ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று,
உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டம் 2012
_______________________________________________________
இனவெறிச் சிங்களத்தின் 2012 வரவு செலவு திட்டத்தில் இராணுவச் செலவினம் 7 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மே 19 இல் ஈழப் பயங்கரவாதத்தை தோற்கடித்து விட்டதாக சிங்களம் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்த பிறகும் அதற்குப் பின்னால் ஈழப் பயங்கரவாதம் முகிழ்ப்பதற்கான கூறுகள் எதுவும் இந்த இரண்டரை ஆண்டுகளில் தோன்றாதிருந்தும் கூட சிங்களம் தனது இராணுவ வலிமையை 7%
த்தால், அமைதி மற்றும் அபிவிருத்திக் காலகட்டத்தில் அதிகரித்தது ஏன்?
1. சிங்களத்தின் இராணுவம் ஒரு சமூக அரசியல் சக்தியாக உருமாறுவது
2. தமிழீழ தேசத்தை தொடர்ந்தும் இராணுவ முற்றுகைக்குள் வைத்திருப்பது.
3. விடுதலைப் புலிகள் மீண்டும் எழுந்து வருவார்கள் என அஞ்சுவது.
4. தென்னிலங்கையில் மீண்டும் ஒரு அரசு எதிர்ப்பு ஆயுதக் கிளர்ச்சி தோன்றுமென நம்புவது.
5. நாடுதழுவி பரந்து விரியும் அந்நிய மூலதனத்துக்கும் அந்நிய முதலீட்டுத் திட்டங்களுக்கும் இராணுவப் பாதுகாப்பளிப்பது.
6. அமெரிக்காவின் ஐ.நா சபை முகமூடி அணிந்த உலக மறுபங்கீட்டு யுத்தங்களுக்குச் சேவை செய்யும் கூலிப்படைத் திட்டத்தில் இலங்கை
இராணுவத்தை ஒரு பகுதியாக இணைப்பது.
7. ஏகாதிபத்தியத்துக்கும் சுதந்திர தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் இடையிலான யுத்தத்தில், தமிழீழப் படுகொலையின் அநுபவங்களை
போதிக்கும் சட்டம்பியார் ஆவது, தனியார் இராணுவம் என்ற கேடுகெட்ட முதலீட்டில் சிங்களப் படைகளை உள்ளடக்கி இலாபம் ஈட்ட முயல்வது.
8. உலக மறுபங்கீட்டில் எடுத்துக் கொள்ளும் சார்புநிலை காரணமாக பிராந்திய யுத்த களத்துக்கு மேலும், வெடிக்கக் கூடிய உலக யுத்தத்துக்கு
இராணுவச் சேவகம் புரிய நாட்டைத் தயார்ப்படுத்துவது..
9. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால், பெருகிவரும் வேலையற்ற விவசாயப் பட்டாளத்தை இராணுவக் கூலிப்படைகள் ஆக்குவதன் மூலம் இலங்கையில் விவசாய புரட்சி இயக்கத்தை சீரழித்து தமிழ் விவசாயிகளுக்கு எதிராக, ஆயுதம் ஏந்திய சிங்கள விவசாயிகளை நிறுத்தி மோதவிடுவது.
10. இவ்வாறு சிங்களம் கடைப்பிடித்துவரும் அனைத்து தேச விரோத மக்கள் விரோத ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எழுந்து வந்து தீரப் போகிற, நாடு தழுவிய எழுச்சியை நசுக்குவதற்காக தனது பாசிச அரசுமுறையை, அதன் அரசதிகாரத்தை மென்மேலும் பலப்படுத்தி
இராணுவமயமாக்கி வருகிறது.
`வன்முறைக்கு முடிவுகட்டி பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டினோம். நாட்டில் அமைதியை நிலை நாட்டியும் இலங்கை மக்களுக்கிடையே
சமாதானத்தை உருவாக்கியும் நாடுதழுவிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனச் சிங்களம் தம்பட்டம் அடித்து` மக்களை ஏமாற்றி வருகின்றது.. இதை இந்திய அரசும் ஏகாதிபத்திய வாதிகளும் ஒத்தூதுகின்றனர். IMF உம் WBஉம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதாவது- உலகமயமாக்கல் அபிவிருத்தியால் ஏகாதிபத்தியவாதிகள் நன்மையடையும் வீதம் (5,6,7,- 8,9,10), ஐந்து ஆறு ஏழு,- எட்டு ஒன்பது பத்து என, கொங்கை குலுங்க கும்மியடிக்கின்றனர். HSBC வங்கி அதிகாரி பிரமை பிடித்தவனைப்போல ``லாபாய்``, ``லாபாய்`` என அலறுகின்றான்!
முள்ளிவாய்க்கால் பிரளயம் நடந்தேறிக் கொண்டிருந்த போது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சிங்களத்திடம் சரணடைய
வேண்டுமென பிணந்தின்னி ஒபாமா கோரிக்கை விடுத்தான். பாங்கீ மூனும் அதையே கூறினான். மத்தியஸ்தம் வகித்த நோர்வே கூட இதையே
கோரியது.ஒரு படி மேலே போய் மன் மோகன் - சோனியா அரசு புலிகளை முற்றாகக் கொன்றொழிக்கக் கங்கணம் கட்டி நின்றது, (பகுத்தறிவாளன்
வை.கோ பாபர்மசூதி BJP வந்து ஈழபூமியைக் காக்கும் என்றான்!!)
வன்முறைக்கு முடிவு கட்டப்பட்டு, பயங்கரவாதம் அழிக்கப்பட்டு விடுதலைப் புலிகள் ஒழித்துக் கட்டப்பட்டு, முப்பது மாதங்கள் முடிந்து
விட்டபின்னாலும், பக்ச பாசிச்ஸ்டுக்கள் தங்கள் வன்முறைப் பட்டாளத்துக்கான செலவினத்தை 7% த்தினால் உயர்த்தியது குறித்து இந்தச் சாவு வியாபாரிகள் அலட்டிக் கொள்ளவே இல்லை.
காரணம் என்னவெனில் மேலே வரையறுக்கப்பட்ட பத்து நோக்கங்களினாலும் பாதுகாக்கப்படுவது சிங்களத்தின் நலன்கள் மட்டுமல்ல, மாறாக ஏகாதிபத்தியவாதிகளினதும் இந்திய விரிவாதிக்கவாதிகளின், மற்றும் உலக மறுபங்கீட்டு வேட்டையில் குதித்துள்ள பிராந்திய மேலதிக்க அரசுகளின் நலன்களும் கூடத்தான்.
வேறுவிதமாகச் சொன்னால் சிங்களத் தரகுமுதலாளிய, பேரினவாத, பொளத்தமதவாத, இனவெறிப் பாசிச, நவீன அரைக்காலனிய, இராணுவ
சர்வாதிகார அரசின் ஒரு சொல்லில்- சிங்களத்தின் நலன்களும் ஏகாதிபத்திய இந்திய விரிவாதிக்க அரசுகளின் நலன்களும் இரண்டறக் கலந்துள்ளன.
இதனாற்தான் சிங்களம் எப்போது ஆட்டங்கண்டாலும் அதை அரவணைத்துப் பாதுகாக்க இவர்கள் படையெடுக்கிறார்கள்.1972 இல் எடுத்தார்கள், 1987 இல் எடுத்தார்கள், 1999 இல் ஆனையிறவுத் தாக்குதலைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினால் படையெடுத்து நசுக்குவோமென மிரட்டி நமது முன்னேற்றத்தைத் தடுத்தார்கள். 2008 இல் முள்ளிவாய்க்காலில் நவவஞ்சகமான படையெடுப்பின் மூலம் நம்மையும் நமது தலைமையையும் முன்னணித் தலைவர்களையும், முதன் நிலைப் போராளிகளையும் கொன்றொழித்தார்கள்.
மேலும் இக்காரணத்தால்தான் ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமையையும் தமது நலன்களுக்காக பாடுபடும் வர்க்கங்களுக்கு மேலாக, வளர்வதற்கு அனுமதிப்பதில்லை. இதனால்தான் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டினார்கள். அதனிடத்தில் TNA சமரசவாதிகளை ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறி ஊட்டி வளர்க்கிறார்கள். தமிழகத்தில் நெடுமாறன், வைகோ, சீமான் கும்பலுக்கு அப்பால் ஈழவிடுதலைக்கான சக்திகள் வளர்ந்துவிடக் கூடாது என்பதற்காக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதித்த தடையை நீக்க மறுக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளைத் தடைசெய்து அவர்களின் உண்மையான ஆதரவாளர்களைக் கூண்டிலேற்றும் ஏகாதிபத்தியவாதிகள், மறுபுறம் நாடுகடந்த அரசாங்க உருத்திராச்ச குமாரர்களை, ஒபாமாவுக்கான தமிழர்களை, மற்றும் நாட்டுக்கு நாடு முளைத்திருக்கும் ”தமிழர் பேரவை”களை, ஒரு சேரக் கூட்டிக் கட்டி, களத்தில் தமக்காகக் குரைக்க கொட்டி விட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் அனைத்தும் தமது ஏகாதிபத்திய தாச, இந்திய விரிவாதிக்க பாச, வர்க்க சமரச பாத்திரத்தின் காரணமாக “ஏகாதிபத்தியமே நீதி வழங்கு,
இந்தியாவே தீர்வு வழங்கு” என முனகுகிறது. இந்த ஈனக்குரல், ஒரு சந்தர்ப்ப வாத சமரசவாத சரணாகதிக் குரலாகும். இதனால் இது சிங்களத்துக்கு எந்தத் தீங்கையும் ஏற்படுத்தாது. சிங்களத்தின் ஆட்சி அதிகார அடித்தளத்தை சிதைப்பதற்குப் பதில் பாதுகாத்து நிற்கும் சீர்திருத்தக் குரலாகும்.
இத்தன்மை காரணமாக ஏகாதிபத்தியத்துக்கும் இந்திய விரிவாதிக்கத்துக்கும் சேவகம் செய்யும் பிற்போக்குக் குரலுமாகும்.ஏகாதிபத்தியமே நீதி வழங்கு இந்தியாவே தீர்வு வழங்கு என முனகி சமரசவாதிகள் கட்டியமைக்கும் இயக்கம் உலக மறுபங்கீட்டில் ஒரு ஏகாதிபத்திய அணியுடன் கூட்டமைக்கிறது. குறிப்பாக அமெரிக்க இந்திய அணியைச் சார்ந்து நிற்கிறது. அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தங்களை ,அநீதியான ஆட்சிக் கவிழ்ப்புக்களை ஆதரிக்கிறது. உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை அங்கீகரிக்கிறது. தேசிய இனப்பிரச்சனையை குறுமின வாதமாக குறுக்குகின்றது. அதிகாரப் பரவலாக்க தீர்வுக்கு அலைகின்றது. நாடு கடந்த அரசாங்கமென நாடகமாடுகின்றது. இதனால் இது பிற்போக்கானதும் தேசவிரோதமானதும் தோற்கடிக்கப்பட வேண்டியதுமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு , தாம் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்டது முதல், இன்றுவரை சுருட்டிக் கொண்ட சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எவ்வளவு துல்லியமாகத் தெரியுமோ, அதே அளவுக்கு பக்ச பாசிஸ்டுக்களிடம் இருந்து தமிழ் மக்கள் ஒரு சல்லியும் பெறமுடியாது என்பதும் மிக நன்றாகத்தெரியும்! இருந்தும் எம்மை அழித்தவர்களிடமே நாம் நீதியும் தீர்வும் பெறலாம் என மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போகாத ஊருக்கு வழிகாட்டுவது மட்டுமல்ல போக வேண்டிய பாதையில் இருந்து திட்டமிட்டு திசை திருப்புவதுமாகும்.
சமரசவாதிகள் எங்கிருந்தாலும் இந்தக் குறிக்கோளில் அவர்கள் ஒன்றுபட்டேயுள்ளனர்.
மேலும் இவ்வரவு செலவுத்திட்டத்தின் இதர முக்கிய அம்சங்களை நோக்குவோம்.
2) நாணயப் பெறுமதி இறக்கம்
படுபாதக பக்ச பாசிஸ்டுக்கள் நமது நாணயத்தின் அமெரிக்க டொலருக்கு ஈடான பெறுமதியை, அதிர்ச்சியளிக்கத்த எண்ணிக்கையில் 3% ஆல் வெட்டிச் சரித்துள்ளனர்."Our exporters find it difficult to remain competitive," Rajapakse said. இந்த Our exporters என்பது தரகுமுதலாளிய வர்க்க விதேசிகளே ஆவர். இவர்களின் நலன் காக்க எடுத்த இந்நடவடிக்கையின் விளைவாக 1 அமெரிக்க டொலருக்கு சராசரியாக 110.38 ரூபாய் பெறுமதி உடையதாக இருந்த இலங்கை நாணயம் தற்போது 106.85 இலங்கை ரூபாயாக பெறுமதி இழக்க வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 அமெரிக்க டொலரை வாங்குவதற்கு தேவைப்பட்ட அதே இலங்கை ரூபாயைக்கொண்டு இன்று 0.97 அமெரிக்க டொலரையே வாங்கமுடியும்.அதாவது அமெரிக்க டொலருக்கு நாம் அதிக விலை கொடுக்க நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளோம். இதன் விளைவாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான
அந்நியக் கடனைத் திருப்பி அடைப்பதற்கு எமக்கு மேலதிகமாக 350 மில்லியன் இலங்கை ரூபாய்கள் தேவைப்படும்.அல்லது 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏற்றுமதியைச் செய்கிறபோது நாம் 350 மில்லியன் ரூபாய்கள் குறைவான தொகையையே விலையாகப் பெறுவோம்.
இதற்காக நாம் மேலதிகமாக உழைக்க வேண்டும், அல்லது உண்மையில் சொல்லப்போனால் இந்த மேலதிக உழைப்பின் பயனாக திரளும் உபரி உள்நாட்டில் மிகை மூலதனமாகாமல் அந்நியர்களால் களவாடப்பட்டு விடும் நாடு மீண்டும் மீண்டும் அந்நியக் கடனை நம்பியே வாழும். முற்றிலும் அந்நியக்கடனிலும் [EXTERNAL DEBT and RESOURCE FLOWS
1989 1999 2008 2009(US$ millions)Total debt outstanding and disbursed 5,181 9,800 15,611 17,208,]
ஏற்றுமதி சார்ந்த வர்தகத்திலும் (US$billions 21.4 in 2009 World Bank/ Exports are projected to grow at around 14 per cent,...... Imports are projected to grow at around 10 per cent ) பிரதானமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இலங்கையின் நவீன காலனிய உலகமயமாக்கல் பொருளாதாரத்தில்(With an economy worth $56 billion
(2011 IMF estimate ) இந்த 3% மதிப்பிறக்கம் மிகப்பெரிய இரத்தம் குடிக்கும் அட்டை ஆகும்.
இவ்வாறு உள்நாட்டு மக்களின் உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைத்து, உபரி மூலதனத்தை சூறையாடும் இந்தப் பகல் கொள்ளையை நம் தேசியத் தலைவர்கள் ஜனநாயக வழியில் பாராளமன்றத்தில் நிறைவேற்றியிருகிறார்கள்! இந்தப் புனிதப் பாராளமன்றத்தைத் தகர்க்க பயங்கரவாதிகளை அநுமதிக்க முடியுமா என்ன?!
3) அரசுத்துறை ஊழியருக்கு 10% ஊதிய உயர்வு.
இலங்கையில் பணவீக்கம் 25% இற்கும் 5% இற்கும் இடையில் ஈடாடி வந்திருகின்றது.பணவீக்கக் கணிப்பீடே வெறுமனே சந்தை சார்ந்தாக இருப்பது, புள்ளிவிபர மோசடி,ஆளும்கட்சித் தலையீடு இவை யெல்லாவற்றையும் கவனத்திற் கொண்டு தற்போது பொதுவாக 7% என நம்பப்படுகிற விபரத்தை 10 % மாகக் கொள்வது எவ்வகையிலும் மிகைப்படுத்தலாகாது.அவ்வாறெனில் இவ் ஊதிய உயர்வு பணவீக்கத்தையே ஈடு செய்கிறது.மேலும் நாணயப் பெறுமதி இறக்கம் உழைப்புச் சக்தியின் மதிப்பை இறக்கியிருக்கின்றது மேலும் இதுவே பணவீக்கத்தை தூண்டக்கூடியதாகும்.இதனால் இவ் ஊதிய உயர்வு அதன் நடைமுறை மதிப்பில், அரசுத்துறை ஊழியர்களின் வருமானத்தை - வாங்கும் சக்தியை- உயர்த்தி அவர்கள் வாழ்வை மேம்படுத்தப்போவதிலை.
4) வரிச்சலுகை
கித்துள் பனங்கட்டி உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்க நிபந்தனை விதிக்கிற சிங்களம், உல்லாசத்துறைக்கென இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரியை 50% ஆல் குறைத்துள்ளது. புத்தங் சரணங் கச்சாமி!
5) பாதுகாப்புச் செலவினம்.
மேலே வெகு விரிவாக ஆராய்ந்துள்ளோம். மேலதிகமாக ஒரு குறிப்பு. Of 230 billion rupees allocated to defense, 203 billion or 88 percent will be spent on salaries, food and uniforms.என்கிறது சிங்களம்! இந்த உலகத்திலேயே தனது இராணுவச் செலவினத்தில் 88% ஐ படையாட்களின் உணவுக்கும், உடைக்கும், ஊதியத்துக்கும் செலவிடும் அரசு சிங்களமாகவே இருக்கும். அவ்வாறல்லாமல் இதுவே உண்மையென்று எடுத்துக் கொண்டால் இதை வேறொரு வழியிலும் விளக்க முடியும், எண்ணற்ற வழிகளில் தனது
ஜீவனோபாயத்துக்கு வருமானம் தேடிக்கொள்ள சிங்களம் தன் வன் படைக்கு வகைசெய்து கொடுத்துள்ளது.ஒருபுறம் சிங்கள வன்படை முதலீடுகளில் ஈடுபடுகிறது.மறுபுறம் கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறது ( பிரதானமாக தமிழீழ தேசத்தில்).இதற்கு மேல், கித்துள்பனங்கட்டி வரி உட்பட மக்களின் வரிப்பணத்தில் ஊதியமும் உடையும் கொடுத்து உண்டு கொழுத்திருக்கிற அதிகார வர்க்கமாக இராணுவத்தை உருமாற்றுகிறது. இந்த அடித்தளத்தில் சிங்களம் தன் இராணுவத்தை ஒரு சமூக அரசியல் சக்தியாக மாற்றி வருகின்றது. மேலும் ராஜபக்சவின் வ.செ.திட்ட உரையின் பின்வரும் பகுதியைப் படியுங்கள்!
INFRASTRUCTURE
"We have allocated 30 billion rupees ($271.8 million)for the inter provincial road network." "We can be the regional sports hub and that can help to strengthen our economy. I propose 500 million rupees for development of infrastructure complexes and all sport goods will be tax-free in order to encourage sports." ( இது Formula 1 போன்ற ஏகாதிபத்திய கோர விளையாட்டுக்கு மைதானம் அமைத்துக் கொடுத்து இலாபமீட்டும் இழி தொழில்.)
A monthly allowance of Rs. 750 to each of the parents of members of the security forces
A special loan scheme ‘Ranaviru Divi Neguma’ for the benefit of disabled soldiers, to be engaged
in self employmentA sum of Rs. 14,000 million has been allocated in this Budget to meet the
monthly allowance aid to all disabled soldiers.
It is propose to extend the application of the proposal that I announced in the last Budget to grant Rs.100,000 at the birth of the third child of any member of the security forces, to those who are serving in the Police force as well.
The monthly allowance paid to the elders over 70 years from Rs. 300 to Rs.1,000 and from Rs.100 to Rs.500 in relation to others.
Samurdhi allowance that is paid in 8 slabs, ranging from Rs.210 to Rs.1,500. Accordingly, the Rs.210 to Rs.615 allowance being paid to low income small families will be increased to Rs.750, while the Rs.900 allowance paid to low income general families will be increased to Rs. 1,200.
6) சிங்களம் அங்கீகரிக்கும் விதேசிய விவசாயத்திட்டம்
வரவு செலவுத் திட்ட உரையின் ஆவணப்பிரதியின் குறிப்பு 24-44 வரையான பகுதிகள் இலங்கை விவசாயம் குறித்தவை,நிலம் கடல் காடு தழுவிய துறையில் சிங்களத்தின் முதலீடு பற்றிய பகுதி இது. இவற்றைத் தனித்தனியாக அறுவைச் சிகிச்சை செய்வதை இக்கட்டுரை நீண்டு செல்வதன் காரணமாக தவிர்த்து அவற்றின் கோட்பாட்டு அடிப்படையை மட்டும் தொகுத்துத் தருகின்றோம்.
அ) இலங்கை விவாசாயத்தை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்றுவது. ஏகாதிபத்திய சந்தைக்கான விவசாயப் பண்டங்களை உற்பத்தி செய்வது.
புதிய தானியங்களை அறிமுகம் செய்வது. மரபுரீதியான விளை பொருட்களைக் கைவிட்டு புதிய பண்டங்களை உபத்தி செய்வது.இதற்காக அந்நிய சார்பு இயந்திர சிறு கைதொழில் துறையை ஊக்குவிப்பது.
ஆ) உள்ளூர் விவசாயத்தை அதன் சிறு உடமை வடிவிலும், பின்தங்கிய நிலையிலும் பேணுவது.
இ) தேசியச் சந்தை சார்ந்து கட்டுமானப் பணிகளை பேணுவதற்குப் பதில், ஏகாதிபத்திய ஏற்றுமதியின் தேவைக்கும், உள்நாட்டில் நிறைவேறும்
உலகமயமாக்கல் திட்டத்துக்கு ஏற்பவும் திட்டமிடுவது.
ஈ) இந்த அபிவிருத்திக்கு அந்நிய வங்கி மூலதனத்தைச் சார்த்திருப்பது.
உ) கிராமியப் பொருளாதார முன்னேற்றத்துக்கு அற்ப தொகையே ஒதுக்கப்பட்டிருப்பது.
7) சிங்களம் நிராகரிக்கும் தேசிய ஜனநாயக விவசாயத்திட்டம்
ஊ) நிலப்பிரச்சனை : பல் தேசியக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்த நிலங்களைக் குறித்து எந்தக்கதையுமே இல்லை. கிறீஸ்தவ மதச் சபைகளுக்கும், பெளத்த மடாலயங்களுக்கும் சொந்தமான(!) நிலங்கள் குறித்து மரண மெளனம்.
எ) கிராமிய விவசாய செயல்பாடுகளுக்கு கிராம அதிகாரி, பயிர்ச் செய்கை உத்தியோகஸ்தர் நியமனம் என அதிகாரித்துவ ஊழல், மோசடி நிர்வாகத்தை உருவாக்குதல்
ஏ) ஏகாதிபத்திய விவசாயத்தின் பகுதியாக இலங்கை விவசாயத்தை ஆக்கும் வெறியில் தேசிய விவசாயக் கல்வித்திட்டம் ஒன்றுக்கான அவசிய அவசரத்தை வெறுத்தொதுக்குவது.
ஐ) விவாசாயத் துறையில் தேசியப் பெருந்தொழிற்துறை வளர்ச்சி திட்டம் இல்லாதிருப்பது. .
ஒ)விவசாய நீர்வள அபிவிருத்தியைப் புறந்தள்ளுவது.
8) இவ் விதேசிய திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டியதாகும்,
இது அரசியல் துறையில் சமரசவாதிகளைத் தோற்கடிக்கும் போது மட்டுமே முடியும்.
9) செலவில்லாத சமாதானம்
2012 இல் எந்தத் தேர்தலும் நடக்காது என சிங்களம் சூழுரைத்துள்ளது. அதாவது எஞ்சியுள்ள ஒரே ஒரு வடக்கு மாகாண சபைத்தேர்தல் அடுத்த வருடம் நடக்காது என அறிவித்துள்ளது.இன்னும் ஆழமாக நோக்கினால் சமரசவாதிகள் முனகும் ``தீர்வு`` சிங்களத்தின் திட்டத்தில் இல்லை,. செலவும் இல்லை. இதுவரைக்கும் அமைதிக்கும், அபிவிருத்திக்கும் பயங்கரவாதமே தடை எனக் கூறி வந்த இன்று அந்தத் `தடை` நீங்கியதும் அமைதியையும் கைவிட்டுவிட்டது! அபிவிருத்தியையும் கைவிட்டுவிட்டது!!
ஏகாதிபத்தியவாதிகளுக்கு நாட்டை விற்றுப் பிழைப்பதிலேயே குறியாகவுள்ளது.
10) ஆக ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மேலும் இராணுவமயமாகும் சிங்களத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டம் 2012 ஐ ஒன்றுபட்டுத் தோற்கடிக்க எழுவோம்.
நாம் போராட வேண்டிய பாதை
உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து உலகெங்கும் தொழிலாளர்களும் விவசாயிகளும் உழைக்கும் வெகுஜன பாட்டாளி மக்களும் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர். கல்வி உரிமை கோரி மாணவர்கள் போராடுகின்றனர். தமது வாழ்விடங்களையும் அதன் கனிம வளங்களையும் பாதுகாக்க வனப்புற, பழங்குடி மக்கள் திரள் வெகுண்டெழுந்து போராடி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட தேசங்களின் சுயநிர்ணய இயக்கம் உலகெங்கும் கொழுந்து விட்டெரிகிறது. அரைக்காலனிய நவீன காலனிய சார்பு நாடுகளின் மக்கள் தம் சொந்த ஆட்சியாளர்களையும் அவர்களது அதிகாரத்தையும் இராணுவ சர்வாதிகாரத்தையும் எதிர்த்து ஜனநாயக ஆட்சி முறைக்காக போராடி வருகின்றனர். இதில் பகுதியான வெற்றியும் பெற்று வருகின்றனர்.
இவ்வாறு உலகெங்கும் போராடும் கோடானகோடி மக்களை சர்வதேச சமூகமும் அவர்களின் காவல்நாய்களான உள்ளூர் ஆட்சியாளர்களும் அடக்கியும் ஒடுக்கியும் வருகின்றனர். இவ்வாறு இரு முகாம்களாக இரு துருவங்களாக பிளவுண்டு மோதிக்கொண்டிருக்கிறது எம் கண்முன்னால் உள்ள உலகம்.
இதில் எந்தத் தரப்புடன் நாம் அணிசேர்வது. ஒடுக்கும் தரப்புடனா அல்லது ஒடுக்கப்படும் தரப்புடனா? புரட்சிகரமாக போராடும் உலகத் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட தேசங்களையும் சார்ந்து நின்று ஈழத் தமிழ்மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராட வேண்டும்.
2009 மே 19 இல் விடுதலைப் புலிகள் முள்ளிவாய்கால் பிரளயத்தோடு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டதை உத்தியோகபூர்வமாக அறிவித்து சிங்களம் உரிமை கோரிக்கொண்டது. இதன் விளைவாக பத்தாயிரத்துக்கும் மேலான போராளிகள் யுத்தக் கைதிகளாக சிங்களத்தின் பிடியில் அகப்பட்டனர். இவர்களில் நூற்றுக்கணக்கானோரை சிங்களம் கொன்றொழித்து விட்டது. கணிசமான பெண் போராளிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி படுகொலை செய்தது. இசைப்பிரியா போன்ற இலக்கியவாதிகள் கூட இந்த இம்சையில் இருந்து தப்ப இயலவில்லை. சிலரை விடுவித்துள்ளது. பலரை அறிந்ததும் அறியப்படாதவையுமான சிறைகளிலும் சித்திரவதைக் கூடங்களிலும் அடைத்து வைத்துள்ளது. வேறு சிலருக்கு கே.பி.யைக் கொண்டு நன்னடத்தைப் பள்ளி நடத்துவதாகக் கூறுகிறது! வேறு சிலரை உளவு வேலைகளில் ஈடுபடுத்தி சீர்குலைத்து சீரழித்து வருகிறது.
