Tuesday, 20 June 2017

ENB செந்தோழர் பச்சையப்பனுக்கு ஈழச் செவ்வணக்கம்


தோழர் பச்சியப்பன்  மறைந்தார்.

``வரின் இலட்சியம் மறையவில்லை. பாலக்கோடு - தமிழக உழைக்கும் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது, அவரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார், என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்! பச்சியப்பன்  வித்துடல் கூட, எங்கே புரட்சித் தீயை பற்ற வைத்து விடுமோ என்று அஞ்சி ஆளும் வர்க்கத்தின் நக்சல் ஒழிப்பு பிரிவு இரங்கல் நிகழ்ச்சியைக் கூட வேவு பார்த்தது, வெட்கக் கேடானது.

போலிச் சுதந்திரம், போலி ஜனநாயகத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்கு, நிலப்பிரபுத்துவ  ஒடுக்குமுறையை எதிர்த்து கிளர்ந்தெழுந்த நக்சல்பாரி், தன்னியல்புப் புரட்சி இயக்கத்தில் தன்னை இளம் வயதில்  இணைத்துக் கொண்டு போராடிய போர் வீரர் தோழர் பச்சியப்பன் .

புரட்சிகர இயக்கத்தை ஒடுக்க  தமிழக காவல்துறை தொடுத்த பல்வேறு விதமான அடக்கு முறைகளை எதிர்த்து கதிகலங்க வைத்த களப் போராளி பச்சியப்பன் .

1980 ஆம் ஆண்டுகளில் நக்சல் ஒழிப்பின் ஒரு பகுதியாக, காவல்துறை தோழர் பாலனைக் கைது செய்து  படுகொலை செய்த, பாலக்கோடு சீரியம்பட்டி பொதுக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தியவர் தோழர் பச்சியப்பன்.

நக்சல்பாரி இயக்கத்தின் நரோத்தினிய* - தன்னியல்புத் தனிநபர் பயங்கரவாதப் பாதையை, விமர்சன சுயவிமர்சனம் செய்து மார்க்சிய லெனினிய வழியிலே,இந்திய மக்கள் ஜனநாயகப்  புரட்சியினை நிறைவேற்றப் போராடும் ம.ஜ.இ.க வின் முன்னணி செயல்வீரர், பிரச்சாரப் பீரங்கி.

தோழர் பச்சியப்பன் கலைப்புவாதம், திருத்தல்வாதம் , தொழிற்சங்கவாதம் போன்ற பல்வேறு விதமான மார்க்சிய விரோத போக்குகளை எதிர்த்துப் போராடிய பாட்டாளி வர்க்க போர் வீரன்!

இறுதி நாட்களில் கடும் நோய்வாய்ப்பட்டு இறப்பை எதிர்கொண்டிருந்தபோதும், `இறப்புக்கு முன்னால் அதிகம் அமைப்புப் பணி ஆற்றவேண்டுமென` உரைத்து செயற்பட்ட அர்ப்பணிப்பாளன்!

இவ்வாறு தன் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றி விடைபெற்ற தோழர் பச்சியப்பனின் இறுதி ஊர்வலத்தில்  ம.ஜ.இ.க தோழர்கள்,கழக மக்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் பெருந்திரளாக பங்கேற்று  சிவப்பு அஞ்சலி வீர வணக்கம் செலுத்தினர்.`` (நன்றி சமரன் இணையம்)

பகுதி (2)

இன்றைய உலகளாவிய உலகப்போர் சூழலிலும்,அதன் பகுதியான உலக மறு பங்கீட்டு பிராந்திய யுத்தங்களிலும், தென்னாசியப் பிராந்தியச் சூழலிலும், பொதுவான உலகு தழுவிய மானுட பூகோளப் பிரச்சனைகளிலும், குறிப்பாக உள்நாட்டிலும், சமூக மாறுதலுக்கான முற்போக்கு முயற்சிகளை, முன்னேறிய தேசிய புலிப் பாய்ச்சல்களை, முடிவான வசந்தத்தின் இடி முழக்கங்களை வலிந்து நசுக்கும், வேட்டையாடும் பிற்போக்குக் கொத்தளமாகவே இந்திய ஆளும் கும்பலும் அதன் நலன் காக்கும் இந்திய விரிவாதிக்க அரசும் இருந்து வருகின்றது, வந்திருக்கின்றது.

உலகப்போர், போயர் யுத்தத்தில்** இருந்து, முள்ளிவாய்க்கால் யுத்தம் ஈடாக, காஸ்மீர் யுத்தம் வரை இந்திய விரிவாதிக்கத்தின் துர்நாற்றம் கூவம் நதியை `மேவுலாகி` வீசுகிறது!

இதன் காரணமாக இலங்கை நாட்டை இந்திய விரிவாதிக்கம் தனது `கொல்லைப்புற சின்ன வீடாக,உலகமறுபங்கீட்டில் தனது சொந்தக் குடிசையாகவே ` நடத்திவருகின்றது.

1972 JVP விவசாயக் கிளர்ச்சியை நசுக்க இராணுவப் பங்கு ஏற்றது,
1983 இல் ஈழக்கிளர்ச்சியாளர்களை கைக்கூலி ஆயுதக் கும்பல் ஆக்கியது,
1985 இல் திம்பு ஜனநாயகக் கோரிக்கைகளை வேரறுத்தது,
1987 இல் இலங்கையை அடிமைப்படுத்தி இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றியது,
2002 இல் புலிகளின் அதிகார பேர சுயாட்சி அதிகாரத் திட்டத்தை  திட்டமிட்டு முறியடித்தது,
2009 இல் விசவாயு தாக்குதல் மூலம் புலித் தலைமையை பூண்டோடு அழித்தது,
2015 இல் ராஜபக்ச ஆட்சிக்கவிழ்ப்பை அமெரிக்காவுடன் இணைந்து நிறைவேற்றியது,
2016 முதல் ரணில் மைத்திரி அடிமைகளைக் கொண்டு இலங்கையை துணைக்காலனி ஆக்கியது,

மூன்றாம் உலக அதன் பகுதியான உலகமறுபங்கீட்டுப் போர்களில் அமெரிக்க முகாமைச் சார்ந்த இந்திய அரசு, அந்த முகாமுக்குள் இலங்கை மக்களை வலிந்து இழுத்து விடுவது, என தனது விரிவாதிக்க நலனுக்கு தமிழீழத்தையும், ஒட்டுமொத்த இலங்கையையும் அடிமைப்படுத்தி ஒடுக்கிவருகின்றது.

இந்திய இலங்கை ஒப்பந்தப்படி `இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவே பொறுப்பாகும்`!
அதன் பொருளாகப்பட்டதானது, இந்தியாவின் பாதுகாப்புக்கு உட்பட்டதே இலங்கையின் இறையாண்மை என்பதாகும்.

இந்த அர்த்தத்தில் தான் ``இந்திய இலங்கை ஒப்பந்தம் இப்போதும் அமூலில் உள்ளது`` என இந்தியா சிங்களத்தை தொடர்ந்து மிரட்டி அடிமைப்படுத்தி வருகின்றது. இதற்கு ஈழம் எவ்வகையிலும் பொறுப்பாகாது, நன்றி பிரிவினைவாத பயங்கரவாதிகள் மாத்தையாவுக்கும்.பிரபாகரனுக்கும்!

ஏறத்தாழ இந்த  50 ஆண்டு வரலாறு எமக்கு -பகுத்தறிவுள்ள ஈழக் குடிமக்களுக்கு- எடுத்துரைக்கும் படிப்பினை என்ன?

ஈழப்புரட்சியின் வெற்றிக்கு இந்தியாவில், குறைந்த பட்சம் தமிழகத்தில் ஒரு முரணற்ற ஜனநாயக இயக்கம் அத்தியாவசிய தேவை என்பதே ஆகும்.
 
புதிய ஈழப் புரட்சியாளர்களாகிய நாம் சமரன் இயக்கத்தை அத்தகு நிலை உள்ள சக்தியாக கருதி, கோட்பாட்டு ரீதியில் ஐக்கியப்பட்டு, வழிகாட்டுதல் பெற்று செயற்பட்டு வருகின்றோம் என்பதை
ஈழ மக்களுக்கு பகிரங்கமாக அறியத் தருகின்றோம்!
 
இந் நிலை நின்று செந்தோழர் பச்சியப்பனுக்கு  
ஈழச் செவ்வணக்கம் அளித்து 
சிவப்பு அஞ்சலி வீர வணக்கத்தை 
தலை தாழ்த்தி வழங்குகின்றோம்!

மார்க்சிய லெனினிய மாஓ சிந்தனை வெல்க!
உலகத் தொழிலாளார்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்     Eelam New Bolshewiks    22-06-2017

==============
* நரோத்தியம்: ரசியப் புரட்சிகர இயக்கத்தில் 1860-70 ஆம் ஆண்டுகளிடையே தோன்றிய ஒரு குட்டி முதலாளித்துவப் போக்கு.நரோத்தியவாதிகள் எதேச்சாதிகார முறையை ஒழிக்கவும் நிலப்பிரபுக்களின் நிலத்தை விவசாயிகளுக்கு கொடுக்கவும் விரும்பினார்கள்.அவர்கள் தம்மைத்தாமே சோசலிஸ்டுக்கள் என்று கருதினார்கள்.ஆனால் அவர்களது சோசலிசம் கற்பனாவாதமானது......மக்கள் என்பதற்கு ரசிய மொழியில் நரோத் என்பர்.இதனால் நரோத்தியவாதிகள் என்ற பெயர் பெற்றனர். 1880-90 ஆண்டுகளில் நரோத்தியவாதிகள் ஜாராட்சியுடன் சமரசம் செய்து கொள்ளும் பாதையில் இறங்கினர்.பணக்கார விவசாயிகளின் -குலாக்குகளின்- நலன்களைவெளியிட்டனர்.மார்க்சியத்தை எதிர்த்துப் போராடினர்.
( லெனின் தேர்வு நூல்கள் 12(4) பக்கம் 274-5)

** உலகப்போர், போயர் யுத்தம்:
(பின் குறிப்பு தொடரும்)

Last Update:22/06/2017 11.11gmt

No comments: