Wednesday, 23 March 2011

லிபிய விடுதலைக்கான புரட்சிப் பாதை.


லிபியமக்களே, ஒமர்முக்தாவின் வீரப்புதல்வர்களே,


அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் உலகமறுபங்கீட்டிற்கும், எண்ணெய்வளத் திருட்டுக்கும், சாவு ஆயுத வியாபாரத்துக்கும் லிபிய மக்களுக்கு எதிராகத் தொடுத்துள்ள ஆக்கிரமிப்பு யுத்தம் அநீதியானதாகும்!

தேசிய சுதந்திரத்தைக் காக்கவும், தேசிய வளங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்காகவும் விடுதலைக்காகவும் லிபியமக்கள் நடத்தும் தற்காப்பு யுத்தம் நீதியானதாகும்!

ஆக்கிரமிப்பு யுத்தத்தில் பங்கேற்றுள்ள நாடுகளின் உழைக்கும் மக்கள் அதன் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போர்க்கொடி உயர்த்துவர்!

மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க தேசிய ஜனநாயக இயக்கங்கள் லிபிய விடுதலையை ஆதரிப்பர்!

உலகத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட தேசங்களும்,ஏகாதிபத்திய அநீதி யுத்தத்தை எதிர்த்து, லிபிய மக்களின் நீதியான யுத்தத்தின் பக்கம் என்றும் நிற்பர்.

ஏகாதிபத்திய தாச விதேசிய அரபு ஆபிரிக்க ஆளும் கும்பல்கள் அம்பலப்பட்டு தனிமைப்படுவர்!

அநீதி யுத்தமுகாம் பிளவுபட்டு பலமிழக்கும்!

நீதி யுத்த முகாம் ஒன்றுபட்டு பலம் பெருக்கும்!

ஏகாதிபத்திய இராணுவப் படை நேற்றோ ஒழிக!

ஏகாதிபத்திய அரசியல் படை ஐ.நா.ஒழிக!

ஏகாதிபத்தியம் ஒழிக!!

இறுதி வெற்றி லிபிய மக்களுக்கே!

உலகத் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட தேசங்களுக்குமே.

லிபிய சர்வாதிகாரி கடாபியே,

* ‘ஏகாதிபத்திய காலனியாதிக்கவாதிகளின் அநீதியான ஆக்கிரமிப்பு யுத்தத்தை, ஆயுதமேந்திய லிபிய மக்களின் நீதியான நீண்டகால மக்கள் யுத்தத்தால் தோற்கடிப்போம்’ என்ற சரியான முழக்கத்தை அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்கான சந்தர்ப்பவாத கர்ச்சனையாக குறுக்காதே!

* உண்மையிலேயே தேசியவாதியானால் அந்நிய ஆக்கிரமிப்பைத் தோற்கடிக்க உள்நாட்டு மக்களுக்கு ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்!

* 41 வருடகால பாசிச சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடிப் பரிகாரம் வழங்கு!

* அனைத்து அரசியல் கைதிகளையும், ஊடகத்துறையினரையும் உடனே விடுதலை செய்!

* மக்கள்விரோத பாசிச கறுப்புச்சட்டங்கள் அனைத்தையும் ரத்துச் செய்!

* அதிகாரபூர்வமற்ற திரைமறைவு வெண்படைகள் அனைத்தையும் உடனே கலை!

* இன,குல,பழங்குடி மக்கள் பகைமைகளுக்கு முடிவுகட்டி லிபிய மக்கள் அனைவரையும் ஒரு கொடியின் கீழ் திரட்ட, அனைத்து விசேச மக்கள் பிரிவினரதும் தேசிய, குலமரபு கலாச்சார உரிமைகளை மதித்து சமத்துவமாக நடத்தும் சட்டங்களை உடனே அறிவி!

* லிபிய மக்கள்; தேசியவிடுதலைக்காகவும், ஜனநாயக அரசுமுறைக்காகவும் ஆயுதம் ஏந்தும் உரிமையை அரசியல் சட்டத்தின் அங்கமாக அறிவி!

* யுத்தகால மக்கள் நல மேம்பாட்டுத் திட்டத்தை அறிவித்து மக்கள் வாழ்நிலையை முன்னேற்று!

* ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் உள்நாட்டு, பிராந்திய விதேசிய சக்திகளை தனிமைப்படுத்து!

* உள்நாட்டில் ஜனநாயக மாறுதலை வேண்டும் சக்திகளை வென்றெடுத்து தேசபக்தப் போரில் ஐக்கியப்படுத்து!

கடாபி எதிர்ப்பு லிபிய கிளர்ச்சியாளர்களே;

* இரவல் படையில் ‘புரட்சி’ எதற்கு?

* ’தேசிய சுதந்திரத்தைக் காக்கவும், தேசிய வளங்களைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்துக்காகவும் விடுதலைக்காகவும்’ தாங்கள் ஏகாதிபதியவாதிகளை சார்ந்து நின்று போராடமுடியாது.

* ஏகாதிபத்தியம் - ஏகபோக நிதி மூலதனத்தின் உலக மேலாதிக்கம் - சோசலிஸ. தேசிய ஜனநாய மக்கள் விடுதலைப் புரட்சிகளின் எதிரியாகும்.

* ஏறத்தாழ கடந்த எழுபது ஆண்டுகளில் எங்கெல்லாம் இவ்விடுதலைப் புரட்சிகள் முளை விட்டனவோ, அங்கெல்லாம் ’ஆதரவாக இருந்து’ முனை மழுங்கச் செய்தவர்களும், எதிராக இருந்து கடித்துக் குதறியவர்களும் இந்த ஏகாதிபத்திய விசர் நாய்களே ஆகும்!

* ‘கிளர்ச்சியாளர்’ முகாமுக்குள் ஒழிந்திருக்கும் ஏகாதிபத்திய விசுவாசிகள் அமைக்கும் ‘இடைக்கால அரசு வடிவம்’ ஏகாதிபத்தியவாதிகள் லிபியாவை மறு பங்கீடுசெய்ய உருவாக்கும் ‘பொம்மை அரசே’!

* ‘கிளர்ச்சியாளர்’ முகாமுக்குள் ஒழிந்திருக்கும் ஏகாதிபத்திய விசுவாசிகளை- ஏஜெண்டுகளை-த் தனிமைப்படுத்துங்கள்.

* அல்லாமல் அவர்கள் வழி நடந்தால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு இரு தரப்பாலும் தாக்கி அழிக்கப்படுவீர்கள்!

* அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராட கடாபி முகாம் உறுதியாக உள்ளவரையில், உள்நாட்டில் ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்வதை முந்நிபந்தனையாக வைத்து, அரசியல் ரீதியாகவும், சொந்தப் பலத்தில் தங்கியிருந்து ஆயுதரீதியாகவும் போராடுவதற்கான சுதந்திரத்தை உறுதிசெய்யும் ஐக்கிய முன்னணியை அமையுங்கள்.

* அந்நிய ஆக்கிரமிப்பை தோற்கடியுங்கள்! உள்நாட்டில் ஜனநாயகத்தை சொந்தப்பலத்தில் வென்றெடுங்கள்!

* ஆயுதப் புரட்சியோடு விளையாடாதீர்கள், இரவல் துப்பாக்கிக் குழல்களில் இருந்து மக்கள் அதிகாரம் பிறக்காது! ஆற்றல் போதாதென்றால் பின்வாங்குங்கள்.

லிபியமக்களே,ஒமர்முக்தாவின் வீரப்புதல்வர்களே, இந்தப் பாதையொன்றே தங்களுக்கு விடுதலை அளிக்கும்.வேறெதுவும் அல்ல.

புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Monday, 31 January 2011

எகிப்தில் திருவிழா

அமெரிக்க அடிவருடி, இஸ்ரேலிய கைக்கூலி எகிப்திய மக்கள் விரோத முபாரக் பாசிச ஆட்சி ஒழிக!

எகிப்தில் ஆட்சி மாற்றத்துக்கான வெகுஜன மக்களின் தன்னியல்பான கிளர்ச்சி வெல்க!

முபாரக் அரசே,

ஆட்சி மாற்றத்துக்காகப் போராடும் எகிப்திய வெகுஜன மக்கள் இயக்கத்தின் மேல் அரச வன்முறையைப் பிரயோகிக்காதே!

போராடும் பொதுமக்களின் சொத்துக்களைச் சூறையாட பொலிஸ் குண்டர்களைப் பயன்படுத்தாதே!

Internet, Mobile Phone பாவனைக்கு விதித்துள்ள தடையை உடனே நீக்கு!

அல் ஜசீரா தொலைக்காட்சி மீது விதித்துள்ள தடையை நீக்கு!

ஒபாமாவின் அமெரிக்காவே,

எகிப்திய மக்கள் விரோத முபாரக் அரசுக்கு வழங்கும் அனைத்து ஆதரவையும் உடனே நிறுத்து!

முபாரக்கை திரை மறைவில் வைத்து பழைய ஆட்சியை புதிய முகங்களில் நடத்தும் சதித்திட்டத்தைக் கைவிடு!

உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே,

எகிப்தில் ஆட்சி மாற்றத்துக்கான வெகுஜன மக்களின் தன்னியல்பான கிளர்ச்சி வெற்றி அடைய ஆதரவளியுங்கள்!

எகிப்திய உழைக்கும் மக்களின் விடுதலை, ஆட்சி மாற்றாத்தால் அல்ல அரசு மாற்றத்தாலேயே நிறைவேறும் என்பதை நினைவில் வையுங்கள்!

ஏகாதிபத்திய காலனியாதிக்கம் மத்திய கிழக்கில் படிப்படியாக தகர்ந்து வருவதை கண்டு புரட்சியில் நம்பிக்கை பெறுங்கள்!
 
புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Monday, 6 December 2010

ஈழக்கலைமகள் இசைப்பிரியா

இசைப்பிரியா படுகொலை!
புலம்புவதை நிறுத்துங்கள்! புரட்சிசெய்யப் புறப்படுங்கள்!!
பக்ச பாசிசமே,
நிராயுதபாணியான ஈழத்தமிழர் மீது தொடரும் யுத்தத்தை நிறுத்து!
''பயங்கரவாதத்தை'' தோற்கடித்த அமெரிக்க, 'சர்வதேச சமூகமே',
தொடரும் தேசிய அழிப்புக்குப் பொறுப்பெடு!
ஆயுதங்களைக் கைவிடக் கோரிய ஐ.நா.சபையே,
உன் ஆணைக்குழுக்களால் தமிழ் மக்களைக் காப்பாற்றிக் காட்டு!
இந்திய விஸ்தரிப்புவாத அரசே
ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடாதே! 'இந்தியனே வெளியேறு''!
நெடுமாறன் கும்பலே,
இந்தியத் தலையீட்டிற்கு தொடர்ந்து அழைப்பு விடுக்காதே!
தமிழீழ தேசிய ஜனநாயகப் புரட்சியை, ஏகாதிபத்திய இந்தியவிஸ்தரிப்புவாத ஆதரவு, சமரசவாத சந்தர்ப்பவாத வழிகளில் சீரழிக்காதே!
தமிழகத்தில் முளைவிடும் ஈழ ஆதரவு ஜனநாயக இயக்கத்தை சீர்குலைவுப் பாதையில் சிதைக்காதே!
அதிகாரபூர்வ புலம்பெயர் ''தமிழ்ப் பேரவைகளே'' ,
பத்தாயிரம் விடுதலைப்புலி யுத்தக் கைதிகளை உடனடியாக விடுவிக்க இயக்கம் நடத்து!
பக்ச பாசிஸ்டுக்களின் பிடியில் யுத்தக்கைதிகளை விட்டு வைக்காதே!
பிணங்களை வைத்து பிழைப்பு நடத்தாதே!
புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்கப் போராடு!
யுத்தக்கைதிகள் அரசியல் புகலிடம் பெற சட்ட நடவடிக்கை எடு!
தமிழீழ மக்களே,
துயரம் பெரிதெனினும் துவண்டுவிடாதீர்கள்,
அந்த மண் உங்களின் சொந்த மண்!அண்ணன் போராடிய அன்னை மண்!
உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஈழமக்களுடன் ஒன்றுசேருங்கள்!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!
செந்தமிழ் தங்கைக்கு செவ்வீர வணக்கம்!
புதிய ஈழப்புரட்சியாளர்கள்

Monday, 25 October 2010

மாவீரர் தின முழக்கங்கள்

தியாக தீபங்கள் மில்லர், திலீபன், மாலதி தொடங்கிய போரைத் தொடர்வோம்.
புலம்பெயர் நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம்! அவற்றை புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பள்ளிகளாய் மாற்றுவோம்!
மாவீரன் மில்லர் நினைவாக!
* பக்ச பாசிஸ்டுக்களின் ஈழதேச முற்றுகையை முறியடிப்போம்!
* இடைவழிச் சமரசங்களைத் தோற்கடிப்போம்! ஈழவிடுதலைக்காய் ஊற்றெடுப்போம்!
* 18 வது அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்ப்போம்!
* சிங்களப் பேரினவாத போலிப் பாராளமன்றப் பாதையை நிராகரிப்போம்!
* தேசிய சுயநிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து பிரிந்து செல்லும் உரிமைக்காகப் போராடுவோம்.
* பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்படாத ஒற்றையாட்சி அரசு முறையில் பிரிவினையே தீர்வு என முழங்குவோம்!
* ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு குறித்து கருத்தறிய வடக்கு கிழக்கு தமிழர்களிடையே பொது ஜன வாக்கெடுப்பு நடத்தக் கோருவோம்!

மாவீரன் திலீபன் நினைவாக!
* விடுதலைப் போரைக் கருவறுத்த விஸ்தரிப்புவாத இந்திய அரசுக்குப் பதில் சொல்வோம்!
* இலங்கையை அடிமைப்படுத்திய,இந்திய இலங்கை ஒப்பந்தத்தை கிழித்தெறியப் போராடுவோம்!
* இலங்கையில் இந்தியாவின் தலையீட்டை முறியடிக்க 'இந்திய எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைக்' கட்டியமைப்போம்!
* இந்து சமுத்திரப் பிராந்தியத்தை, ஏகாதிபத்திய உலக மறு பங்கீட்டிற்கான போர்க்களமாக மாற்றுவதை தடுத்து நிறுத்துவோம்.!
* அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாயாக இருந்து இலங்கை மக்களை 'இந்திய சீன மேலாதிக்கப் போட்டிக்குள் இழுத்து விடுவதை எதிர்ப்போம்!
* நவீன காலனியாதிக்கத்தின் தாசன் மன் மோகன் சிங், 'அபிவிருத்தி' என்ற பெயரால் உலகமயமாக்கல் கொள்கையை இலங்கை மக்கள் மீது திணிப்பதை எதிர்ப்போம்!
முத்துக்குமாரன் மற்றும் தீயில் கருகிய 16 தமிழக இளைஞர்கள் தியாகத்தின் நினைவாக!
* 'இன மானம்' 'தமிழ் வீரம்', பிரபாகரன் புகழ் பாடி, தமிழக மக்களை ஏமாற்றி இந்திய விஸ்தரிப்புவாதத்தை தாங்கிப்பிடிக்கும், சமரசவாத, சீர்குலைவுவாத நெடுமாறன், வை கோ, சீமான் கும்பலைத் தனிமைப் படுத்துவோம்.
* காங்கிரஸ், பாரதிய ஜனதா, போலிக் கொம்யூனிஸ்ற் கும்பல்களின் அதிகாரத்தின் கீழ் நசுக்கப்படும் இந்திய தேசிய இனங்களுடன் ஒன்றுபடுவோம்!
* காஸ்மீர் தேசத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்போம்
* ஆந்திர பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகவும், அவர் வாழ் நிலத்தின் வளங்களைக் காப்பதற்காகவும் போராடும் மா ஓ
இஸ்டுக்களுக்கெதிராக மன் மோகன் கும்பல் தொடுத்துள்ள பச்சை வேட்டைப் பயங்கரத்தை எதிர்ப்போம்!
* தமிழகத்தில் போல்சுவிக்குகளுடனும், மக்கள் ஜனநாயக இயக்கங்களுடன் ஐக்கியப்படுவோம்!

மாவீராங்கனை மாலதி நினைவாக!
* ஏகாதிபத்திய உலக மறுபங்கீட்டுப் பிணக்குகளுக்கு பஞ்சாயத்து வழங்கும் ஐ.நா.மன்றத்தில் ஈழதேசிய ஒடுக்குமுறைக்கு நீதி கிடைக்காது என்பதை அறிவோம்!
* ஏகாதிபத்தியம் தேசியத்தின் எதிரி! புலம்பெயர் நாடுகளில் அரசுகளை நோக்கியல்ல மக்களை நோக்கி அரசியல் பிரச்சாரம் செய்வோம்.
* ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்காத் துருப்புக்களை வெளியேற்றப் போராடும் அதேவேளையில், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பாலஸ்தீனத்திலும் இருந்து அந்நிய ஆக்கிரமிப்புப் படைகளை வெளியேற்றவும் கோருவோம்!
* தமிழீழ யுத்தக்குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தப் போராடும் அதேவேளையில்,அமெரிக்க,பிரித்தானிய,இஸ்ரேலிய, இந்திய யுத்தக்குற்றவாளிகளையும் கூண்டில் நிறுத்தப்போராடுவோம்.
* மாவீரர்களை நினைவு கொள்ளும் வேளையில், இன்னும் மாளாத வீரர்களை பக்ச பாசிசத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப் போராடுவோம்!
* புலம்பெயர் நாடுகளில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்போம்! அவற்றை புதிய ஈழ விடுதலைக்கான புரட்சிப்பள்ளிகளாய் மாற்றுவோம்!

மாவீரர்கள் நமது அரசியல் புரட்சியின் பொக்கிசங்கள், அவர்கள் பெயரால் கேளிக்கைகள் நடத்துவதைத் தவிர்ப்போம்!

மாவீரர்கள் நமது தாயக விடுதலைக்காக மரித்த போர்வீரர்கள்!

அவர்கள் பெயரால் நாடுகடந்த அரசாங்கம் அமைக்கும் போலிகளை இனங்காண்போம்!

நாடுகடந்த அரசாங்கம் நோக்கி ஈழத்தமிழரை வழி நடத்தும் கேடுகெட்ட திராவிடத் துரோகிகளை புறந்தள்ளுவோம்!

* மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!

மாவீரர் கனவு நனவாகட்டும்!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்! இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!
புதிய ஈழப் புரட்சியாளர்கள்