இவ்வாறுதான் யுத்தக் கைதிகளான விடுதலைப் புலிகளை சிங்களம் நடத்தி வருகிறது. இதற்கு மாறாக விடுதலைப் புலிப் போராளிகளை
இலங்கையின் பொலிஸ் இராணுவ விமான மற்றும் கடற்படைகளில் இனவிகிதாசாரப்படி இணைத்து, சிங்களப்படையில் தமிழருக்கு இடங்கொடுக்க சிங்களம் முயலவில்லை. இன்னமும் தமிழ் தெரியாத பாதுகாப்புத் துறையினரைக் கொண்டே தமிழ் மக்களை ஆண்டு வருகிறது. இலங்கையின் பாதுகாப்புத் துறையை மற்றும் சட்ட ஒழுங்குத் துறையை முற்றும் சிங்கள மயப்படுத்தி வைக்க முனைவதே இதற்குக் காரணமாகும்.
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வுவழங்க நிர்ப்பந்தம் கொடுப்பதாக அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்திய விரிவாதிக்க அரசும் கூறி வருவது வெறும் மோசடியே ஆகும். இந்த மோசடியை மூடிமறைக்கும் திரையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாகும். அரசியல் தீர்வுக்கான ஒரு முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை, மாயையை மக்களுக்கு உருவாக்கி தக்க வைத்துக் கொள்வதே இதன் நோக்கமாகும்.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனையைத் தீர்க்காத சிங்களம், நாம் முப்படைகளின் வலிமையோடு இருந்தபோது பணியாத சிங்களம், சரத் பொன்சேக்காவோடு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளாத சிங்களம் சொந்தக் கட்சியிலேயே சந்திரிக்காவைப் புறந்தள்ளுகிற பக்ச பாசிச சிங்களம் ஈழத்தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்குமென `சம்பந்தன் ஐயா` சொல்லுகிறார். தீர்வே இது பொய்யடா காற்றடைத்த பையடா.
சிங்களத்தின் கண்ணோட்டத்தில் இலங்கை ஒரு தேசம். அங்கு வாழ்பவர்கள் இலங்கை மக்கள். அதாவது சிங்கள மக்கள் என்ற பேரினவாத கோட்பாட்டையும் பெரும் தேசிய வெறியையும் கடைப்பிடித்து வருகிறது. இதை ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு நாளூம் கூறி வருகின்றனர்.
இதற்கு மேல் இலங்கைத் தமிழ்மக்கள் ஒரு தனியான தேசமென்றோ இலங்கையில் இனமதச் சிறுபான்மை மக்கள் வாழ்கின்றார்கள் என்றோ ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை.இதனால் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக் கோட்பாட்டை தமிழர்கள் ஏற்பார்களேயானால் இலங்கையில் அவர்கள் ஒரு தேசமாக இல்லாமல் போவது மட்டுமல்ல ஒரு இனமாகக் கூட இல்லாமல் அழித்தொழிக்கப்பட்டு விடுவார்கள். இந்த இன அழிப்புக்கும் தேசிய அழிப்புக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு ஜனநாயக வாதிகளினதும் உலகத் தொழிலாளர்களினதும் ஒடுக்கப்பட்ட தேசங்களினதும் கடமையாகும். இந்த கடமையின் பாற்பட்டு ஈழத் தமிழினத்தின் பிரிவினைக் கோரிக்கைக்கான இயக்கத்தை ஆதரிக்க வேண்டும்.
அறுபது ஆண்டுகளாக தாம்வாழும் மக்களின் மண்ணில் இருந்து ஒரு துளி நீரும் உறிஞ்ஞாத சில இடது சாரி மரங்கள், இதன் விளைவாக காய்ந்து கருகி விறகுகள் ஆனபோதும், ஆளும்கும்பலுக்கு சூடேற்றவே எரிந்து கொண்டிருக்கின்றன.இப்போதும் பிரிவினை பிரளயம் என்று பிதற்றுகின்றன, தங்கள் இலைகளும் கிளைகளும் தறிக்கப்பட்டுவிடுமென அலறுகின்றன! எரிந்து போ விறகே! எதிர்காலம் பறவைகளின் சிறகில் உள்ளது!
ஆனால் இவ்வாறு கோருவதற்கு, முதலில் ஈழத்தமிழராகிய நாம் ஜனநாயக உணர்வு கொண்டவர்களாகவும் சர்வதேசியவாத உணர்வு
கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாறாக நாம் குறுமின வாதிகளாகவும், குறுந்தேசிய வாதிகளாகவும் ஏகாதிபத்திய தாசர்களாகவும் இந்திய விரிவாதிக்க பாசர்களாகவும் இருப்போமேயானால் இவ்வாறு கோருவதற்கு எமக்கு எந்த தகுதியும் இருக்காது, உரிமையும் இருக்காது.்
யுத்தத்தின் இறுதி நாட்களில் திரு யோகி அவர்கள் பதின்நான்கு நாடுகளை எதிர்த்து நாம் போரிடுவதாக அறிவித்தார். ஏகாதிபத்திய நெருக்கடி
தீவிரமடைய தீவிரமடைய அது தேசிய ஒடுக்குமுறையை மென்மேலும் கூர்மைப்படுத்தி வரும். இன்று யுத்தம் முடிந்தது போல் தோன்றினாலும்
இரத்தம் சிந்தாத போர் தொடர்கின்றது. இப்போதும் நாம் பதின்நான்கு நாடுகளாலும் ஒடுக்கப்பட்டுத்தான் வருகிறோம்.இத்தகைய பலமான எதிரிகளைத் தோற்கடிக்கும் பலத்தை எங்கிருந்து பெறுவது?
உலகெங்கும் ஏகாதிபத்திய தேசிய ஒடுக்குமுறை ஆக்கிரமிப்புப் போர்களை கட்டவிழ்க்கும் வெள்ளை மாளிகையில் இருந்தா?
இப்போர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஐநா சபையில் இருந்தா?
அல்லது இப்போர்களின் பங்காளியும், உள்நாட்டில் அயர்லாந்து மக்களையும், வேல்ஷ் மக்களையும், ஸ்கொட்டிஷ் மக்களையும் நசுக்கி அத்தேசங்களது சுயநிர்ணய உரிமையை மறுத்துவரும் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இருந்தா?
சித்தசுவாதீனம் அற்றவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் இங்கிருந்தெல்லாம் பெறமுடியாது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. ஏதோ இவர்கள் எல்லாம் மனுநீதி கண்ட சோழர்கள் மாதிரியும் இவர்களின் வாயில் மணியை அடித்து நீதி கேட்போம் வாருங்கள் என்று சமரசவாதிகள் அழைப்பு விடுகின்றனர்.
ஒருதேசிய இனத்தை ஒடுக்குகிற அரசு இன்னெரு தேசிய இனத்துக்குச் சுதந்திரம் வழங்கும், ஒரு தேசிய இனத்துக்கு அநீதி இழைக்கின்ற அரசு
இன்னெரு தேசிய இனத்துக்கு நீதி வழங்கும், ஒரு நாட்டுக்கு எதிராக போர்க்குற்றம் இழைக்கின்ற அரசு மற்றொரு நாட்டின் போர்க்குற்றத்துக்கு
தண்டனை வழங்கும் என்று இந்த அடிமுட்டாள்கள் உண்மையிலே நம்பினால் அடிமுட்டாள்களாக இருப்பது அவர்களது அடிப்படை உரிமை! ஆனால் எம்மை முட்டாள்கள் ஆக்காது இருப்பார்களாக. அவர்கள் எம்மை முட்டாள்கள் ஆக்க அனுமதிக்காது இருப்போமாக.எனவே பலமான எதிரிகளுக்கு எதிராக நாம் பலம் பெறுவதற்கு உள்ள ஒரே வழி உள்நாட்டில் ஒடுக்கப்படும் மக்களதும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் இயக்கங்களுடனும் ஒடுக்கப்படும் தேசங்களின் விடுதலைப் போராட்டங்களுடனும் ஐக்கியப்படுவதே ஆகும்.
எந்தச் சமரசவாதிகள் ஐநாவோடும், ஒபாமாவோடும், இந்திய அரசோடும் ஐக்கியப்படுவதற்கு நமக்கு அழைப்பு விடுகிறார்களோ இவர்களேதான்
ஒடுக்கப்படும் மக்களுடன் நாம் ஐக்கியப்படுவதற்கு தடையாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள்தான் சாதி ஒடுக்கு முறையை எதிர்த்து அறுபதுகளில்
சங்கானையில் நடைபெற்ற போராட்டத்தை சங்காய் போராட்டம் என்றவர்கள், இவர்கள்தான் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டபோது மெளனமாக இருந்தவர்கள். இவர்கள்தான் மலையகத் தமிழர்களை வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தேயனை நம்பாதே என வக்கிரம் பொழிந்தவர்கள். தேர்தல் ஒதுக்கீட்டில் தம் கட்சிச் சின்னத்தில் வெற்றி பெற்று பின்னால் ஆளும்கட்சிக்குக் கட்சிதாவிய ஆளும் வர்க்க இஸ்லாமிய பாராளுமன்ற உறுப்பினர்களை மனத்தில் கொண்டு ”தொப்பிபிரட்டிச் சோனகன்” என ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையே வசை பாடியவர்கள். அமிர்தலிங்கம் தமிழும் சைவமும் எனது இரு கண்கள் என பகிரங்கமாக மேடையில் பேசி பின்னால் வாக்கு வேட்டைக்காக வாபஸ் வாங்கிக் கொண்டார்.சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் ஆளும் சிங்களக் கட்சிகளுடன் கூட்டமைத்து அரசாங்கம் அமைக்கத் தயங்காதவர்கள். சிங்கள மக்களைப் பார்த்து மஞ்சள் துணிக்கு கழுத்தறுத்த சிங்களவன் என மாசுரைத்தார்கள்.
ஐக்கிய தேசிய கட்சி தமிழினத்துக்கு அறுக்காத கழுத்தையா சிங்கள மக்கள் அறுத்து விட்டார்கள். இவ்வாறு எந்த அளவுக்கு ஒடுக்கப்படும் மக்கள் தம்முள் ஐக்கியப்படுவதை தடுக்க முடியுமோ அந்த அளவுக்குத் தடுத்தார்கள்.
சரத் பொன்சேக்கா அறுத்த கழுத்துக்கள் எத்தனை? எந்தத் தேயத்தவன் மன்மோகன் சிங்? என்ன உறவு ஒபாமாவுடன்? எதிரியுடன் என்ன கைகுலுக்கல்? பேச்சுவார்த்தை ஏன் திரை மறைவில்? இவை மக்கள் நலனுக்காக நடத்தப்படுவது உண்மையானால் ஏன் பகிரங்கப் படுத்தாமல் மூடிமறைக்க வேண்டும்?
உண்மையில் ஒருபுறம் ஒடுக்கப்பட்ட மக்கள் ஐக்கியப்படுவதை தடுப்பதற்கும், மறுபுறம் மக்களின் எதிரிகளுடன் தாம் ஐக்கியப்படுவதற்கும்
வசதியாகவே,இந்த ஜனநாயக விரோத மனப்பான்மைகளை இச்சமரசவாதத் துரோகிகள் மக்களிடையே விதைக்கிறார்கள் என்பதே உண்மை.
1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை இலங்கையை ஆக்கிரமித்த போது தமிழ்மக்களும் சிங்கள மக்களும் ஒன்றுபட்டுப் போராடவில்லை. இதற்கு
ஜேவிபி இன் பெருந்தேசிய வெறி பிரதான தடையாக இருந்தது. எனினும் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து போராடாவிட்டாலும்
இந்தியப் படையை வெளியேற்றுவது என்ற கோரிக்கையில் ஒன்றுபட்டு நின்றார்கள். இதனாலேயே இந்தியப் படை விரட்டியடிக்கப்பட்டது. அல்லாமல் ஜேவிபி எழுச்சி உருவாகாமல் சிங்கள மக்கள் இந்திய மேலாதிக்கத்தை அங்கிகரித்து ஏற்றுக் கொண்டிருந்தால் சிங்களப் படையும் இந்தியப்படையும் சேர்ந்து அதன் கூட்டு வலிமையால் விடுதலைப் புலிகளுக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தி இருக்க முடியும், சில வேளைகளில் தோற்கடித்திருக்கவும் முடியும்.
மாறாக இந்தியப் பெரும் படையை தோற்கடித்து விரட்டியடித்ததானது சிங்கள தமிழ் மக்களின் ஒரு குறிப்பிட்ட கோரிக்கை மீதானது ஒற்றுமையின் வலிமையை எடுத்துக்காட்டும் வரலாற்றுச் சான்றாகும். இது நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே இவர்கள் மக்களை ஐக்கியப்பட விடாது தடுத்து கூறுபடுத்தி வருகிறார்கள்.
இறுதியாக பக்ச பாசிஸ்டுக்களின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம், ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று,உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மேலும் இராணுவமயமாகும் சிங்களுத்துக்கு, தீனி போடும் வரவு செலவுத் திட்டமாக உள்ளதால் இது ஒட்டு மொத்த இலங்கை மக்கள்மீதும், குறிப்பாகத் தமிழ்மக்கள் மீதும் தொடுக்கப்பட்ட ஜனநாய விரோத பாசிசத்தாகுதலாகும்.
இதனைத் தோற்கடிக்க பின்வரும் முழக்கங்களின் அடிப்படையில் அணிசேர்ந்து போராடுவோம்!
எதிரிகள்:
• உலகமயமாக்கலின் நலனுக்காக சிங்களத்தின் இராணுவ மயமாக்கலை ஊக்குவிக்கும் ஏகாதிபத்தியவாதிகள் நமது எதிரிகளே!
• நம்மை நிராயுதபாணியாக்கி எதிரியை இராணுவ சர்வாதிகாரியாக்கிய அமெரிக்க ஏகாதிபத்திய-இந்திய விரிவாதிக்க அரசுகள் நமது எதிரிகளே!
• உலக மறுபங்கீட்டுப் போட்டியில் இலங்கையில் களம் இறங்கியுள்ள IRC (Iran Russia China) அணி நமது எதிராளிகளே!
• இவ்விரு அணிகளாலும் ஊட்டி வளர்த்து பேணிப் பாதுகாக்கப்படும் சிங்களம் நமது பிரதான எதிரியே!
அணிசேர்க்கை:
• IRC அணிக்கெதிராக AmeIn (America India) ஆமேன் அணியுடன் அணிசேரும் தரகுப் பாதையை நிராகரிப்போம்!
• ஏகாதிபத்தியமே நீதிவழங்கு, இந்தியாவே தீர்வு வழங்கு என முனகும் சமரசவாதத் துரோகிகளைத் தனிமைப்படுத்துவோம்!
• உலகத்தொழிலாளர்களுடனும் ஒடுக்கப்பட்ட தேசங்களுடனும் ஒன்று சேருவோம் என உரத்து முழங்குவோம்!
சிங்கள உழைக்கும் விவசாயப் பாட்டாளி மக்களுக்கு:
• சிங்களத் தொழிலாளர்களே விவசாயிகளே தங்களுக்கு பேரினவாத வெறியூட்டி,தமீழீழப் படுகொலைக்கு ஆதரவாகத் திரட்டிக் கொண்டு, தேசிய வீரராக நாடகமாடும் பக்சபாசிஸ்டுக்கள் தங்களை அந்நியருக்கு கூறு போட்டு விற்பதை உணருங்கள்!
• IRC அணியோடோ அல்லது AmeIn அணியோடோ எதனோடு கூட்டமைத்தாலும் கூட்டமைப்பவர்கள் ஏகாதிபத்திய தாசர்களே!
• பக்ச பாசிஸ்டுக்கள் தேசிய புருஸர்கள் அல்ல ஏகாதிபத்தியத் தாசர்களே!
• தங்கள் மீதான அனைத்துத் தளைகளையும் தகர்க்க தாங்கள் ஏந்த வேண்டிய முழக்கம் `ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்போம்` என்பதே ஆகும்!
தமிழீழ மக்களுக்கு;
• பக்ச பாசிஸ்டுக்கள் சிங்கள நீசர்கள் மட்டுமல்ல ஏகாதிபத்திய தாசர்களும் ஆவர்!
• ஒன்றை மட்டும் உயர்த்தி, மற்றதை ஒளித்து விடுதலைப் பயணத்தில் தாங்கள் வெற்றி பெற முடியாது!
முரணற்ற முழக்கங்கள்:
• ஈழத்தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறையைப் பற்றி நின்று, உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய, மென்மேலும் இராணுவமயமாகும் சிங்களுத்துக்கு, தீனி போடுவதே 2012 வரவு செலவுத் திட்டம் ஆகும்!
• இது இலங்கை மக்கள் மீது தொடுக்கப் போகும் அபிவிருத்தி யுத்தத்தை எதிர்கொள்ளத் தயாராகுவோம்!
• பிரிவினைக் கோரிக்கையை உயர்த்திப்பிடிப்போம்!
* பக்ச பாசிஸ்டுக்களின் விதேசிய 2012 வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்போம்!
* மக்கள் ஜனநாயக சுதந்திர தேசியப் பொருளாதாரத் திட்டத்துக்காகப் போரிடுவோம்!
* என்றும் சிங்கள மக்களுடன் ஒன்றுபடக் குரல் கொடுப்போம்!
• உலகத்தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
* தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமை இயக்கத்தை ஆதரியுங்கள்!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்