Friday, 4 April 2025

ஈழப்படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!

 


ஆனந்தபுரத்துக்கு திட்டம் வகுத்த ஈழப்படுகொலைப் பாசிச மோடியே திரும்பிப் போ!


சொல்லில் சோசலிசமும் செயலில் பாசிசமுமான,

சமூக பாசிச அனுரா ஆட்சியே இந்திய அரசுக்கு அடிபணியாதே!

இதற்கு முந்திய எல்லா ஆட்சியாளர்களும் இணங்க மறுத்த,

உலக மறுபங்கீட்டு இராணுவ ஒப்பந்தத்திற்கு உடன்படாதே!

தேசிய ஈழப்பிரச்சனையையும், பொருளாதார வங்குரோத்து நிலையையும் பயன்படுத்தி இலங்கையை உலகமறுபங்கீட்டு யுத்தத்தில், இந்திய இராணுவக் காலனியாக்க ஒப்பந்தம் செய்ய வந்திருக்கும்,

பாசிச இந்திய மோடியே, இலங்கையில் கால்பதியாதே, திரும்பிப் போ!

இந்திய  இலங்கை ஆக்கிரமிப்பு அரசியல் ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான சிங்களப் புதல்வர்களை  பலிகொடுத்துவிட்டு, இன்று திரை மறைவில் ஆக்கிரமிப்பு இராணுவ ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும், 

ஜே.வி.பி கும்பலின், தேசத்துரோகத்தை முறியடிக்க, இலங்கையராய் 

ஒரணி திரள்வோம்!

முள்ளிவாய்க்கால் முடிந்து 15 ஆண்டுகள் `தமிழ்த் தேசியம்` என்கிற பெயரில் ஈழப்புரட்சிக்கு குழி பறித்த,

இனத்துவ இந்தியக் கைக்கூலித் தமிழ்க் கும்பலே, இலங்கை இணைக்கப்படாத இந்திய மாநிலமாக  துணைபோகாதே!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

Eelam New Bolsheviks (ENB)

04-04-2025

Wednesday, 26 February 2025

ஐ.நா காவடி- புதிய ஈழப் புரட்சியாளர்கள் அறிக்கை

ஏகாதிபத்திய தாச ஐ.நா.பாதையை நிராகரிப்போம்!

ஜனநாயகத் திட்டத்தில் ஈழப்புரட்சியை முன்னெடுப்போம்!!

டுக்கும் சிங்கள தேசத்தின் ஆளும் கும்பல்கள் 30 ஆண்டுகளாக தொடுத்துவந்த ஈழப்போரை, ஐ.நா வில் பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து நாடுகளின் ஆதரவோடும், தலைமை நாடுகளின் இராணுவ உதவியோடும், ஐ.நா வின் ராஜதந்திர பக்கபலத்தோடும் முள்ளிவாய்க்கால்ப் பிரளயம் மூலம் மே 18 2009 இல், நிறுத்தியது.

எந்த ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க, சீனத் தலையீட்டு, அமெரிக்க உலக மறு பங்கீட்டு நலன்களுக்காக இத் தேசியப் படுகொலைக்கு ஐ.நா.துணை போனதோ-குருதி உறையுமுன்னமே, பிணம் தின்ற நாய்களின் கடைவாயில் நிணம் ஒட்டிக்கொண்டிருந்த போதே அந்த மயானத்தைப் பார்வையிட்ட ஐ.நா.தலைவர் பான்கி மூன் அங்கு கொல்லப்பட்டவர்கள் ஆக பத்தாயிரம் பேரே என அறிக்கையிட்டு அதை அதிகார பூர்வ சர்வதேச சமூக வெளியீடாக மாற்றினாரோ, அவரும் அந்த சபையும்- அதே கூட்டு நலன்களின் பாற்பட்டு அத் தேசியப் படுகொலைக்கு -`இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்`- என (பெயர் சூட்டின) வரையறை செய்தன.

அது முதல், இந்த வரையறை உலக நியமம் ஆகி, ஊடகப் பிசாசுகளால் பரப்பப்படுவதான உண்மை  என்றாகிவிட்டது!

இவ்வாறே முள்ளிவாய்க்காலைத் தொடர்ந்து ஈழ தேசிய விடுதலைப் புரட்சி இயக்கத்துக்கு வடிகால் அமைத்து, முள்ளிவாய்க்கால்ப் புரட்சிக்கனலை நீர்த்துப் போகச் செய்து, நிர்மூலமாக்குவதற்கான உபாயமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தேசியம் புறந்தள்ளப்பட்டு `மனிதம்` உயர்த்திப் பிடிக்கப்படுவது உலகளாவிய போக்காக மாறிவிட்டது.

அரசியல் அதிகாரம் சார்ந்த அனைத்து வர்க்கப் போராட்டங்களும் மனித உரிமைப் பிரச்சனைகளாக மகுடம் தரித்துக் கொண்டுள்ளன.புரட்சி வெறும் சீர் திருத்தமாக மாற்றப்பட்டுள்ளது.இது ஏகாதிபத்திய கோட்பாடும், திட்டமும் ஆகும்.இதைச் செயலாக்கும் வாகனங்களாகவே ஐ.நா.வின் இலட்சோபம் NGO படைகள் இயங்குகின்றன. 

இதனடிப்படையில் இந்த மனித உரிமைத் திருவிழாவுக்கு அரோகராப் போட, தேசியப் புரட்சியின் எதிரிகள், எகாதிபத்திய தாசர்கள் ஓரணி சேர்ந்தது தர்க்க ரீதியானதே.

அது முதல், 2025-2009 = 16 ஆண்டுகள்,வருடா வருடம் ஐ.நா சபைக்கு மனித உரிமை விடாய் எடுக்கும்போது, உள்ளக வெளியக இனத்துவக் கும்பல்கள் காவடி எடுத்துவருகின்றன.

மெழுகு வர்த்திப் போராட்டங்கள் நடத்துகின்றன. சந்து பொந்துகளில் உந்துருளி ஓடுகின்றன!

விசித்திரமாக இந்த வருடமும்; எந்த நியமும் இன்றி எல்லா நியமங்களையும் மீறி இஸ்ரேல் நடத்திக்கொண்டிக்கும் பாலஸ்தீன தேசிய நிர்மூலத்துக்கு எதிரான தீர்மானங்களை, ஒருவர் மாறி ஒருவர் எதிர்த்து வாக்களித்து முறியடித்துக் கொண்டு, மறுபுறம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு அனைவரும் ஏகமனதாக வாக்களித்து, ஐ.நா.வின் ஏகாதிபத்திய சாரத்தை உலக உழைக்கும் மக்களுக்கு அம்பலமாக்கி ஐ.நா நிர்வாணமாக நின்ற - இந்த வருடமும் வெட்கம் மானம் சூடு சொரணை இன்றி  இந்த மனித உரிமைத் திருவிழா அரங்கேறி வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடைய முன்னின்று போராடும் ஈழத் தாய்மார்களின் கூட்டிற்குள் புகுந்து அவர்களது கைகளில் அமெரிக்க,ஐரோப்பியன் யூனியன் கொடிகளைத் திணித்த கொழும்புத் தரகன் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இன்னும்-பாலஸ்தீன படுகொலைக்குப் பின்னும் அந்தக் கொடிகளைத் திரும்பப் பெறவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டடையும் போராட்டம் ஈழ தேசத்தின் ஆன்மாவை உலுக்கும் தேசியப் பிரச்சனை பற்றியதாகும். யாரை எதிர்த்து யாரை அணி சேர்த்து இப்போராட்டத்தை நடத்தவேண்டும் என்கிற ஜீவாதாரமான பிரச்சனையில் சந்தர்ப்பவாத பொன்னன் கட்சியின் தவறான வழி காட்டுதல்தான் மூவாயிரம் நாட்களாகியும் அந்தப் போராட்டம் ஒரு வெகு ஜன இயக்கமாக மாறாததற்கு காரணம் ஆகும். இவ்வாறு தான் இச் சைக்கிள் கட்சி மாணவர்களையும் திசை திருப்பி வருகின்றது.

வழக்கம் போல இந்த ஆண்டும் இத்திருவிழாவின் விவாதப் பொருள் உள்ளகமா? வெளியகமா? என்பது தான்!

ஒரு வேறுபாடு என்னவென்றால் இந்தத் தடவை ஒடுக்கும் போர்க்குற்ற சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மாறியிருக்கின்றார்கள்.

நேரடியாக அரசியல் அதிகாரத்தைக் கையில் ஏந்தி யுத்தத்தை நடத்தியவர்கள் அல்லாமல், அவர்களுக்கு பக்க பலமாக, மறைமுகமாக, தத்துவார்த்த ரீதியாக போரை ஆதரித்து பிரச்சாரம் செய்து, படைக்கு ஆட் சேர்த்து, பதுங்கு குழிகள் வெட்டிய  துணைக் குற்றவாளிகளான ஜே.வி.கும்பல் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கின்றது.ஆட்சி அமைத்திருக்கின்றது.

இன்று (25) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது அமர்வில் உரையாற்றிய இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்: 

``எமது குறிக்கோள் காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம், அரசியலமைப்பு சட்ட வரம்புக்குள், உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகமான மற்றும் வலுவான நிலைக்கு கொண்டுவருவதாகும்". எனக் கூறியுள்ளார்.

இந்த அலுவல் அகங்கள் அனைத்தும் இவை ஆரம்பிக்கப்பட்ட ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களால் முற்று முழுதாக நிராகரிக்கப்பட்டவை. மேலும் இந்த 16 ஆண்டுகளில் அவை எதையும் சாதிக்கவில்லை. இவை அனைத்தும் சிங்களத்தின் (தரகுமுதலாளிய, பெருந் தேசியவாத,பெளத்த மதவாத அரசின்) அழுக்கு முகங்களே ஆகும். இதை வலுப்படுத்துவது அநீதியை வலுப்படுத்தவே உதவும்.

விஜித ஹேரத் ``அரசியலமைப்பு சட்ட வரம்பு'` பற்றிப் பேசுகின்றார்.

இலங்கையின் முதல் ஆங்கிலேய காலனித்துவ சோல்பரி அரசியல்யாப்பு பொன்னம்பல `சேர்-Sir' களும், சேன-நாயக்கர்களும் ஏற்றுக் கொண்ட ஒப்பந்தம் ஆகும்.

1972, 1978 யாப்புகள் ஈழ தேசத்தின் அங்கீகாரம் பெற்றவையல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக 1978 யாப்பின் 6வது திருத்தம் ஈழ தேசத்தின் சுய நிர்ணய உரிமையை மறுக்கின்றது. பிரிந்து செல்லும் உரிமையை தடை செய்து சட்டவிரோதமாக்கியுள்ளது.

இதன் விளைவாகவே `ஈழ அரசியல்`  வன்முறை வடிவத்தை எடுத்தது. உள் நாட்டு யுத்தமாக வளர்ந்தது.

இந்த யுத்தத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு, இதே அரசியலமைப்பு எப்படி நீதி வழங்கும்?

ஆக இறுதியாக, அதிகார பீடத்தில் அமர்ந்ததும் ஜே.வி.கும்பல் காற்றில் பறக்கவிட்ட தேர்தல் வாக்குறுதிகளின் பட்டியலில் ` போர்க்குற்ற நீதி` ப்பிரச்சனையும் இணைந்துவிட்டது.

இந்நிலையில் ஈழதேசிய விடுதலைப் புரட்சிக் கனலைத்  தணியவைக்கும், ஏகாதிபத்திய, இந்திய விரிவாதிக்க, சீனத் தலையீட்டு, அமெரிக்க உலக மறு பங்கீட்டு நலன்களை, சக்திகளை எதிர்த்து, தேசிய ஜனநாயகத் திட்டத்தில் ஈழ விடுதலைப் புரட்சித் தீயை அணையவிடாது பிரகாசிக்கச் செய்வதே எமது புரட்சிகர அரசியல் கடமையாகும்.

அதற்காக அணிதிரளுமாறு இளைய தலைமுறையினருக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை எம் தந்தையர் நாடு! ஈழதேசம் எம் தாய் வீடு!!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே!

புதிய ஈழப் புரட்சியாளர்கள்.

ஈழம்                                                                         26-02-2025

தொடர்புக்கு: eelamnewsbulletin @gmail.com

Monday, 10 February 2025

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

 

நாடாளமன்றம் சட்டம் இயற்றும்,  போலிச் சுதந்திரம் நாட்டை விற்கும்போதும் போதும் எழுபத்தேழாண்டுகள்!

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! 

உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

பெப்ரவரி 4, 2025 இல்  77 ஆண்டு போலிச் சுதந்திரத்துக்கு விழா எடுக்க அனுராவின் டொலர் ஆட்சி ஆயத்தமாகி வருகின்றது. System Change என்று கூறி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது JVP. ஒரு புறம் போலிச் சுதந்திரத்துக்கு விழா எடுத்துக் கொண்டு, மறு புறம், அந்த தொடர் காலனிய அடிமைத்தனத்தை, சுரண்டலை, ஆதிக்கத்தை நிலை நிறுத்திப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அரசுமுறையை (System) மாற்றப் போவதாக JVP - அனுரா ஆட்சி கூறுவது கடைந்தெடுத்த அயோக்கித்தனமா இல்லையா?

அறக(ga)லயவும் சுதந்திரமும்:

தன்னியல்பான அறக(ga)லய கிளர்ச்சியின் உணர்ச்சியை அறுவடை செய்து 50% வாக்குகள் பெற்று, நாடாளமன்ற ஜனநாயகத்தின் புண்ணியத்தில் அறுதிப் பெரும்பான்மை ஆட்சி அமைத்தது அனுரா-சில்வா ஜே.வி.பி கும்பல்.

தன்னியல்பான அறக(ga)லய கிளர்ச்சி ( 2022 மார்ச்), அது தானே பிரகடனப்படுத்தியவாறு 75 ஆண்டுகால ஆட்சியின்  தொடர் துன்பங்களின்  தவிர்க்கவியலாத விளைவாகும்.

முதலாவதாக: இந்த 75 ஆண்டுகால ஆட்சியின் சுமார் 40 ஆண்டுகள், இருந்த இந்த அமைப்பு முறையில் தேர்தலில் பங்கேற்று வந்த கட்சி ஜே.வி.பி.1979 இல் கொழும்பு மாநகர சபை, 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை, 1982 இல் ஜனாதிபதித் தேர்தல், 1983 பொதுத் தேர்தல் பல ஆண்டுக்கு ஜே.ஆர் ஆட்சியால் பின்போடப்பட்டதால் பங்கு கொள்ள  இயலவில்லை.1994 பொது தேர்தலில் பங்கு கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா வெற்றி பெற தன்னை அர்ப்பணம் செய்தது. 

2002 இலிருந்து இந்த அமைப்பு முறையின் காவலராக இருந்த ஆளும் கும்பலுடன், அந்த ஆட்சியாளர்களோடு அவர்களது ஆட்சிகளோடு,  கூடிக் குலாவி ஆட்சி சுகம் அனுபவித்து வந்த கட்சி ஜே.வி.பி.

இரண்டாவதாக: இலங்கை அரசியல் அதிகாரத்தின் அசைக்க இயலாத சமூகத் தூணான பெளத்த மத பீட சமூக சக்திகளின் அரசியல் குரலாக, போர் வாளாக இருந்த, இருந்துவருகின்ற கட்சி ஜே.வி.பி.

மூன்றாவதாக: இந்த 75 ஆண்டுகால ஆட்சி என்பது ஈழதேசிய ஒடுக்கு முறையில் தங்கியிருந்து, அதன் மீது தேசிய ஒடுக்குமுறை அரசு ஒன்றைக் கட்டியமைத்து, அதனை பாசிச மயப்படுத்திய காலமாகும். இந்தக் கட்டிடத்துக்கு மண் சுமந்த கட்சி ஜே.வி.பி. குறிப்பாக 2002 பேச்சுவார்த்தைக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை ஈழ தேசிய ஒடுக்குமுறை யுத்தத்தைத் தொடர-பேச்சுவார்த்தையை முறியடிக்க- மூர்க்க வெறியோடு முன்னின்று உழைத்த கட்சி ஜே.வி.பி

``ரணில் பயங்கரவாதிகளுக்கு உதவுகின்றார்`` என்ற கண்டுபிடிப்பை சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து யுத்தத்துக்கு ஆதரவு திரட்டிய இழி செயலை தனது வரலாற்றுப் பெருமையாக இன்றும் கூறி வருகின்ற கட்சி ஜே.வி.பி. 

2022-1965 தனது 57 ஆண்டு வாழ்க்கையில் முதல் 17 ஆண்டுகள் ஜே.வி.பி தன்னை ஒரு அரசியல் கட்சியாக கட்டியமைக்க செலவிட்டது. எஞ்சிய 40 ஆண்டுகளும் இந்த அமைப்பு முறையில் தான் ஜே.வி.பி அரசியல் நடத்தியது.

1972-1987 கிளர்ச்சிகளின் ஊடாக அரசிதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற கனவு முயற்சிகளும் இந்த அமைப்பு முறையை அங்கீகரித்தே அமைந்திருந்தன. 

இரண்டு கேள்விகள்;

1) ஆக 2022 இல் ஜே.வி.பி இந்த `அமைப்பு முறை மாற்றம்- System Change` என்கிற நிலைப்பாட்டிற்கு எப்படி வந்தது?

இது களவாணி ஜே.வி.பி அறக(ga)லய இயக்கத்திடமிருந்து களவாடியது. 

அறக(ga)லய இயக்கம் எதையெல்லாம் எதிர்த்ததோ அவை அனைத்தினதும்  பங்காளிக் கட்சியாக இருந்தது  ஜே.வி.பி.

2) அப்போ எப்படி ஜே.வி.பி அற(ga)லயவுக்கு தலைமை தாங்கியது?

மேலெழுந்தவாரியான பார்வைக்கு அபத்தமாகத் தோன்றக்கூடிய இந்த முரண் உண்மை உலகமெங்கும் நிகழ்ந்தவண்ணமேயுள்ளது.

இதைத் தொடர்வதற்கு `நாடாளமன்ற ஜனநாயகம்` ஆளும் வர்க்கங்களுக்கு மிகச் சிறந்த சாதனமாக உள்ளது.

இதன் மர்மத்தை விளக்கி லெனின் பின்வருமாறு கூறினார்: 

'' நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவித சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டுகொள்ள மக்கள் தெரிந்துகொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் காட்டு மிராண்டித்தனமாகவும் அழுகிப் போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஒரு ஆளும்வர்க்கத்தின் சக்தியைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், அபிவிருத்திகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாளாக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன?

பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைச் சிருக்ஷ்டிக்கவும் திறன் பெற்றவையும், சமுதாயத்தில் தாங்கள் வகிக்கும் ஸ்தானத்தின் காரணமாக அப்படிச் சிருக்ஷ்டித்துக் தீரவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறவையுமான சக்திகளை, நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்துக்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு ஞானமூட்டிப் போராட்டத்துக்கு ஸ்தாபன ரீதியாகத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ''

அற(ga)லய ஒரு தன்னியல்பான கிளர்ச்சியென்பதால்  அது தானே தனது விடுதலைக்கு , விமோசனத்துக்கு எதிரான வர்க்கத்தின் நலனை சுமந்து கொண்டிருந்தது. ஜே.வி.பி வசதியாக இதற்குள் ஒழிந்து கொண்டது.

இதனால் எந்த வரையறையும் செய்யப்படாத சூக்குமான சூத்திரங்களைக் கொண்டு-``அமைப்பு மாற்றம்``, ``சுத்தமான சிறீ லங்கா`` என்றவாறு- மக்களின் உணர்வுக்கு வடிகால் அமைக்க முடிந்தது. இத்தைகைய ஒரு தலைமையின் கீழான தன்னியல்பான கிளர்ச்சியை அமெரிக்க இந்திய அந்நிய சக்திகள் `கோத்தா ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துக்கு-ஜே.வி.பி உடன் செய்து கொண்ட எழுதப்படாத ஒப்பந்தத்துக்கு அமைய- பயன்படுத்திக் கொண்டனர். இராணுவ அடக்குமுறையைச் சந்திக்காமலே அரக்களையவினரால் கோத்தா தடாகத்தில் நீராட முடிந்தது. அவர்கள் நீராடிய அழகை உலகமே பார்த்து வியந்தது!   

இவ்வாறாகத்தானே ஜே.வி.பி அந்நிய ஆதரவுடன் நடத்தி முடித்த  அற(ga)லய  ``புரட்சி``, பொல்லை ரணிலிடம் கொடுத்து, தேர்தல் ஒன்றை நடத்தி அநுராவின் கைக்கு மாற்றிக்கொண்டது.

அநுரா தேர்தலில் வெல்வார் என்று முதன் முதலில் மோடி மாந்திரீகம் கண்டுபிடித்து, அரசமரியாதை விருந்தளித்து `விபரங்களை` சொல்லி அனுப்பி தேர்தலில் வெல்ல வைத்தது.

களத்தில் பலர் குதித்து ஜனநாயகம் களைகட்டி இருந்தபோதும் ஆடுகளம் அநுரா வெற்றிக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்தது.

அநுரா அரியணை ஏறினார்.

எவ்வளவுதான் அற(ga)லய ஒரு தன்னியல்பான கிளர்ச்சியாக இருந்த போதும் அது நெடுங்கால வெஞ்சினத்தின் வெளிப்பாடாக இருந்தது.

அதிலிருந்து ( இயல்பாகவே பருண்மையான ஆய்வில், தத்துவ பரிசீலனையில், சர்வாங்க வர்க்கப் போராட்டம் தழுவிய வகையில், வகுக்கப்பட்ட கொள்கைகள், கோட்பாடுகள், முழக்கங்கள் என அரசியல் போர்த்தந்திர வழியில் அமைந்தவையாக இல்லாத போதும்) வெளிப்பட்ட ஒரு பொது உணர்வு புரட்சியின் அடி நாதமாகும்.

அதை அவர்கள் வரையறை செய்யாமல் `அமைப்பு முறை மாற்றம்- System Change' என்று அழைத்தார்கள், கூடவே

1) கோத்தா மட்டுமல்ல `225 Go Home`என்றார்கள்; கைத்தடி ரணிலுக்கு மாறிய போது `Ranil Go Home' என்றும் பரிதாபமாகச் சொன்னார்கள்.ரணில் ஆட்சி சத்தம் சந்தடி இல்லாமல் இயக்கத்தை நசுக்கியது.

2) கோத்தாவின் அரண்மனைக்குள் புகுந்த போது இன்று தான் எமக்கு ``உண்மையான சுதந்திரம் கிடைத்தது `` என்று கூறி தேசியக் கொடியை முத்தமிட்டார்கள்;

3) மக்களுக்கு விசுவாசமானவர்கள், அறிவு மிகுந்தவர்கள், திருடர்கள் அல்லாத நல்லவர்களை ஆட்சிக்குக் கொண்டு வர வேண்டும் என்றார்கள்.

4) இலங்கையருக்குள் உருவாக்கப்பட்டிருந்த பாகுபாட்டை புறந்தள்ளி இருந்தார்கள்.

மறுபுறம் சர்வதேசக் காரணிகள் என்ற வகையில்

1) அமெரிக்கா திருமலைத் துறைமுகத்தை  அபகரிக்க இடமளிக்க மறுத்தது, 

2) சீன ஆதரவுப் பாதையை எடுத்தது, 

என்பன அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும், `கோத்தா ஆட்சிக் கவிழ்ப்புக்கான` பொது அடிப்படையை வழங்கின.

உள்நாட்டுக் கிளர்ச்சியின் அரசியல் பலவீனம், புறவயமாக சாதகமாக அமைந்த கோத்தா ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் இறுதியாக  அநுரா-சில்வா ஆட்சி அமையக் காரணமாய் அமைந்தன.

காலை முரசு 23-01-2025


அனுரா ஜனாதிபதியானார், நாடாளமன்றம் கூடி அரசாங்கம் அமைக்கப்பட்டுவிட்டது, அமைச்சுக்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுவிட்டன, கணிசமான அளவுக்கு படைத்தரப்பும், உளவுப்பிரிவும் சுத்தம் செய்யப்பட்டுவிட்டன, முதலாவது வரவு செலவுத் திட்ட முனைவுகள் விவாதத்துக்கு வந்துவிட்டன, இரண்டு முக்கிய வெளிநாட்டு விவகாரம் சார்ந்த அரசு முறைப் பயணங்கள் முடிந்து விட்டன, IMF வலை விரித்தபடி உள்ளது, பங்குச் சந்தை தலை தெறிக்க ஓடுகின்றது;

அந்த உண்மையான சுதந்திரம்?

ஜே.வி.பி மந்திரஜால இயக்கம் அல்ல என்பதால் மக்கள் கால அவகாசம் அளித்து காத்திருக்கின்றனர்.கோரிக்கையைக் கைவிடவில்லை.மறக்கவும் இல்லை, மறக்கப் போவதும் இல்லை. போதுமான காலம் முடிகிற போது சுதந்திரம் கிடைத்திருக்குமா? கிடைக்குமா??

இதற்கு விடைகாண ஏற்கெனவே இலங்கைக்கு கிடைத்த சுதந்திரத்தை அதன் தன்மையை ஆராய்ந்து கண்டறிய வேண்டும்.

போலிச் சுதந்திரமும் வரலாற்றுப் பொய்மையும். 

1948 இல் இலங்கைக்கு வழங்கப்பட்ட  சுதந்திரம் ஒரு தனி நிகழ்வு அல்ல.அது இலங்கை என்கிற தனி ஒரு நாடு மட்டும் சுதந்திரம் பெற்றுக் கொண்ட கதை அல்ல.

அது பிரபுத்துவ மன்னராட்சி சாம்ராஜ்ய காலனித்துவம், முதலாளித்துவ உதய கால காலனித்துவம், ஏகாதிபத்திய காலனித்துவம் என குறைந்தது சுமார் 500 ஆண்டு வரலாறு கொண்ட  காலனித்துவ அமைப்பு முறையின் தகர்வின் விளைவாக விளைந்தது ஆகும்.

இந்த அமைப்பு முறையின் தகர்வின் விளைவாக அது கட்டியாண்ட அத்தனை காலனி நாடுகளும் ஏறத்தாழ ஏக காலத்தில் நேரடிக் காலனியாதிக்கத்தில் இருந்து விடுபட்டன.

எல்லாக் காலனித்துவ நாடுகளும் தமது காலனிகளை  நேரடியாக ஆட்சி செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு காலனிகளை தளர விட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

காலனித்துவ ஆட்சியின் கொடுங்கோன்மை, அதை எதிர்த்து காலனி நாடுகள் அனைத்திலும் சினங்கொண்டெழுந்த மக்களின், குறிப்பாக விவசாயிகளின் கிளர்ச்சிகள் கலகங்கள், மார்க்சியத்தின் பரவல், ரசிய சீனப் புரட்சிகளின் தாக்கம்,இரண்டு உலகப் போர்கள், பாசிசத்தின் விழ்ச்சி போன்ற வரலாற்று வர்க்கப் போராட்ட நிகழ்வுகள் இந்த நிர்ப்பந்தத்தை உருவாக்கின.

இதன் விளைவாக, போர்த்துக்கல்,ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்சு, பெரிய பிரித்தானியா (ஆங்கிலேயர்) ஆகிய காலனித்துவ ஆட்சியாளர்கள் ஆசிய, ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க காலனிகளில் இருந்து முன்கதவால் வெளியேறினர்.

இந்த வரலாற்று நிகழ்வுதான் `சுதந்திரம்` என நடைமுறையிலும்  காலனித்துவ நீக்கம்` என கோட்பாட்டு வழியிலும் பெயர் சூட்டப்பட்டு கொண்டாடப்பட்டு வருகின்றது. 

காலனி நாடுகளில் இருந்து அவர்கள் அடைந்த ஆதாயத்தை, அடித்த கொள்ளைகளை, தூர நோக்கில் கட்டியெழுப்பிய கோட்டை கொத்தளங்களை தட்டில் வைத்து தமக்கு வழங்கி விட்டுச் சென்றதாக எமக்குச் சொல்லப்பட்டு வருகின்றது.

பள்ளிப் பாடப் புத்தகங்களில் கல்வி என்று போதிக்கப்பட்டுவருகின்றது.

இதன் விளைவாக  உருவான ஒரு அடிமை அறிவாளிக் கூட்டம்  இந்த அதிகாரக் கைமாற்றத்தை சுதந்திரம் என்று போற்றித் துதித்து வாதிட்டு வருகின்றது.

மாபெரும் விவாதம், `இவ்வாறு முன்கதவால் சென்றவர்கள் பின்கதவால் மீண்டும் உள் நுழைந்து காலனியாதிக்கத்தை தொடர்கின்றனர்` என வரையறை செய்தது.

இது முதல், ஏகாதிபத்திய தாச `சுதந்திர` முகாமும், ஏகாதிபத்திய விரோத தேசிய முகாமும் ஆக வர்க்கப் போராட்டம் முன்னேறி வருகின்றது.

இவ்வாறு சுதந்திரம் அடைந்த நாடுகளில் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொண்ட வர்க்கங்களுடன் இணைந்து தொடர் காலனிய பொருளாதரச் சுரண்டலுக்கு, அரசியல் ஆதிக்கத்துக்கு உறிஞ்சு குழலாக இருக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அரசுகள் இயல்பாகவே ஜனநாயகமற்றவையாக இருந்து தீர வேண்டியது அவசியமாகும்.

இந்த ஜனநாயகமற்ற அரசுமுறை இந்நாடுகளில் எல்லாம் தேசியப் பிரச்சனையைக் கூர்மைப்படுத்தின.இதனால்தன் தேசியப் பிரச்சனை கொதித்துக் கொந்தளிக்காத, ஒரு போலிச் சுதந்திர நாட்டைக்கூட உலகின் எந்த மூலையிலும் காணமுடியாது.  

ஏகாதிபத்திய தாச `சுதந்திரம்` போலியும், வரலாற்றுப் பொய்மையுமாகும் என்பதை கடந்த நூற்றாண்டும் சமகால வரலாறும் ஐயம் திரிபற நிரூபித்துள்ளன.

போலிச் சுதந்திரமும் இலங்கையின் தேசியப் பிரச்சனையும்:

போலிச் சுதந்திர நாடுகளில் ஜனநாயகமற்ற அரசுகளை நிறுவிய போக்கு மிக நீண்டகாலம் கொண்டதும், நேரடிக் காலனிய ஆட்சியின் தொடர் விளைவாக ஏற்படுத்தப்பட்டதும் (இது ஒன்றே போதும் இது சுதந்திரம் அல்ல என்பதை நிரூபிக்க!),  நாட்டுக்கு நாடு தனித்தன்மை வாய்ந்ததும் ஆகும். 

இலங்கையின் தேசியப் பிரச்சனையின் இரண்டு அம்சங்கள்:

இலங்கையில் காலனித்துவ ஆதிக்கம் தொடர்வதின் விளைவாக முழு நாடும் தொடர் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறவேண்டியது ஒரு அம்சம்.

இலங்கையில் தொடர் காலனிய ஆதிக்கத்துக்கான ஜனநாயகமற்ற அரசுமுறை ஈழதேசிய ஒடுக்குமுறையின் மீது கட்டப்பட்டு இருப்பதனால், ஈழ தேசம் விடுதலை அடைவது-சுய நிர்ணய உரிமை அரசியல் அமைப்பிலும், நடைமுறையிலும் அங்கீகரிக்கப்படுவது  இரண்டாம் அம்சமாகும்.

இதனால் ஈழ தேசிய ஒடுக்குமுறைக்கு முடிவு கட்டும் ஒரு ஜனநாயகத் தீர்வு மட்டும் தான், நிலவும் அரசுமுறையைத் தகர்க்கும். இதன் மூலம் தான் தொடர் காலனிய ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட முடியும்.

எனவே இந்த இரண்டு அம்சங்களிலும், தேசிய சமத்துவமே பிரதானமானதாகும்.

இலங்கையில் 'System Change' என்பது தேசிய ஒடுக்குமுறை அரசை, தேசிய சமத்துவ ஜனநாயகக் குடியரசாக மாற்றுவது தவிர வேறெதுவும் இல்லை. அல்லாத எதுவும் வெறும் பிதற்றலும் பித்தலாட்டமுமே ஆகும்.

அநுரா ஆட்சியின் `சுத்தம்` என்கிற அடுத்த முழக்கம், சுத்தமான அசுத்தமாகும்.

அற(ga)லய இயக்கம் `நாட்டைச் சுத்தப்படுத்துவது என்பதன் பேரால்` என்ன கருதியது என்றால், நாடாளமன்ற தொடர் காலனிய நாடு என்ற ஒரே காரணத்துக்காக ஒரு நாடு, 2022 இல் இலங்கை அடந்திருந்த நிலையை எட்டியிருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. இதற்கு இட்டுச் சென்ற காரணிகளை சுத்தம் செய்யவேண்டுமென்றே கருதினார்கள்.அந்தக் காரணிகள் என்ன என்பதை அவர்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்கள் என்பதைக் கீழே காண்போம்.

JVP என்ன செய்ததென்றால் மீண்டும் அற(ga)லய `சுத்தத்தைக்` கடன் வாங்கி தேர்தல் மேடையில் பேசி வாக்குப் பொறுக்கியது. அதிகாரத்தைக் கைப் பற்றியதும் சுத்திகரிப்பை சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதிலும், அரசாங்கம்,மற்றும் அரசதிகாரிகளை ( ஊழலற்ற, ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடானவர்களாக) சிறந்த சேவகர்களாக மாற்றுவதிலும் செலவிடுகின்றது. மக்களை ஏமாற்ற தெரிந்தெடுத்த சில சில்லறை அதிகார துஸ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை என்கிற பாசாங்கு, உல்லாசப் பயணிகளைக் கவர `டெங்கு ஒழிப்பு பாணி` சுற்றுச் சுகாதாரம் என நாடகமாடி வருகின்றது.

 அற(ga)லய இயக்கம் எதிர்பார்த்த அளவுக்குக் கூட செல்லத் தயாராக இல்லை. வங்குரோத்துக்கு காரணமான குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தவர்கள் மீது கூட அனுரா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. (டொனால் ரம்ப் பாணியில் கோத்தா மீண்டும் ஜனாதிபதி ஆகவும் கூடும்!) நெல் விவசாய-மற்றும் பல-சட்ட விரோத மாபியாக்களுக்கு அஞ்சி அடிபணிந்து ஆட்சி நடத்தி வருகின்றது. நெல்லுக்கு உத்தரவாத விலை  நிர்ணயிக்காமல் மாபியாக்களின் பிடியில் விவசாயிகளைத் தள்ளியுள்ளது. இவர்கள் தான் அனுராவின் ஒளிரும் ஆட்சிக்கு வாக்களித்த பெரும்பான்மையான சமூகப் பிரிவினர்.அனுரா ஆட்சி நெருப்போடு விளையாடுகின்றது!

யுத்தக் கறை சுத்தம் செய்! 

சுத்தம் பற்றிய பிரச்சனை அற(ga)லய இயக்கம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பாரியது, பாரதூரமானது. சுத்தம் செய்வதற்கு முன்னால் அசுத்தத்தை வரையறை செய்யவேண்டும்.அது வளர்ந்த வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும். அறியாத ஒரு பொருளை எவராலும் மாற்ற முடியாது, அதிக பட்சம் முட்டி மோதத்தான் முடியும்!

அரசியலில் அசுத்தம் என்பது அதிகார துஸ்பிரயோகம். அதிகார துஸ்பிரயோகம் சாத்தியம் இல்லையென்றால், சட்டமும் சட்டத்தின் ஆட்சியும் எந்தளவு சுத்தமாக இருக்கின்றதோ அந்தளவுக்கு நாடும் சுத்தமாக இருக்கும். நாடாள மன்ற ஜனநாயகத்தில், அதுவும் திருப்பி அழைக்கும் உரிமை இல்லாத ஜனநாயகத்தில் இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு, ஆனாலும் 2022 இலங்கை நிலைமையை தடுத்திருக்க முடியும்.

அது இலங்கையின் நாடாளமன்ற ஜனநாயகத்தின் கீழ் 77 (ஆம் இன்றுவரை), ஆண்டுகள் இருக்கவில்லை இயலவில்லை.

பல காரணிகள் மத்தியில் அவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்ட ஒரு காரணம், அதுவே அதிகாரத்தைக் கைப்பறுவதற்கு காரணமாக அமைந்தது.

ஏகாதிபத்திய தொடர் காலனிய ஆதிக்கமும் சுரண்டலும் நீடித்தாலும், எந்தளவுக்கு அதிகார துஸ்பிரயோகமும், ஊழலும் அடக்குமுறையும், வறுமையும் தலைவிரித்தாடினாலும். ஈழ தேசிய ஒடுக்கு முறையில் அதிகம் தீவிரமானவர் அதிகாரத்தைக் கைப்பற்றி விடமுடியும். வேறு எதற்கும் அந்த ஆட்சி பொறுப்புக் கூற வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

ஏறத்தாழ முதல் முப்பது ஆண்டுகள் இது பிரதானமாக இரத்தம் சிந்தாமல் நடந்தேறியது, அடுத்த முப்பது ஆண்டுகள் இரத்தம் சிந்தி நடந்தேறியது. யுத்தம் ஓய்ந்த அடுத்த பதினைந்து ஆண்டுகளும் யுத்த வெற்றியே அதிகாரத்தைக் கைப்பற்ற வழி கோலியது.

இவ்வாறு அதிகாரம் கைப்பற்றப்படும் போது அதிகார துஸ்பிரயோகத்தை தடுக்க முடியாது. இப்படித்தான் அடுக்கடுக்காக அசுத்தப் படை நம் நாடு மீது படிந்து யுத்தக் கறையாக வளர்ந்துவிட்டது.

இந்த யுத்தக் கறையை யுத்தத்தின் தீவிர பங்காளியான JVP ஒரு போதும் சுத்தம் செய்யத் தலைப்படாது.

அதிசயமாக ஒருவேளை பகவான் கருணையில் விரும்பினாலும் கூட, அதை இந்த அரசுமுறையின் உள்ளிருந்து, அதனுடைய அரசாங்கத்தில் இருந்து, நாடாளமன்றத்தில் இருந்து செய்ய முடியாது.

``மிளகாய்த் தூள் வீசுகின்ற அளவுக்கு எமது நாடாளமன்றத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்திவிட்டார்கள்`` என்று அங்கலாய்க்கிற அநுரா என்கிற மார்க்சிஸ்ற் இதை எண்ணுவார் என்பது சற்று அதிகமான கற்பனைதான்!

ஆட்சியின் இதுவரையான குறுகிய நாட்களிலும் JVP தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுக்கு நேர் எதிராக செயற்படுவது அப்பட்டமான அதிகார துஸ்பிரயோகமே ஆகும்.இதைத் தொடர்ந்து படிப்படியாக அசுத்தம் வருமே ஒழிய சுத்தம் வராது.

பொய் சொல்லத் தொடங்கி விட்டது. மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என ஜனாதிபதி யாழ்-வல்வெட்டித் துறையில் பச்சைப் பொய் கூறியுள்ளார். இந்தியப் பயணத்தில் மீனவர் பிரச்சனையை `` மனிதாபிமான ரீதியாக`` அணுகுவோம் என்று உடன்பாடு செய்துவிட்டு  பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என்பது கடைந்தெடுத்த அயோக்கித்தனம் தவிர வேறென்ன?

அது என்ன இந்த `` மீனவர் பிரச்சனையை மனிதாபிமான ரீதியாக அணுகுதல்`` என்பது? இந்த வார்த்தைகளை வைத்து இதற்கு ஏதாவது பொருள் காணமுடியுமா? இல்லவே இல்லை. (ஆங்காடிகளில் இருக்கும்; ``உங்கள் பொக்கெற்றுக்களை நிறையுங்கள்``, `` சேமியுங்கள் $$$ `` என்பது போன்றது இது. குறிப்பான அர்த்தம் எதுவுமில்லாத வெற்று ராச தந்திர சொல்லாடல் இது. 

`பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும்` என நாம் இந்தியாவுக்கு ஆலோசனை சொல்லலாமா?

ஆனால் உடன் பாடு என்னவென்றால் இலங்கைக் கடலில் இந்தியர்-தமிழக திராவிடர்- தொழில் செய்வதை தடுக்கக் கூடாது. அது இந்தியாவின் உரிமை. அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான இந்திய அரசின் பதில் நடவடிக்கை இதனையே நிரூபிக்கின்றது.

ஒரு கட்டத்தில் இந்தப் பொய்களைச் சகிக்காமல் மக்கள் மீண்டும் தெருவில் இறங்குவார்கள். அப்போது மக்களை நசுக்க அடக்குமுறை எந்திரம் தயாராக இருக்க வேண்டும், இதற்குத் தான் கால அவகாசம் கோருகின்றது அனுரா ஆட்சி.

கால அவகாசம் அனுராவின் ஆட்சித் தந்திரம்.

எதை நிறைவேற்றுவதற்கும் ஒரு கால நிர்ணயம் உண்டு என்பது எல்லோரும் அறிந்த மிக எளிமையான உண்மையே!

சமஸ்டிக் கட்சி அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் தீர்வுகாண சிங்கள ஆட்சியாளர்களுக்கு 75 ஆண்டுகள் அவகாசம் கொடுத்தது;

இந்தியப் பேரரசு 13வது திருத்தத்தை-முழுமையாக!_நிறைவேற்ற 38+ ஆண்டுகள் அவகாசம் கொடுத்து வருகின்றது;

ஐ.நா.சபை போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூற 16+ ஆண்டுகள் அவகாசம் கொடுத்து வருகின்றது;

இவை எதையும் நிறைவேற்ற கொள்கை அளவில் JVP தயாராக இல்லை.

இது போலத்தான் நாடு தழுவிய பிரச்சனைகளிலும்:

1- IMF பிரச்சனையில் தேர்தல் வாக்குறுதிகளுக்கு எதிராக ரணில் விட்ட இடத்தில் இருந்து அதே திட்டத்தைத் தொடர்கின்றது.

2- புதிய சட்டம் வரும் வரை பயங்கரவாதச் சட்டத்தை நீக்க மாட்டோம் என்கின்றது.இதன் பொருள் என்ன? புதிய சட்டம்  பயங்கரவாதச் சட்டம் போலல்லாது சிறந்த சாதாரண சட்டமாக இருக்குமானால் அதுவரை இது இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இதே போலவே இருக்குமானால் அப்படி ஒரு ``புதிய சட்டம்`` தேவை இல்லை!

அப்போ எதற்கு  திட்டமிடுகின்றது JVP ?, இதை விட மோசமான ஒரு சட்டத்தால் இதைப் பிரதியீடு செய்யப் போகின்றது. இதற்குத் தான் கால அவகாசம் தேவைப்படுகின்றது.

அல்லாமல் கொள்கை அளவில் தயாரில்லாத ஒரு பிரச்சனைக்கு கால அவகாசம் கோருவது கள்ளத் தந்திரம்.

அதாவது கால அவகாசம் கேட்டு மக்களைச் சாந்திப்படுத்துவது. அதே நேரத்தில் மக்கள் விரோதக் கொள்கைகளை நிறைவேற்றுவதும், அடக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துவதும்.

சாந்தியின் எல்லை கடந்து மக்கள் அரசைச் சந்திக்கும் போது அரசின் இயல்பை-புத்தியைக் காட்டுவது அடக்குமுறையை ஏவுவது.

இவ்வாறுதான் கால அவகாசம் என்பதை ஒரு நடைமுறைத் தேவை என்கிற வகையில் அல்லாமல்  ஆட்சித் தந்திரமாக கையாளுகின்றது அனுரா ஆட்சி.

அனுரா ஆட்சி எதிர்கொள்ளும் உலகப் புறச் சூழலும் உள் நாட்டு நிலைமையும்.

உலகப் புறச் சூழல்:

நாம் வாழுவது ஏகாதிபத்தியத்தினதும்,பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தினதும் சகாப்தம் ஆகும்.இது தான் எமது அரசியல் முகவரி, இது தான் உலகின் சர்வாங்கமான விதி, இதனால் தான் உலகம் ஆளப்படுகின்றது.

எனினும் இந்தப் பொதுவான வரையறையும் குறிப்பான நிலைமையும் ஒன்றல்ல. ஏகாதிபத்தியத்தின் இன்றைய குறிப்பான நிலைமையின் குணாம்சங்கள் வருமாறு;

1) அமெரிக்காவின் முதன்மைப் பாத்திரம் நீடிக்கின்ற அதேவேளையில் பல் துருவ உலக ஒழுங்கமைப்பு உருவாகி வருகின்றது.

2) ரசிய, சீன ஏகாதிபத்திய நாடுகளோடு மட்டுமல்ல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோடும் அமெரிக்கா முரண்பாடு கொண்டுள்ளது.

3) முதலாளித்துவம் சந்தித்த நிதி நெருக்கடி, நிதி மூலதன ஏற்றுமதி சந்திக்கும் இடர்கள், நவீன தொழில் நுட்பங்களும் அதன் சர்வவியாபகமான தன்மையும், உலகமயம் உருவாக்கிய ஒரு புல்லுருவி வர்க்கம் இவை அனைத்தினதும் சேர்க்கையான சமூக சக்தி ஒன்று தோன்றியுள்ளது. 

4) நெருக்கடியின் தீவிரம் காரணமாக- ஒழுங்குமுறைகள் தடை என்று கருதுவதன் காரணமாக இச்சக்தி பாசிச சக்தியாக வளர்ந்து வருகின்றது.

5) ரம்ப் எலான் தலைமையிலான அமெரிக்கா இப் போக்குக்கு தலைமையேற்க, ஐரோப்பா எங்கும் நாடாளமன்ற முறைமை ஊடாக பாசிசம் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகின்றது.

6) இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக ஒழுங்கமைப்பு அனைத்தையும் இது தகர்த்துவருகின்றது.புதிய நிதி மூலதன பாசிச உலக ஆதிக்க சக்திக்கு பழைய மேற்கட்டுமானங்கள் பொருந்தாதவை ஆகியதன் விளைவு இது.

7) நாடாளமன்ற ஜனநாயகமும் நடைமுறையில் காலாவதியாகி பாசிசத்துக்கான படிக்கட்டாக மாறிவிட்டது.

8) இவை அனைத்திற்கும் தீர்வுகாண உலக மறு பங்கீடு மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இணைந்துவிட்டது.

9) உலகமறுபங்கீடு என்பது இறுதியில் உலகப் போரிலேயே -உலக ஜனநாயக, சோசலிச பாட்டாளி வர்க்க சர்வாதிகார, தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி இயக்கங்கள் ஒன்றிணைந்து முறியடித்தால் ஒழிய-சென்று முடியும்.

10) ஈராக் போர் முதல் தொடர்ச்சியான போர்களின் இராணுவத் தோல்விகளாலும், பொருளாதாரச் செலவுகளாலும் பலவீனமடைந்துள்ள அமெரிக்கா, தன்னை மீளக் கட்டியெழுப்ப MAGA-Make America Great Again- இயக்கத்தைக் கட்டியமைத்து சமாதான நாடகம் ஆடி வருகின்றது. இக் காலத்தில் உலகப் போருக்கு தன்னை தயார் செய்கின்றது. 

அணிசேர்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்.

ஏகாதிபத்திய உலக ஒழுங்கமைப்பில் ஏற்படும் மேற்கண்ட மாறுதல்கள் - புதிய குணாம்சங்கள் நாடுகளுக்கு இடையேயான உறவுகளையும் மாற்றிவருகின்றன. அனைத்து நாடுகளையும் இவை பாதிக்கின்றபோதும் குறிப்பாக பிராந்திய ஆதிக்க நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை ஆகும்.

அயலவருக்கு முதன்மை அளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.இதனால் இயல்பாகவே நமது முதன்மையான கரிசனைக்கு உரிய நாடு இந்தியா!

இந்திய அமெரிக்க உறவு:

1) உலக மறுபங்கீட்டில் இந்தியா அமெரிக்காவின் யுத்ததந்திரக் கூட்டாளியாக உள்ளது.

2) இதன் நிமித்தம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான, அமெரிக்காவின் நம்பிக்கைத் தளமாக உள்ளது.

3) உலகமய வளர்ச்சிக்கும், கீழை நாடுகளின் தலைமைப் பாத்திரத்துக்கும் அமெரிக்க ஆதரவை பிரதியுபகாரமாக பெற முனைகின்றது.

4) தென்னாசியாசியாவில் இந்தியாவின் விரிவாதிக்க தலைமை நிலை இதற்கு வலுச்சேர்க்கின்றது.(2025-26 வரவு செலவுத்திட்டத்தில் சீத்தா, இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கியுள்ளார்!) 

5) அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழும் ( ரசியா,சீனா தொடர்பான, மற்றும் ) பிரச்சனைகள் பொருளாதார வர்த்தக ரீதியானவை. எல்லா நாடுகளுக்கும் இடையே உள்ளவை போன்று செயல் தந்திர ரீதியானவை. ( ஐரோப்பியன் ஜூனியனில் தலைமைப் பாத்திரம் வகிக்கும் ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே கூட NATO தொடர்பில் முரண்பாடுகள் உண்டு).

6) அமெரிக்க இந்திய உறவின் மையம், QUAD அமைப்பில் இந்தியா வகிக்கும் பாத்திரத்தில் அடங்கியுள்ளது (பங்குச் சந்தை மோசடிக்காரன் கையும் களவுமாக அகப்படுவதில் இல்லை!).

இலங்கை எதிர் நோக்கும் பிரச்சனை:

மேற்கண்ட ஏகாதிபத்திய, பிராந்திய விரிவாதிக்க உலக மறுபங்கீட்டுச் சூழல் தான் இலங்கையின் புறச்சூழல் ஆகும். உள்நாட்டு நிலைமைகளே தீமானகரமான சக்தி எனினும் அவை இப் புறச்சூழலுக்கு கட்டுப்பட்டவை.

இலங்கையின் எதிர்காலம் இந்த உலகமறுபங்கீட்டு போர்த் தயாரிப்பில் அமெரிக்க-இந்தியக் கூட்டின் இராணுவத் தளமாக அமையுமா இல்லையா என்பதிலேயே தங்கியுள்ளது.உண்மையான சுதந்திரத்துக்கான சமுதாய அவசியம் இதில் தான் அடங்கியுள்ளது.

இந்தப் பிரச்சனை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டன. இது சார்ந்து ( JVP உட்பட) மூன்று ஆட்சி மாற்றங்கள் நடந்துவிட்டன.

இலங்கையின் எதிர்காலம் குறித்த எந்தத் திட்டங்களும் இந்த அபாயத்தை எதிர்கொள்ள, தடுத்த நிறுத்த வல்லமை உள்ள நாடாக இலங்கையை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்.

அவ்வாறு இலங்கையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

இன்று Fashion ஆகிவிட்ட இந்த Geopolitics இல் சம்பந்தப்பட்ட இரண்டு நாடுகள் இந்தியாவும், சீனாவும்.

இந்த நாடுகள் இலங்கையை தூண்டில் போட்டுப் பிடிக்கவில்லை. இலங்கை ஆட்சியாளர்கள் தான் அந்தத் தீயில் இலங்கையை வீழ்த்தினார்கள்.

இந்தியா 1983 ஜூலைப் படுகொலையை சாட்டாக வைத்து `தமிழரைக் காப்பதாகக் கூறி தலையிட்டு, போராட்ட அமைப்புகளுக்கு எல்லை தாண்டி பயிற்சி அளித்து இலங்கை அரசைப் பணிய வைத்து 1987 ஜூலை ஆக்கிரமிப்பு ஒப்பந்தத்தை செய்தது.அது இன்னும் அமூலில் உள்ளது.

யுத்தத்தை ஒரு தேசியப் படுகொலை மூலம் முடிவுக்குக் கொண்டு வரும் திட்டத்துக்காக சீனாவிடம் பட்ட கடனில் இருந்து தான் சீனத் தலையீடு ஆரம்பித்தது.

இன்று இது இந்தியாவும் சீனாவும் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாக வளர்ந்து, உலகமறுபங்கீட்டுப் புறச்சூழலைச் சார்ந்து அமெரிக்க இராணுவத்தளமாகும் நிலைக்கு இட்டுவந்திருக்கின்றது.

இத்தனைக்கும் காரணமாக அமைந்த `ஈழ தேசிய ஒடுக்குமுறையை`, இலங்கையின் இறையாண்மையைக் காப்பதற்கான போர் என்று சொல்லித் தான் 30 ஆண்டுகள் நடத்தி தேசியப் படுகொலையில் முடித்தார்கள்.

இலங்கையின் இறையாண்மை எப்படிக் காப்பற்றப் பட்டிருக்கின்றது என்பதற்கு, திறை சேரியும், இத்தீவைச் சுற்றியுள்ள கடலும் சான்று!

இதற்குப் பதில் சொல்ல இதய சுத்தியுள்ள ஒரு மனிதர் கூட ஒடுக்கும் தேசத்தில் உண்டா? மகா சங்கங்களுக்கு மனச்சாட்சியாவது உண்டா?

அனுரா ஆட்சி ஈழ தேசிய ஒடுக்குமுறையைத் தொடர்ந்தவண்ணம் `இலங்கையராக` ஒன்றுபட அழைப்புவிடுகின்றது. ``நான் கணவனாக நடக்க மாட்டேன், ஆனால் நீ `சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெத்தியில் பொட்டு வைத்து` வீதி வலம் வந்து  நீதியாக என்னோடு குடும்பம் நடத்த வேண்டும்`` என்று கோருவது போன்றது இது. (சம்பந்தப்பட்டவர்கள் சொந்த வீடுகளில் விசாரித்துப் பார்ப்பது எதற்கும் நல்லது!)

இது மட்டுமல்ல பொருளாதாரத் துறையிலும் ஒரு விவசாய நாடான இலங்கையை, அந்நிய பண்ட உற்பத்திக்கான தொழில் நிலையமாக மாற்றுகின்றது.பங்குச் சந்தை, உல்லாசத்துறை, டிஜிற்றல் தொழில் நுட்பம்,கல்வித் துறை சீர் திருத்தம் என அனைத்தும் அதே சுமார் 50 ஆண்டு கால உலகமயத் திட்டங்களே. காலாவதியான திறந்த பொருளாதாரக் கொள்கைகளே.

இலங்கை எதிர் நோக்கும் அபாயத்தை தடுக்க ஒரே வழி இலங்கை மக்கள் ஜனநாயகத் திட்டத்தில் ஒன்று சேருவது மட்டுமே. இதற்கு ஈழ தேசிய சமத்துவம் முன் நிபந்தனை. அல்லாமல் இந்த `இலங்கையர்` என்பது வெற்றுக் கூச்சலும், ஏமாற்று மோசடியுமே ஆகும்.

இதன் விளைவு என்ன ஆகப் போகின்றது என்றால், எஞ்சி ஏதாவது ஒன்று இருக்குமானல் அதையும் இழந்து இலங்கை நாடு அடிமைப்படும்.

எனவே போலிச் சுதந்திரத்துக்கு திரை போட்டு விழா எடுப்பது  அல்ல, உண்மையான சுதந்திரத்துக்கு அறைகூவல் விடுப்பதுதான் இன்றைய தேவை.

ஈழ சுய நிர்ணய உரிமை, வென்று பெறுவோம்! 

உண்மைச் சுதந்திரம் அடைய, ஒன்றுபடுவோம்!

போலிச் சுதந்திரம் பொசுங்கட்டும்!

உண்மைச் சுதந்திரம் ஓங்கட்டும்!!

இறுதி வெற்றி ஈழ மக்களுக்கே.

புதிய ஈழப் புரட்சியாளர்கள்

ஈழம்                                                                                                     03-02-2025

Wednesday, 22 July 2020

கதவைத் தட்டுகிறது அடுத்த `கறுப்பு ஜூலை`


காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

அன்பார்ந்த ஈழ தேச மக்களே,


கறுப்பு ஜூலையின் 37வது நினைவாண்டு இன்று, ஜூலை 23, 2020ஆகும்.
 
இலங்கையின் கறுப்புச் சுதந்திர பாராளமன்றத்தின் 16வது பொதுத் தேர்தல் ஓகஸ்ட் 5 ஆகும்.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் தனி அம்சங்களையும், அவற்றின் பொது இணைப்பையும், இது நிறைவேறும் குறிப்பான சர்வதேசச் சூழ்நிலையையும் ஆய்ந்தறிந்து, கறுப்பு ஜூலை 37 ஆம் ஆண்டு நினைவாக, ஓகஸ்ட் 5 பொதுத் தேர்தலில் ஈழதேச மக்கள் எடுக்க வேண்டிய நிலை என்ன என்பதை கண்டறிவது இத் தொடர் கட்டுரையின்  குறிக்கோள் ஆகும்.

பாகம் (1)

கறுப்பு ஜூலை 1983

எழுபதுகளில் தோன்றிய பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்,சிங்களத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர் தாயகமான தமிழீழ தேசத்தை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.இதன் பொருட்டு தம் தாயகப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவத்தை விரட்டியடிக்கும் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தது. 1983ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் தேதி யாழ்ப்பாணம் பலாலி இராணுவத்தளத்தில் இருந்து வந்த சிங்களப் படையின் வாகனத் தொடர் அணி மீது நடத்திய கண்ணி வெடித் தாக்குதலில் 13 சிங்கள படையினர் பலியாகினர்.இதை ஒரு பொறியாக வைத்து மூட்டப்பட்ட நாடு தழுவிய  தீ தான் கறுப்பு ஜூலை 1983.

இதை விசமத்தனமாக `கலவரம்-Riots' என பொதுவாக கூறிவருகின்றனர். கறுப்பு ஜூலை 1983, இரண்டு சமூகங்களுக்கிடையே தோன்றிய தற்காலிக வன்முறை மோதல் அல்ல.இது அரசதிகாரத்தின் துணையுடன்,படை பலத்துடன், பெரும்பான்மையான சிங்கள மக்களை; அவர்களது பகுதியில் சிறுபான்மையினராக வாழும், ,வட கிழக்குத் தமிழர்,மலையகத் தமிழர், இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவி 
கட்டவிழ்க்கப்பட்ட இனவெறிப் படுகொலைத் தாண்டவம் ஆகும்.மேலும் ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான ஏதோ ஒரு அதிகாரம் ஏவி விடுகின்ற கண் மூடித்தனமான அராஜக வன்முறை அல்ல 

கறுப்பு ஜூலையில் நிகழ்ந்தது.``கலகக் காரர்கள்`` வாக்காளர் பட்டியலை வைத்து, தமது இலக்கைத் தேர்ந்து கொண்டார்கள். வர்த்தக இருப்புக்களைக் கண்டறிந்தார்கள்.வாழ் நாள் தேட்டத்தை தீ மூட்டி அழித்தார்கள்.பொலிசார் எண்ணெய் எடுத்துக் கொடுத்தார்கள், படை வீரர்கள் காவல் காத்தனர் ``கலகக் காரர்களை``! தமிழரின் தனிச் சொத்துரிமை மீதான இந்தத் தாக்குதலுக்கு தரகு முதலாளித்துவ வர்க்கம் 

கூட தப்பவில்லை.இவை அனைத்தும் அரசதிகாரத்தின் துணையில் ஏவப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் ``கலவரம்`` என்றழைக்கப்படுகின்ற எந்த ஒரு நிகழ்வும், ``கலவரம்`` என்பதன் அடிப்படைக் குணாம்சமான கண் மூடித்தனமான அராஜக வன்முறை கொண்ட தன்னியல்பான சமூக 
மோதலாக ஒரு போதும் இருந்ததில்லை.இவை அனைத்தும் ஆளும் வர்க்கம், அரசதிகாரம், படைபலம் கொண்டு தெளிவான திட்டத்தோடு தூண்டிவிட்டு ஏவப்பட்ட இனப்பகைமை ஆயுதமாகவே இருந்துள்ளன``. 

இது சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறை அசுரக்கரங்களில் ஒரு கரமாக -பிரிக்க முடியாத அங்கமாக இன்றும் இருந்து வருகின்றது.என்றும் இருந்துவரும்.

`நூலைப்போல சேலை தாயைப் போல பிள்ளை` என்கிறோமே, அதுபோல  இந்த ஆயுதம் ஆங்கிலேய காலனிய ஆட்சிமுறையில் இருந்து கற்று, சிங்களம் சுதந்திரமாக கடன் வாங்கிக் கொண்டதாகும்.

1915 இலேயே இது இலங்கைச் சோனகருக்கு எதிராக ஏவப்பட்டது.இதை நமது ``சேர்`` ( பொன்னம்பலம்,இராமநாதன்) தலைவர்களும் இணைந்தே செய்தார்கள். பின்னால் இந்த தமிழ்-சிங்கள ஏகாதிபத்திய தாச தரகர்கள் சுதந்திர புருசர்கள் ஆனார்களே 1948 இல்!, அதற்குப் பின்னால் இது தமிழ்த் தரகர்களுக்கு எதிராக திரும்பியது.

1949 இன் வாக்குரிமைப் பறிப்பில் ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களின் ஒரு பிரிவு துரோக நிலையையும், மறு பிரிவு சந்தர்ப்பவாத நிலையையும் எடுத்தது. இதன் விளைவாக சிங்களம் திடப்பட்டது.

1915 இலும் 1949 இலும் நமது தமிழ்த் தலைவர்கள் (ஏகாதிபத்திய தாச சமரசவாத தமிழ்த் தரகர்கள்), எடுத்துக் கொண்ட நிலைப்பாடு ஈழ விடுதலைப் புரட்சியின் மீது விழுந்த முதலாவது வரலாற்றுப் பழியாகும்.ஈழ தேசிய ஒற்றுமையை வேரறுக்கும் இப்பழியை இவர்கள் திட்டமிட்டே செய்தார்கள்.

இவ்வாறான துரோகப் பாத்திரத்தால் திடம் கொண்ட சிங்களம் 1972 இல் ரொட்ஸ்கிய கம்யூனிச விரோதிகளோடு கூட்டமைத்து பெளத்த சிங்கள அரசியல் யாப்பை உருவாக்கியது.இது SLFP சிறீமா அரசாங்கத்தில் நிறைவேறியது.(இது தான் சீன ஏகாதிபத்திய தாச, செந்தில், சிவசேகரம் கும்பல் தேங்காய் உடைக்கும் `தேசிய முதலாளித்துவக் கட்சி`!)

இந்த அரசியல் யாப்பு ஏகாதிபத்திய தாச தமிழ்த் தரகர்களாலும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. S.J.V செல்வநாயகம் பதவி விலகினார்.

இது வெறும் உள் நாட்டு நிகழ்வு மட்டுமல்ல, எழுபதுகளில் ஏற்பட்ட உலக ஏகாதிபத்திய பொருளாதார நெருக்கடியும் சார்ந்ததாகும்.

இதனால் மிகவும் நலிந்து போன தமிழ்க் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் இருந்து தான் தனி நாட்டுக்கோரிக்கை தர்க்க ரீதியாக, நீதியாக முதலில் எழுந்தது.

தமிழீழக் கோரிக்கை ``தந்தை செல்வாவால்`` முன் வைக்கப்பட்டது என்பது வரலாற்றுப் பொய் ஆகும்.

அதற்கு முன்னரே தமிழீழ விடுதலை இயக்கம் தோன்றி விட்டது. சிவ.ஜோதிலிங்க செம்பாட்டான்கள் இதைக் கண்ணாரக் கண்டும் அதிகார பூர்வ `அரசியல் ஆய்வாளர்` என்கிற மகுடத்துக்காக பொய் 
சொல்லுகின்றனர்.இவ்வாறான பொய்வாளர்களின், பொய் வாழர்களின் பட்டியல் மெய்யாகவே மிக மிக நீளமானது.

இந்த நெருக்கடியில் இருந்து மீள, தமிழ்த் தரகு முதலாளிய வர்க்கம் தவிர்க்க இயலாமல், தம்மை தக்க வைத்துக் கொள்ள கண்டடைந்த வழிதான் 1977 வட்டுக்கோட்டைத் தீர்மானம்.

1915 இல் கலவரம், 1958 இல் கலவரம். 1961 இல் கலவரம், 1977 இல் கலவரம்,1981 இல் மாவட்ட அபிவிருத்திசபை பலிக்களம்,  1983 இல் இனப்படுகொலைக் ``கலவரம்``. இவ்வாறு 68 ஆண்டுகள் அரசியல் அமைப்புச்சட்டம் என்ன சொன்னாலும் இந்த கலவர ஆயுதத்தால் தான் நாடு ஆளப்பட்டு வந்திருக்கின்றது.

மூச்சு விட மக்களுக்கு தேசம் இருந்ததென்றால் அது இந்தப் ``பாசிசப் பிராபகரனின்`` முப்பது ஆண்டுகள் மட்டும் தான்.

முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு பக்ச பாசிஸ்டுக்கள் இலங்கைச் சோனகர்களுக்கு எதிராக கலவர ஆயுதத்தை ஏவினர்.

ஒரு ஞாயிறு தினத்தில் சடுதியாக சஹாரான் என்கிற பயங்கரவாதி உயிர்த்தது, அது உலகளவில் பிரபல்யமாகியது, கலவர ஆயுதம் கைவிடப்படவில்லை என்பதற்கான ஆதாரமாகும்.

எவ்வாறு எண்பத்தி மூன்று ஜூலை கலவரக் கிளர்ச்சிக்கு டட்லியில் இருந்து ஜே.ஆர் வரை ஒரு 35 ஆண்டுகால பிரச்சார இயக்கம் இருந்ததோ, அதேபோல 2009 இற்குப் பின்னாலும் ஒரு பிரச்சார இயக்கம் 

ஆரம்பித்தாகிவிட்டது.பிக்கு வர்க்கத்தை ஆதார சமூக சக்தியாகக் கொண்ட இந்த வரலாற்று இயக்கத்தின் ஒரே குறிக்கோள் , ``ஏக்க ரட்டே`` சிங்கள அரசு, சிங்கள நாடு என்பதேயாகும்.

1983 இற்குப் பின்னால் 2009 வரை ``சிங்கள தமிழ்க் கலவரம்`` நடக்கவில்லை என்றால் அதற்குக் காரணம், தளபதி பிரபாகரனின் விடுதலைப் புலிப்படை காப்பரணாக இருந்ததே!

துடைத் தொழித்து விட்டார்கள் துரோகிகள்!

நிராயுத பாணியாக நிற்கிறது ஈழ தேசம்!

பக்ச பாசிசம் அரங்கேற, நாடாள மன்ற ஜனநாயகம் ஏணிப்படியாய் நிற்கின்றது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் பக்ச பாசம் வரலாறு காணாத ஏகாதிபத்திய நெருக்கடியின் காலகட்டத்தில், உலக மறுபங்கீட்டு மூன்றாம் பெரும் போர் முகிழ்க்கும் தருணத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுகின்றது.

அடுத்த கறுப்பு ஜூலை கதவைத் தட்டுகின்றது.
காப்பரண் போலித் தேர்தல் அல்ல,
பொது வாக்கெடுப்பே!

(தொடரும்)


Thursday, 15 November 2018

மாவீரர் நாள் முழக்கங்கள்-2018


மாவீரர் நாள் முழக்கங்கள் - 2018

ஏகாதிபத்தியவாதிகளே:

அமெரிக்க இந்திய முகாமோ, ரசிய சீன முகாமோ
இலங்கையை மறுபங்கீடு செய்ய ஒருபோதும் அனுமதியோம்!

இந்திய விரிவாதிக்கத்தின் தமிழகத் தரகு - இனமானத் தூண்களே:

ஈழத்தமிழர் பிரச்சனையில் இனப்படுகொலை இந்திய அரசு
தலையீடு செய்ய அழைப்பு விடாதீர்!
``தொப்புள்க் கொடி உறவுகளே``,
இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறியப் போராடுவீர்!

சிங்களமே:

`ஒரே நாடு` பேசி ஒட்டுமொத்த நாட்டையும் அந்நியருக்கு தாரை வார்க்காதே!
அனைத்து அந்நிய அநியாயக் கடன்களையும் ரத்துச் செய்!
அந்நிய மூலதன உலகமயத்தைக் கைவிடு,  உள்ளூர் உற்பத்திக்கு வழிவிடு!
சிங்கள விவசாயிகளுக்கு நிலம் வழங்கு!
மலையக மக்களுக்கு மாநிலம் வழங்கு!
முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சி வழங்கு!
இந்திய இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட நாட்டின் `இறையாண்மைக்கு` எதிரான
அனைத்து அந்நிய ஒப்பந்தங்களையும் கிழித்தெறி!

யுத்தத்தால் கொன்றொழித்த தேசத்தின் வாழ்வாதாரப் பிரச்சனைகளைத் தீர்!
தமிழ் விவசாயிகளின் தனியார் நிலத்தைத் திருப்பிக்கொடு!
அனைத்து யுத்த-அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
ரோகண விஜேவீராவுக்கு பதில் சொல்!

புலம் பெயர் ஏகாதிபத்திய தாச, இந்தியக் கைகூலிகளே:

புலிக்கோடு போட்டு `தமிழ்த் தேசியம்` பேசி, ஈழவிடுதலைப் புரட்சியைக் காட்டிக் கொடுக்காதீர்!

தமீழீழ மக்களே:

அனைத்து `தமிழ்க் கட்சி` ஒட்டுக்குழுக்களையும், NGO களையும் நிராகரிப்பீர்!
அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பீர்,
பொது வாக்கெடுப்புக்கு போராடுவீர்!

மாண்ட நம் மக்கள் வாழ்க!                                                             மாவீரர் நாமம் வாழ்க!!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

புதிய ஈழப்புரட்சியாளர்கள். Eelam New Bolsheviks
(14-11-2018)

Monday, 23 July 2018

கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை

கறுப்பு ஜூலை 35ம் ஆண்டு அரசியல் அறிக்கை


மாவீரன் செல்லக்கிளிக்கு சமர்ப்பணம்


சுய நிர்ணய உரிமைக்கான பொதுஜன வாக்கெடுப்புக்கு போராடுவோம்!

23-07-2018 இன்றைய தினம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க திண்ணைவேலி கெரில்லா இராணுவத்தாக்குதலின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.24-07-2018 கறுப்பு ஜுலையின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் ஆகும்.

சட்டப்புலமையாளர்களின் சர்வதேச ஆணையத்தின் உறுப்பினரும் நீதிபதியுமான Paul Sieghart தனது Sri Lanka: A Mounting Tragedy of Errors எனும் நூலில் பின்வருமாறு கூறுகின்றார்,

''Clearly this (July 1983 attack) was no spontaneous upsurge of communal hatred among the Sinhala people – nor was it as has been suggested in some quarters, a popular response to the killing of 13 soldiers in an ambush the previous day by Tamil Tigers, which was not even reported in the newspapers until the riots began. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organized well in advance''.

(Paul Sieghart of the International Commission of Jurists stated in Sri Lanka: A Mounting Tragedy of Errors, two months after the riots. Wikipidia)

அதாவது July 1983 attack திண்ணைவேலித் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாமல், (அரசும் அதிகாரபீடமும்) முன்கூட்டியே திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டிருந்த திட்டத்தின் வெளிப்பாடாகும்.

அக்கம் பக்கமான இவ் இரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வுகளின் 35ஆம் ஆண்டின் நினைவை ஏந்துகின்ற இன்று -1983 உள் நாட்டு யுத்தம் 2009 இல் வித்தாகிப் போய் ஒன்பது ஆண்டுகள் கடந்து போன இன்று, பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வட கிழக்கில் குவிக்கப்பட்டிருகின்ற-சிங்கள ஆக்கிரமிப்பு இராணுவம் விலக்கப்படமாட்டாது என்கிற அரச அறிவிப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையிலுள்ள இணைப்பைத் தர்க்கித்து அறிந்து ஈழத் தமிழ்ப் பிரச்சனைக்கு தீர்வு காண வழி கோலுவதே இவ் அறிக்கையின் குறிக்கோள் ஆகும்.

ஈழத் தமிழர் மீதான அடக்குமுறை,ஒடுக்கும் தேசம்-ஒடுக்கப்படும் தேசம் என்ற வகைப்பட்ட தேசிய ஒடுக்குமுறையாக பரிணமித்தது அதிகாரக் கைமாற்றத்துக்கு-போலிச் சுதந்திரத்துக்கு பின்பாகும்.மேலும் இந்த ஒடுக்குமுறை எப்போதும் வன்முறை ஆகவே இருந்து வந்தது.இந்த வன்முறை மூன்று வடிவங்களில் கட்டவிழ்க்கப்பட்டது.

1) ஆயுதமேந்திய அரச படைகளின் வன்முறை.

2)காடையர்களை ஆயுதம் தரித்த காவலாளிகளாக்கி தாக்குவது,

3) ஆயுதப் படையின் பக்கத் துணையுடன் வெகுஜனங்களையே ஏவி விட்டு நடத்தும் ``கலவரம்`` என்கிற வன்முறை.

இந்தக் ``கலவரங்கள்`` எவையும் தாமாக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுந்து, தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தியவை அல்ல.இந்தப் பொருளில்* ``கலவரம்`` என்கிற பதம் இந் நிகழ்வுகளைக் குறிக்க பொருந்தாதவை ஆகும். ஆனால் ஈழத் தமிழருக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்க்கும் ஒரு வழிமுறையாக வடிவமாக, அரசின் ஒரு ஆயுதமாக இந்தக் ``கலவரம்`` பயன்பட்டது என்கிற பொருளில் மட்டுமே இது சரியானதாகும்.

*(Riots: a noisy, violent public disorder caused by a group or crowd of persons, as by a crowd protesting against another group, a government policy, etc., in the streets. http://www.dictionary.com/browse/riot)


இனப்பகைமையை ஊட்டி வளர்த்ததால் தமழர்களுக்கு எதிராக எக்கணமும் தீ மூட்டத் தயாரான `காய்ந்த விறகுகளாக` ஒடுக்கும் தேசத்து-சிங்கள மக்களில் ஒரு பிரிவினர் செப்பனிடப்பட்டிருக்கின்றனர்.கூண்டில் அடைக்கப் பட்டிருக்கும் வேட்டை நாய்களைப் போல, இவர்களைத் திறந்துவிட்ட சம்பவம் தான் 1983 கறுப்பு ஜூலை.

இந்த வன்முறையின் காவல் அரணாக ஆயுதமேந்திய அந்நிய சிங்களப் படை-பொலிஸ்,இராணுவம்- ஈழத்தை ஆக்கிரமித்து அங்கு பலவந்தமாக நிலை கொண்டிருந்ததால் அதை முற்றாக வெளியேற்றுவதே ஈழதேசத்தின் 
விடுதலைக்கு,மண்ணின் பாதுகாப்புக்கு,மக்களின் சுதந்திரத்துக்கு, ஜனநாயகத்தின் உத்தரவாதத்துக்கு முன்நிபந்தனை ஆயிற்று.

எனவே இராணுவத்தை வெளியேற்றுவதை விடுதலைப் புலிகள் தமது முதல் பணியாக இயற்கையாகவே தேர்ந்துகொண்டனர்.சொல்லப்போனால் இது ஒன்றே அவர்களது வாழ்வும் வரலாறும் ஆனது.திண்ணை வேலித் தாக்குதலில் ஆரம்பித்து, ஆனையிறவை வீழ்த்தி வெற்றியின் எல்லையை எட்டினார்கள்.இருந்தும் அரசியல் சதியால் அவர்களின் வீர வரலாறு முள்ளிவாய்க்காலில் வித்தானது.

மீண்டும் தமிழர்கள் நிராயுதபாணிகள் ஆகினர். சிங்களப்படை ஈழத்தை மீண்டும் ஆக்கிரமித்துக் கொண்டது. இராணுவம் விலக்கப்படமாட்டாது என அரசு அறிவிக்கின்றது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்னால் ஈழத்தமிழர்களது, 
ஈழதேசத்தினது- (ஏன் சிங்கள ஒடுக்கும் தேசத்தினதும்), அனைத்து அவலங்களுக்கும் மூல காரணம் ஈழம் இராணுவ அதிகாரத்தின் கீழ் இருப்பதாகும்.

ஆக 1983 இலிருந்த அதே அவசியம் 2009-2018 இல் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது.

நீங்கள் வேண்டுமென்றால் `விஜயகலா` என்கிற பெயரை எடுத்துவிடுங்கள், ஆனால் அந்தக் கூற்று சமுதாய அவசியம் ஆகும்.

பொதுவாகவும் குறிப்பாக இலங்கையிலும் விடுதலைப் புரட்சியில் புரட்சிகர வன்முறையின் பாத்திரத்தை நிராகரிக்க முடியாது-கூடாது.

அதேவேளை `புரட்சிகர வன்முறையோடு விளையாடக் கூடாது` என்கிற மார்க்சின் -பாரிஸ் கொம்யூன்- எச்சரிக்கையை மறந்துவிடவும் கூடாது.

யுத்தத்தைப் போலவே வன்முறையும் அரசியலின் தொடர்ச்சியாகும். புலிகளின் வன்முறை-நீதியான யுத்தம், வித்தாகிப் போனது, புலிகளின் அரசியல் -(தமிழீழத்தை அடைவதற்கான திட்டம்,யுத்த தந்திரம்,செயல் தந்திரங்கள், 
இராணுவ மார்க்கம்) முற்றுப் பெற்றதன் விளைவாகும்.

இனி ஒரு புதிய அரசியலுக்கு, அவசியப்பட்டால் மட்டுமே ஒரு நீதியான,புரட்சிகர வன்முறை தோன்ற முடியும்.அல்லாதவை வெறும் வெஞ்சினத்தின் வெளிப்பாடான பயங்கரவாத வகைப்பட்டவை, எதிரிக்கே அநுகூலமானவை.

அந்த புதிய அரசியல் என்ன?

இராணுவ அதிகாரத்தில் இருந்து ஈழ தேசம்-வன்முறை அல்லாத வழியில் விடுதலை பெற முயல்வது எவ்வாறு?

ஒரே ஒரு வழிதான் உண்டு.

ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விரிவாதிக்க அரசும், சிங்களமும்,ஈழச் சமரசவாதிகளும், தமிழக ஓடுகாலிகளும் `ஒரே நாடு`-එකම රට என்கிற முழக்கத்தின் கீழ், சிங்களத்தின் ஈழ தேசிய இராணுவ- ஆக்கிரமிப்பை, அதிகாரத்தை, ஆட்சியை நியாயம் செய்கின்றனர்.சுய நிர்ணய உரிமைக்கு மாற்றாக, சுய அதிகாரம் என ஏமாற்றுகின்றனர்.

நாம் இதற்கு மாற்றாக ஈழ தேசிய சுய நிர்ணய உரிமையை உயர்த்திப்பிடித்து `ஒரே நாட்டு`க்கு எதிராக;


* வடக்கு கிழக்கு தமிழர் தேசம்-(ஆறாவது திருத்த நீக்கம்)!
* மலையக இஸ்லாமிய தமிழர்களுக்கு தனி மாநிலம்- சுயாட்சி!
* சுய நிர்ணய உரிமைக்கான பொது ஜன வாக்கெடுப்பு!

என்ற கோரிக்கைக்காக இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தக் கோரிப் போராடுவதே ஒரே ஒரு வழியாகும்.

இதன் பொருட்டு ஈழ தேசம் மீதான இராணுவ அதிகாரத்துக்கு ஜனநாயகப் பசுத்தோல் போர்க்கும் அனைத்துத் தேர்தல்களையும் புறக்கணிப்பது,

அனைத்து வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் பொது ஜன வாக்கெடுப்புக் கோரிக்கையோடு இணைத்து, அதற்கு கீழ்ப்படுத்தி முன்னெடுப்பது,

ஈழ தேசிய ஒற்றுமையை இறுகப்பற்றுவது,இன்றியமையாதவை ஆகும்.

இறுதிவெற்றி ஈழமக்களுக்கே!


புதிய ஈழப் புரட்சியாளர்கள்
23-07-2018