Wednesday, 23 March 2011

லிபிய விடுதலைக்கான புரட்சிப் பாதை.


லிபியமக்களே, ஒமர்முக்தாவின் வீரப்புதல்வர்களே,


அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் உலகமறுபங்கீட்டிற்கும், எண்ணெய்வளத் திருட்டுக்கும், சாவு ஆயுத வியாபாரத்துக்கும் லிபிய மக்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள ஆக்கிரமிப்பு யுத்தம் அநீதியானதாகும்!

தேசிய சுதந்திரத்தைக் காக்கவும், தேசிய வளங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்காகவும் விடுதலைக்காகவும் லிபியமக்கள் நடத்தும் தற்காப்பு யுத்தம் நீதியானதாகும்!

ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பங்கேற்றுள்ள நாடுகளின் உழைக்கும் மக்கள் அதன் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்துவர்!

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க தேசிய ஜனநாயக இயக்கங்கள் லிபிய விடுதலையை ஆதரிப்பர்!

உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட தேசங்களும்,ஏகாதிபத்திய அநீதி யுத்தத்தை எதிர்த்து, லிபிய மக்களின் நீதியான யுத்தத்தின் பக்கம் என்றும் நிற்பர்.

ஏகாதிபத்திய தாச விதேசிய அரபு ஆபிரிக்க ஆளும் கும்பல்கள் அம்பலப்பட்டு தனிமைப்படுவர்!

அநீதி யுத்தமுகாம் பிளவுபட்டு பலமிழக்கும்!

நீதி யுத்த முகாம் ஒன்றுபட்டு பலம் பெருக்கும்!

ஏகாதிபத்திய இராணுவப் படை நேற்றோ ஒழிக!

ஏகாதிபத்திய அரசியல் படை ஐ.நா.ஒழிக!

ஏகாதிபத்தியம் ஒழிக!!

இறுதி வெற்றி லிபிய மக்களுக்கே!

உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்குமே.

லிபிய சர்வாதிகாரி கடாபியே,

* ‘ஏகாதிபத்திய காலனியாதிக்கவாதிகளின் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தத்தை, ஆயுதமேந்திய லிபிய மக்களின் நீதியான நீண்டகால மக்கள் யுத்தத்தால் தோற்கடிப்போம்’ என்ற சரியான முழக்கத்தை அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான சந்தர்ப்பவாத கர்ச்சனையாக குறுக்காதே!

* உண்மையிலேயே தேசியவாதியானால் அந்நிய ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்க உள்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்!

* 41 வருடகால பாசிச சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடிப் பரிகாரம் வழங்கு!

* அனைத்து அரசியல் கைதிகளையும், ஊடகத்துறையினரையும் உடனே விடுதலை செய்!

* மக்கள்விரோத பாசிச கறுப்புச்சட்டங்கள் அனைத்தையும் ரத்துச் செய்!

* அதிகாரபூர்வமற்ற திரைமறைவு வெண்படைகள் அனைத்தையும் உடனே கலை!

* இன,குல,பழங்குடி மக்கள் பகைமைகளுக்கு முடிவுகட்டி லிபிய மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் திரட்ட, அனைத்து விசேச மக்கள் பிரிவினரதும் தேசிய, குலமரபு கலாச்சார உரிமைகளை மதித்து சமத்துவமாக நடத்தும் சட்டங்களை உடனே அறிவி!

* லிபிய மக்கள்; தேசியவிடுதலைக்காகவும், ஜனநாயக அரசுமுறைக்காகவும் ஆயுதம் ஏந்தும் உரிமையை அரசியல் சட்டத்தின் அங்கமாக அறிவி!

* யுத்தகால மக்கள் நல மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்து மக்கள் வாழ்நிலையை முன்னேற்று!

* ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் உள்நாட்டு, பிராந்திய விதேசிய சக்திகளை தனிமைப்படுத்து!

* உள்நாட்டில் ஜனநாயக மாறுதலை வேண்டும் சக்திகளை வென்றெடுத்து தேசபக்தப் போரில் ஐக்கியப்படுத்து!

கடாபி எதிர்ப்பு லிபிய கிளர்ச்சியாளர்களே;

* இரவல் படையில் ‘புரட்சி’ எதற்கு?

* ’தேசிய சுதந்திரத்தைக் காக்கவும், தேசிய வளங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்காகவும் விடுதலைக்காகவும்’ தாங்கள் ஏகாதிபதியவாதிகளை சார்ந்து நின்று போராடமுடியாது.

* ஏகாதிபத்தியம் - ஏகபோக நிதி மூலதனத்தின் உலக மேலாதிக்கம் - சோசலிஸ. தேசிய ஜனநாய மக்கள் விடுதலைப் புரட்சிகளின் எதிரியாகும்.

* ஏறத்தாழ கடந்த எழுபது ஆண்டுகளில் எங்கெல்லாம் இவ்விடுதலைப் புரட்சிகள் முளை விட்டனவோ, அங்கெல்லாம் ’ஆதரவாக இருந்து’ முனை மழுங்கச் செய்தவர்களும், எதிராக இருந்து கடித்துக் குதறியவர்களும் இந்த ஏகாதிபத்திய விசர் நாய்களே ஆகும்!

* ‘கிளர்ச்சியாளர்’ முகாமுக்குள் ஒழிந்திருக்கும் ஏகாதிபத்திய விசுவாசிகள் அமைக்கும் ‘இடைக்கால அரசு வடிவம்’ ஏகாதிபத்தியவாதிகள் லிபியாவை மறு பங்கீடுசெய்ய உருவாக்கும் ‘பொம்மை அரசே’!

* ‘கிளர்ச்சியாளர்’ முகாமுக்குள் ஒழிந்திருக்கும் ஏகாதிபத்திய விசுவாசிகளை- ஏஜெண்டுகளை-த் தனிமைப்படுத்துங்கள்.

* அல்லாமல் அவர்கள் வழி நடந்தால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு இரு தரப்பாலும் தாக்கி அழிக்கப்படுவீர்கள்!

* அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட கடாபி முகாம் உறுதியாக உள்ளவரையில், உள்நாட்டில் ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்வதை முந்நிபந்தனையாக வைத்து, அரசியல் ரீதியாகவும், சொந்தப் பலத்தில் தங்கியிருந்து ஆயுதரீதியாகவும் போராடுவதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்யும் ஐக்கிய முன்னணியை அமையுங்கள்.

* அந்நிய ஆக்கிரமிப்பை தோற்கடியுங்கள்! உள்நாட்டில் ஜனநாயகத்தை சொந்தப்பலத்தில் வென்றெடுங்கள்!

* ஆயுதப் புரட்சியோடு விளையாடாதீர்கள், இரவல் துப்பாக்கிக் குழல்களில் இருந்து மக்கள் அதிகாரம் பிறக்காது! ஆற்றல் போதாதென்றால் பின்வாங்குங்கள்.

லிபியமக்களே,ஒமர்முக்தாவின் வீரப்புதல்வர்களே, இந்தப் பாதையொன்றே தங்களுக்கு விடுதலை அளிக்கும்.வேறெதுவும் அல்ல.

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

No comments: