Saturday, 15 May 2010

முள்ளிவாய்க்கால் வீரகாவியம் மே 18

செவ்வணக்கம் மாண்ட நம் மக்களே, மாவீரத் தோழர்களே!
இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்!
ஈழம்காண இறுதிவரை ஊற்றெடுப்போம்!!

அன்பார்ந்த தமிழீழ மக்களே,மாணவர்களே, இளைஞர்களே,
முப்பது ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தில், நடந்த வீரப் போர்களில், அவை வேண்டிய தியாக வேள்வியில், எதிரிகளைப் படிப்படியாகத் தோற்கடித்து நாம் ஓர் அரசை உருவாக்கியிருந்தோம்.

மே 18 2009, பிரபாகரன் கட்டியெழுப்பிய அந்த சுதந்திர தமிழீழ அரசு, எதிரிகளிடம் சரணடையாமல், சண்டையிட்டு சரிந்து சாவைத் தழுவிக் கொண்ட சரித்திர நாளாகும்.

இதனால் தமிழீழ தேசமும்- போராடும் உலகமும் அதிர்ச்சிக்குள்ளான நாளாகும்.

‘’புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’ என முழங்கி அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத் தமிழினத்தை தூக்கி நிறுத்த முப்பது ஆண்டுகள், முந்நின்று வரலாறு காணாத சுய தியாகத்துடன், ஆயுதமேந்திப் போராடி, விடுதலைப் புலிகள் படைத்த வீர காவியத்தின் இறுதி அத்தியாயம் எழுதப்பட்ட நாளாகும்.

ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தை நொருக்கி, சிங்களத்தைப் பிரபாகரன் தன் காலடியில் வீழ்த்தி, தமிழீழக் கொடி நாட்டி நின்றபோது,'' யாழ்ப்பாணம் நோக்கி முன்னேறுவதை கைவிடுங்கள், 'அக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில்' ''பேசிப் பிரச்சனையைத் தீருங்கள்'' என அமைதி நாடகமாடி, ஆசைகாட்டி, இந்திய விஸ்தரிப்புவாத அரசின் சதித் திட்டத்தின் பின்னணியில், அமெரிக்காவும், ஐரோப்பியன் ஜுனியனும் ஏவிவிட்ட நோர்வே; அரங்கேற்றிய சதி அமூலான இறுதி நாளாகும்.

இதன் விளைவாக முள்ளிவாய்க்காலுக்குள் முடக்குண்டது தமிழீழம். முள்ளிவாய்க்கால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த போது, இனப்படுகொலை அரங்கேறிக் கொண்டிருந்தபோது, எதிரி மூர்க்கத்தனமாக தமிழீழ தேசத்தை ஆக்கிரமிக்க, விச வாயு கொண்டு முன்னேறிக் கொண்டிருந்தபோது, நாளுக்கு நானூறு தமிழன் பிணமாகி புதைக்க வழியின்றி புழுத்துக்கிடந்தபொழுது, பக்ச பாசிஸ்டுக்கள் யுத்தக் குற்றங்களை இழைத்துக் கொண்டிருந்தபோது,எம்மை ஆயுதங்களை ஒப்படைத்து இலங்கை அரசிடம் சரணடையுமாறு, ஒபாமாவின் அமெரிக்காவும், ஈரோப்பியன் யூனியனும், நடு நிலையாளன் நோர்வேயும், ஐ,நா,சபையும், புனித பாப்பரசரும் பகிரங்கமாக அறிக்கை விட்டு, பச்சை நிர்வாணமாக பக்ச பாசிஸ்டுக்களின் பக்கம் நின்ற நாளாகும்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தமது ஆதிக்க நலன்களுக்கு எதிராக இருந்த பிரபாகரனின் தமிழீழ அரசை கவிழ்க்க; ஜப்பானும், சீனாவும், ரசியாவும் அள்ளி அள்ளி வழங்கிய ஆயுத உதவி, முள்ளிவாய்க்காலில் இரத்தக் காட்டேரியாய் ஒடி உறைந்த நாளாகும்.

வெட்கம் கெட்டவிதமாக இஸ்ரேலும் ஈரானும் ஒரு சேர அளித்த இராணுவ உதவி தென்னாசியாவின் விடுதலைத் தீயை அணைத்த நாளாகும்.

ஆளும்வர்க்க ஏஜென்டுகளான ஐரோப்பிய ராஜதந்திரிகள், பத்திரிகையாளர்கள் தாம் வீசிய பாசக் கயிற்றை சுருக்கிக்கொண்ட நாளாகும்.

பொங்கியெழுந்த ஈழத்தமிழர்க்கு இன்னல் விளைய புலிகளின் தமிழகப் பினாமித் தரகர்கள் (வை கோ, நெடுமாறன், ராமதாஸ்,திருமாவளவன் கும்பல்), மன் மோகன் சோனியா கும்பலுடன் சதித்திட்டம் தீட்டி சங்காரம் நிகழ்த்திய நாளாகும்.

தமிழக மக்களின் குமுறலை அடக்க திரைமறைவு நாடகங்கள் அரங்கேறிய நாளாகும்.முத்துக்குமாரனை அவசர அவசரமாகப் புதைக்க வித்திட்ட நாளாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக உலக மறுபங்கீட்டிற்கான அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு துகிலுரிந்து நடனமாடும், மன்மோகன் - சோனியாவின் பாஞ்சாலி தேசம் விசவாயு வீசி நமது விடுதலை விருட்சத்தை வேரறுத்து, இந்திய விஸ்தரிப்புவாத நலன்களை உத்தரவாதம் செய்து கொண்டநாளாகும்.

இத்தனை பக்கபலத்தோடும், கே. பத்மநாதன் உருத்திரகுமாரன் கும்பலின் காட்டிக்கொடுப்போடும், களமுனையில் நின்ற கருணாவுக்காதரவான தளபதிகளின் தகவல்களைத் திரட்டியும், அன்ரன் பாலசிங்கத்தைக் கொண்டு போராட்டத்தலைமையின் சிறுமுதலாளித்துவ ஊசலாட்டங்களின் விளைவான அரசியல் பலவீனங்களைப் பயன்படுத்தியும், ஒரு இனப்படுகொலையை நடத்தி விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கிளர்ச்சியை வெற்றி கொண்டுவிட்டதாக சிங்கள இனவெறிப் பாசிச சிறீலங்கா அரசு பிரகடனம் செய்திட்ட நாளாகும்.

இந்நாளில் தான், இந்த எரிமலையின் விளிம்பில் தான் தமிழீழ விடுதலையின் எதிரிகளை, ஈழமக்கள் நடைமுறையில், ஒரு சேர கண்ணெரியக் கண்டார்கள்.

நமது ஆஸ்தான புலவன் புதுவை இரத்தினதுரையின் எழுதலுக்கு அறைகூவும் அழுகையில் இருந்து, ஐரோப்பா எங்கும் தமிழரின் எழுகை வரை, அவர்கள் எழுப்பிய ‘’யுத்த நிறுத்தக் குரல்’’ , தமிழீழ அரசு ஸ்ரீலங்கா அரசின் காலடியில் வீழும் வரை யார் காதிலும் விழவில்லை.

இக்காரணங்களால் இவ்வீர காவியத்தின் முதற்பகுதி எழுதி முடிக்கப்பட்ட மே18 2009, தமிழீழத்தின் அரசியல் வரலாற்றில் சிறப்புமிக்க தினமாகும்.

இத்தினம் தமிழீழ அரசியல் வரலாற்றில் புதிய பாதையைத் திறந்துவிட்ட புரட்சித் தினமாகும்.

மே 18 2010 இவ் வீரகாவியத்தின் ஓராண்டு நினைவைக் குறிக்கின்றது.

இவ்வீரத் திருநாளில் தமிழீழ மக்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய சபதம் மே 18 2009 இல் வீழ்த்தப்பட்ட விடுதலைப்புலிகளின் தமிழீழ அரசை மீண்டும் போராடி வென்றெடுத்து ஒரு புதிய தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசை நிறுவுவதாகும்.

மாறாக மக்களைக் கவர ‘’முள்ளிவாய்க்கால் நினைவாக’’,என முகத்திரையிட்டு, அதை அரங்கேற்றியவர்களிடம் "இனப்படுகொலை’’ என்று முறையிட்டு,
மே 18 ஐ “யுத்தக் குற்ற நாள்” என அறிவித்து, ஈழத்தில் யுத்தக் குற்றங்களை நிகழ்த்தியவர்களிடம், கொசோவோவிலும், பாலஸ்தீனத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், இந்திய,பாகிஸ்தான் பழங்குடிப் பிரதேசங்களிலும் யுத்தக்குற்றங்களை இன்றும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருப்பவர்களிடம், அதற்கு நீதி வேண்டி மண்டியிடுவது,
இத்தியாதி முழக்கங்களை முகப்பில் வைத்துக் கொண்டு, சாவீடு கொண்டாடுவது, சர்வதேசத்துக்கு முறையிடுவது, மெழுகு வர்த்தி ஏந்தி பொழுது போக்கும் ''போராட்டம்'' நடத்துவது,அமைதிப் பிராத்தனை செய்வது, மற்றும் தமிழீழ அரசை நிர்மூலமாக்கிய இனவெறிப் பாசிச சிறீலங்கா அரசு,இந்திய விஸ்தரிப்புவாத அரசு, அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசுகளோடு கூட்டமைத்து, தமிழீழ விடுதலைக்கெதிராக கேடு கெட்ட சமரசங்கள் செய்ய, ''நாடுகடந்த அரசாங்கம்'' என்ற போர்வையில் நாடகமாடுவது, இவை அனைத்தும் தமிழீழ விடுதலைப் போர், தவிர்க்க இயலாமல் சந்தித்த வரலாற்று நெருக்கடியின் விளைவான, தற்காலிக பின்னடைவையும், தேக்கத்தையும் நிரந்தர தோல்வியாக்கி சிங்களத்தின் அடிமை நுகத்தடியின் கீழ்,தமிழீழ தேசம் நசுங்கி மடியவே வழி கோ லும்.

இல்லை என்போரின் ''விழ விழ எழுவோம்'' என்ற வீர வசனங்கள், கவைக்குதவாதவை, ''தரத் தர விழுந்ததற்கு'' காரணம் தேவை. அதிர்ச்சிக்குள்ளான தேசத்தின் இக் கேள்விக்கு பதில் தேவை. நாம் கசாப்புக்கடை நடத்தவில்லை, கடமையும் பொறுப்பும் மிக்க விடுதலைப் போரை நடத்துகின்றோம்.நிலத்திலும் புலத்திலுமாக நாற்பது இலட்சம் மக்களின் எதிர்காலம் நம் கைகளில் இருக்கிறது.. முப்பது ஆண்டுகள் களமாடியிருக்கின்றோம். இரண்டு இலட்சம் மக்களைப் பலிகொடுத்திருக்கின்றோம்.15 இலட்சம் மக்கள் நாடு கடந்து அகதிகளாய் உள்ளனர். நாட்டுக்குள் சமூக இருப்பு சின்னாபின்னப்படுத்தப்பட்டு விட்டது. குடும்பங்கள் தலைவேறு, கால்வேறு, கைவேறு என பிய்த்து எறியப்பட்டுவிட்டன. விவசாயிகளிடம் நிலம் இல்லை, கால் நடைகள் இல்லை, பணம் இல்லை. எங்கு பார்த்தாலும் ஊனம், கொத்துக் குண்டில் வெடித்துச் சிதறிய தந்தையின் தலையை மரக்கொப்பில் பார்த்த மைந்தன், இறந்த தாயின் மார்பில் பசியாறிய மழலை,காப்பாற்றி விட்டேன் என்ற நம்பிக்கையில் தோளில் தொங்கிய குழந்தையை பிணமாகக் கண்ட தாய், இக்கோர நிகழ்வுகளால், அதன் நினைவுகளால் பிரமை பிடித்துக் கிடக்கிறது நம் மண், அதன் மக்கள். எத்தனை பேர் என்று கணக்குத்தெரியாமல், ஒரு உத்தேசம் 10 ஆயிரம் போராளிகள்(!), பக்சபாசிஸ்டுக்களின் பிடிக்குள் சிக்கிவிட்டார்கள்.அண்ணன் வளர்த்த அற்புதக் குழந்தைகள், தங்கத் தமிழீழத்தின் வீர மறவர்கள், சுதந்திரத்தீ மூட்டிய சுந்தர வதனங்கள், சிறைப்பட்டுக் கிடக்கின்றார்கள். சிறையுள் கொலை நடக்கின்றது,சித்தரவதை நடக்கின்றது, பாலியல்பலாத்காரம் நடக்கின்றது.சிறுவர் சிறுமியர்களுக்கு பாதுகாப்பில்லை.செஞ்சோலை கட்டி வளர்த்த செல்வங்கள், இன்று உல்லாசத்துறைக்கு உபசரிப்புப் பண்டங்கள் ஆகிப்போனார்கள்.38 ஆயிரம் மாவீரர்களை விதைத்தோம். கோவில் கட்டி துதித்தோம்.புதைகுழியில் இருந்து பிடுங்கி எடுத்து எச்சில் இலை போல குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுக் கிடக்கின்றார்கள் நாங்கள் கும்பிட்ட தெய்வங்கள்.ஒரு மாவீரன் தூங்க மண்ணில்லை எங்களிடம்.தரணி போற்ற தமிழனுக்கு ஒரு நாடு காணப் புறப்பட்டவனின் தாய்வீடு தரைமட்டமாகி கிடக்கின்றது.இதற்கெல்லாம் தார்மீகப் பொறுப்பேற்று பதில்காண எந்த ஒரு மதிஉரைஞரும் முயலவில்லை, இதுவரை முன்வரவில்லை.சொல்லப் போனால் இந்தக் கேள்வியை உணர்ந்து மதிக்கவேயில்லை, மெள னமாக மறுத்து விட்டார்கள்.மறைத்து விட்டார்கள்!

2002 தேர்தலில் ''மக்களால்" தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்புக் கும்பல் TNA, புலித்தோல் போர்த்த பசு, இந்திய ஆதரவு,ஐக்கிய இலங்கை, அதிகாரப் பரவலாக்கம், பொலிஸ் அதிகாரம் எனப் பொறுக்கித்தனமாகப் பிதற்றுகிறது.யுத்தக் குற்றவாளிகளோடு கொஞ்சிக் குலாவுகின்றது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததற்கு நன்றி தெரிவிக்கின்றது.''மாவீரர்கள் கொலைகாரர்கள்'' என்று சொல்லும் பாரம்பரிய கொள்ளைக் கைத்தொழில், சிறு கொலைத் தொழில் அமைச்சர் டக்ளஸுடனும், 'குட்டிக்கும் புட்டிக்கும்' விலைபோன கருணாவுடனும்,இந்தியக்கைக் கூலிகள் வரதராஜப் பெருமாள், சந்திரகாசன் உடனும் "தேசியக் கூட்டமைத்து'' (!) இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்ய அணிதிரள்கின்றது.

புலிக்கொடி பறந்த போது அவர்களுக்கு கைகட்டி வாய்பொத்தி சேவகம் செய்த உடமை மற்றும் அதிகாரவர்க்க கும்பல், அறிவாளிகளின் திரள், புலிகளின் அதிகாரம் வீழ்ந்ததைக் கண்டு தனது அணியை சடுதியாக மாற்றிக் கொண்டுவிட்டது. ஈழத்தில் இக்கும்பலின் ஒரு பிரிவு நேரடியாகவே பக்ச பாசிஸ்டுக்களுடன் அணி சேர்ந்துவிட்டது.கிளிநொச்சியில் யுத்த வெற்றி விழா கொண்டாட படையாகத் திரள்கின்றது.இவ்வாறே,புலம்பெயர் நாடுகளில் ஒரு புல்லுருவிக் கும்பல், ஏகாதிபத்தியவாதிகளோடு கூட்டமைத்து, தமிழீழ விடுதலைக்கெதிராக கேடு கெட்ட சமரசங்கள் செய்ய, ''நாடுகடந்த அரசாங்கம்'' என்ற போர்வையில் நாடகமாடுகிறது, பாராளமன்றங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் பிரகடனங்கள் செய்கின்றது. (கள்ள வாக்குகள் போட்டு) மோசடித் தேர்தல்கள் நடத்துகின்றது.
எதிரிகளின் பாசறையில் இருந்து எமக்காக் குரல் கொடுப்பதாகப் பசப்புகின்றது.

கொசோவோத் தமிழீழம் காணப்போவதாகக் கொக்கரித்த இவர்கள் எவரிடம் இருந்தும், இந்நிலைக்கு நாம் எவ்வாறு ஆளானோம் என்கிற கேள்விக்குப் பதில் இல்லை. சொல்லப் போனால் அப்படி ஒரு கேள்வியே இல்லை.ஏனைனில் இதற்கான பதில் இவர்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.மே 18 பிரளயம் நடந்து இப்போதுதான் ஒரு வருடமாகின்றது.அதற்குள் நிலத்திலும்,புலத்திலும் ஈசல் போல் தேர்தல்கள்; அத்தனைக்குப் பின்னாலும் இவர்கள், ஆளும் கும்பல்களுக்கு ஆலவட்டம் பிடித்தபடி..அடிமைகள் நாம் என்று நாமம் இட்டபடி!!

எனினும் இந்தக் கேள்வி தன்னை மீண்டும் மீண்டும் பிடிவாதமாக முன்நிறுத்தியவண்ணமே இருக்கும்.இதற்குப் பதில் அளிக்காத எந்த மயிர் உரைகளும், நைந்த நிறுவனங்களும் மன்னிக்கத்தகாதவை.ஒரு சல்லிக்கும் உதவாதவை.

மே 18 ஒரு திருப்பு முனை.
மே 18 இற்குப் பிந்திய சர்வதேசிய உள்நாட்டு அரசியல் நிலைமையும்,நமது உடனடி நடைமுறைப் பணிகளும்.
உள்நாட்டு அரசியல் நிலைமை:
1983 இல் ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டம் உள்நாட்டு யுத்தமாக மாறியது முதல், இலங்கை அரசு தனது பாசிச இன ஒடுக்குமுறை யுத்தத்தை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்றே கூறிவந்தது. 2009 இல் யுத்தத்தின் இறுதிமாதங்களில் தனது இனப்படுகொலையையும், யுத்தக் குற்றங்களையும் ‘ பயங்கரவாதிகளிடமிருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமானப் பணி என வர்ணித்தது. இந்த யுத்தத்தில் விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டார்கள். அவர்களின் அதிகாரம் முழுதாக இலங்கை அரசின் முன் விழுந்தது. மே 18 2009 இல் முழு நாட்டின் மீதும் இலங்கை அரசின் அதிகாரம் மீண்டும் நிலை நாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து அமைதி வழியில் அரசியல் தீர்வுகாண்பது, ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படையில் தீர்வு காண்பது, என்ற மாயை ஏகாதிபத்தியவாதிகளாலும், இந்திய விஸ்தரிப்புவாத அரசாலும், இவர்களது உள்நாட்டு மற்றும் புலம் பெயர் அடிவருடிகளாலும் பரப்பப்பட்டு வருகின்றது.
ஆனால் உண்மை நிலை என்ன? இலங்கையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்ச னையானது அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிந்திய முதல் முப்பது ஆண்டுகளில் பாராளுமன்ற வழியிலும்,அடுத்த முப்பது ஆண்டுகளில் ஆயுதப்போராட்ட வழியிலும் தன் குரலை எழுப்பிவந்தது. மே 18 2009 இல் ஈழத்தமிழர்கள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் தங்கள் குரலை இன்னும் நிறுத்தவில்லை. மே 18 இற்குப் பின்னால் நடந்த இரண்டு பெரும் நாடு தழுவிய தேர்தல்களை மக்கள் புறக்கணித்தார்கள், எனினும் இத் தேசியக் கொந்தளிப்புக்குப் பின்னால் இருக்கும் சமுதாய அவசியத்தை இன்றும் இலங்கை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.
மாறவில்லை நிலைமை ஆதாரம் ஒன்று
அதிசயிக்கத் தக்கவகையில் யுத்த வெற்றியின் முதற்பிரகடனமே இலங்கையில் சிறுபான்மையினர் என ஒருவர் இல்லை என்பதாகும்.இதைத் தொடர்ந்து வந்த எச்சரிக்கை ‘ஈழம்’, ‘தமிழ்’,என்கிற பெயர்களில் அரசியல் இயக்கம் நடத்துவது தடை செய்யப்படும் என்பதாகும்.இலங்கை எங்கும் சிங்கக் கொடி பறக்கும் என்பதாகும்.சுருக்கிச் சொன்னால் இலங்கை சிங்களம் என்பதாகும்.
1970 இல் ஜே ஆர் சொன்னார் இலங்கையில் இனப்பிரச்சனை என்று ஒன்றில்லை.
மாறவில்லை நிலைமை ஆதாரம் இரண்டு:
விடுதலைப் புலிகளின் அரசியல் அதிகாரம் வீழ்ந்த கையோடு தமிழீழமெங்கும் நில அபகரிப்பு தொடங்கிவிட்டது.
1950 களில் டட்லி சேனநாயக்கா இதற்குத் திட்டமிட்டார்.
மாறவில்லை நிலைமை ஆதாரம் மூன்று:
தனிச்சிங்கள மொழிக்கொள்கையை ராஜபக்ச அரசு திணிக்கிறது.
1958 இல் தனிச் சிங்களச் சட்டம் திணிக்கப்பட்டது.
மாறவில்லை நிலைமை ஆதாரம் நான்கு:
தமிழீழம் இராணுவமயப்படுத்தப்படுகின்றது. மே 18 இற்குப்பின்னால் இதை ஒரு பாதுகாப்புத் திட்டமாக இலங்கை அரசு வெளியிடுகின்றது.
1970 களில் பாதுகாப்புவலயம் என்ற பேரில் ஜே,ஆர் இதை ஆரம்பித்தார்.
மாறவில்லை நிலைமை ஆதாரம் ஐந்து:
கிளிநொச்சியில் காக்காய் போட்ட எச்சத்தில் முளைத்த ஒரு அரசமரத்தின் கீழ் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது தமீழமெங்கும் பரவுகிறது.
1972 அரசியல் யாப்பு பெளத்த மதத்தை அரசு மதமாக்கியது.
மாறவில்லை நிலைமை ஆதாரம் ஆறு:
இனங்களுக்கிடையில் கசப்புணர்வை திட்டமிட்டுத் தூண்டிவிடுவது:
நாடு ஏகாதிபத்தியவாதிகளினதும், இந்திய விஸ்தரிப்புவாதிகளினதும் பொருளாதாரச்சுரண்டலுக்கு முழுதாகத் திறந்து விடப்பட்டிருப்பதன் விளைவான அரைக்காலனிய பொருளாதாரம், முழு நாட்டு மக்களது பொருளாதாரத் தேவைகளை ஈடு செய்ய இயலாததாக உள்ளது.இதனால் ஒரு சிறு உள்ளூர் தரகுமுதலாளிய, நில உடமை வர்க்கங்களே ஆதாயம் அடைகின்றன.இந்த ஆதாயம் ஏகாதிபத்தியவாதிகளுக்கு இவர்கள் செய்யும் சேவகத்துக்காக அளிக்கப்படும் வெகுமானம் ஆகும்.
இதனால்தான் எப்போதெல்லாம் உள்நாட்டு மக்களின் எழுச்சிகளாலும், கிளர்ச்சிகளாலும்,சில சமயங்களில் புரட்சிகளாலும் இவர்களது ஆட்சிகள் ஆட்டங்காணுகின்றனவோ அப்போதெல்லாம் இவர்கள் ஏகாதிபத்தியவாதிகளால் காப்பாற்றப்படுகின்றார்கள்.
எனவே ஒருபுறம் தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்யவும், மறுபுறம் தமது இருப்பைக் காத்துக்கொள்ளவும், மக்களை இன, மத, இன்னும் என்னென்ன இழிவான வழிகளில் எல்லாம் பிளவுபடுத்துவதற்கான கூறுகள்-இவை அழிந்து போகும் கூறுகள் என்பதைச் சொல்லத்தேவை இல்லை- உள்ளதோ அவற்றையெல்லாம் பயன்படுத்தி மக்களை தம்முள் மோதவிடுகின்றனர்.
இது தான் இலங்கை அரசு, தமிழ் சிங்கள இனங்களுக்கிடையில் கசப்புணர்வை திட்டமிட்டுத் தூண்டிவிடுவதற்கான அரசியல் பொருளாதார வேர் ஆகும்.
ஏகாதிபத்தியவாதிகளை விரட்டிஅடித்து,ஏகாதிபத்தியச் சுரண்டலை இல்லாதொழித்து,சுதந்திர தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பி,சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசாக இலங்கை திகழ்வது கோட்பாட்டு ரீதியில் முற்றிலும் சாத்தியமே, ஆனால் நடை முறையில் ஏகாதிபத்தியவாதிகள் அதை அநுமதிப்பது இல்லை.
இதனால் அவர்களது உள்ளூர் காவல்நாய்கள், தமிழர்களிடம் இருப்பதை பறித்து சிங்களவர்களுக்கு கொடுப்பது போல நாடகமாடி சிங்களவர்களின் நாயகர்கள் ஆகின்றனர்.
மலையக மக்களின் குடியுரிமைப் பறிப்பு, தனிச்சிங்களச் சட்டம், தரப்படுத்தல் திட்டம் அத்தனைக்குப் பின்னாலும் இருந்தது இது தான்.இவை அனைத்தும் தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் தாக்குதல்கள் அல்ல, தமிழ் சிங்கள உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கெதிரான ஏகாதிபத்தியவாதிகளின் தாக்குதல் ஆகும்.உள்நாட்டு ஆளும் கும்பல்கள் அவர்களது விசுவாச ஊழியர்கள் மட்டுமே.
இந்தத் தொப்பிழ்க் கொடி உறவை, உள் நாட்டு எதிரிகளை மதிப்பீடு செய்வதற்கு தமது உயிராதாரமான கோட்பாடாக புரட்சிகர இயக்கங்கள் கொள்ள வேண்டும்.
மே 18 யுத்த வெற்றியின் நினைவாக இராணுவ வீர்ர்களுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்புவது, அதே வேளையில் மாவீர்ர் துயிலும் இல்லங்களை இடித்துத் தரை மட்டமாக்குவது.
1974 தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையில் இறந்தவர்களுக்கு கட்டிய நினைவு நடுகல்லை இரு தடவை இடித்துத் தரைமட்டமாக்கினர். அது இன்றும் தொடர்கிறது.
இனப்படுகொலை யுத்தத்தின் பேரழிவை மீள்நிர்மாணம் செய்யும் அனைத்து பெருங்கட்டுமானத்துறைகளையும் அந்நியர்களுக்கு தாரை வார்த்து விட்டு, தமிழ்ச் சிறு வியாபாரிகளின் சந்தையைக் கைப்பற்ற சிங்கள சிறு வியாபாரிகளைத் தூண்டுவது.நடைபாதை வியாபாரத்தை உருவாக்கி அங்கே சிங்களச் சிறு வியாபாரிகளைக் காட்சிப் பொருளாக வைத்து தமிழ் மக்களுக்கு சினமூட்டுவது.
பல்கலைக்கழக சிற்றுண்டிச் சாலையை நடத்தி எவனும் இலட்சாதிபதியாக முடியாது, அதிகபட்சம் அது ஒரு பெட்டிக்கடைதான்.இதை ‘கந்தசாமியிடம்’ இருந்து பறித்து ‘அப்புகாமிக்கு’ கொடுத்திருக்கிறது சிங்களம்.இனப் பகைமையைத் தூண்டுவதைத் தவிர இதற்கு வேறெந்தகாரணமும் இல்லை.மாறவில்லை அவர்கள்!
மாறவில்லை நிலைமை ஆதாரம் ஏழு:
அரசியல் பிரதிநிதித்துவம் என்று பேசி, கோடரிக்காம்புகளை கொலுவில் வைப்பது: கருணா, டக்ளஸ் கும்பலைத் தமிழர் பிரதிநிதிகாளாகக் காட்டுவது.
1970 களில் இவர்கள் தேவநாயகம், ராஜதுரை என இருந்தனர்.
மாறவில்லை நிலைமை ஆதாரம் எட்டு:
பொருளாதாரத் துறையில் அரைகாலனியப் பொருளாதாரம்.
எழுபதுகளின் பிற்பகுதியில் உலகமயமாக்கல் பொருளாதாரத்திட்டத்திற்கு இலங்கையைத் திறந்துவிடார் ஜே.ஆர்.இலங்கைச் சட்டங்களுக்கு கட்டுப்படாத சுதந்திரம் கொண்ட அந்நிய வர்த்தக வலயங்கள் உருவாகின.மலிவுக் கூலிகளாக இலங்கை உழை க்கும் மக்கள் சிங்கப்பூருக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்பட்டனர்.
இலங்கையை ‘சிங்கப்பூர் ஆக்குவோம்’, ‘தார்மீக சமுதாயம்’ அமைப்போம் எனப் பிரகடனம் செய்யப்பட்டது.
இதனால் சலனங் கொள்ளவில்லை பிரபாகரன் என்கிற சிலை. இதனால் சினங் கொண்டது ஜே.ஆர் அரசு.பயங்கரவாதிகள் விசர் நாய்கள் அவர்களை விசர்நாய்களைச் சுடுவதுபோல் சுட வேண்டும் என அறிவித்தது..இவ்வாறு ஜே.ஆர் விசர் நாயாகி வெறிபிடித்து குரைத்ததற்கு காரணம் அவரது உலகமயமாக்கல் திட் டத்துக்கு பிரபாகரன் பேரிடியாய் வீழ்ந்ததாகும்.
இவற்றை எதிர்கொள்ள அதிகாரம் மையப்படுத்தப்பட்ட பாசிச 1978 அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்டது.
மே18 இற்குப் பின்னால் தாம் இழந்த சந்தையைக் கைப்பற்றும், ‘மீளப்பெறுவோம் ஸ்ரீலங்காவை' -Regaining Srilanka_ எனும் உலகமயமாக்கல் திட்டம் அமூலுக்கு வருகின்றது.உள்நாட்டு அபிவிருத்திக்கு உறுதியான அரசு தேவை என்ற முழக்கத்தில் இலங்கை அரசு;மஹிந்த-கோத்தபாய-பசில்-நாமல் என நாவேந்தர்களின் பாசிச அரசாக சுருங்கிவிட்டது.நாடு தழுவிய அனைத்து துறைகளிலும் 95 சதவிகிதத்தை தமது முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விட்டனர்.இதன் விளைவுதான் இலங்கை முழுவதும் இராணுவமயப்படுவது.
ஜே ஆர் சிறீமாவை வீட்டுக்காவலில் வைத்தார். மகிந்த சரத்பொன்சேகா வை இராணுவச்சிறையில் அடைத்தார்.
மாறவில்லை நிலைமை ஆதாரம் ஒன்பது:
சமூக கலாச்சாரத்துறையில் சீரழிவுகளை உருவாக்குகிறது.நட்புறவுப் பாலம் என்ற பெயரில் அந்நிய சீரழிவுகளைப் பரப்புகின்றது. காலம் காலமாக பாதுகாக்கப்பட்டு வந்த தமிழர்களின் வரலாற்று, கலாச்சார சின்னங்களை அழிக்கின்றது.சிறுவர் சிறுமியை உல்லாசப் பயணத்துறைக்கு, உறுப்பறுக்கும் உன்மத்தர்களுக்கு தாரைவார்க்கிறது.
1983 இல் கணபதிக் கடவுள் சிலையின் கழுத்தில், ‘’கண தெய்யோ நாண்ட கீயா”, கணபதிக் கடவுள் குளிக்கச் சென்றுவிட்டார் என எழுதி கடலில் வீசியது சிங்களம்!
மாறவில்லை நிலைமை ஆதாரம் பத்து:
எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த ஆறு தசாப்தங்களாக கொண்டுவரப்பட்ட பாசிச இன ஒடுக்குமுறைச் சட்டங்களில் முதன்மையான, 1972 அரசியல் யாப்பு,1978 அரசியல் யாப்பு,ஆறாவது திருத்தச் சட்டம், சிங்களம் அரசு மொழி என்ற கொள்கை, மாகாண சபைச்சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், தொழிலாள விவசாய இயங்கங்களை நசுக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF_ International Monetary Fund) உத்தரவில் உருவாக்கப்பட்ட கறுப்புச் சட்டங்கள் எதையும் தூக்கிவீசி இலங்கை அரசை ஜனநாயகப்படுத்த சிங்களம் தயாராகவில்லை.மாறாக மேலும் பாசிச இன ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்கி அமுலாக்க திட்டமிடுகின்றது.
இவை அனைத்தும் உணர்த்துவது ஒன்றுதான். சிங்களம், இன ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்ட தூய சிங்களப் பாசிச அரசை ஜனநாயகப்படுத்த இன்றும் தயாராகவில்லை, மாறாக முழு அரசுத்துறையையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.
சிங்களத் தரகுமுதலாளித்துவ, சிங்களப் பேரினவாத, பெளத்தமதவாத, அரைக்காலனிய,அரை நிலப் பிரபுத்துவ,இனவெறிப் பாசிச இலங்கை அரசு,மே 18 இன் பின்னால் இராணுவப் பாசிச அரசாகப் பரிணமிக்கின்றது. ஒரு சொல்லில் இதுவே சிங்களம் என்பதாகும்.
அமைதி வழித்தீர்வும் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வும்.
இந்நிலையில்தான் ஐக்கிய இலங்கைக்குள் அமைதிவழியில் அதிகாரப்பகிர்வுத் தீர்வு அடைவது குறித்துப் பேசப்படுகின்றது. இதை நம்பவைக்க முயலுகின்ற அத்தனை கும்பல்களும் ஏமாற்றுப் பேர்வழிகளே.ஏய்த்துப் பிழைக்கும் கும்பலே!
உண்மையில் அது சாத்தியமாகக் கூடியதானால், சாத்தியமாக வேண்டுமானால் சிங்களம் உடனடியாகச் செய்யவேண்டியது, ஈழத்தமிழர்களின் பிரிந்து செல்லும் உரிமையை- சுய நிர்ணய உரிமையை- அங்கீகரிப்பதாகும்.அரசியல் தீர்வின் ஆதரவாளர்களின் கடமை இதற்காகப் போராடுவதாகும்.அல்லாத எந்த இடைவழிச் சமரசங்களும் துரோகத்தனமானவை.தோற்கடிக்கப்படவேண்டியவை.
சர்வதேசிய அரசியல் நிலைமை
1) ஏகாதிபத்தியத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி காரணமாகவும், மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார நெருக்கடியின் விளைவாகவும், இதனால் உருவான முரண்பாடுகளும் யுத்தங்களும், 21ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-மிகத் தெளிவாக- நான்கு புதிய ஆளும் வர்க்க சக்திகளை, ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பின் தலைவனாக இருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவாலாக உருவாக்கியுள்ளன.
அவையாவன: ஐரொப்பிய யூனியன், ரசியா, ஈரான், சீனா (Europian Union, Russia, Iran.,China, -ERIC) ஆகும்.வருங்காலத்தில் தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஒன்று இவ்வணியில் இணையக்கூடும்.ஐரோப்பியன் யூனியன் இதர மூன்று நாடுகளுடனும் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களைக்காட்டிலும் அமெரிக்காவுடன் ஐக்கியப்படுவதற்கான அம்சங்களை அதிகம் கொண்டிருப்பது உண்மை.
2) இதனால் இது எந்தவகையிலும் ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அடிப்படையான-தலைகீழான-மாறுதலை இன்னமும் கொணர்ந்துவிட வில்லையெனினும், ஒரு புதிய அணிசேர்க்கைக்கான ஆதாரக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன.அதை நோக்கி உலகம் நகரத்தொடங்கிவிட்டது.அணிசேர்க்கை துல்லியமாக எவ்வாறு அமையும் என்பதை இப்போது அநுமானிப்பது கடினமானதாகும்.
3) ரசிய சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னால்- குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு பின்னால்- உதயமான இத்தகைய ஒரு புதிய உலக சூழல் வரலாற்று வழியில் ஒரு திருப்பமாகும்.முந்தைய சூழலில் இருந்து வேறான ஒரு புதிய சூழலாகும்.
4) இச்சூழலை நகர்த்திச் செல்லும் ஆதிக்க சக்திகள் அடிப்படையில் செய்வது உலக மறு பங்கீடாகும்.இதனால் சுதந்திர தேசிய இயக்கங்களை நசுக்குவதை இவை தமது பொதுக்குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
5) இதற்கு யுத்தத்தையும், பாசிசத்தையுமே தமது ஆயுதமாக ஏந்தியுள்ளன.
6) இச் சூழல் அரைக்காலனிய ஆளும் கும்பல்களின் பேர "சுதந்திரத்தை'' அகலப்படுத்தியுள்ளது.
7) உள் நாடுகளில் ஜனநாயக, தேசிய சுதந்திர இயக்கங்களை நசுக்கும் பாசிச அரசுமுறையைப் பாதுகாத்துப் பலப்படுத்துகிறது. போசித்து வளர்க்கிறது.போற்றித் துதிக்கின்றது.
8) இப்பின்னணியில் தான் இலங்கையின் அரசியல், அதன் பல் முகங்களிலும் நகர்கிறது.இனிவருங் காலங்களில் இலங்கையின் அரசியல் திசைவழி இவ்வாறுதான் அமையப் போகின்றது.
எனவே மே 18 இற்குப் பிந்திய உள்நாட்டுச் சூழ்நிலையின் சாராம்சமான, தமிழ்த் தேசிய அழிப்புப் போக்கானது, சர்வதேச சூழ்நிலையை அநுசரித்து, ஆதரித்துச் செல்கிறது, என்பது குறிப்பான முக்கியத்துவம் உடையதாகும்.
நடைமுறைப்பணிகள்
இக்குறிப்பான சூழ்நிலைமையே நமது இயக்கத்தின் குறிப்பான தேசிய ஜனநாயகக் கடமைகளைத் தீர்மானிக்கின்றன.
இவற்றின் அடிப்படை அம்சங்களாவன.
1) ‘’ யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல், அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்’’. 1983 இல் மூண்ட உள்நாட்டு யுத்தம் அது ஏற்றுகொண்ட கடமைகளை நிறைவேற்ற தன் சக்திக்குட்பட்ட வரையில் போராடி முடிவுபெற்றிருக்கின்றது.புதிய யுத்தத்துக்கு புதிய சக்தி தேவை.இப்புதிய சக்தியை மக்களுக்கு அளிக்கும் இரத்தம் சிந்தாத யுத்தத்தில் நாம் குதித்துள்ளோம்.
2) மே 18 2009 இற்குப்பின்னால் எந்தவகையிலும் சிங்களம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. அதனால் சுதந்திரத் தமிழீழத் தனியரசே ஈழத்தமிழர் பிரச்சனைக்கு இன்றும் தீர்வாகும்.
3) இதற்கு மாறாக சமாதானத் தீர்வு ஒன்றை, அமைதி வழியில் அதிகாரப்பரவலாக்கம் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் அடையலாம், நாடுகடந்து அரசாங்கம் அமைத்து அடையலாம் என்றெல்லாம் கூறி மக்களைத் திசைதிருப்பும் சக்திகளை, சுய நிர்ணயஉரிமையை அங்கீகரி என்ற முழக்கத்தை முன்வைத்து அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவது,நமது முதன்மையான அரசியற் கடமையாகும்.சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்து செல்லும் உரிமை தவிர வெறெதுவும் இல்லை.
4) ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுப் பிரச்சனையில் தீர்ப்பளிக்க வேண்டியவர்கள்,இலங்கையில் வாழும் தமிழ் மக்களே. ஒட்டுமொத்தமான இலங்கை மக்களோ, புலம்பெயர் தமிழர்களோ அல்ல.
5) சுதந்திரத் தமிழீழத் தனியரசே தீர்வு! இல்லையேல் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என முழங்கும் அதேவேளையில், உழைக்கும் சிங்கள விவசாய வெகுஜன மக்கள் திரள் மீது சிங்களம் தொடுக்கும் தாக்குதல்களை எதிர்த்து நாம் முன்னின்று குரல்கொடுக்க வேண்டும்.
6) மலையக முஸ்லிம் மக்களை, ஈழ தேசிய இயக்கத்துடன் ஐக்கியப்படுத்த பாடுபடவேண்டும்.
7) புலம்பெயர் நாடுகளில் உள்நாட்டு புரட்சிகர சக்திகள், ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஜனநாயக இயக்கங்கள், உலகு தழுவிய தேசிய விடுதலை இயக்கங்களின் உண்மையான ஆதரவாளர்களாக, இயங்கும் குழுக்கள் இவர்களைச் சார்ந்து இயங்க மக்களைக் கோர வேண்டும்.
8) தமிழகத்தில் மாநிலத் தரகுத் திராவிட இளைஞர் கழகங்களின் பின்னால் அல்லாமல் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகங்களில் இணைந்து செயற்பட இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
9) மே 18 இல் தமிழீழ அரசைக் கவிழ்க்க யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட் டது, இனப்படுகொலை நடத்தப்பட்டது. இதன் சாராம்சம் ஒரு தேசத்தின் சுதந்திர தேசிய கிளர்ச்சி ஒடுக்கப்பட்டதாகும். இதை மனித உரிமை மீறப்பட் டதாகக் குறுக்கும் NGO ஏகாதிபத்திய ஏஜெண்டுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்களின் உள்ளூர் முகவர்களாக இருக்கும் கத்தோலிக்கப் பாதிரி நிறுவனங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர பிரச்சாரம் செய்ய வேண்டும்.
10) முக்கியமாகவும்,முதன்மையாகவும் திரிபுவாதிகளின், தேசிய இயக்கம் தொடர்பான பரப்புரைகளை தத்துவார்த்த ரீதியில் முறியடிக்கவேண்டும்.
மே18 ஐ ஒட்டிய சர்வதேச, உள்நாட்டுச் சூழ்நிலைகள் பற்றிய ஆய்விலிருந்து நமது நடைமுறைப் பணிகளின் திசைவழியை தீர்மானிக்கும் கோட்பாடுகள் இவையே ஆகும்.
ஆகவே தோழர்களே,
இரத்தம் சிந்தும் அரசியல் முடிந்திருக்கிறது.இரத்தம் சிந்தாத யுத்தம் தொடங்கியிருக்கிறது. தமிழீழ மக்கள் ஒரு முறியடிப்புச் சமரில் உடனடியாகக் குதித்துள்ளனர். இது சுதந்திர தமிழீழத் தனியரசமைக்கும் போராட்டத்தை, இடைவழிச்சமரசங்களால் தோற்கடிக்க முயலும் சக்திகளுக்கு எதிரான சமராகும், இதில் சுதந்திரத் தமிழீழத் தனியரசே தீர்வு! இல்லையேல் சுய நிர்ணய உரிமையை அங்கீகரி என முழங்கி நாம் களத்தில் குதித்துள்ளோம்.
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே! இச்சமரில் 'வீரகாவியம் மே 18' போர் வாளாய் விளங்கும். புதிய ஈழப்புரட்சியாளர்கள் அதன் முன்னணிப்படையாய் இருப்பர். இதுவே எம் மண்ணுக்கும், மாண்டநம் மக்களுக்கும் மாவீர மறவர்களுக்கும் நாம் செலுத்தும் மரியாதை ஆகும்.

செவ்வணக்கம் தோழர்களே தாங்கள் சென்ற இடம் நாம் வருவோம், ஈழம் மீண்டும் எழுந்ததென்ற செய்தி தருவோம்!
• தமிழீழ தேசத்தை நிராயுதபாணியாக்கிய சர்வதேச சமூகமே,
தொடரும் இன அழிப்புக்கு பொறுப்பெடு! பதில் சொல்! விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு! விடுதலைப் போராளிகளுக்கு அரசியல் தஞ்சமளி! தமிழீழ விடுதலைக்கான புரட்சிகர ஜனநாயக இயக்கங்களை நசுக்காதே!
• அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்துசமுத்திரப் பிராந்திய காவல் நாயாய் இருந்து, நமது சுதந்திர எழுச்சியைக் கடித்துக் குதறிய இந்திய விஸ்தரிப்புவாத அரசே,
ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே!
• பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட பக்ஸ பாசிசமே
ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அமைதி வழியில் தீர்வுகாண தமிழீழ தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரி!
• புலம்பெயர் நாடுகளில் புலிப் பினாமிகளாகவும், ஏகாதிபத்திய ஏஜெண்டுகளாகவும், தமிழீழ அரசாங்க புரளி அரசியல் நடத்திப் பிழைக்கும் ஏமாற்றுப்பேர்வழிகளே; உங்கள் முகத்திரை கிழிந்துவிட்டது,
ஒடி ஒதுங்குங்கள்! துரோகிகளே தூர விலகுங்கள்!
நமது அடிப்படை முழக்கங்கள்
* ஏகாதிபத்தியம் ஒழிக!
* இந்திய விஸ்தரிப்புவாத அரசு ஒழிக!
* சீனா,ரசியா,ஜப்பான்,ஈரான்,இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆதிக்க ஆசையை முறியடிப்போம்!
* தமிழர்களின் அரசு தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசு, மலர்க!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்படும் தேசங்களே ஒன்று சேருங்கள்!
* மார்க்சிய லெனினிய மா ஓ சே துங் சிந்தனை வழி நடப்போம்!

உடனடிக்கடமைகளுக்கான முழக்கங்கள்
யுத்தக் குற்றவாளிகளே, இனப்படுகொலையாளர்களே, அமைதிமுகம் காட்டும் அயோக்கியர்களே,மனித உரிமை வாதிகளே.
• யுத்தக் கைதிகளாகக் கைப்பற்றியிருக்கும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட போராளிகளின் பெயர் விபரப்பட்டியலை, அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடங்களை பகிரங்கப்படுத்துங்கள்.
• பெண்போராளிகள் மீது வதைமுகாம்களில் நடத்தும் இம்சைகளை உடனே நிறுத்துங்கள்,
• யுத்தக் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி உடனடியாக விடுதலை செய்யுங்கள்.
• விடுதலைப்புலிகளிடம் யுத்தக்கைதிகளான சிங்கள இராணுவத்தினரை பக்குவமாகப் பரிமாறிய செஞ்சிலுவைச் சங்கமே, அது போல விடுதலைப் புலிக்கைதிகளை சிங்களத்திடமிருந்து வாங்கி தமிழீழ மக்களிடம் ஒப்படை.
• ஆயுதம் ஏந்தாமல் நமது மண்ணின் விடுதலைக்கு அரசியல் பிரச்சார, இலக்கியப் பிரச்சார பணிபுரிந்த மண்ணின் மைந்தர்களை உடனேவிடுதலை செய்.
• நீ வேரறுத்து எறிந்த மக்களை தங்கள் வாழ் நிலத்தில் உடன் குடியமர்த்து.
• யுத்தக்குற்றங்களுக்கு நஷ்ட ஈடுவழங்கி அவர்கள் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்து.
• முதியோருக்கு மதிப்பளி! இளையோரை ஈனத்தனமாக விற்றுப்பிழைக்காதே!
• ஊனமுற்றவர்களுக்கு உரிய மருத்துவ உதவி இலவசமாக வழங்கு!
• போராளிகளின் குடும்பங்கள் மீதான பழிவாங்குதலை நிறுத்து!
• யுத்தக் கொடுமைக்குள்ளான மாணவர்களுக்கு விசேட சலுகை அளித்து கல்வி அளி!
தமிழர்களின் அரசு தமிழீழ மக்கள் ஜனநாயக் குடியரசு !
= புதிய ஈழப் புரட்சியாளர்கள் _ தமிழீழம்! = ENB

6 comments:

Rajenderam Abreham (BBA,CIMA) said...

நான் ஏற்று கொள்கிறேன். இது எல்லாம் சரி நண்பரே இறுதிகட்ட சுத்தத்தில் கடைசி தருவாயில் தாங்கள் தோற்று விடுவம் என்று நன்கு தெரிந்து இருந்தும் சரணடையாது தமிழர்களுக்கு மத்தியில் இருந்து நாங்களும் தங்களின் முக்கிய உறுப்பினர்களும் தப்பித்தால் காணும் என்று சுயநல நோக்கினால் தான் 40000 தமிழ் மக்கள் அநியாயமாக இறந்த நாள் தான் இது நண்பா .. இதை தெரிந்து கொள்ளுங்கள் முதலில்

athirvu said...

விடிய விடிய கதை கேட்டுவிட்டு ராமனுக்கு சீதை தங்கையா என்ற கதையாக இருக்கின்றது முட்டாள் இராஜேந்திரன்.

tamil said...

இராஜேந்திரா.. BBA படிச்ச அறிவு களஞ்சியம் ..ரொம்ப கஷ்டம்!!!

Velupillai said...

fuck off rajenderam

ENB.com said...

1) மே16 இரவுடன் அனைத்தும் முடிந்துவிட்டது என்பதே உண்மை.
நிலைமைகளை நேரடியாக கண்டு வந்தவர்கள் பலர் கூறிய தகவல்கள்.
=========
2) ஆமாம் .
தமிழனின் தியாகம் . வீரம் , மானம், உணர்வு இனப்பற்று எல்லாம் முடிந்ததாக நானும் கேள்விப்பட்டேன்
=========
3) இந்திய பிணம் தின்னி நாய்கள் இப்பிடி கனவு கண்டால் ஏமாந்து போவார்கள்.
அங்கு ஓய்ந்தது இந்திய சிங்கள பயங்கரவாதிகளின் ஊழித்தாண்டவம்.
மனம், ரோசம், சூடு, சொரணை, பண்பு எதுவுமே இல்லாத இந்திய நாய்கள் வாயை பொத்தினால் போதும்.
=========
4) அவனின் சொந்த மொழியில எழுதிய சிந்தாந்தத்தை அவன்களே படிச்சு புரியவில்லை,அதன்படி நடக்கவுமில்லை ,இவையள் அந்த உழுத்து போன சித்தாந்ததை மொழிபெயர்த்து படிச்சு

போட்டு முழக்கமிடியினம் முழக்கம்.

மா ஒ சேதுங்கின் சித்தாந்ததை சீனாக்காரனே மறந்திட்டான்
லெனினை சித்தாந்ததை ரஷ்காரன் மறந்திட்டான்
=========
5) நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததும் நடந்து இருக்குது... புலிகள் இப்போது இல்லை மக்களின் ஆதரவை யாராவது புலிகளை விட அதிகமாக பெற முடிந்தால் பெற்று பதவிகளை பெறலாம்...

நண்றாகவும் வாழலாம்.... முடிந்தால் வாழவும் வைக்கலாம்
=========
6) Posted 16 May 2010 - 02:34 PM

உங்க இந்தியாவும் ஒண்டும் செய்யேல்ல ஸ்ரீலங்காவும் ஒண்டும் செய்யேல்ல உலக நாடுகளும் ஒண்டும் செய்யேல்ல, ஆயுதப்போராட்டம் எண்டு துடங்கிச்சினமே!! உவைதான்

எல்லாத்தையும் செய்தவை. இத்தனை அழிவுக்கும் எங்கட இன்டைய நிலமைக்கும் உவைதான் பதில் சொல்லவேணும். ஒவ்வொரு காலகட்டத்திலயும் என்னென்ன கதை சொல்லி தாங்கள்

பவரில இருந்தினம் எண்டதுகள உவை திரும்பிப்பாக்கவேணும். முள்ளிவாய்க்காலுக்கு தள்ளிக்கொண்டு போய் வச்சிருந்துகொண்டு எல்லாரயும் சாக்கொண்டா தமிழீழம் வரும் எண்டு

கதையளந்தாக்கள் உவை.....உவைக்கு மனிதம் பற்றி கதைக்க என்ன உரிமை இருக்கு?
=========
7) இக்கருத்தை சொல்ல அழையா விருந்தாளிக்கு உரிமை இல்லை.
=========
8) ஜனநாயகம் ,தமிழ், புரட்சி,மக்கள் , ஈழம் ,புதிய, பழைய ,......அடேயப்பா மாத்தி மாத்திப்போட்டு கட்சி அமைச்சு மக்களின்ட தலையில் மிளகாய் அரைக்கிறாங்கள்

நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததும் நடந்து இருக்குது... புலிகள் இப்போது இல்லை மக்களின் ஆதரவை யாராவது புலிகளை விட அதிகமாக பெற முடிந்தால் பெற்று பதவிகளை பெறலாம்...

நண்றாகவும் வாழலாம்.... முடிந்தால் வாழவும் வைக்கலாம்
=========
முள்ளி வாய்க்கால் வீரகாவியம் மே 18 ஐ யாழ் இணையம் தமது கருத்துக் களம் பகுதியில் விவாதத்துக்கு விட்டிருந்த போது வாசகர்கள் தெரிவித்த கருத்துக்கள்,

Rajenderam Abreham (BBA,CIMA) said...

பித்தலாட்டம் போடும் மந்தை கூட்டங்களே!

தயவு செய்து சிந்தியுங்கள்!, முந்திய காலங்களை ஒருதடவை தன்னும் சிந்தித்து பாருங்கள்!,

அன்று ஒரு காலம், வடக்கு, கிழக்கு இணைந்த எல்லைகளை கொண்ட, தமிழ்நாட்டுக்கு நிகரான மாநிலம், வரி அறவீடு, போலிஸ், நீதி, காணி, கல்வி, என்று சகல உரிமையும், சகல சந்தர்பங்களும் மட்டுமல்ல,

இலங்கை இராணுவம் உள்ளே வரமுடியாது, ஆனால், புலிகள் இலங்கையில் எப்பகுதிக்கும் தடையின்றி செல்லலாம்,

ஸ்ரீலங்கா வானுர்த்திகளிலும் செல்லலாம், கொழும்பில் தங்கலாம், சிகிட்சை பெறலாம், பிள்ளைகள் படிக்கலாம்,குடும்பமாக எங்கும் போகலாம்,

பாதுகாப்புக்காக சிறிலங்கா விசேட இராணுவத்தினரை கேட்கலாம்,

…….. சொல்லி வேலையில்லை….

அப்படியெல்லாம் வந்த அறிய வாய்ப்புகளை, சந்தர்ப்பங்களை எல்லாம், குறுக்கு புத்தி, குறுகிய சிந்தனையால் உதாசீனம் செய்து விட்டு,

தலைக்கனம், ஆணவம், ஆசை பிடித்து, நம்பியவர்களுக்கு எல்லாம் துரோகம் செய்து, தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தையே ஏமாற்றி…..,

குட்ட, குட்ட குனிபவனை மேலும், மேலும் குட்டி மடையனாக்கிய காலம் அன்று, இவற்றை எல்லாம் ஒன்றுமே தெரியாதவர்கள் போல் பார்த்து, கேட்டு, ரசித்து விட்டு,

இப்போ மட்டும் துள்ளி பாய்வது ஏன்?