பு,காணாமல் போதல்,இராணுவ கலப்புத்திருமணம் என இன அழிப்பு  தொடர்வதை எதிர்ப்போம்!

* தமிழீழப் பெண்குலம் மீது சிங்களம் கட்டவிழ்க்கும் அமைதிக்கால பெண்வதையை எச்சக்தி கொண்டும் தடுப்போம்!

* இனப்படுகொலை போர்க்குற்றவாளி ராஜபக்சவின் பிறந்த நாளுக்கு மரம் நாட்டுவிழா நடத்திய அடிமை வடக்கு மாகாண சபையை
மாவீரர் துயின்ற இல்லங்களை மீளக் கட்டியமைக்கக் கோருவோம்!

* தமிழீழ மக்கள் விவசாயம் செய்த அவர்களது சொந்த பயன் தரு நிலமும், கடற் தொழிலாளிகளின் பெரும் கடலும் அவர்கள் உழைத்து வாழ அவர் வசம் கிடைக்க போராடுவோம், அந்நிய உதவி மாயை எதிர்ப்போம்!

* தமிழீழ விடுதலைக்கு புதிய விளக்கேற்ற தடையாக இருக்கும் சமரசவாதிகளைதனிமைப்படுத்துவோம்!

* தன்னியல்புப் பாதையின் தவறுகளைக் களைவோம், அரசியல் போர்த்தந்திரப் பாதையில் புரட்சிப் பயணம் தொடர்வோம்!

* தமிழீழத்தாயகத்தின் காவல் அரண்கள் விவசாயிகளும், கடற்தொழிலாளர்களும்,சிறுவர்த்தகர்களுமான
உழைக்கும் தமிழ் மக்களே என்பதை உணர்வோம்!

* `பொதுவாக்கெடுப்பு, போர்க்குற்றத்தண்டனை`ஈழத்தமிழர் ஆதரவு உலக ஜனநாயக இயக்கம் வெற்றி பெற உலகத் தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம்!





Tuesday, 2 July 2013

லண்டன்: அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்



 
லண்டன்: அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்

நேற்றுமுன் தினம் சனிக்கிழமை 29-06-13 அன்று ஹரோவில் தமிழீழ அரசியல் கலந்துரையாடலும், சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்  இடம்பெற்றது. மாவீரர் உறவுகளின் பேராதரவுடன் புதிய ஈழ புத்தக நிலையம் (NEBH), இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. அன்றாட வாழ்வின் நெருக்குதல் கருதி, காலை 10 மணிமுதல் பகல் 1 மணிவரை, மாலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை, இரவு 11மணிமுதல் விடிகாலை 1.00 மணிவரை மூன்று காலநிரலில் இந்நிகழ்வு அமைந்தது.குறிப்பிடத்தக்க மக்கள் இத் தொடர் சுற்று அறை அரங்கத்தில் கலந்து கொண்டனர்.

கலந்துரையாடல் வெளிக்கொணர்ந்த கருத்துக்களை பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

1) விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் ஈழத்தமிழ் மக்களின் நிலை படுமோசமடைந்துள்ளது.
2) விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் அனைத்தும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தவையும், காட்டிக்கொடுத்தவையுமே ஆகும்.
3) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் துரோகத்தனம் கண்டிக்கப்பட்டது. ஆனாலும் சிறீதரன் எம்.பிக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.
4) புலிகளின் அதிகாரம் ஓங்கியிருந்த காலத்தில் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருந்த, `புலித்தோல் போர்த்த பசுக்கள்` அவர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால் அரசியல் காட்டிக்கொடுப்போராகவும், அற்பத் தன்னலவாதிகளாவும் மாறிவிட்டது வெகுவாகக் கண்டிக்கப்பட்டது.
5) யுத்தக்கைதிகளான போராளிகளுக்கு, குறிப்பாக பெண் தோழர்களின் விடுதலைக்கு எம்முயற்சியும் எடுக்காமல் நட்டாற்றில் விட நயவஞ்சகச் செயல் மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.
6) சீனா,ரசியா, ராஜபக்சவின் இனப்படுகொலை யுத்தத்திற்கு அளித்த ஆதரவும், CPI, CPM கட்சிகளின் நிலைப்பாடுகளும், பொதுவாக இலங்கையின் இடதுசாரிகள் எனப்படுவோர் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகமும் விவாதத்துக்கு வந்தன.
7) ஆனந்தபுர விசவாயுத் தாக்குதல் - விடுதலைப் புலித் தலைமையின் அழிவு, ஆகியவை ,அமெரிக்க இந்திய கூட்டுச்சதியே என்ற கருத்து வலுவாக முன் வைக்கப்பட்டது.
8) அன்ரன் பாலசிங்கம், கே.பி, கருணா கும்பலின் துரோகம் நீறு பூத்த நெருப்பாய் இருந்தது.
9) இன்று புலிகள் இல்லாத ஈழத்தில் ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதும், மாற்றுத்தலைமையின் அவசியமும் உணரப்பட்டது.
10) இந்தப் பின்னணியில் `அரசியல் கலந்துரையாடலும் சமரன் வெளியீட்டக நூல்களின் கண்காட்சியும்` நிகழ்வு, வரவேற்புப் பெற்றது.

கலந்து கொண்டோரில் பெரும்பான்மையோர் ஈழவிடுதலை ஆதரவு நிலை நின்று இப்பிரச்சனைகள் குறித்து கருத்துகள் பரிமாறினர், சிறுபான்மையான சிலர் ஈழவிடுதலை எதிர்ப்பு நிலை நின்று கருத்துக்கள் பரிமாறினர். விடுதலைப் புலிகள் மீது வழக்கமான ‘வன்முறைப் பழி சுமத்தினர்’,ஒன்றரை இலட்சம் மக்களை ஈழத்தில் மட்டும் கொன்றவர்கள் மனித உரிமை பேசினர். முன்னணிப்படை சமரன் நிலை நின்று விவாதங்களை நெறிப்படுத்தியது. ஈழவிடுதலை எதிர்ப்பு நிலை நின்ற கருத்துக்கள் முறியடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டன!

சமரன் வெளியீட்டக நூல்களும், மற்றும் மார்க்சிய நூல்களும் பார்வைக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

விபரம் வருமாறு:

1) ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும்,
2) இந்திய அரசே போர்க்குற்றவாளி இராஜபட்சேவை கூண்டிலேற்று,
3) சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!,
4) அந்நிய மூலதனமின்றி சுயேச்சையான வளர்ச்சிப்பாதை குறித்து ஜே.வி.ஸ்ராலின்,
5) நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்துவ ஊழலை எதிர்த்து மக்கள் இயக்கத்தைக் கட்டியமைப்போம்!,
6) இந்திய நிலப்பிரபுத்துவ சாதிய திருமணமுறையை எதிர்ப்போம், சுதந்திர திருமண முறைக்காகப் போராடுவோம்!,
7) அணு ஆற்றலும் சமூகமுன்னேற்றமும்- தோழர் வில்லியம் பால்,
8) அணு உலையை மூடு என்ற பிற்போக்கு முழக்கத்தை முறியடிப்போம்!,
9) நாடாளுமன்ற முறை குறித்த பாட்டாளி வர்க்கக் கட்சியின் போர்த்தந்திரமும் செயல் தந்திரமும்,
10) வேலை நிறுத்தம் பற்றி லெனின் - ஸ்ராலின் ,
11) பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு,
12) முள்ளிவாய்க்கால் வீர காவியம் மே 18 2010
--------------------
பார்வைக்கு வைக்கப்பட்டவை:

மூலதனம் 6 தொகுதிகள் (தமிழில்), மாஒ தேர்ந்தெடுத்த படைப்புகள் 9 தொகுதிகள் ( தமிழில்) , மாபெரும் விவாதம், நவ சீனப் புரட்சியின் வரலாறு,
தேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் (லெனின்), பாட்டாளி வர்க்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றிய (சமரன்) தொகுப்பு.
--------------------

நினைவழியா நினைவு!

ஈழத்தாய்மாரின் ஆதரவு, மலையகத் தோழனின் பங்களிப்பு,ஈழத்து உ.கி.(உண்மையான கிளர்ச்சிக்கார) இளைஞன் ஊக்கியாக இருந்து பரவிய நம்பிக்கை, முள்ளிவாய்க்கால் இறுதி நாட்களில் தன் தாயாரை இழந்த நண்பரிடம் துயர் பகிர்ந்த போது, ``தனிப்பட்ட முறையில் கவலைதான் ஆனால் ஒன்றைரை இலட்சம் மக்களில் என் தாயும் ஒன்று`` என்று அவர் உரைத்த பதில், என பல அம்சங்களை நினைவாக்கிக் கொள்ளலாம்.ஆனால் நினைவழியா நினைவு இது தான்.

இந்த ஒன்று கூடலில் ஒரு பத்துவயது கிளிக்குழந்தையும் பங்கு கொண்டது.புத்தகப் பரப்பைக் கண்டு அது வியந்து நின்றது.ஆனால் தமிழில் வாசிக்க முடியாத கவலை அதைக் கவ்விக் கொண்டது. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை முறியடிப்போம்!,என்ற நூற் தலைப்பு, 'Defeat foreign investment in retail sector of India' , என விளக்கப்பட்டது. லண்டனில் தமிழ்ச் சிறு வர்த்தகம் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு காரணம் என்னவென்று ஆங்கிலத்தில் கேட்டபோது, TESCO என்று பதில் சொன்னது கிளி! இது போல் Wal Mart இந்தியா சென்றால் இந்திய சிறுவர்த்தகர்களுக்கு என்ன நேரும் என்று கேட்டதற்கு, Bankrupt ( திவால்!) என்று ஒரே ஒரு சொல்லில் தீர்க்கமாகவும், திடமாகவும் பதில் சொன்னது குழந்தை.Is it right to fight against it?  பதில்: Of course its right! (பலத்த கரகோசம்!)
தாய்மார் கையால் இராப்போசனம் பரிமாறப்பட்டு விடிகாலை அரங்கம் நிறைவுற்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
தமிழரின் தேவை தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!

தகவல்:புதிய ஈழ புத்தக நிலையம் (NEBH)

Monday, 3 June 2013

சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - ENB முன்னுரை

சமரன்: ஈழமும் தேசிய இனப்பிரச்சனையும் - முன்னுரை

சமரன் வெளியீட்டகத்தின் இந்நூல் - சமரன் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான முற்போக்கு இளைஞர் அணி, மக்கள் னநாயக இளைஞர் கழகம் போன்ற அமைப்புகள் - 1983ஆம் ஆண்டுகளிலிருந்து ஈழவிடுதலையை ஆதரித்து வெளியிட்ட அரசியல் பிரச்சார பிரசுரங்களின் தொகுப்பாகும். இவை அனைத்தும் ஈழத்தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்திற்கான ஆதரவையும், தேசிய இனப் பிரச்சினை பற்றிய பாட்டாளிவர்க்க இயக்கத்தின் கோட்பாடுகளையும், தீர்வுகளையும் உள்ளடக்கியதாகும்.

இலங்கையில் தமிழீழத்திற்கான அரசியல் போராட்ட வரலாறு

இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம்
அம்மக்களின் சுயவிருப்பை அறியாமல் பலாத்காரமாக பிரித்தானிய காலனியாதிக்கவாதிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட
அரைக்காலனிய நாடே இலங்கை ஆகும். இதற்கு வித்திட்டது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கோல்பூர்க் கெமெரன் சீர்திருத்தமும் சோல்பரி
அரசியல் யாப்புமாகும். இதற்குத் துணைபோனவர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சமஷ்டிக் கட்சியின் அடிகோலாக விளங்கிய தரகுமுதலாளிய கும்பல்களாகும். இராமநாதனுக்கும், பொன்னம்பலத்துக்கும் முன்னால் உள்ள `சர்-SIR’ பட்டம் பட்டத்தரசி பிரித்தானிய எலிசபத் மகாராணி
வழங்கியதாகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்ட முதல் இனவெறித் தாக்குதல் 1915 இல் கொழும்பு வர்த்தகத்தில் மேலோங்கியிருந்த இஸ்லாமியத்தமிழர்களுக்கு எதிரானதாகும். இத்தாக்குதலை நியாயம்செய்து, சிங்கள ஆளும் வர்க்கத்தை நியாயப்படுத்தி பிரித்தானியா மகாராணியிடம் முறையீடு செய்துவிட்டு திரும்பிவரும் வேளையில்தான் சர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் தேரில் இழுத்துவந்து கௌரவிக்கப்பட்டார்.

1947 போலிச்சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின், சிங்கள ஆளும் கும்பல் தமது அதிகாரத்தை ஏகபோகமாக்கும் பொருட்டு சிங்களப் பெருந்தேசிய
இனத்தை தம் பின்னால் திரட்டும் நோக்கில் சிங்களப் பேரினவாதத்தையும், பௌத்த மதவாதத்தையும் தமது கருத்தாயுதமாக ஏந்தினர்.

அடுத்த தாக்குதல் மலையகத் தமிழ் மக்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மீது பாய்ந்தது. மலையகத் தமிழர்கள் வாக்குரிமை, குடியுரிமை
பறிக்கப்பட்டு தேசமற்ற நவீன கூலி அடிமைகள் ஆக்கப்பட்டனர். பின்னர்தான் (மூன்றாவது இலக்காகத்தான்) இது தமிழ் மக்கள் மீது பாய்ந்தது.

அதிகாரவர்க்கத்தில் இருந்து (அரசுமுறையில் இருந்து) தமிழரை வெளியேற்ற கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச்சட்டம் 1958 `கலவரத்தில்` முடிந்தது.
இதைத் தொடர்ந்து இந்தக் `கலவரம்` என்கிற ஆயுதம் 1983 வரை நிராயுத பாணியான தமிழீழ தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து
பிரயோகிக்கப்பட்டது.

1961இல் சிறீ எதிர்ப்புக் `கலவரம்`, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான `கலவரம்`, 1981இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரான
படுகொலை, 1983இல் இலங்கைத் தழுவிய இனப்படுகொலை. குழந்தைகளில் இருந்து தெய்வங்கள் உட்பட அனைத்துத் தமிழ் அடையாளம் மீதும்
சிங்களப் பேரினவாதக் காட்டுமிராண்டி வெறியாட்டம் கட்டவிழ்க்கப்பட்டது.

இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில்
தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது. 1977* தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு (தமிழர் கூட்டணி) வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. பின்னர் அக்கட்சி தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு துரோகமிழைத்தது. அத்தகைய ஒரு சூழலில்தான் அரசியல் வழியில் அமைதி வழியில் பெறமுடியாத போது தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. போராளிக் குழுக்கள் தோன்றின.

1983- இனக்கலவரமும் ஆயுதப் போராட்டமும்

1983 ஜூலை இனக்கலவரங்களுக்குப் பிறகு ஈழத் தமிழ் இனத்தைச் சார்ந்த பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, எல்.டி.டி.இ போன்ற பல்வேறு குழுக்கள்
ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கின. ஈழவிடுதலைப் போர் ஆயுதப் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அத்தகைய ஒரு சூழலில்
இ.க.க. (மா.லெ) மக்கள்யுத்தக் கட்சியின், “தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப்போம்! இந்திய அரசின் இராணுவத் தலையீட்டை
எதிர்ப்போம்!” என்ற அரசியல் தீர்மானத்தை சமரன் வெளியிட்டது. அதில் இலங்கையில் தனித் தமிழ் ஈழம்தான் ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு
என்பதை கோட்பாட்டு ரீதியில் முன்வைத்ததுடன், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்க இந்தியா இராணுவத் தலையீடு செய்யும் என்பதை
முன்கூட்டியே அறிவித்தது. எனவே ஈழவிடுதலையை ஆதரித்தும், இந்திய இராணுவத் தலையீட்டை எச்சரித்தும் ஒரு தெளிவான நிலைபாட்டை
முன் வைத்தது.

“தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு” என்பதற்கான காரணத்தை அது பின்வருமாறு கூறுகிறது:

“இலங்கையின் அரைக்காலனித்துவ - அரைநிலப்பிரபுத்துவ அரசு, சிறுபான்மை இனத்தவரை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளதால், இன்றுள்ள இலங்கை அமைப்பிற்குள் இனமோதல் தவிர்க்க முடியாததாகிறது. இரு தேசிய இனங்களுக்கும் இடையில் அமைதியும் சாத்தியமற்றதாகிறது. சிங்களப் பேரினவாத, அதிகாரவர்க்க முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும், அவர்களது அரசும் இரு தேசிய இன மக்களிடையே உண்டாக்கும் முடிவற்றப் பூசல்களும் மோதல்களும் தமிழ்பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாகவே இருக்கின்றன. இவையாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழினத்தை ஒழித்துக் கட்டவும், குடியுரிமை அற்ற மலையக மக்களை நவீன அடிமைகளாக நடத்தவும், தாங்கள் விரும்பினால் அவர்களை நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்காகவும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறைகள் தமிழீழ மக்கள் தனிநாடு கோரவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்கள் குடியுரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் கோருகிறார்கள். தமிழ் முஸ்லீம்கள், மத உரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகளையும் தேசிய அமைதியையும் கோருகிறார்கள். இலங்கை நாட்டிலுள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையையும் தேசிய அமைதியையும் மக்கள் ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் உத்திரவாதம் செய்ய முடியும். ஆனால் இந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியானது தமிழ் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்திடமிருந்து பிரிந்து போவதில் முடியுமா? அல்லது சிங்கள தேசிய இனத்துடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா? என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை”

என்று கேள்வி எழுப்பி தமிழ் ஈழம் அமைவது ஒன்றுதான் அதற்குத் தீர்வு என்று கூறுகிறது.
“இன்றைய சிங்களப் பேரினவாத, புத்தமதவாத அரசு இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டிருக்கிறது. இவ்வரசின் பேரினவாதக் கொள்கையால் சிங்கள இனத்திற்கும் ஈழத் தமிழ் இனத்திற்கும் மற்றும் பிற தமிழ்பேசும் மக்களுக்கிடையில் பூசல்களும் மோதல்களும் இருக்கிறது. இன்றுள்ள நிலைமைகளில் வர்க்கப் போராட்டம் தடையின்றி நடப்பதற்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்படுகிறது. ஈழத் தமிழ் இனம் மற்றும் தமிழ் பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சிங்கள தேசிய இனத்தைச் சார்ந்த பாட்டாளி மக்கள் பேரினவாதத்திற்கு இறையாகி ஈழத் தமிழினம் மற்றும் பிற தமிழ்பேசும் மக்கள் மீதும் சிங்கள ஆளும் வர்க்கங்கள் நடத்தும் இன ஒடுக்குமுறைகளுக்கு துணைபோகின்றனர். இந்நிலையில் ஈழத் தனிநாட்டுக்கான போராட்டமும் மலையக மக்களின் ஜனநாயக உரிமைக் கோரிக்கைகளுக்கான போராட்டமும், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களின் ஜனநாயகப் போராட்டமும் நீதியானதும் உலகப் பாட்டாளிவர்க்க இயக்கம் ஆதரிக்கத் தகுந்ததுமாகும்.”

ஈழத் தமிழ்மக்களின் தனித் தமிழீழ நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கும் தமிழ் இன உணர்வாளர்களும், திராவிடக் கட்சிகளும் தொப்புள்கொடி உறவு
என்றும், தாய் தமிழகம் என்றும் கூறி ஈழ விடுதலையை ஆதரித்தனர். ‘உலகநாடுகளில் எல்லாம் தமிழர்கள் வாழுகின்றார்கள் ஆனால் தமிழர்கள்
வாழ்வதற்கென்று ஒரு நாடு இல்லை’ என்ற நிலையில் இருந்து ஆதரிக்கின்றார்கள். ஆனால் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் ஆதரவு அத்தகைய
தன்மையிலிருந்து அமையவில்லை. சமரன் அதே கட்டுரையில் இது பற்றிப் பின்வருமாறு கூறுகிறது.
“இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களும் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களும் ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற பொருளில் அல்ல இம்முழக்கத்தை நாம் முன்வைப்பது. உலகெங்கிலும் உள்ள ஏழரை கோடி தமிழ்மொழி பேசுவோருக்கு ஒரு தனிநாடு வேண்டும் என்கிற காரணத்தினாலும் அல்ல. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள ஏழரை கோடி தமிழ் மக்களும் ஒரு மொழியைப் பேசினாலும் ஒரே தேசிய இனத்தைச் சார்ந்தவர்கள் ஆகமாட்டார்கள். பாட்டாளிவர்க்க சர்வதேசவாதிகள் என்கிற முறையிலும் இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்களின் தேசியச் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டம் உலக சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதி என்கிற முறையிலும்தான் இப்போராட்டத்தை நாம் ஆதரிக்கின்றோம். தமிழகத்தை பின்புலமாக்குவோம் என்கிற முழக்கத்தை முன்வைக்கிறோம்”.
திராவிடக் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் தொப்புள்கொடி உறவு பேசி தென்னாசிய மேலாதிக்க வெறிப்பிடித்த இந்திய இராணுவத்தை
இலங்கைக்கு அனுப்பி தனிநாடு பெற்றுத்தரக் கோரினர். நாம் இந்திய அரசின் மேலாதிக்க வெறியை எடுத்துக்காட்டி ஆரம்பம் முதலே இந்திய
இராணுவத் தலையீட்டை எதிர்த்தே வந்துள்ளோம். இந்திய அரசு ஒருபோதும் தமிழ் ஈழத்தை ஆதரிக்காது. அதை எதிர்த்துதான் தமிழீழம்
காணவேண்டும் என்பதை எடுத்துரைத்தோம்.

இன்றும்கூட, இந்திய அரசின் ஆதரவோடுதான் தமிழீழம் அமைக்க முடியும் என்றும், தமிழீழத்திற்கு ஆதரவாக நிலை எடுக்கும்படி இந்திய அரசுக்கு
அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் திராவிடக் கட்சிகளும், தமிழ் இன உணர்வாளர்களும் கூறிவருகின்றனர். ஆனால் விரிவாதிக்க இந்திய அரசை
எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் தமிழ் ஈழத்தை அமைக்க முடியும் என்ற எமது நிலைபாடுதான் சரி என்று ஈழப் போராட்ட வரலாறு
நிரூபித்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியமும் - தமிழீழ விடுதலைப் போரும்

ஈழத் தமிழ் தேசிய இனம் விடுதலை பெறுவதற்கு சிங்கள இனவெறி அரசு மட்டுமே எதிரி அல்ல - அமெரிக்க, இரசிய சமூக ஏகாதிபத்தியவாதிகளும்
விரிவாதிக்க இந்திய அரசும் எதிரிகள் என்று ஆரம்பம் முதலே தொடர்ந்து சமரன் எச்சரித்து வந்துள்ளது.

திம்புப் பேச்சுவார்த்தையின்போது, சமரன் வெளியிட்ட

“இந்திய அரசே ஈழத் தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி! ஈழத் தமிழ் விடுதலைப் போராளிகள் முதுகில் குத்தாதே!”

என்ற பிரசுரம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

“இனப் பிரச்சினையை சிக்கலாக்குவதில் ஜெயவர்த்தனே அரசுமட்டுமல்ல, இரு ஏகாதிபத்திய வல்லரசுகளும் தங்களுடைய ஆதிக்க மண்டலத்திற்கான
போட்டியில் இலங்கையை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கென மறைமுகமாக சண்டை இடுகின்றன. ஜெயவர்த்தனே அரசை நிலை நிறுத்துவதன் மூலம் அரைநிலப்பிரபுத்துவ, அரைக்காலனிய அமைப்பைப் பாதுகாக்கவும், இலங்கை மீதான தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்
கொள்ளவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஆதரவு நாடுகளும் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்துவருகின்றன. இதன் மூலம்
ஜெயவர்த்தனே அரசின் இன ஒடுக்குமுறைக்கு உதவிவருகின்றன. ஜெயவர்த்தனே அரசு இன ஒடுக்குதலையே தமது வாழ்வுக்கு ஆதரமாகக்
கொண்டுள்ளது. இதனை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, ஜெயவர்த்தனேயின் அமெரிக்க சார்பு அரசை எதிர்ப்பதாகவும், ஈழத்தமிழின விடுதலைப் போரை
ஆதரிப்பதாகவும் சதித்தனமாக இரசிய சமூக ஏகாதிபத்தியம் தனது ஆதிக்கத்திற்குள் இலங்கையைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்திய அரசு தனது சந்தை நலனுக்காக முழு இலங்கையின் சந்தையையும் பெறவேண்டி ஈழவிடுதலைப் போராளிகளை பேச்சுவார்த்தைக்கு நிர்ப்பந்தித்து, இந்தியாவில் மாநிலங்கள் பெற்றிருப்பதைப் போன்ற அதிகாரம் - இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை அல்ல - சுயாட்சி (autonomy) என்ற வழியை முன்வைத்தனர்”.இந்திய அரசு தமது இலங்கை மீதான விரிவாதிக்கத்தைத் திணிப்பதற்காக, தமிழ் ஈழ விடுதலைக் கோரிக்கையை கைவிடச் செய்து அரசியல் சட்டத்திருத்தம், அதிகாரப் பரவல் போன்ற சீர்திருத்தக் கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்தது. சீர்திருத்தங்களை ஏற்குமாறு விடுதலைப் போராளிகளை நிர்ப்பந்தம் செய்தது. அத்துடன் ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் ஈழத் தமிழருடைய விடுதலைப் போரை நசுக்கவும், இலங்கை இனவெறி அரசைப் பாதுகாக்கவும் இந்திய அமைதிப்படை எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழர்களை நரவேட்டையாடியது. இலங்கையை தமது மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதற்காக இரு ஏகாதிபத்திய நாடுகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டே மறுபுறம் ஈழத்தமிழ்த் தேசிய இன விடுதலைப்போரை நசுக்குவதற்கு இலங்கை அரசுக்குத்
துணைபோகின்றன. ஈழத் தமிழருக்கு எதிரான இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமெரிக்க, இரசிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவு முழுமையாக இருந்தது.

புலிகள் அமைப்பைத் தவிர டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., பிளாட் போன்ற போராளிக் குழுக்கள் இந்திய அரசின் சதிவலையில் வீழ்ந்து, இந்திய
விரிவாதிக்கத்திற்கு சேவை செய்து ஈழ விடுதலைப் போருக்குத் துரோகம் இழைத்தன. துரோகக் குழுக்களாக மாறின. விடுதலைப் புலிகள் அமைப்பு
இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி இந்திய இராணுவத்திற்கு ஒரு கசப்பான படிப்பினையை அளித்தது. இந்திய இராணுவத்தைத்
திரும்பப் பெறுவது என்ற அடிப்படையில் அன்றைய பிரேமதாசா அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இந்தியப்
படையை இலங்கையைவிட்டு வெளியேற்றினர்.

இந்திய ஆக்கிரமிபுப் படையை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்தந்திரத்தை நாம் முழுமையாக ஆதரித்ததுடன்,
விடுதலைப் போரை வெற்றிக்கு இட்டுச்செல்வதில் உள்ள புலிகள் அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு தவறவில்லை.

“பிரேமதேசா அரசு தொடுத்துள்ள தேசிய இன ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்த விடுதலை யுத்தத்தை ஆதரிப்போம்!”
என்ற கட்டுரையில் பின்வருமாறு விமர்சிக்கப்பட்டது:

“இந்திய மேலாதிக்கவாதிகளுடன், இந்திய ஆக்கிரமிப்புப் படையுடன் பிற ஈழப் போராளி அமைப்புகள் சமரசம் செய்து கொண்டது போல விடுதலைப் புலிகள் அமைப்பும் சமரசம் செய்துகொள்ளுமோ என்ற ஐயம் ஏற்பட்டது. ஆனால் அது அதற்குமுன் கட்டத்தில் இலங்கை அரசின் பாசிச தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தை எதிர்த்துப் போரிட்டதைப் போலவே இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்தும் உறுதியுடன் போராடியது. விடுதலைப் புலிகள் பணிந்திருந்தால் ஈழத் தேசிய விடுதலை இயக்கம் முழுவதுமாக சீரழிந்து போயிருக்கும். இந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்து அது போரிட்டது மட்டுமல்லாமல், இந்திய மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் ஈழத் தேசிய இனச் சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையை உட்படுத்திப் பார்த்து இலங்கை அரசுடன் கருத்து உடன்பாடு கண்டு இந்திய ஆக்கிரமிப்புப் படையை இலங்கையை விட்டு வெளியேற்றுவதற்கு வழிவகுத்தது. அவ்வாறு செய்யாதிருந்தால் இந்திய அரசு இலங்கை மீது தனது மேலாதிக்கத்தைத் திணிப்பதில் வெற்றிப் பெற்றிருக்கக் கூடும். ஆகையால் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்திய அரசிற்கும், இலங்கை அரசிற்கும் இடையில் நிலவிய முரண்பாட்டை சரியாகவே கையாண்டது எனக் கூறலாம். இக்கட்டத்தில் அது இலங்கை அரசுடன் போர் ஓய்வு உடன்பாடு கண்டது ஒரு சரியான
செயல்தந்திரமேயாகும்.”

அதேசமயம் “விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் எதேச்சதிகார முறைகளும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாரதூரமான விளைவுகளை
ஏற்படுத்துகின்றது. அது தேசிய இன ஒடுக்குமுறையை அல்லது இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கான மக்களின் பலத்தின் வளர்ச்சியை
பாரதூரமாக தடைப்படுத்தி, இதன்விளைவாக அது தேசிய விடுதலைப் புரட்சிகர சக்திகளின் வெற்றிகளின் அளவைக் குறைத்து, விடுதலைப்
போராளிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன, என்றாலும் இலங்கையிலும் உலகிலும் இன்றுள்ள ஒட்டுமொத்தமான நிலைமைகளும், பெரும்
படைப்பலம் படைத்த ஒரு பெரும் நாடு ஒரு சிறிய நாட்டின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட முடியாது என்பதை அண்மைகால அனுபவங்கள்
எடுத்துக் காட்டுகின்றன. ஆகையால் இந்திய ஆக்கிரமிப்புப் படையையோ அல்லது இலங்கை அரசையோ எதிர்த்து ஈழத் தமிழ்த் தேசிய இன
விடுதலைப் போராட்டம் முன்னேற்றமடைவது சாத்தியம்தான். முன்னேற்றத்தைத் தடைப்படுத்துவதாக உள்ள விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் எதேச்சாதிகாரப் போக்கின் காரணமாக விடுதலைப் போராட்டத்தின் முன்னேற்றம் மெதுவாகவே இருக்கும்”

“ஆனால் விடுதலைப் புலிகள் ஒரு புரட்சிகர யுத்தத்தின் நடுவில் உள்ளனர். புரட்சிகர யுத்தம் என்பது நஞ்சைப் போக்கும் ஓர் எதிர் நஞ்சு. அது
எதிரியின் நஞ்சைப்போக்குவது மாத்திரமல்ல. நமது சொந்த அழுக்கைக்கூட (விடுதலைப் போராளிகளின் அழுக்கைக்கூட) சுத்திகரிக்கிறது. அது பல
பொருட்களை மாற்றக்கூடியது. அல்லது அவற்றின் மாற்றத்துக்கான பாதையைத் திறக்கக் கூடியது.”

“ஆகையால் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றிநிற்கும்வரை அவர்களை ஒடுக்குமுறை யுத்தத்தை
நடத்துபவர்களுடன் சமப்படுத்திப் பார்க்காமல், தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையும், அவர்களின் ஜனநாயக
உரிமை மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்த போராட்டமும் தான் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அணுகுமுறையாக இருக்கவேண்டும்.
விடுதலைப் புலிகள் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வரையில் பாடாளிவர்க்க இயக்கம் அவர்களுடன் ஒற்றுமையும்,
போராட்டமும் என்ற உறவையே கொள்ளவேண்டும். தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒரு குறிப்பான
திட்டத்தின் அடிப்படையில் ஐக்கிய முன்னணியைக் கட்டுவதை பாட்டாளிவர்க்க இயக்கம் தனது செயல்தந்திரமாகக் கொள்ள வேண்டும்”.

இத்தகைய ஒரு அணுகுமுறையை சமரன் குழு விடுதலைப் புலிகளுடன் மேற்கொண்டது.

ஆனால் அத்தகையதொரு ஐக்கிய முன்னணியை அமைக்க முடியாமல் போனதற்கு விடுதலைப் புலிகளின் எதேச்சாதிகாரப்போக்கு ஒரு காரணம்
என்றால், விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடுவதை அங்கீகரித்து, ஜனநாயகத்திற்காக அதனுடன் போராடுவது என்ற ஐக்கியம்,
போராட்டம் என்ற அணுகுமுறையை கடைபிடிக்காதது போன்ற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் ஆழ்ந்த தவறும் ஒரு காரணமாகும். அதற்காக
ஈழவிடுதலைப் போர் கொடுத்துள்ள விலை மிகமிக அதிகமானது. வரலாற்றிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பும், பிற புரட்சிகர ஜனநாயக
சக்திகளும், ஒரு சரியான பாடத்தைக் கற்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் யாழ்பாண முற்றுகையும் அமெரிக்க-இந்திய அரசுகளின் தலையீடும்

இந்திய ஆக்கிரமிப்புப்படை வெளியேறியவுடன் பிரமதாசா அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது மீண்டும் ஒரு யுத்தத்தைத் தொடுத்தது. இந்தியப்
படையை வெளியேற்றுவதற்காக விடுதலைப் புலிகளோடு செய்துகொண்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த இலங்கை அரசு மறுத்தது. ஈழத்
தமிழினத்தின் மீது மீண்டும் ஒரு யுத்தத்தைத் தொடுத்தது. இனி போர்நிறுத்தமில்லை, கிரிமினல் கும்பலை (புலிகளை) அழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜெயரத்தனே முழங்கினார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் பின்வாங்கி வன்னிக் காடுகளிலிருந்து கெரில்லா போர்முறைக்கு மாறியது. 1996ஆம் ஆண்டு ஜூலையில் சிங்களப்
படைகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ்குடா நாட்டை மீட்பதற்காக புலிகள் அமைப்பு “ஓயாத அலைகள்” போரைத் தொடங்கியது. ஓயாத அலைகள்
என்ற தொடர் போர்களின் மூலம் முல்லைத் தீவு, தெற்கு வவுனியா, ஆனையிறவு முகாம்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்கள் புலிகளின் முற்றுகைக்கு ஆளானார்கள். அதை எதிர்த்து இந்தியாவின் உதவியை அன்றைய சந்திரிக்கா தலைமையிலான இலங்கை அரசு கோரியது.

இலங்கையின் உள்விவகாரத்தில் தலையிடமாட்டோம் என்று இன்று கூறுகின்ற இந்திய அரசு அன்று இலங்கையில் 40 ஆயிரம் வீரர்களை
மீட்பதற்காக - மனிதநேய உதவி என்ற பேரால் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இராணுவத் தலையீடு பற்றிப் பேசியது. இலங்கை
இராணுவ வீர்ர்களை காப்பாற்றவும், விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தவும் தயாரிப்பு செய்தது. திருவனந்தபுரத்தில் இந்திய விமானப்படை
விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளோ தங்களது 5வது கடற்படை போர்க்கப்பலை இலங்கை அருகில் நிறுத்திக்கொண்டு “தமிழ் ஈழம் தனிநாடாக
உருவாவது என்பதை சர்வதேச சமுதாயம்தான் தீர்மானிக்கவேண்டும், மீறி புலிகள் தனிநாட்டை அறிவித்தால் அவர்கள் சுடுகாட்டைத்தான்
ஆளமுடியும். குண்டுபோட்டு அனைத்தையும் பொசுக்கிவிடுவோம்” என்று மிரட்டினார்கள். இத்தகைய ஒரு சூழலில்தான், அந்நியப்படை
இன்னொருமுறை ஈழ மண்ணில் வருவது என்பது தமிழ் மக்கள் மீது கொடிய அடக்குமுறைக்கு வித்திடும் என்று கருதிதான் விடுதலைப் புலிகள்
இயக்கம் முற்றுகையைக் கைவிட்டு பின்வாங்கியது. அதற்குப் பின்னர்தான் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் மேற்பார்வையில் நார்வே
தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு நடந்தது.

1990ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடைந்த பிறகு அமெரிக்காவோடு இந்தியா நெருங்கிவருகிறது.
அமெரிக்காவின் ஆசிய மேலாதிக்கத்தை இந்தியா ஏற்றுக்கொண்டது. அதேசமயம் தென் ஆசியாவில் குறிப்பாக இலங்கையில் இந்தியாவின்
நலன்களை அமெரிக்கா அங்கீகரித்தது. இந்திய அரசும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் இலங்கை இனச் சிக்கலைத் தீர்ப்பதற்கான அதாவது ஈழத்
தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்கி இலங்கையில் நிலவும் புதிய காலனிய வடிவிலான அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசைக் கட்டிக்
காப்பது என்ற அடிப்படையில் ஒரு பொதுவான கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்படுகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 9/11 இரட்டைக் கோபுரத் தகர்வுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அதன்மீது பல்வேறு தடைகளை விதித்தது. இந்திய அரசோ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து அகண்ட ஈழம்
அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது என்ற பொய்யானக் குற்றச்சாட்டின் கீழ் இன்றளவும் தடைவிதித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நார்வே தலைமையில்
தொடங்கிய ஓஸ்லோ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தத்தால் ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான நிதி உதவி பெருமளவில் தடைசெய்யப்பட்டது.
அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைக்கு ஏராளமான கடன் வழங்கினர். அமெரிக்கா தமது நட்பு நாடான இசுரேல் மூலம் இலங்கைக்கு இராணுவ
தளவாடங்களை வழங்கியது. மறுபுறம் இந்திய அரசாங்கம் கடல் வழியாக புலிகளுக்கு ஆயுதம் வருவதை தடுத்து நிறுத்தியதுடன் விடுதலைப்
புலிகளின் கப்பற்படையை அழிப்பதற்கு முழுமையாக உதவியது. இரசியா, சீனா போன்ற நாடுகளோ அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்ப்பது
என்றபேரில் இலங்கை அரசுக்கு நிதி உதவியையும் ஆயுதங்களையும் கொடுத்து உதவின.

இவ்வாறு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் ஒரு கொடிய
யுத்தத்தை நடத்திதான் இராஜபட்சே கும்பல் விடுதலைப் புலிகளை வென்றது. விடுதலைப் புலிகளின் தலைமையை நயவஞ்சகமாக அழித்தொழித்தது.
ஈழ விடுதலைப் போரை நசுக்குவதில் அமெரிக்க-இந்திய நாடுகளின் பாத்திரம்தான் முதன்மையானது.
விடுதலைப் புலிகள் இயக்கம், எதிரி பெரும்படை திரட்டி சுற்றிவளைத்து தாக்கி அழிப்பது என்ற திட்டத்தை செயல்படுத்தும் போது அதிலிருந்து புரட்சி இயக்கத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்கு முறையாக பின்வாங்குவது என்ற செயல்தந்திரத்தை கடைப்பிடிக்கத் தவறிவிட்டது.

அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும் கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணமாகி விட்டது.

விடுதலைப் புலிகள் அமைப்பு இத்தகைய பலவீனங்கள் உடையது என்பதை சமரன் முன்கூட்டியே உணர்ந்திருந்தது. விடுதலைப் போரில் ஒரு
விடுதலை இயக்கம் உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் நேர்முக சேமிப்பு சக்தி மற்றும் மறைமுக சேமிப்பு சக்திகளை எவ்வாறு பயன்படுத்துவது
என்பது திம்புப் பேச்சுவார்த்தையின் போதே பின்வருமாறு ஆலோசனைகளை வழங்கியது.

“தமிழீழ விடுதலைப்போரில் வெற்றிபெற ஈழத்தமிழ் போராளிகள், சொந்த தேசிய இன தொழிலாளர், உழவர், அறிவாளிப் பிரிவினைரையும் மற்றும்
ஒடுக்கப்பட்ட மக்களையும் வர்க்கங்களையும் சார்ந்து நிற்கவேண்டும். தமிழ் தேசியம் பேசி மக்களைத் திரட்டிக் கொண்டு ஆளும் வர்க்கங்களோடு
சமரசம் செய்து கொள்வதன்மூலம் விடுதலைப் போரை சீர்குலைக்க விரும்பும் தமிழீழ தரகு முதலாளிகளின் அரசியல் பிரதி நிதிகளை அமிர்தலிங்கம்போன்ற சமரச சக்திகளை தனிமைப்படுத்தி, அவர் பின் உள்ள மக்களை வென்றெடுத்து எதிரிக்கு எதிராக நிறுத்தவேண்டும். ஜெயவர்த்தனேவின் பாசிச ஆட்சி முறையினால் ஒடுக்குமுறைக்குள்ளான சிங்கள இனத்திலுள்ள பாட்டாளிகளையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் வென்றெடுத்து அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். அமெரிக்க, ரசிய சமூக ஏகாதிபத்தியங்களுக்கிடையிலுள்ள முரண்பாட்டினாலும், இலங்கை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டினாலும் அவர்களிடம் இருந்து கிடைக்கும் உதவி தற்காலிகமானது நிலையானதல்ல. சார்ந்து நிற்கக்
கூடியதுமல்ல என்பதை உணர்ந்துகொண்டு சொந்த நாட்டு மக்களை சார்ந்து நின்று போரிட்டால் வெற்றிபெறுவது நிச்சயமான ஒன்று. இது மட்டுமே
ஈழவிடுதலைப் போருக்கு சரியான பாதையாக விளங்க முடியும்.” என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் தொடர்ச்சியான பல கட்டுரைகளில் அயல் நாடுகளில் உள்ள தேச விடுதலைப் போராட்ட சக்திகளுடனும், ஒடுக்கப்பட்ட தேசங்கள் மற்றும்
ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினருடன் இணைந்து போராட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

ஆனால், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அரசியல் நிலைபாடு, ஏகாதிபத்தியம் பற்றிய மாயைகளுக்கு அடித்தளமாக இருந்தது.
அதுவே விடுதலைப் போரின் தோல்விக்கும், அமைப்பின் தலைமை அழிக்கப்படுவதற்கும் காரணம் ஆகிவிட்டது.

தேசிய இன சுயநிர்ணய உரிமை - கோட்பாட்டுப் பிரச்சினைகள்


இந்நூலில் வரும்

“தேசிய இனப்பிரச்சினையும் முதலாளித்துவ தேசியவாதமும்”

என்ற கட்டுரை தேசிய இனப்பிரச்சினையில் ஏற்பட்டுள்ள இருவகை
திரிபுகளை எதிர்த்து ஒரு சரியான பாட்டாளி வர்க்க வழியை நிறுவியுள்ளது. இடது, வலது போலிக் கம்யூனிஸ்டுகள் சுயநிர்ணய உரிமைக்
கோரிக்கையை ஏற்க மறுப்பது குருசேவ் திருத்தல்வாதத்தின் தொடர்ச்சியே, ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவானதே என்பது தெளிவாக
எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அடுத்து சுயநிர்ணய உரிமையை பேசிக்கொண்டே ஈழம் உள்ளிட்ட எந்த ஒரு தேசிய இனத்தின் பிரிவினையையும் மறுக்கும்
போக்கு ஒன்று. சுயநிர்ணய உரிமையே இன்றைய வரலாற்றுக் கட்டத்துக்கு பொருந்தாது. எனவே எல்லா தேசிய இனங்களும் பிரிந்துச்சென்று தனிநாடு
அமைத்துக் கொள்ளவேண்டும் என்பது மற்றொன்று. அதாவது இலங்கையிலும் தனிநாடு, இந்தியாவிலும் தனிநாடு என்று கோருவது. இவை
இரண்டுமே முதலாளித்துவ தேசியவாதமே.

தேசிய இனப்பிரச்சினை வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது

முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்தக் காலத்தில், அதாவது நிலப்பிரபுத்துவ மன்னராட்சியை எதிர்த்து முதலாளித்துவத்தின்
தலைமையில் நடந்த பழைய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் மூலம் தீர்க்கப்பட்டது. இந்நிகழ்ச்சிப் போக்கில் தனித்தனித் தேசிய அரசுகள்
அமைந்தன.

இரண்டாவதாக தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நிறைவு
பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய நாடுகளில் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்பு முறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்து வந்த
தேசிய இனப்புரட்சிக்கும் இடையே முரண்பாடு கூர்மையடைந்தது. இம்முரண்பாடுகள் அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற
ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகவும்,
விரும்பினால் பிரிந்து போகவும் இருக்கக்கூடிய நிலையில் தேசிய ஒடுக்குமுறைக்குத் தீர்வு காண்பது.

மூன்றாவதாக இன்று இது ஏகாதிபத்திய சகாப்தமாக இருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி காலம் ஏற்கெனவே
முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப்பிரச்சினை உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

லெனின் ஏகாதிபத்தியத்தின் விதிகளைப் பற்றிய ஆய்வுகளை முடிக்கும் முன்பாக போல்சுவிக்குகள் தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளி வர்க்க
புரட்சியின் பகுதியாக பாராமல் பழைய பூர்சுவா - ஜனநாயக புரட்சியின் பகுதியாகப் பார்த்தனர் என்றும், ஏகாதிபத்திய யுத்தமும் ருசியாவில் அக்டோபர் புரட்சியும் தேசிய இனப் பிரச்சினை பழைய பூர்சுவா ஜனநாயகப் புரட்சியின் பகுதியாக இருந்த நிலையை மாற்றி பாட்டாளிவர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக ஆக்கிவிட்டன என்றும் ஸ்டாலின் ‘மீண்டும் தேசிய இனப்பிரச்சினை குறித்து’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அக்டோபர் புரட்சியானது “தேசிய இனப் பிரச்சினையின் எல்லையை விரிவுபடுத்திற்று. ஐரோப்பாவில் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்தல் என்ற குறிப்பான பிரச்சினையாக இருந்ததை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்கள், காலனிகள், அரைக்காலனிகளை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவிக்கும் பொதுவான பிரச்சினையாக ஆகிவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார்.

மேற்கூறிய லெனினதும் ஸ்டாலினதும் ஆய்வுகளின் அடிப்படையில், மாவோ சீனாவில் தேசிய இனப் பிரச்சினை பற்றி ஒரு திட்டவட்டமான
கொள்கையை உருவாக்கினார். சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏகாதிபத்தியத்திடமிருந்து சீனாவை விடுவித்தல் என்ற தேசிய வடிவத்தை
எடுப்பதை அவர் பார்த்தார். அத்துடன் சீன நாட்டினுள் சிறுபான்மை தேசிய இனங்கள் - சிறு அளவிலே இருப்பினும்- அவற்றின் பிரச்சினையையும்
அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. சீனாவின் தேசியத்திற்கு இரு அம்சங்கள் உண்டு என அவர் கூறுகிறார்: “ஒன்று சீன தேச
விடுதலை, இரண்டாவது சீனாவிலுள்ள தேசிய இனங்கள் அனைத்தின் சமத்துவம். சீனாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய
உரிமையும் அங்கீகரிக்கப்படுகிறது”.

இதிலிருந்து ஒடுக்கப்பட்ட நாடுகளின் தேசியப் பிரச்சினை இரண்டு அம்சங்களைக் கொண்டது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.

ஒன்று நாடு முழுவதும் ஏகாதிபத்தியத்திடம் இருந்து விடுதலைப் பெறுவது, இரண்டு அந்த நாட்டில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் சுயநிர்ணயம் பெறுவது இரண்டுமே சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையாகும்.

இதனடிப்படையில் - ஒடுக்கப்பட்ட பல்தேசிய அரசுகளில் அனைத்து தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவதுதான் பாட்டாளிவர்க்க
இயக்கத்தின் நிலைபாடாகும். ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போகும் கோரிக்கையை தனித்தனி வழக்காக பரிசீலித்து, வர்க்கப்போராட்ட
நலன்கள், பொருளாதார வளர்ச்சி, சமூக அமைதி என்ற நிபந்தனைகளின் கீழ் தனிநாடு கோரிக்கையை அங்கீகரிப்பது என்ற நிலைப்பாட்டை நிறுவியது.
இது ஒரு மிக முக்கிய கோட்பாட்டுப் பிரச்சினையாக இன்றளவும் தமிழகத்திலும், சர்வதேச அளவிலும் திகழ்கிறது. மேற்கண்ட கட்டுரையில்
இப்பிரச்சினைத் தெளிவாக மா.லெ.மாவோ வழியில் தீர்க்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் தனிநாடு இந்தியாவிலும் தனிநாடு என்ற முதலாளித்துவ
தேசியவாதம் மறுதலிக்கப்பட்டது.

2009-2013 : போருக்குப் பிந்தைய நிலைமைகளும் ஈழப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும்

ஈழவிடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த பிறகும் சிங்கள இனவெறி இராஜபட்சே கும்பல் ஈழத்தமிழர்களின் அரசியல்
பிரச்சினைக்குத் தீர்வு காணத் தயாரில்லை. வடக்கையும், கிழக்கையும் இணைத்து தமிழர் தாயகம் ஏற்படுத்துவது என்ற கோரிக்கையையும்
மறுத்துவிட்டது. தொடர்ந்து தமிழர் பகுதியை இராணுவ மயமாக்கி வருகிறது. தமிழர் பகுதிகளில் இராணுவத்தின் உதவியுடன் சிங்களர்களை
குடியேற்றி தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கப்படுவது தீவிரப்படுத்தப் படுகிறது. சுருங்கச் சொன்னால் ஈழத்தமிழின அழிப்பு நடவடிக்கைகள்
தொடர்கின்றன. போர் முடிவுற்ற போதிலும் போர் தொடங்கியதற்கான காரணங்கள் தீர்வுகாணப்படாமல் தொடர்கின்றன.

இலங்கையில் நடந்த இறுதியுத்தத்தில் சர்வதேச சட்டங்களை மீறி போர்க்குற்றங்களில் இராஜபட்சே கும்பல் ஈடுபட்டுள்ளது என்பதை ஐ.நா
மன்றத்தின் மூன்று பேர்க் கொண்ட கமிட்டி கூறியுள்ளது. 2010 ஆம் ஆண்டு டப்ளினில் கூடிய சர்வதேச மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடந்தது
போர்க்குற்றம் மட்டுமல்ல அது ஒரு இனப்படுகொலைதான் என்பதும், இனப்படுகொலை நடந்த ஒரு நாட்டில் சேர்ந்து வாழமுடியாது; எனவே சர்வதேச விதிகளின்படி ஈழமக்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழம் காண்பதே அரசியல் தீர்வு என்றும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
லண்டனைச் சார்ந்த சேனல்-4 தொலைக்காட்சி இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு ஆதாரங்களை ஆவணப்பூர்வமாக வெளியிட்டது.
இவையெல்லாம் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எழுச்சியை உருவாக்கியது. போர்க்குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும். பொதுவாக்கெடுப்பின் மூலம் தமிழ் ஈழம் காணவேண்டும் என்றும் ஐ.நா. மன்றத்திடம் கோரிக்கை வைத்துப் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இலங்கையின் மனித உரிமை மீறலை எதிர்த்து ஐ.நா மன்றத்தில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை
இராஜபட்சேவை இன அழிப்புப் போர்ர்க்குற்றவாளி என்றோ, அங்கு நடந்தது இனப்படுகொலை என்பதையோ ஏற்கவில்லை. மாறாக இறுதி
யுத்தத்தின்போது மனித உரிமை மீறல் மட்டுமே நடந்துள்ளன. அதை விசாரிக்க சர்வதேச விசாரணை மட்டுமே வேண்டும் என்று கோரியிருந்தது.
இறுதியில் அமெரிக்க -இந்திய கூட்டுச்சதிகளின் மூலம் அந்தத் தீர்மானமும் திருத்தப்பட்டு சர்வதேச விசாரணையும் கைவிடப்பட்டு இராஜபட்சே
கும்பலின் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஈழத்தமிழர்களுக்குத் துரோகம்
இழைக்கப்பட்டது.

இனப்படுகொலை என்று கூறினால், சர்வதேச விதிகளின்படி தனிநாடுதான் தீர்வு என்பதை ஏற்க வேண்டும் என்பதால்தான் அமெரிக்க
ஏகாதிபத்தியமோ, விரிவாதிக்க இந்திய அரசோ அதை ஏற்க மறுக்கின்றன. மேலும் இவ்விரண்டு அரசுகளும் இறுதி யுத்தத்தில் இராஜபட்சே
கும்பலுடன் இன அழிப்புப் போரில் மறைமுகமாக ஈடுபட்டன. எனவே இவ்விரு நாடுகளும் போர்க் குற்றம் புரிந்த நாடுகளே ஆகும்.
அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மனித உரிமை என்ற பேரால் எப்படி மத்திய கிழக்கில் எகிப்து, லெபனான், லிபியா போன்ற நாடுகளில் தலையிட்டு
உள்நாட்டு கலகத்தின் மூலம் அந்த ஆட்சிகளை கவிழ்த்து, தமது பொம்மை ஆட்சியை நிறுவிக் கொண்டனரோ அதே போல இலங்கையிலும் மனித
உரிமை பேரால் தலையிட்டு அந்நாட்டில் தமது மேலாதிக்கத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றனர். மனித உரிமை மீறல் என்று கூறி இராஜபட்சேவை மிரட்டி இலங்கை மீது தமது மேலாதிக்கத்தை நிறுவுவது, இலங்கையில் சீனாவின் செல்வாக்கை தடுத்து நிறுத்துவது, திரிகோணமலை துறைமுகத்தைக் கைப்பற்றி இந்தியப் பெருங்கடலில் தமது ஆதிக்கத்தை நிறுவுவது என்பதே அமெரிக்காவின் ஒரே குறிக்கோளாகும்.

ஆசியாவை ஆதிக்கம் செலுத்துவதற்கான ஆசிய-பசிபிக் நூற்றாண்டு திட்டத்தின் ஒரு பகுதியே இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் ஐ.நா தீர்மானமாகும்

அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை இந்தியா ஏற்றுக்கொள்கிறது. இதியாவின் இலங்கை மீதான நலன்களை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. இரு நாடுகளும் இலங்கை மீதான மேலாதிக்கத்திற்காக ஈழத்தமிழினத்தை பலிகொடுக்கின்றன. அவர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து இலங்கை இன வெறி அரசுக்குத் துணைபோகின்றன. இரசியா, சீனா போன்ற ஏகாதிபத்திய முகாமும் அமெரிக்காவோடு போட்டி போட்டுக்கொண்டு இலங்கை இனவெறி அரசுக்குத் துணைபோகின்றன.

இத்தகைய ஒரு சூழலில் அமெரிக்காவின் தீர்மானத்தை செயல்படுத்தக் கோருவதாலோ, அதற்காக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ,
ஐ.நா. அவைக்கு கோரிக்கை வைப்பதாலோ ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை அடைவதற்கு வழியில்லை. போர்க்குற்றவாளி இராஜபட்சே
கும்பலைத் தண்டிக்கவோ, பொது வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் காண்பதோ சாத்தியமும் இல்லை. அவ்வாறு முடியும் என நம்பவைப்பது ஈழ
மக்களுக்கு செய்யும் துரோகமேயாகும். அவ்வாறு ஐ.நா. தீர்மானம் வேண்டி இந்திய அரசை நிர்ப்பந்திப்பது என்பது அனைத்தும் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் இலங்கை மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதாகவே அமையும். தமிழீழத்தை ஏற்றுக்கொண்டு ஆனால் செயலுத்தி என்ற பேரால்
ஐ.நா.தீர்மானத்திற்கு ஆதரவாக இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பது என்பது அமெரிக்காவின் இலங்கை மீதான ஆதிக்கத்துக்கு சேவை
செய்வதேயாகும். எனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், விரிவாதிக்க இந்திய அரசையும் எதிர்த்துப் போராடுவதன் மூலம் மட்டுமே, அதற்கான
மக்கள் இயக்கத்தை கட்டியமைப்பதன் மூலம் மட்டுமே, உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்கள் ஒடுக்கப்பட்ட தேசங்களின் போராட்டத்தோடு
ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் மட்டுமே போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்கவும் ஈழத்தமிழினம் அரசியல் விடுதலையையும் அடைய முடியும்.

தனி ஈழம் ஒன்றே தீர்வு

ஆனால் ஏகாதிபத்திய எடுபிடிகளும் இந்திய அரசின் விசுவாசிகளும் இனிமேல் தனி ஈழம் சாத்தியமே இல்லை என்று கூறுகின்றனர். இலங்கை
அரசமைப்பில் சட்டத்தைத் திருத்துவது, அதிகாரப் பரவல் அளிப்பதன் மூலம் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்று கூறி ஈழ
விடுதலைக்கானப் போராட்டத்தை கருவறுக்க நினைக்கின்றனர். தமிழீழத்திற்கு மாற்றாக சில்லறை சீர்த்திருத்தங்களை முன்வைக்கின்றனர்.
விடுதலைப் போர் தோல்வி என்பதாலேயே இலட்சியத்தைக் கைவிடவேண்டும் என்று சதித்தனமாக வாதிடுகின்றனர்.

ஆனால்
“ஆளும் வர்க்கத்தின் அதிகார அடிப்படையைச் சிதைக்காமல் எதுவிட்டுவைக்கிறதோ அது சீர்திருத்த மாறுதல்; அந்த அதிகாரத்தைச் சிறிதும் குறைக்காமல் வைத்திருக்கும் வெறும் விட்டுக்கொடுத்தல் அது. புரட்சிகர மாறுதல் என்பது அதிகாரத்தின் அடிப்படையையே பறித்து விடுகிறது. சீர்திருத்தவாத தேசிய இனத் திட்டம் ஆளும் தேசிய இனத்தின் விஷேச உரிமைகள் அனைத்தையும் அகற்றுவதில்லை; அது பூரண சமத்துவத்தை ஏற்படுத்துவதில்லை; தேசிய இன ஒடுக்குமுறையை அதன் எல்லா வடிவங்களிலும் அது ஒழிப்பதில்லை.”
(லெனின் சுயநிர்ணயம் பற்றிய விவாதத் தொகுப்பு - பக்கம் 241)

ஈழத் தமிழர்களை பொறுத்தமட்டில் பிரித்துபோகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமை என்பது பேரம் பேசக்கூடிய ஒன்றல்ல. ஏனெனில்,
சுயாட்சியோ அல்லது வேறு எந்தவிதமான அதிகாரத்தைக் கீழ்மட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் முறையோ, அந்நாட்டை ஆளுகின்ற வர்க்கங்களின் அதிகாரத்தின் அஸ்திவாரங்களை சிதைக்காமல் அப்படியே வைத்துக்கொள்வதும்; அது பழுதுபடாமல் ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு சில்லரை சலுகைகள் வழங்கும் முறையேயாகும். இது ஒரு சீர்திருத்த முறையேயாகும். ஒடுக்கும் இனமும், ஒடுக்கப்பட்ட இனமும் சம உரிமை பெறவேண்டுமானால், இரு இனங்களுக்கிடையில் அமைதி நிலவ வேண்டுமானால் ஒடுக்கப்பட்ட தேசிய இனம் பிரிந்து செல்லும் உரிமை உள்ளிட்ட சுயநிர்ணய உரிமை பெறுவதேயாகும். இம்முறையால்தான் இன ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட முடியும். எனவேதான் ஈழத் தமிழருடைய பிரிந்துப் போகும் உரிமையுடன் கூடிய உரிமை என்பது பேரம் பேசக்கூடிய ஒன்றல்ல என்கிறோம்.

மேலும் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி வந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட ஒரு சூழலில் இலங்கையில் இனவெறி இராஜபட்சே கும்பல்
எந்தவிதமான அரசியல் அதிகாரப் பரவலுக்கும் தயாராக இல்லாத நிலையில் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தனித் தமிழ் ஈழம் காண்பதில்
மட்டுமே அடங்கியிருக்கிறது. ஈழப்போராட்டம் முடிந்துவிடவில்லை. ஈழம் ஆசியாவின் ஒரு ஐரீஷ் ஆகவே திகழ்கிறது. மரம் ஓய்வை நாடினாலும்
காற்று விடுவதில்லை. எனவே ஈழத்திற்கானப் போராட்டம் மீண்டும் எழுவது தவிர்க்க முடியாதது. அதற்கு இந்நூல் பெரும்பங்காற்றும்.

இந்த நூலிலுள்ள பிரசுரங்கள் ஒவ்வொன்றும் ஒரு தனிக்குறிப்பான அரசியல் சூழ்நிலையின் தேவைகளை ஈடுசெய்யும்பொருட்டு பிரசுரிக்கப் பட்டவையாகும்.

ஆனால் இக்காலப்பகுதி முழுமைக்கும் பொதுவாக ஒரு அம்சம் இருந்தது. அது ஈழத்தமிழர்களுக்காக போரிடுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைமையும், படையும் இருந்ததாகும். இன்று அந்த நிலைமை இல்லை.

வேறு விதமாகச் சொன்னால் ஸ்தாபன ரீதியாக மட்டுமல்ல, ஒரு சித்தாந்த அரசியல் போக்கு என்கிறவகையில் குட்டிமுதலாளித்துவ தேசியவாதம்
தோல்விகண்டுள்ளது.

மேலும் சர்வதேச சூழ்நிலை மாறிவிட்டது,

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் ஆன உறவுநிலை மாறிவிட்டது.

பிராந்தியச் சூழ்நிலை மாறிவிட்டது.

இலங்கை அரசின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகள் மாறிவிட்டன.

இக்குறிப்பான சூழ்நிலமையின் பருண்மையான ஆய்விலிருந்தே ஒரு புரட்சிகர இயக்கம் தனது கடமைகளை வகுத்து அடுத்தக் காலடியை எடுத்து
வைக்க முடியும்.

இதை ஈழத்தில் நிறைவேற்றத் தயாராகி, தலை தூக்கியிருக்கும் புதிய ஈழப்புரட்சியாளர்கள், ஈழமக்கள் ஜனநாயகப் புரட்சியின் இரண்டாம்
காலகட்டத்தின்; குட்டி முதலாளித்துவ தேசியவாதம் அரசோச்சிய காலத்தின் மதிப்பார்ந்த அனுபவங்களை உரிய முக்கியத்துவமளித்து படிப்பினை
பெற்றுக்கொள்வார்கள். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அதற்கு இத்தொகுப்பு ஒரு ஒளி விளக்காய்த் திகழும்.

முடிவாக

தமிழீழ விடுதலைக்கு சமரன் அளித்த தத்துவார்த்த தலைமையை பின்வருமாறு வரையறை செய்யலாம்:

முதலாவதாக;
தன்னியல்பான தமிழீழ மக்களின் 1983 எழுச்சியை அரசியல் போர்த்தந்திர வழியில் நிறுத்தியது

இரண்டாவதாக:
தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டத்தில் முன்வைத்து, இலங்கையின் ஸ்தூலமான ஆய்விலிருந்து, தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு பிரிவினைக் கோரிக்கையாக அமைந்திருப்பதை அறிந்துணர்ந்து, தமிழீழத் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரித்தது.

மூன்றாவதாக;
தமிழீழ தேசிய விடுதலைக்கு தலைமை அளிக்க புரட்சிகரச் சித்தாந்தம், புரட்சிகரத் திட்டம், இதன் மீது அமைந்த புரட்சிகரக் கட்சி அவசிய நிபந்தனை
என்பதை அறிவுறுத்தியது.

நான்காவதாக;
புரட்சியின் மிக ஆதாரமான பிரச்சினைகளான உள்நாட்டிலும், பிராந்திய அளவிலும், சர்வதேசம் தழுவியும்
அ) விடுதலைப் புரட்சியின் நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? இடை நிற்கும் சமரச சக்திகள் யார்?
ஆ) நண்பர்கள் மற்றும் சமரச சக்திகள் இடையிலான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி?
இ) எதிரிகளுக்கிடையான முரண்பாடுகளைக் கையாள்வது எப்படி என்கிற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதை நடைமுறையில் உணர்த்தியது.

ஐந்தாவதாக;
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள சிறு முதலாளித்துவ தேசியவாத சக்திகளோடு, முரணற்ற ஜனநாயகத்தின், தேசிய விடுதலைப் புரட்சியின் உழைக்கும் மக்களின் முன்னணிப்படை ஐக்கிய முன்னணி அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஐக்கிய முன்னணிக் கோட்பாட்டை முன்னிறுத்தியது.

பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதத்தின் பேரால் இம் மாபெரும் புரட்சிகரக் கடமையை எமக்கு நிறைவேற்றித் தந்தது சமரன் ஆகும். தத்துவம்
மக்களுக்குள் இருந்து வருவதில்லை, அது வெளியில் இருந்து மக்களுக்குள் செல்லவேண்டும். நமக்கு அது சமரனிடமிருந்து கிடைத்தது. அதற்கு நாம்
நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்த நன்றியின் பேரால் சமரன் வழியில் தமிழீழ விடுதலைப் புரட்சியை மீண்டும் கட்டியமைக்க உறுதி பூணுவோம்.

எதிர் வரும் காலத்து எமது பணிகளுக்கு இந்நூல் என்றும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

ஈழத்தமிழர்களின் தேவை தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
சுபா
புதிய ஈழப் புரட்சியாளர்கள்
========
செந்தளத்தில் பிரசுரிக்கப்பட்ட இறுதிப் பிரதி சில எழுத்துத் திருத்தங்களுடன், மேலும்
* செந்தளத்தில் 1980 என தவறுதலாக அச்சிடப்பட்டிருந்த ஆண்டு, இங்கே 1977 என சரியாகத் திருத்தப்பட்டுள்ளது.