Tuesday, 18 March 2008

மாமேதை கார்ல் மார்க்ஸ் மறைவின் 125 ம் ஆண்டு நிறைவு

கல்லறை வாசகம்:
''தத்துவஞானிகள் உலகத்துக்குப் பல்வேறு வழிகளில் விளக்கமளிப்பதை மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள்; ஆனால் அதை மாற்றுவதுதான் இன்று முக்கியமாகும்.''
(பாயர்பாக்ஹ் பற்றிய 11ம் ஆய்வுரை) கார்ல் மார்க்ஸ்:
May 5,1818 - March 14, 1883
பி.எங்கெல்ஸ்
கார்ல் மார்க்சின் உடலைப் புதைக்கின்ற பொழுது நிகழ்த்திய உரை.
மார்ச் 14ம் தேதியன்று பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது; நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டோம்.
இந்தமேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளிவர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்திற்கும் அளவிடமுடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருகின்ற இடைவெளியை நாம் சீக்கிரமாகவே உணர்வோம்.
அங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப்போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்:மனிதன் அரசியல், விஞ்ஞானம், கலை,சமயம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர், முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும் உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும் என்னும் சாதாரண உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடிமறைக்கப் பட்டிருந்தது; ஆகவே உடனடியான பொருளாயத வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருதுகோள்கள், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளர்ச்சியடைகின்றன; ஆகவே அதன் ஒளியில் தான் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.
ஆனால் அது மட்டுமல்ல, மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள பூர்ஷ்வா சமூகத்தின் இயக்கத்தின் விசேச விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக் கண்டு பிடித்தது திடீரென்று அபிரச்சனையின் மீது ஒளியைப் பாய்ச்சியது; அப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முதலாளிவர்க்கப் பொருளியலாளர்கள், சோசலிஸ்டு விமர்சகர்கள் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.
ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பை செய்ய முடிந்தால் கூட அந்த மனிதர் அதிஸ்டமுடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் - அவர் பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில் கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை- கணிதத்தில் கூட சுயேச்சையான கண்டுபிடிப்புக்களைச் செய்தார்.
அத்தகைய விஞ்ஞான மனிதர் அவர்.ஆனால் இது அவருடைய சாதனையில் அரைப்பங்கு கூட அல்ல.மார்க்ஸ் விஞ்ஞானத்தை இயக்காற்றல் உடைய சக்தியாகக் கண்டார். ஏதாவதொரு தத்துவார்த்த விஞ்ஞானத்துறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை- அதன் செய்முறைப் பிரயோகம் எப்படியிருக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத நிலையில்- அவர் எத்துணை அதிகமான மகிழ்ச்சியுடன் வரவேற்ற போதிலும், அக்கண்டுபிடிப்பு தொழில்துறையில் மற்றும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியில் உடனடியான புரட்சிகர மாற்றங்களைத் தூண்டுமானால் முற்றிலும் வேறுவிதமாக மகிழ்ச்சியடைந்தார்.உதாரணமாக, மின்சாரத்துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை அவர் நுணுக்கமாகக் கவனித்தார்.சமீபகாலத்தில் மார்செல் டெப்ரேயின் ஆராய்ச்சிகளைப்பற்றியும் அப்படியே செய்தார்.
ஏனென்றால் மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சிக்காரர்.ஏதாவதொரு வழியில் முதலாளித்துவ சமூகத்தை மற்றும் அது உருவாக்கியிருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கு, நவீனப்பாட்டாளி வர்க்கத்தின் - அதன் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படி செய்த முதல் நபர் அவரே-விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர்.அவரைப்போல உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது.முதல்Rheinische Zeitung(1842)*,பாரிஸ்Vorwarts(1844)**,Deutsche Brusseler Zeitung(1847)***,Neue Rheinische Zeitung(1848-1849)***,New York Tribune****(1852-1861) இதழ்களிலும், போர்க்குணமிக்க பிரசுரங்களிலும்,பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஸ்தாபனங்களில் அவருடைய பணி; இறுதியாக, எல்லாவற்றுக்கும் சிகரமாக சர்வதேச தொழிலாளர் சங்கத்தை நிறுவினார்.அவர் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்தச்சாதனையைப் பற்றி மட்டுமே நிச்சயமாகப் பெருமை அடைய முடியும்.
ஆகவே மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார்.எதேச்சாதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத்தம்முடைய நாடுகளில் இருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர்- அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ- மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர்.இவை அனைத்தையும் அவர் ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளினார், அவற்றைப் புறக்கணித்தார்; இன்றியமையாத அவசியம் நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் பதில் அளித்தார்.சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப்பகுதிகளிலும் லட்சக்கணக்கான சக தொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அவர் மரணமடைந்த பொழுது அவர்கள் கண்ணீரைச் சொரிந்தார்கள். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம்,ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.
அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும்!
==================
மார்ச்17, 1883ல்லண்டன், ஹைகேட் இடுகாட்டில் பி.எங்கெல்ஸ் ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை.Der Sozialdemokrat பத்திரிகை, எண்13, மார்ச் 22, 1883 என்ற இதழில் ஜேர்மன் மொழியில் வெளியிடப்பட்டது.பத்திரிகை வாசகப்படி கையெழுத்துப் பிரதியின் ஆங்கில வாசகத்துடன் சரிபார்த்து அச்சிடப்பட்டது.மூலம் ஜேர்மன் மொழியில் எழுதப்பட்டது.
==================
ENB பிரசுரிப்பாளர் குறிப்பு: முன்னேற்றப் பதிப்பகம் மாஸ்கோ வெளியிட்ட 'மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரெண்டு தொகுதிகளில்' (1989), தொகுதி 10, பக்கங்கள்(145-148) இலிருந்து, மறு பிரசுரம் செய்யப்பட்டது.*(63)/**(64)/***(65)/****(66) இவை தொகுதி 10 இன் பதிப்பாளர் குறிப்பின் எண்களைக் குறிக்கின்றன.
===================
The Death of Karl Marx
Frederick Engels’ Speech at the Grave of Karl MarxHighgate Cemetery,
London. March 17, 1883
[Transcribed: by Mike Lepore, 1993.(Marx Engles Library)]
On the 14th of March, at a quarter to three in the afternoon, the greatest living thinker ceased to think. He had been left alone for scarcely two minutes, and when we came back we found him in his armchair, peacefully gone to sleep -- but for ever.
An immeasurable loss has been sustained both by the militant proletariat of Europe and America, and by historical science, in the death of this man. The gap that has been left by the departure of this mighty spirit will soon enough make itself felt.
Just as Darwin discovered the law of development or organic nature, so Marx discovered the law of development of human history: the simple fact, hitherto concealed by an overgrowth of ideology, that mankind must first of all eat, drink, have shelter and clothing, before it can pursue politics, science, art, religion, etc.; that therefore the production of the immediate material means, and consequently the degree of economic development attained by a given people or during a given epoch, form the foundation upon which the state institutions, the legal conceptions, art, and even the ideas on religion, of the people concerned have been evolved, and in the light of which they must, therefore, be explained, instead of vice versa, as had hitherto been the case.
But that is not all. Marx also discovered the special law of motion governing the present-day capitalist mode of production, and the bourgeois society that this mode of production has created. The discovery of surplus value suddenly threw light on the problem, in trying to solve which all previous investigations, of both bourgeois economists and socialist critics, had been groping in the dark.
Two such discoveries would be enough for one lifetime. Happy the man to whom it is granted to make even one such discovery. But in every single field which Marx investigated -- and he investigated very many fields, none of them superficially -- in every field, even in that of mathematics, he made independent discoveries.
Such was the man of science. But this was not even half the man. Science was for Marx a historically dynamic, revolutionary force. However great the joy with which he welcomed a new discovery in some theoretical science whose practical application perhaps it was as yet quite impossible to envisage, he experienced quite another kind of joy when the discovery involved immediate revolutionary changes in industry, and in historical development in general. For example, he followed closely the development of the discoveries made in the field of electricity and recently those of Marcel Deprez.
For Marx was before all else a revolutionist. His real mission in life was to contribute, in one way or another, to the overthrow of capitalist society and of the state institutions which it had brought into being, to contribute to the liberation of the modern proletariat, which he was the first to make conscious of its own position and its needs, conscious of the conditions of its emancipation. Fighting was his element. And he fought with a passion, a tenacity and a success such as few could rival. His work on the first Rheinische Zeitung (1842), the Paris Vorwarts (1844), the Deutsche Brusseler Zeitung (1847), the Neue Rheinische Zeitung (1848-49), the New York Tribune (1852-61), and, in addition to these, a host of militant pamphlets, work in organisations in Paris, Brussels and London, and finally, crowning all, the formation of the great International Working Men's Association -- this was indeed an achievement of which its founder might well have been proud even if he had done nothing else.
And, consequently, Marx was the best hated and most calumniated man of his time. Governments, both absolutist and republican, deported him from their territories. Bourgeois, whether conservative or ultra-democratic, vied with one another in heaping slanders upon him. All this he brushed aside as though it were a cobweb, ignoring it, answering only when extreme necessity compelled him. And he died beloved, revered and mourned by millions of revolutionary fellow workers -- from the mines of Siberia to California, in all parts of Europe and America -- and I make bold to say that, though he may have had many opponents, he had hardly one personal enemy.
His name will endure through the ages, and so also will his work.

No comments: